
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
உயிர்த் தியாகம்
குழந்தைகளே, சில கதைகள் உங்களை மறக்க முடியாமல் செய்து விடுகிறதல்லவா? அப்படிப்பட்ட உப கதைகள் அநேகம் கொண்டவை தான் நமது ரெண்டு இதி ஹாஸங்கள், ராமாயணமும் மஹா பாரதமும்.
உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்? மஹா பாரத போரில் மிக முக்யமானவன் யார் பீமனா, அர்ஜுனனனா, பீஷ்மனா, கர்ணனா? நிறையபேர் உடனே கை தூக்குகிறீர்கள், எங்கே ஒவ்வொருவராக ஒரு சின்ன துண்டு காகிதத்தில் டில் உங்கள் விடையை எழுதிக் கொண்டு வந்து காட்டுங்கள். யார் பேர் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறேன்.
”அட என்னைப்போலவே எல்லோரும் ஒரே பெயரை சொல்லி இருக்கிறீர்களே. “கிருஷ்ணன்” . பாண்டவ கௌரவ யுத்தம் என்று பெயர் பெற்றாலும் ஆயுதம் எடுக்காமலேயே அதில் பெரும் பங்கேற்றவன் அதன் சூத்ரதாரி க்ருஷ்ணன் ஒருவனே.
கடோத்கஜன் பீமனின் மகன். ஹிடும்பனுக்கு பிறகு தன் தாய் ஹிடும்பியுடன் காட்டில் அரசாட்சி புரிந்து கொண்டு வந்தவன். பாரத போரில் முக்ய பங்கு கொண்டவன். பீமன் நினைத்த மாத்திரத்தில் உடனே தோன்றி உதவுபவன் கடோத்கஜன். மாய வித்தைகளில், அதிரடி போரில், நிபுணன். கிருஷ்ணன் அவனைத் தக்க சமயத்தில் உபயோகிக்க ஏற்கனவே முடிவெடுத்து விட்டார். தந்தை பீமனைப்போலவே கதாயுதத்தை உபயோகிப்பதில் கடோதகஜன் வல்லவன்.
ஜயத்ரதன் கொல்லப்பட்ட பிறகு இரவெல்லாம் யுத்தம் தொடரும் சமயம் கடோத்கஜனின் பங்கு அபாரம்!! ஹிடும்பன் மறைவிற்கு பிறகு இந்த்ரபிரஸ்தம் வந்தான் கடோத்கஜன். பாண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தர்மருக்கு தம்பி பீமன் மகனை ரொம்ப பிடிச்சு போச்சு!!
“கிருஷ்ணா, நாம் இவனுக்கு ஒருநல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கவேண்டாமா?” என்றபோது தகுதியான பெண் யாரென்று கிருஷ்ணன் முடிவெடுத்தான். தான் வதம் செய்த முரன் என்ற அசுரனின் மகள் காமகடாங்கதா தான் பொருத்தமானவள். முரனுடன் யுத்தம் நடந்தபோது அவள் மிக்க பலத்துடன் கிருஷ்ணனின் சரங்களை தடுத்ததுடன் கருடனை தன் வாளினால் தாக்கி நிலைகுலைய மயங்கி விழ செய்தவள். அவளைக் கொல்ல கிருஷ்ணன் சுதர்சன சக்ரத்தை எடுக்கும்போது சக்தி தேவதை குறுக்கிட்டு “கிருஷ்ணா, நிறுத்து, நான் இவளுக்கு வரமளித்த வாள் அவள் உபயோகிக்கும்போது அவளை எவராலும் வெல்லமுடியாது. அவளைக் கொல்வது சக்தி ஆயுதங்களை அவமதிப்பதாகும். அவளைக் கொல்லவேண்டாம்” என கேட்டுக்கொண்டாள். அதே சமயம் சக்தி தேவதை காமகடாங்கதா முன் தோன்றி “ பெண்ணே, கிருஷ்ணன், உன் எதிர்கால மாமனார் முறை. அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறு” என்றாள். அந்த பெண்ணைப் பொருத்தவரை தன்னை போரிட்டு ஜெயிக்கிறவன் தான் தனது கணவன்” என்று ஒரு பிடிவாதம்!. நிறைய பேரை அவள் யுத்தம் செய்து கொன்றிருக்கிறாள். பீமன் மகன் கடோத்கஜன் அவளை போரிட்டு வென்று மணக்க தயாராகி கிருஷ்ணனை வணங்கும்போது “கடோத்கஜா, போ, அவளை ஜெயித்து மனைவியாக அழைத்து வா. அவளோடு போரிடும்போது என்னை நினைத்துக்கொள், வெற்றி உனக்கே” என்ரூ ஆசிர்வதித்தார்.
அவ்வாறே கடோதகஜன் அவளை வென்று மணந்தான். அவர்களுக்கு பிறந்தவன் தான் பார்பரீகன். தன் மகனோடு கடோத்கஜன் கிருஷ்ணனை துவாரகையில் சென்று தரிசித்தான். கிருஷ்ணன் அவன் மகனை ஆசிர்வதித்து “சுஹ்ரிதயா”- நல்ல இதயம் கொண்டவன்) என்று பெயரிட்டான். பர்பரீகன் காடு மலை எல்லாம் சென்று எங்கெங்கெல்லாம் துர்க்கை சிவன் பூஜை செய்யமுடியுமோ அவற்றை எல்லாம் முடித்து நிறைய வரங்கள் பெற்றான். பாண்டவர்கள் வனவாசத்தில் தீர்த்தயாத்ரை சென்றபோது சண்டிகா கோவில் இருந்த ஊரில் பார்பரீகனை கண்டு ஆசிர்வதித்தனர் .அவனது தெய்வ பலம் பின்னர் பாண்டவர்களுக்கு யுத்தத்தில் பேருதவி செய்தது.
மீண்டும் பாரத யுத்தத்துக்கு வருவோம் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட அன்று வெகுநேரம் இருட்டில் கூட யுத்தம் தொடர்ந்தது. கடோத்கஜனின் மாயாஜாலங்கள், வீராவேசமான யுத்தம் கௌரவர்களை நிலைகுலைய செய்ததால் துரியோதனன் கர்ணனிடம் ஓடிவந்து “எப்படியாவது கடோத்கஜனை தடுத்து நிறுத்து” என்றான். கர்ணனின் அஸ்த்ரங்கள் கூட வெகு லாகவமாக கடோத்கஜனால் முறியடிக்கப்பட்டு வேறு வழியின்றி இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தை கையில் எடுத்தான் கர்ணன். ஒரே முறை தான் அதை பிரயோகிக்கலாம் பிறகு அது இந்த்ரனிடம் போய்ச் சேர்ந்துவிடும் என்று தெரிந்தும், அதை அர்ஜூனன் மேல் ஏவவே கர்ணன் பிரத்யேகமாக அதை கர்ணன் வைத்திருந்தான். இப்போது கோபத்தில் அதை கடோத்கஜன் மேல் ஏவி அவனைக் கொன்றான். கௌரவர்கள் குதூகலித்தனர் ஆனால் பாண்டவர்கள் சோகத்திலும் அதிர்ச்சியிலும் சிலையாயினர். பீமன் நிலை குலைந்தான். அர்ஜுனன் அசந்து போனான். யுதிஷ்டிரர் முகம் கவிழ்ந்தார். கிருஷ்ணன் முகத்தில் மட்டும் கவலை நீங்கி புத்துணர்ச்சி தோன்றியது.
கிருஷ்ணனுக்கு தெரியும் கர்ணன் பலம், அவனது அஸ்த்ர ரகசியங்கள். சக்தி ஆயுதம் அவனிடம் இருந்தவரை அர்ஜுனனால் அவனை நெருங்கமுடியாது. அர்ஜுனன் உயிர் தப்பினால் அதுவே பெரிய வெற்றி. பாண்டவர்களின் வெற்றி வெறும் கனவாகிவிடும். கர்ணன் அர்ஜுனன் நெருங்காது ரொம்ப சாமர்த்தியமாகவே இதுவரை கண்ணன் தேரை செலுத்தி வந்தான். இனி அர்ஜுனன் உயிருக்கோ பாண்டவர்கள் வெற்றிக்கோ சந்தேகம் இல்லை. பாவம் கடோத்கஜன்!! இதற்காக தன் உயிரை பணயம் வைக்க வேண்டியிருந்தது, தன உயிரைக்கொடுத்து அர்ஜுனன் உயிரைக் காப்பற்றினான் என்று கிருஷ்ணன் மட்டுமே அறிவார் ஆதலால் கடோதகஜன் மறைவின் போது கிருஷ்ணனன் நிம்மதி யாக ஒரு பெருமூச்சு விட்டார் .!!
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



