
தாயும் சேயும் – நங்கநல்லூர் J K SIVAN
பதினாறு வயது பையனைக் காணோம் என்றால் கணவனை இழந்த ஒரு தாய்க்கு எவ்வளவு துக்கம், சோகம் இருக்கும் என்று யோசிக்கும்போது அதை எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை.அவள் கதறி அழுவதைப் பார்த்த உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் போகும் இடமெல்லாம் பையனைத் தேடினார்கள். எங்கும் விவரம் அறியமுடியவில்லை. மதுரையில் ஒரு சிவபக்தர் அண்ணாமலை தம்பிரான் என்றே அவருக்கு பெயர். அவர் அடிக்கடி திருவண்ணாமலை செல்வார். ஒருதரம் அங்கே போனபோது யாரோ ஒரு பால சந்நியாசி அங்கே தவம் செய்கிறார் என்று கேள்விப்பட்டார். அந்த பாலயோகி மதுரைப்பக்கம் திருச்சுழி கிராமத்தை சேர்ந்தவராம். பேசாத மௌன விரதம் பூண்ட ஞானி. அருள் சக்தி மிகுந்தவர் என்று எல்லோரும் பரவலாக பேசினதை அறிந்தேன் என்று அந்த தாயின் உறவினர்களில் ஒருவர் தம்பிரானை மதுரையில் பார்த்தபோது அவர் எதேச்சையாக திருவண்ணாமலையில் தோன்றி அருள் பாலிக்கும் பால சந்யாசியைப்பற்றி சொன்னார்.
விஷயம் தாய் அழகம்மாவுக்கு எட்டியதும் அவள் திருவண்ணாமலைக்கு ஓடினாள். அவன் இருப்பதாக அறிந்த பவழக்குன்றுக்கு சென்றாள் /அங்கே அவள் கண்ட பால சன்யாசி காணாமல் போன அவளுடைய மகன் வெங்கட்ராமன் என்று என்று அறிந்தாள். அடையாளம் தெரியாதபடி சடைமுடி. எலும்பும் தோலுமாக இளைத்த உடல். பதறினாள். கதறினாள். என்னவெல்லாமோ சொல்லி அழுது அவனைத் திரும்ப வீட்டுக்குக் கூட்டிச்செல்ல முயற்சித்தாள் . எல்லாமே தோல்வியில் முடிந்தது. சன்யாசியோ பதிலே சொல்லாத மௌனியாக எந்த மாறுதலுமின்றி இருந்தார்.
”சுவாமி, உங்கள் அம்மா கதறுகிறாளே அவளுக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேச முடியாவிட்டாலும் ஏதாவது பதிலாக எழுதிக் காட்டுங்கள் என்று பக்தர்கள் சிலர் வேண்டினார்கள். தலையசைத்த பால சந்நியாசி தமிழில் பேப்பரில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார்..
“விதியை விதித்தவன் விதிப்படி நடக்கச் செய்வான். நடக்க வேண்டாதது எவ்வளவு முயன்றாலும் நடவாது.நடக்க வேண்டியது எவ்வளவு தடுத்தாலும் நடந்தே தீரும்.இது நிச்சயம்.ஆகையால் அமைதியாக இருத்தலே சிறந்தது”
அம்மா இதை நூறு தடவைக்கு மேல் திரும்ப திரும்ப படித்தாள் . கண்ணீர் வற்றியது. மனம் இறுகியது. மகனின் நிலை புரிந்தது. முட்டாக்கு நார்மடி புடவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஊருக்கு திரும்பினாள்.
அப்புறம் சில காலம் மௌன பிராமண சுவாமி பவழக்குன்றில் தியானத்தில் ஈடுபட்டார். 1899ல் பக்தர் பழனி சாமியோடு விரூபாக்ஷ
குகைக்கு சென்றார். அந்த குகை ஆச்சர்யமாக ‘ஓம்’ வடிவில் இயற்கையாகவே அமைந்துள்ளது. அங்கே தான் 13ம் நூற்றாண்டு ஞானி விருபாக்ஷர் தங்கி தவம் செய்து சமாதி அடைந்தார். குகை அவர் பெயர் பெற்றது. அங்கே 17 வருஷங்கள் ரமண மஹரிஷி வாசம் செய்தார்.
முதல் சில வருஷங்கள் மௌனம். பக்தர்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக தரிசிக்க வர தொடங்கினார்கள். எழுதிக்காட்டி பலபேருக்கு உபதேசம் செய்தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



