

நமது பண்பாடு — நங்கநல்லூர் J K SIVAN
இந்துக்களாகிய நமது சம்ப்ரதாயங்கள், பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஆழமான காரணம்,எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அனுபவ பூர்வமான ஒன்று இருக்கிறது. அக்காலத்திய இந்த பழக்கமே இப்போது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் ஆச்சர்யம். நமது முன்னோர்கள் முட்டாள்களல்ல. அறிவிலிகள் அல்லர். நாம் தான் அப்படி விஷயம் தெரியாமல் முத்திரை குத்துகிறோம்.
பழங்கால குடிசைகள், மண் சுவர் வீடுகளுக்கு பசுஞ்சாணம் உள்ளேயும் வெளியேயும் பூசப்பட்டி ருந்தது. பசுஞ்சாணம் கிருமி நாசினி என்று இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். நமது முன்னோர்கள் அதை புனித மானது, பரிசுத்தம் என்றார்கள். பசு கோமியமும் அப்படித்தான் வியாதி நிவாரணி. வீ ட்டுக்கு வந்த வெளி ஆட்களுக்கு வெள்ளி டம்பளரில் தான் வெந்நீரோ குடிநீரோ கொடுக்கப்பட்டது. இது ‘மடி” என்று இன்னும் சில வீடுகளில் போற்றப்பட்டு வருகிறது. வெள்ளிக்கு ஒரு குணம். சிறந்த கிருமிநாசினி என்று இப்போது பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு கண்டுபிடித்ததை பல நூற் றாண் டுகள் முன்பே நமது முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
மாதம் மூன்று நாள் பெண்களை வீட்டு விலக்கு என்று தனியாக எவர் மீதும் படாமல் ஒதுக்குப்புறமாக ஒரு அறையில் ஓய்வெடுக்க வைத்தனர், தீட்டு என்ற பெயரில். அந்த மூன்று நாட்களும் பெண்கள் மிகவும் உடல் தளர்ந்து சோர்வாக காணப்படுவார்கள். நரம்பு கள் இழுத்துக் கொள்ளும். ரத்த போக்கு மிகுந்து, அவர்களை சக்தி இழந்தவர்களாக, வியாதி களை எதிர்த்து போராடும் சக்தி அற்றவர்களாக மாற்றியதால் அவர்களுக்கு பூரண ஒய்வு தேவைப்பட்ட நேரம். குழந்தைகள் கூட துணி இல்லாமல் தான் அம்மாவிடம் போகும். வந்து குளித்துவிட்டு வீட்டில் வேறு துணி உடுத்தி மற்றவர்களோடு பழகும். எனக்கே அந்த அனுபவம் உள்ளது.
பெண்கள் தனித்து இருப்பதற்கென்றே ஒரு சிறு அறை ”தூரமணா உள் ” என்று பிளாஸ்டிக் தலைகாணி பாயுடன் இருக்கும் வீடுகள் அப்போது இருந்தது. எளிதில் கழுவக்கூடிய பிளாஸ்டிக் தலையணை, பாய் , மரப்பலகை, உபயோகித்தனர்.
இப்போது வெளியூர் சென்று வந்தால் அல்லது எங்கா வது பலநாள் வீட்டிலிருந்து வெளியே சென்றால் வீடு திரும்பு முன் quaraantine இந்த வகையை சேர்ந்தது தான்.
இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று திரும்பினால் உடனே வீட்டுக்குள் நுழையக்கூடாது. ஆடைகளை களைந்து நனைத்து விட்டு குளித்து விட்டு தான் உள்ளே அனுமதி. கொல்லையில் வீட்டுக்கு பின் புறம் கிணறு இதற்கு சௌகர்யமாக இருந்த காலம் அது. மூன்று நாலு வாளி தண்ணீரை கிணற்றிலிருந்து தாம்புக்கயிறில் இழுத்து தலையில் கொட்டிக்கொண்டு தலை முழுகிய பின்ன ரே உள்ளே நுழைவோம். இறந்தவர் உடலில் கிருமிகள் இருக்கும். அது வெளியே பரவும்.
எங்கள் காலத்தில் இறந்த உடலை ஐஸ் பெட்டியில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கும் வழக்கம் இல்லையே. ஒரு வித நாற்றம் மெதுவாக அதிகரித்துக் கொண்டே வரும் என்பதால் அதிக நேரம் வீட்டில் உடலை வைக்கா மல் வாசல் நடையில் வைத்து காரியங்கள் பண்ணி விட்டு, எடுத்துச்சென்று, கொளுத்தும் வழக்கம் இருந் தது. உடல் சென்றதும் வீடு முழுதும் அலம்பி விடப்படும், எல்லோரும் தலை முழுகுவார்கள்.
இறந்த வர்கள் வீட்டில் அடுப்பு எரியாது. உணவு சமைக்க மாட்டார்கள். உடல் எடுத்து வீடு முழுமையாக கழுவிவிடப்பட்ட பின் தான் உணவு சமைப்பார்கள். இதுவும் தீட்டு என்கிற பெயரில் சுகாதாரம், பாதுகாப்பு. இறந்த உடலின் வியாதி கிருமிகள் வீடெங்கும் பரவி இருக்குமே.
சின்ன பெரிய,அம்மை போட்டிருந்தால் இப்படி தான் வீட்டுக்குள் யாரும் போக மாட்டார்கள், வீடெங்கும் மஞ்சள் தடவி, வேப்பிலை செருகி வைத்து கிருமி பரவாமல் பாது காப்பு. வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் பாக்கெட்டில் வேப்பிலை போட்டு நீர் நிரப்பி வைத்து கால் கை கழுவிக்கொண்டு தான் உள்ளே வரவேண்டும். வாசலில் வேப்பிலை செருகி இருந்தால் தேவையில்லால் எவரும் உள்ளே நுழைய மாட்டார்கள். இது கிருமி நாசினி பாதுகாப்பு அரேஞ்ஜ்மென்ட் . வியாதியஸ்தருக்கு தனிமை.
நெற்றியில் இரு கண்களுக்கு மேல் இரு புருவங்களுக்கு BRU MADHYAM மத்தியில் மேலே குங்குமம் சந்தனம் பொட்டு வைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அங்கே தான் முகத்திற்கு ரத்த ஓட்டம் பரவும் தசை, ரத்தக் குழாய்கள் உள்ளதால் அவற்றை பாதுக்காக்க வலிமைப்படுத்த குங்குமம் கட்டாயமாக பெண்கள் வைத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது. மஞ்சளிலிருந்து தான் குங்குமம். அது ஒரு கிருமி நாசினி. நெற்றிப் பொட்டில் மின் காந்த அலைகள் அங்கிருந்து உடல் பூராபரவி தேகத்துக்கு சக்தி அளிப்பவை. இந்த இடம் தான் குண்டலினி யோகத்தில் ஆஞா சக்ரம். நெற்றி நிறைய விபூதி இடுவதும் இதனால் தான். பசுஞ் சாணத்தில் வறட்டி தட்டி எரித்து பொடித்து தான் விபூதி தயாராகிறது. கேட்கவேண்டுமா அதன் சக்திக்கு?
கவலைகள் நெற்றிப்பொட்டை தாக்கும். தலை வலி அங்கே உருவாகும். அதைக் குறைக்கவே இந்த பொட்டு , திலகம், விபூதி , சந்தன, குங்கும கவசம். ஸ்டிக்கர் பொட்டால் என்ன ப்ரயோஜனம்?
கல்யாணங்கள், வீட்டில் நிறைய பேர் கூடும் விழாக்க ளில் மருதாணி இட்டுக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஒரு காரணம் உண்டு. தலை, கை , கால்கள், பாதம், உள்ளங் கை என்றுபல இடங்களில் மருதாணி இட்டுக் கொள்வ தால் தொற்று நோய் பரவாது. கிருமிகளிடமிருந்து சரும வியாதிகளிலிருந்து, பாது காத்துக்கொள்ள நிவாரணி தான் மருதாணி. (henna is anti-fungal and anti-bacterial) ஒரு பக்கம் அது அழகைக் கொடுக்கும். மற்றொரு பக்கம் வியாதிகள் பரவாமல் தடுக்கும். தலை மயிர் கொட்டு வதை தடுக்கிறது.
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் நம்மை விட்டு போய்விட்டது. “சனி நீராடு” அர்த்தமில்லாமல் போய்விட்டது. பண்டைய காலத்தில், என் சிறுவயதில் கூட, சனிக்கிழமை கட்டாயம் தலையில் நல்லெண் ணெய் தேய்த்து ஒரு மணி நேரமாவது ஊறவைத்து தான் கிணற்றடியில் குளிப்பாட்டி விட்டார்கள். அன்று பத்தியமான சாப்பாடு. ஜீரக ரசம், வத்தல் குழம்பு, பருப்பு துகையல். காலையில் breakfast எதுவும் கிடையாது. குளித்த உடனே பசிக்கும்…பசியோடு காலை ஒன்பது பத்து மணிக்குள் சாப்பாடு. இதை எழுதும்போதே அம்மா பசித்த வேளையில் சுடசுட தட்டில் சாதம்போட்டது நாக்கில் எச்சில் ஊறுகிறது.
பெண்கள் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். ஸ்னானப்பொடி என்று வாசனையாக வீடு முழுக்க கமகமக்கும் பொடி யை, சீயக்காய் பொடி, தேய்த்து குளிப்பார்கள். கை கால் கழுவிக்கொண்டு சாப்பிட தரையில் உட்கார்வது, கோயிலுக்கு சென்றால் பிரகாரத்தை சுற்றி வருவது, கர்ப்ப கிரஹத்தில் சட்டை போடாமல் நிற்பது எல்லாவற் றுக்குமே அற்புதமான காரணங்கள் உண்டு.
அப்பப்போ ஞாபகப்படுத்தி சொல்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



