
மாதங்களின் பெயர்கள். – நங்கநல்லூர் J K சிவன்
மாதங்களை பற்றி உனக்கு என்ன தெரியும் சொல் என்றால் நமது குழந்தைகள் ”They are twelve in number repeatedly coming one after the other every year, in any year of 365 days” என்று தான் ஏறக்குறைய பதில் சொல்வார் கள்.
”மாதங்களின் பெயர்களை சொல்?” என்றவுடன் ”ப்பூஹ், இதென்ன பிரமாதம்? என்று உடனே கடகட வென்று ஜனவரி பெப்ரவரி மார்ச்… என்று பெயர்களை சொல்வார்கள்..” அப்படி என்றால் அவர்களுக்கு நம்முடைய தமிழ் மாதங்கள் பற்றியோ வருஷங்கள், நாட்கள், திதிகள், கிரஹங்கள், கிரஹணங்கள், விசேஷங்கள் பற்றி ஒன்றும் தெரியாது என்று அர்த்தம். அவர்கள் அப்படி இருப்பதை தான் நாமும் விரும்பி அவர்களை மூன்று வயது முதல் ” பாபா பிளாக் ஷீப் ” படிக்க ஏராளமாக காசு கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகி றோம். இது நமது தாயான, தாயமொழிக்கு நாம் செய்யும் பச்சை துரோகம்.
தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன தெரியுமா? நான் சொல்லவில்லை, மஹா பெரியவா சொன்னதை சொல்
கிறேன்;
இங்கிலீஷ் மாசம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என்று ஆரம்பிக்கிறது. தமிழ் மாதம் என்பது சித்திரை, வைகா சி எனத் துவங்குகிறது. என்ன பேர், எதற்காக? அவற்றுக்கு இப்படி என்று இன்றுவரை பெரியவர்கள் நமக்கே தெரியாதே. குழந்தைகளுக்கு எப்படி தெரியப்போகிறது.
ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அனேக மாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் கூட இருக்கும்.
1. முதல் மாசம் சித்திரை மாதம். சித்திரை மாசத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது
2. வைகாசி மாதம் விசாக சம்மந்தமான வைசாகம் .விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை மருதை யானது போல ஸமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.
3. ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ‘ஷ’ கிடையாதே. அது காணாமல் போய், ஆனி என்றாயிற்று.
4. ஆடி மாதம் ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ‘ர்வ’ என்ற கூட்டெழுத்து சிதைந் தும்.’ஷ ‘ உதிர்ந்தும் தமிழில் பூராடம், உத்திராடம் ஆகிவிட்டது. ஆகிவிட்டது.. இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
5.ஆவணி மாதம்(மாஸம்) ஸ்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ”ச்ர” அப்படி யே தமிழில் மறைந்து போய் வணத்தை ஓணம் என்கி றோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து தொலைந்து போய் ஆவணி மாதமாயிற்று.
6. புரட்டாசி மாதம் ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷா டம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.
7. ஐப்பசி மாதம் ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
8. கார்த்திகை மாதம் க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவ தால் அது கார்த்திகை மாதமாயிற்று.
9. மார்கழி மாதம் மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
10. தை மாதம் புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
11. மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
12. பங்குனி மாதம் பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று. இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதங்களின் பெயர்களாக அமைந்துள்ளன.”
அப்பப்போ இப்படி நாமறியாத விஷயங்களை தெரிந்து கொள்வோம். திருப்தியாகத்தானே இருக்கிறது ?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



