
அனுபவ உண்மைகள் சில;
நங்கநல்லூர் J K SIVAN
சுப்பு தாத்தா 87ஐதாண்டிவிட்டார். 88க்கு நகர்கிறார் மெள்ள மெள்ள .
”என்ன தாத்தா, என்னவோ நினைப்பில் கையை, தலையை, ஆட்டி ஏதோ முணுமுக்கிறீங்க உரக்க தான் சொல்லுங்களேன் கேட்போம்’
”சொல்ல என்ன இருக்கு? எதுவுமே சாஸ்வதமில்ல. ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறதே”.
‘வாழ்க்கையிலே சந்தோஷமாக தானே இருக்கீங்க?
”ஆஹா, நான் ஒவ்வொரு நிமிஷமும் சுகத்தை அனுபவிச்சுண்டு தான் இருக்கேன்.”
”சரி, உங்க அனுபவத்தை எனக்கும் தான் சொல்லுங்க ளேன். நான் நாலு பேருக்கு அதை எழுதமாட்டேனா?”’
‘ஆஹா, சொல்றேன் ரொம்ப ரொம்ப ரத்ன சுருக்கமா சொல்றேன் எழுதிக்கோ’
”ஆரம்பிங்கோ தாத்தா”
”வயசானா முதல்லே வீடு வீடாக அலையறதை நிறுத்து. ஏதோ ஒரு இடத்திலே முடங்கி இரு. அது தான் உனக்கு அயோத்தி, பிருந்தாவனம். நீ இருக்கிற இடத்தி லே தான் நீ சுதந்திரமா இருக்கமுடியும். யாருக்கும் தொந்தரவும் இல்லாம தனியா வாழ பழகிக்கணும்
””யாரையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாமல், உன்னி டம் இருக்கும் சொத்து, பணம் உனக்கும் உன் மனைவி பேரிலும் இருந்தால் அதை தொலைக்காமல் ஜாக்கிர தை யாக வைத்துக் கொள். உங்க ரெண்டு பேருக்கு தேவை களுக்கு யாரையும் கேட்காமல் நீ வாழ அவசியம் அது. உங்களுக்கு அப்புறம் அது யாருக்குப் போகணும்னு ஏற்பாடு இப்பவே பண்ணிவை. வெளிலே சொல்லிண்டு திரியாதே”
”வயசான காலத்திலே பசங்கள் நம்மை பாதுகாப்பார் கள் என்ற நப்பாசை வேண்டாம். அவரவர்களுக்கு தலைக்கு மேலே ஆயிரம் கடமைகள், பொறுப்பு இருக்கு. உலகம் போட்டியிலே வேகமாக சுழலரது. அவனவன் தனது காலிலே நிக்கறதே கஷ்டமா இருக்கு. உன்னை வேற சுமந்துண்டு அவன் ஓடறது கஷ்டம். உன்னை சுமக்க அவர்கள் தயாராக இல்லையென்றால் உன் பாடு ததிங்கிணத்தோம்”
”நல்ல நண்பர்களை விடாதே. உனக்கு வயசிலே சின்ன வர் களும் அதிலே இருக்கட்டும். உனக்கு அப்புறமும் இருக்கப்போகிறவர்களோடு நட்பு உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். உன்னைக் காட்டிலும் பெரிய வன் நட்பு உனக்கு ரொம்ப நாள் தொடராது.”’
‘குப்பன், ராமன், எப்படி இருக்கான் பாரு? என மற்றவர் களோடு உன்னை ஒப்பிடாதே . அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை. அம்புட்டு தான் ”
”பிள்ளை பொண்ணு, பேரன் பேத்தி எல்லாம் எப்படி நடக்கணும், என்ன செய்யணும் னு உன் அபிப்ராயத்தை சொல்லாதே. அதை யாரும் லக்ஷியம் பண்ண போறதில் லே. எதுக்கு கெட்ட பேர் உனக்கு. உன் சோலியை பார்த்ததுண்டு பேசாமே வாயை மூடிண்டு இரு. அப்போ தான் உனக்கு மதிப்பு”
”எனக்கு வயசாயிடுத்து” என்கிற கவசம் வேண்டாம். எல்லாருக்கும் தான் வயசாறது. அதை சாக்காக வைத் துக் கொண்டு உன் வியாதிகளை லிஸ்ட் போட்டு சொல்லி, வசதி, உதவி தேடாதே. பிறர் கவனத்தை உன் பக்கம் திருப்ப முயற்சிக்காதே. தோற்றுப் போவா ய். கஷ்டப்படுவே’
”’நீ கேக்காமலேயே உனக்கு எல்லோரும் அட்வைஸ் பண்ணுவா. பேசாம சிரிச்சுண்டே கேட்டுக்கோ. குறுக் கே பேசாதே. உனக்கு எது சரின்னு தோன்றதோ அதை மட்டும் நீ பண்ணு . இது உனக்கு இருக்கிற சுதந்திரம். அதை இழந்துவிடாதே ”
”கடவுளை நினை. பிரார்த்தனை பண்ணு. அது வேண் டும் இது வேண்டும் என்று கெஞ்சாதே, உனக்கு எது எப்போது எப்படி வேண்டுமோ அப்படி கிடைக்கும். நீ கேட்காமலேயே தருவான். நன்றி சொல்லு’
ஒண்ணு கடைசியா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. நீ ஆபிஸ்லே இருந்து, வேலையிலேலருந்து வேண்டு மானால் ரிடையர் ஆகி இருக்கலாம். வாழ்க்கையிலே ரிட்டையர்மெண்ட் கிடையாதே. கடைசிவரை நீ வேலை செய்யணும். அதுக்கான ஊதியம் உன்னைத் தேடி வரும்.”
சுப்பு தாத்தா மெதுவாக நடந்து விட்டார். அவர் சொன்ன விஷயங்கள் காதில் ரீங்காரம் பண்ணுகிறதே. அதில் நிறைய அனுபவ உண்மைகள் இருக்கிறதே. அது நமக் கும் பயன்படட்டுமே” என்று தான் இதை எழுதினேன்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



