seethakkadhi j k sivan

 

செத்தும்  கொடுத்த  சீதக்காதி…  நங்கநல்லூர்  J K  SIVAN

நான்   தூத்துக்குடியில் சில  வருஷங்கள் இருந்தபோது நேரம் கிடைத்த போதெல்லாம்  திருச்செந்தூர் முருகனைக் காண  இரு சக்ர  வாகனத்தில்  செல்வேன்.  வெகுகாலம் எனக்கு இரு சக்ர வாகனமாக  பயன்பட்டது  என் இரு கால்களே. பல மைல்கள்  என்னைத் தூக்கிச் சென்றவை.  ரொம்ப  நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  திருச்செந்தூர்  செல்லும் வழியில் காயல் பட்டினம் என்று அதிகம் முஸ்லிம்கள் வாழும் ஒரு ஊர். எல்லா வீடுகளிலும்  வாசல் கதவு சார்த்தியே இருக்கும். வெளியே  பெண்கள் தென்பட மாட்டார்கள். மரைக்காயர் எனப்படும்  கடல் வாணிபத்தில்  ஈடுபடும்  குடும்பங்கள் ஒரு காலத்தில் அங்கே முழுவதுமாக  வாழ்ந்தது.

18ஆம் நூற்றாண்டின்   முதல் பாதியில் (1700–1750) கால கட்டத்தில்  இந்த காயல்பட்டணத்தில் ஒரு முஸ்லீம் இனம் சேர்ந்த  தமிழில் பற்று கொண்ட அப்துல் காதர் என்ற பெயர் கொண்ட ஒரு கப்பல்  வியாபார  வணிகர்  இருந்தார். அவர் தான்  புகழ் பெற்ற சீதக்காதி.  வணிகர் என்பதை விட ‘வள்ளல்’  என  புலவர்கள் போற்றியது ரொம்ப ரொம்ப பொருத்தம்.  தான்  கடல் வாணிபத்தில் சம்பாதித்த,  சேர்த்த, பொருள்களை எல்லாம் “என்னிடம் இருப்பது எல்லாம் பிறருக்கே  என்று அளித்ததால் ”உடைமையிலான் சீதக்காதி” (ஒன்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாத சீதக்காதி)  என்று போற்றப்பட்டவர்.  ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா வின் நெருங்கிய நண்பர். சேதுபதிக்குச் சீதக்காதி  ஆலோசனைகள் வழங்கும் அமைச்சர்.  முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் சீதக்காதியின் மேல் பெருமதிப்புக் கொண்டு, அவரை வங்காளத்தின் கலீபாவாக நியமித்தார். நபிகள் நாயகத்தின் பெருமை  சொல்லும் ‘சீறாப்புராணம்’  உருவாக புலவர் உமறுபுலவருக்கு பெரும் நிதியை வழங்கி ஆதரித்தவர் .

படிக்காசுப் புலவர், நமச்சிவாயப் புலவர்  போன்றவர்கள் அவரால்  ஆதரிக்கப்பட்டவர்கள்.  சீதக்காதி  ஒரு நாள்  இறந்துவிட்டார்.  அவர் மறைவிற்கு வருந்தி, படிக்காசு புலவர் பாடிய  ஒரு சில பாடல்களை இன்று தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் படித்தேன். ரொம்ப பிடித்திருந்தது. அதைத்தான் சொல்கிறேன்.

”மறந்தாகிலும் அரைக்காசும் கொடா மடமாந்தர் மண்மேல்,இறந்தாவது என்ன, இருந்தாவது என்ன,
இறந்து விண்போய் சிறந்தாளும்​ காயல் துறை சீதக்காதி.”

”அடாடா, இந்த  மாபெரும் உலகத்தில்  மறந்து போய் கூட, ஒரு அரைக்காசு, ஒரு தம்பிடி, கொடுக்க மனசில் லாத மனிதர்கள் உலகம் வாழ்கிறார்கள், அவர்கள் இருந்து என்ன பயன், இறந்து என்ன பயன்? தன்னிடம் இருப்பதை எல்லாம் பிறருக்கு வாரி  வழங்குவதற்கே  என்று  பிறந்த காயல்பட்டின வள்ளல் சீதக்காதி, இந்த பூமியை விட்டு விண்ணுலகிற்கு   ஏகிவிட்டாரே. அதல்லவோ இந்த உலகத்துக்கே பெரிய  இழப்பு.  அதே சமயம் விண்ணுக்கு சென்றுவிட்டதால் உலகத்திற்கு இழப்பு, விண்ணுலகத்துக்கு  பெருமை.க்கு பெருமை.

உடைமையிலான் போனான்,   உலகமெல்லாம் ஓர்வழி இலமையுற்றது;
படைமலை போல் தன்தாரை​    பிறர்க்களிக்கும் பழக்கம் போனதே!

”சீதக்காதி என்ற அந்த பெரும் பணக்காரன் போய் விட்டானே. அதனால் இந்த பூமியல்லவோ  ஏழையாகி விட்டது.. அவனைப்போல் இனி இங்கே யாரும் செல்வத்தை மற்றவர்களுக்கு அளிக்க  வேண்டும் என்ற  பழக்கம், மலை போன்ற தாராள உள்ளம் போய்விட்டதே!”

தானம்போல் வாழ்ந்தார் தம்மை   தாமே வாங்கார்; பிறர்க்கே தந்தார்;
மானம் போந்த தமிழர்க்கு    மாய்ந்துபோனார் சீதக்காதி.

”சீதக்காதி தான  தர்மத்தின்  உருவம். தமக்காக எதுவும்  வைத்துக் கொள்ளாமல் பிறருக்கே கொடுத்தவர்.
அவரின் மறைவு தமிழரின் பெருமையையே குறைத்துவிட்டதே .”

ஆறறிவு கொண்டார்க்கு    அருளளித்தார் — அறிவின் விளக்கானார்;
ஊறற லான சொற்பொருளாம்    உடைமையிலான் இன்று உண்டோ?

”சீதக்காதி அறிவின் விளக்கம். அவரது வள்ளல் தன்மை வேறு எவரிடமும் இல்லையே.

”கவி வளர்க்கும் கரமுடையான்    காலமானாற் —
அவனைச் சேர்ந்த புலவர் யாவரும்    அரணிழந்தார் உலகில்.”

சீதக்காதியின் உதவியால் அல்லவோ  தமிழ்ப் புலவர்களின்   கலைகள்  வளர்ந்தன.  ஒரு வலுவான  தாயின் கரத்தை இழந்த  சேய்களாக அல்லவோ புலவர்கள், பாதுகாப்பு இன்றி  அனாதைகளாகி  விட்டனர்.”

புலவர்க்குப் பிதாமஹன்   பொன்தரும் சீதக்காதி;
தலைவனாம் அவர் சென்றார் —   தாழ்ந்தது தமிழின் தனிமை.

தமிழ்ப்புலவர்கள் அவரை “பிதாமஹன்”, தாத்தா  என்று அல்லவோ  வாத்சல்யத்தோடு அழைத்தனர்.
இனி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சீதக்காதி  அளித்த இருந்த ஆதரவு மீண்டும் கிடைக்காதே, புலமை செத்து விட்டதே ”

”கொண்டாள் வள்ளல் கொடைப் பெருக்கம்  கொடூரரும் கொண்டாடும்;
கண்டேன் நான் —அவள் இறந்த கண்ணே உலகின் கருமமே கரிந்ததே!

தாய்  போன்ற  சீதக்காதி எனும் வள்ளல்  வாழ்ந்த போது கொடை பெருக்கம் நடந்து வந்தது.  அந்த தாய் இறந்த அந்தத் தினமே  உலகமே கரிந்த இருளில் மூழ்கிவிட்டதே’

‘என்ன தவம் செய்தாரோ ஈண்டு  இறந்தவள் சிறந்தாரோ?
அன்னையின் வளம்பெற்ற கணமே  ஆள்வரசின் ஆதாரம் துடித்ததே!

”புலவர்கள் என்ன தவம் செய்தார்களோ ? இவ்வாறு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்து, இப்போது விண் உலகிற்குச் சென்று சீதக்காதி  நற்கதி அடைந்தாரோ?அவர் இறந்த கணமே  இந்த குறுநில ராஜாவின் ஆதாரமும் நடுங்கியது.

‘தானம் தாரக் காயல் வந்து  தாழ்ந்ததே பிறர் உள்ளம்;
கானல் மேகங் காய்ந்ததென  காவலனும் கூறிந் துழல்ந்தான்

சீதக்காதி  தானமும் தர்மமும் செய்வதற்கென்றே  பிறந்தவர்.  அந்த வள்ளல் இல்லாமல் போனதும்
மக்களின் மனம் வறண்ட கானலாய் மாறிவிட்டது.  கானல் மேகம் கரைந்துவிட்டதே ”  என  புலவர்கள்  வாடினார்கள்.

‘அருளினைக் கண்டோம்;  அருட்கடல் கண்டோம்; அருநெறி காட்டும் வள்ளல்  கண்டோம்;
அவள் அகன்று நீந்தினாள் — அறிவின் நதி தொலைந்ததோ?

சீதக்காதி என்றாலே  ஒரு அருள் கடல். நேர்மையின் நெறிஉருவம். இப்போது அவர் அகன்று நீந்திப் போனபோது  அறிவின் நதி தொலைந்துவிட்டதா?

”புலமை வளர்க்கும் பூங்கொடி  போனபின் உயிர் பூசலும் ஆயிற்றே;
நிலமை மாறி நெஞ்சங்கள்  நீள்நிழல் கொண்டனவாயிற்றே!

புலவர் பாசறையை வளர்க்கும் பூங்கொடி —சீதக்காதி போனபின் உலகம் தனது  உயிரையே  இழந்து விட்டதே.  எல்லோர் மனமும் இருளால் மூடிவிட்டதே.

”கொடை நிறைந்த குருபக்தி  குன்றியது காலம்;
அவள் கொடுத்த கருணையின்  அருவியும் இன்று காய்ந்ததே.

சீதக்காதி என்ற தர்ம தேவதை இருந்த காலத்தில்  தானம், தர்மம், வள்ளல்தன்மை பெருகியது. சீதக்காதி இன்றில்லை என்பதால் கருணை அருவியும் காய்ந்து போனது.

”பூமி நிறைந்த புண்ணியத்தின்  பொருளாம் வள்ளல்;
அவள் போன நாள் — புகழும் வானில் பறந்தது போலாயிற்று.

சீதக்காதி  என்ற உருவத்தில் தான் இந்த பூமியில் புண்ணியம்  வாழ்ந்தது. சீதக்காதியின் மறைவோடு
உலகத்தின்  புகழும்  வானில் பறந்து மறைந்து போய் விட்டது.


 சீதக்காதியை ஒரு   ஏழை  ஒருவர் சந்தித்து ​ ”ஐயா என் பெண் கல்யாணத்துக்கு நீங்கள் பணம் தந்து உதவவேண்டும்”என  கேட்டபோது  சீதக்காதி உடனே  நிறைய பொருளுதவி செய்ய முன் வந்தார். ஆனால், வந்தவரும் ஆகச் சிறந்த மனிதர் என்பதால், ‘ஐயா தர்ம பிரபு,  எனக்காக  நீங்களே  பணத்தை  ஜாக்கிரதையாக  வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருந்தால்  பறிபோய்விடும். உங்களிடமே இருக்கட்டும். திருமணம் ​ நிச்சயப்படுத்தி விட்டு  நானே நேரில் வந்து உங்களிடமிருந்து  பெற்றுக்கொள்கிறேன் ” என்கிறார் ஏழை. 

சில மாதங்கள் கழித்து, மகளுக்கு திருமண​ம்  நிச்சயமானபிறகு , சீதக்காதியைப் பார்க்க வந்த​ அந்த ஏழை  சீதக்காதி ​ இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி​தான் பேரிடியாக தலையில் விழுந்தது.  ‘உதவுகிறேன்’ என்று கூறிய வள்ளல் சீதக்காதியின் உடலைக்கூட பார்க்க முடியவில்லை. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்​துக்குச்  சென்று, மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு, ​அங்கே  எல்லோரிடமும் சீதக்காதி தனக்கு பணம் தருகிறேன் என்று வாக்களித்ததை  சொல்லி அழுகிறார். ஓர் ஆச்சர்யம்​  அப்போது நடந்தது.!
​சீதக்காதியின்  சமாதியிலிருந்து  அவரது வலது  கை வெளிவந்தது. அதில் விலையுயர்ந்த அழகிய முத்துக்கள் பதிக்கப்பட்ட மோதிரம். இதைப் பார்த்த அங்கு கூடியிருந்த சபையோர்கள் பெரிதும்  வியப்புற்று அந்த மோதிரத்தை அந்த வறியவருக்கு வழங்கி​னார். அந்த​  மோதிரமோ பல ஆயிரம் பொன் மதிப்புள்ளது.​அதை விற்று அந்த ஏழை பெண்ணுக்கு கல்யாணம் பண்ணினார்.  அன்று முதல்  சீதக்காதி  செத்தும் கொடுத்த

சீதக்காதி என்று ​பெயர் பெற்றார்.

சீதக்காதியை  நம்மில் பலர் அறியவில்லை என்பதுஒரு புறம் இருக்கட்டும்.  இது போல் அருமையான வேறுஎத்தனையோ  தமிழை வளர்த்த சீதக்காதிகளும் வாழ்ந்திருக்கிறார்கள், நமக்குத் தெரியாமல், என்பது தான்  ஆச்சர்யம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;