

இதுவா வாழ்க்கை? – நங்கநல்லூர் J K SIVAN
எங்கு நோக்கினாலும் உலகெங்கும் ஒரே எண்ணம் தான். இந்த உடம்பைத்தவிர நான் வேறல்ல. இது ஆழமாக மனதில் வேரூன்றி விட்டது.
‘டேய் , நீ இந்த உடம்பு இல்லையடா, ஆத்மா” என்றால் ‘பேத்தல். கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது’ என்கிறார்கள். இந்த வலி சுகம் துக்கம் எல்லாமே என்னுடையது தான் என்று தீர்மானமாக சொல்கி றோம். இந்த உடம்பு ஆத்மா குடியிருக்கும் கோயில். அதனால் தான் இதைச் சுத்தமாக, ஆரோக்யமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் சிரிப்புடன் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியே விட்டுவிடுகிறோம். வீட்டை, வீட்டில் வாழ்பவனாக கருதுகிறோம். Residence is treated as Resident .ஆகவே ஆத்மா, அதைப்பற்றிய சிந்தனை, விசாரம் பற்றிய எண்ணம் கட்டோடு மறந்து போகிறது. நமது உண்மை ஸ்வரூபம் எது என்றே அறியாமல் கண்ணை மூடி விடுகி றோம். எண்ணற்ற பிறவிகள் எடுக்கிறோம்.
உடம்பு வேறு, உள்ளே உயிர் எனப்படும் ஆத்மா வேறு. தனித்தனி. உடம்புக்கு புலன்களும் அதன் உணர்வுக ளும் தேவைப்படுகிறது. ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மனம், எல்லாமே இந்த உடம்புக்கு வெளியே இருந்து அனுபவம் பெற, திருப்திப் பட தேவையாகிறது. நல்ல சாப்பாடு, உடை, அழகு சாதனங்கள், பெண்கள், செவிக்கு இனிய சப்தம், மூக்குக்கு வாசனை, நாக்குக்கு ருசி, பணம், பதவி அந்தஸ்து பேர் புகழ், கர்வம் எல்லாமே தான் என்கிற இந்த உடம்பின் சுக போகத்துக்கு தேவையாகிறது. இதை அடைய சரியோ, தப்போ எந்த வழியானாலும் பரவாயில்லை என மனம் நினைக்கிறது.
உண்மையில் ஆத்மாவை உணர்ந்தால் மனிதனின் தேவையே வேறு. ஆத்ம திருப்தி அடைவது தான் லக்ஷியம் என்னு புரிந்தால் அவன் மாறிய மனிதன். ஆத்மா இன்பமுற உடலின் பசியோ. விருப்பமோ, துளியும் சம்பந் தமில்லாதது.
பரோபகாரம், கருணை, தாராளமான மனம், தன்னல மற்ற தியாகம் ஆத்மாவுக்கு சந்தோஷம் அளிப்பவை. உற்சாகம் தருபவை.
வாழ்வதே உண்ண, உறங்க, பயப்பட, உடலுறவுக்கு, என்று இருப்பது மிருக இயல்பு. மனசாக்ஷியை மறக்க
வைப்பது. தவறான வழியில் செல்லவைப்பது. வாழ்க் கையை நரகமாக்குவது. மோகம் பேராசை எனும் ரெண்டுமே சக்தி வாய்ந்த கொடிய ராக்ஷஸர்கள். அதன் பிடியில் வாழ்க்கை ஒரு தீராத ஆசைக்கடலில் மூழ்கிவிடும். அற்ப சுகத்தில் மகிழும். அதன் விளை வாக, கவலை, பயம், பொறாமை, சுயநலம், போன்றவை ஒன்றுகூடி மேலும் மேலும் மனிதனை துன்பக்கடலில் ஆழ்த்தும். அதனால் அவன் ஏமாற்றமும் , நிராசை யிலும் தான் முடிவான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



