MY MASTER – SWAMI VIVEKANANDA. J K SIVAN

என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) – நங்கநல்லூர் J K SIVAN
பதிவு  5

என் குருநாதர்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  ஆரம்ப காலத்தில் இவ்வாறு  கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர்.  உலகம்  என்பதே  உண்மையில்  இல்லாத  ஒன்று என்ற தெளிவு கொண்டவர். வெயில், மழை, புயல் எதுவானாலும் தெருவிலேயே வசித்தவர். ராமகிருஷ்ணனை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. வேதங்களைக்  கற்பித்தார். தன்னைவிட  மாணவன் சிறந்த ஞானி என அறிந்தார். சில மாதங்கள் ராமக்ரிஷ்ணனோடு இருந்து  ராமகிருஷ்ணனுக்கு சன்யாசம் கொடுத்துவிட்டு அந்த ஞானி கிளம்பினார். ராமகிருஷ்ணனின் உயர்ந்த வேதாந்த ஞான நிலையை உணராத கல்கத்தா பக்தர்கள் அவரை ஒரு பைத்தியம் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.   உறவினர்கள்   அவருக்கு கல்யாணம் பண்ணினால்  பைத்தியம் தெளியும் என்று ஊருக்கு அழைத்துச் சென்று கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.
அதனால் எந்த பலனும் இல்லை.  முன்னை விட ராமகிருஷ்ணன்  இன்னும்  ஆன்மீக பைத்தியமாக காளி உபாசகராக  மாறிவிட்டார்.

அந்த காலத்தில் பால்ய விவாகம் பழக்கத்தில்  இருந்தது.  பெற்றோர்கள் தாங்களாகவே முடிவு செய்தனர். பெண் வயதுக்கு வந்ததும் பிள்ளை அவள் வீட்டுக்குப் போய் அவளை அழைத்து வரவேண்டும்.

ராமக்ரிஷ்ணனை மணந்த சாரதா எனும் பெண்ணுக்கு  தன் கணவன் ஒரு அம்பாள்  பைத்தியம் , அவனை எப்படியாவது சரியான மனநிலைக்கு கொண்டு  வர வேண்டும் என்று தோன்றி, தானாகவே ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தாள் .ராமகிருஷ்ணனுக்கு தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற நினைப்பே கூட இல்லை. தன் எதிரே நின்ற பெண்ணை உற்றுப்   பார்த்தார். அவளுக்குத் தனது வாழ்க்கையில் பங்கு உண்டு என்று தோன்றியது. தடால் என்று அவள் காலடியில் விழுந்தார்.

”ஆஹா, என் தாயே, அம்மா, நீயே , என்னைத் தேடி வந்தாயா?”என்று வணங்கினார்.  அவரைப் பொறுத்த வரை எந்த பெண்ணுமே  அம்பாள் காளியின் உருவம் தான். அம்மா,  என்னை உலக பந்தத்தில்  சிக்க வைக்க நீ எண்ணம் கொண்டால்  நான் உன் அடிமை, நீ என்னை எப்படி வேண்டுமானாலும் வழி நடத்திச் செல் ” என்று சரணடைந்தார்.

சாரதாவுக்கு அவர் நிலை புரிந்தது.  அவர் மேல் பரிவும், இரக்கமும் ஏற்பட்டது.”ஐயா, உங்களை சம்சார பந்தத்தில் உழல விட நான் விரும்பமாட்டேன். உங்களோடே  இருப்பேன். தொண்டு செய்வேன். நானும் ஞானம் பெறுவேன்.  ராமகிருஷ்ணனை முதலில் பார்த்த அந்த நாளிலேயே அவருடைய சிஷ்யை ஆனாள்  சாரதா.  தெய்வமாக போற்றி  மதித்தாள் .

ராமக்ரிஷ்ணரின் ஆன்மீக வாழ்க்கை இவ்வாறு சலனமின்றி தொண்டர்ந்தது. மற்ற மதங்களைப் பற்றி அறியும் அவா அவருக்கு வந்தது.  பிற மதச்சார்யர்களைத் தேடினார் .  ஆசார்யன் என்றால் வெறுமே நிறைய புத்தகங்கள் படித்த ஒருவர் அல்ல. மத கோட்பாடுகளை நன்கு உணர்ந்து அவற்றை பிறழாமல் பின்பற்றும் சீலர்கள் என்று நம்பினார்.

ராமகிருஷ்ணர் ஒரு முஸ்லீம் குருவை அடைந்து அவர் சீடனானார்.  தீவிரமாக அவரிடம் பயிற்சி பெற்ற போது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. தனக்கு ஏற்கனவே தெரிந்த ஆசார சீலங்களை, அனுபவத்தைத் தான் முஸ்லீம்  மதமும் சொல்கிறது என புரிந்தது.  கிறிஸ்தவ மதமும் அவ்வாறு தானா என அறிய கிறிஸ்தவ மத கோட்பாடுகளை பழக்கவழக்கங்களை அறிந்து பழையபடி அதுவும் தான் ஏற்கனவே பின்பற்றி வந்த ஞான நிலையையே காட்டுவதை  உணர்ந்தார். எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றே, வழிமுறை, மொழி மட்டும் தான்  வெவ்வேறு என்பது புரிந்தது.

மதத்தைப்   பின்பற்றுபவர்களின்  சுயநலத்தாலே தான்   வித்யாசங்கள், சச்சரவுகள் எழுகிறது  என அறிந்தார். பெயர்கள் அடையாளங்கள் மட்டுமே எல்லோரையும்  பிரித்துக் காட்டுவதை அறிந்தார்  அதுமுதல் மனதில்  எல்லாவற்றிடமும், எல்லோரிடமும்  அன்பு, அமைதி, சமம், எளிமை ஆழமாக அஸ்திவாரம் அமைத்தது.  எதிலும் ”நான்”  அல்ல, பகவானே, தாயே  ” நீ” மட்டுமே,  என்பது   ஆழமாக அவர் மனதில் பதிந்தது.

ராமகிருஷ்ணர் காலத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்தவர்,தீண்டத்தகாதவர்,  என்றெல்லாம் மக்களுக்குள்ளே வித்யாசம் பழக்கத்தில் இருந்தது. மிக உயர்ந்த பரம ஞானியான ராமகிருஷ்ணரை அது நெருங்குமா?  அவர் வசித்த  ஆஸ்ரமம் அருகே இருந்த  தீண்டத்தகாதவர்கள் வீட்டுக்குள் சென்று அவர்கள் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வார். அவர்களை மேலானவர்களாக தெய்வமாக  மதித்து வணங்குவார்.

”அம்மா, நான் எல்லோரிலும் தாழ்ந்தவன், என்னை இவர்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரிவாய்” என்று காளியிடம்  முறையிடுவார்.  நமது வேதங்கள் என்ன சொல்கிறது?.  பகவான் கிருஷ்ணனின்  உபதேசமே  ‘
‘என் தொண்டனை நீ மதித்து போற்றினால் நான் உன் தொண்டன் ஆவேன்” என்பது  தானே.  பக்த வத்சலன் என்று தானே அவனுக்கே பெயர்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;