MANTHRAALAYA MAHAN J K SIVAN

ஒரு  ஜீவ யோகி.   நங்கநல்லூர்  J K SIVAN
வியாசராஜர் அலங்கரித்த  பீடம்  வியாசராஜ மடம்  என்றும் அவருக்குப் பின் அந்த மடாதிபதிகளில் மிக பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது  உலக பிரசித்தம்.  ராகவேந்திரருக்கு முற்காலத்தில் அந்த  மடம்   விபுதேந்ந்திர மடம்  என்று தான் அறியப்பட்டது.  பின்னர்  ராகவேந்திர மடம்  என ப்ரபலமாக  பக்தர்களால்  தரிசித்து வணங்கப் பட்டது.
ராகவேந்திரர் பிறந்தது 1595ல்  என்றும் 1595–1601க்கு  இடைப்பட்ட காலம் என்றும்  சொல்லப்படுகிறது.
பிறந்த இடம்: புவனகிரி, (இன்றைய தமிழ்நாடு, கடலூர் மாவட்டம்)
குலம்: ஸ்ரீ மத்வாசாரியர் வழி வந்த த்வைத சமயத்தை பின்பற்றிய துங்காரா குடும்பம்
தந்தை: திரு திண்ணப்ப ஸாஸ்த்ரி
தாய்: கோபிகாம்பாள்இயற்பெயர்  வேங்கடநாதன் சிறுவயதில் மிகுந்த அறிவாளியாகவும், வைதிக வேதங்களில் வல்லவராகவும் இருந்தார். கவி, தத்துவஞானி, வேதாந்தி, நயநவீனராக விளங்கினார்.  காஞ்சிபுரம் போன்ற புண்ய தலங்களில் கல்வி கற்றார்.
அவர் வேதங்கள், உபநிஷதங்கள், ந்யாய சாஸ்திரம், மிமாம்ஸா, த்வைத சித்தாந்தம் ஆகியவற்றில் வல்லுநர் ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் என்ற குருவினிடம்  இருந்து த்வைத வேதாந்தத்தில் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.
வேங்கடநாதர் திருமணம் ஆனவர். மனைவியின் பெயர் சரஸ்வதி.
திருமணத்திற்குப் பிறகும் அவர் மனம் முழுதும் பக்தி மற்றும் ஞான மார்கத்திலேயே  ஈடுபட்டது. குடும்ப  வாழ்க்கை கடின நிலையில் இருந்தபோதிலும், அவரின் மனம் எப்போதும் பரமாத்மாவில் ஒன்றிணைந்திருந்தது.

 ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்  1621–1623  கால கட்டத்தில்  அவரை தமது வாரிசாக தேர்ந்தெடுத்து, ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் ஆனார்.அதன் பிறகு அவர் மந்திரா மடம் (மஞ்சாலி / கும்பகோணம் அருகே) தலைவராக நியமிக்கப்பட்டார்.
ராகவேந்திரர் த்வைத சித்தாந்த உபதேசம்;
“மனுஷ்யனின் கர்மம் நன்மையாக இருந்தால், தெய்வம் அவனுக்கு ஆதரவாக இருக்கும்.”
அவர் எப்போதும் “ஹரி ஸர்வோத்தமன், வாயு  ஜீவோத்தமன்” என்ற ஸ்ரீ மத்‌வாசாரியரின் தத்துவத்தை நிலைநிறுத்தினார்.
“மனுஷ்ய ஜன்மம் பெறுவது அரிது, அதனை மோகத்தில் வீணாக்க வேண்டாம். அன்பும் பக்தியும் உள்ள இடத்தில் நான் எப்போதும் இருப்பேன். என் தேக வியோகத்தின் பின் 700 ஆண்டுகள் நான் இங்கே ஜீவனாக இருப்பேன்.என்னை நம்பிக்கையுடன் அழைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் உதவி செய்வேன்.”
ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய  எண்ணற்ற அதிசயங்களில் சில; தினமும் பூஜையில் காணப்பட்ட பிரசாதம் தன்னால் சுவைக்கப்பட்டதுபோல் இருந்தது.
ஒரு தாய் தன் குழந்தையுடன் ராகவேந்திரரின் ஆசிரமத்திற்கு வந்தபோது  பாம்பு கடித்து குழந்தை இறந்தது. தாயார் கதறினாள்.  அமைதியாக இரு என்று  ஜாடை காட்டிய  ராகவேந்திரர் அருகே இருந்த  கமண்டலத்தில் இருந்து சிறிது ஜலத்தை எடுத்து ஜபித்து குழந்தையின் வாயில் ஊற்றினார். அடுத்த சில நிமிஷங்களில் குழந்தை உயிர் பெற்றது.
அருகே இருந்து இதை கண்ணால் கண்டவர்கள்  அதிசயித்து  “ஜய ஜய ராகவேந்திரா!” என முழங்கியது வானைத் தொட்டது.
 ஒரு முறை ராகவேந்திரர்  ஸரஸ்வதி பூஜை செய்து கொண்டிருந்தபோது கலைமகள் அவரின் நாவைத் தொட்டதாகவும் அதன் பிறகு அவர் எதையும் ஒருமுறை கேட்டாலே மனத்தில் பதிந்துவிடும் திறனைக் பெற்றார். ‘ஏக சந்த க்ரஹி ‘.

பூர்வாஸ்ரமத்தில்  வேங்கட நாதனாக வாழ்ந்தபோது பரம ஏழை. ஆனாலும்  தினமும் விருந்தினர்களுக்கு அன்னதானம் செய்வார்.  ஒருநாள் அவரது மனைவி, “இன்று வீட்டில் மணி அரிசி கூட  இல்லை” என்று கூறினாள்.“கவலையே வேண்டாம். இருப்பதை முதலில் விருந்தினருக்கு அளிப்போம். நமக்கு தேவையானதை அப்புறம் ஸ்ரீ ஹரி தருவார்.” இப்படி சொல்லும்போதே  அங்கிருந்த த்வாரகேஸ்வரர் (கிருஷ்ணர்) ஒரு வித்தகரான விருந்தாளியாக வந்து, இருப்பதை கேட்டு சாப்பிட்டு விட்டு சென்றார். அடுத்த கணமே வற்றாமல்  பானையில் அரிசி நிறைந்தது.

ஒருமுறை அவருடைய மடத்தில் யாகம் நடந்தது. அந்த யாகம் முடிந்த பின் நாலு நாளான பின்பும்  அக்னியின் தீயின் ஒளி மாறவில்லை. ராகவேந்திரரின்  ‘தபஸின் சக்தி”.
 அந்த பிரதேசத்து  குறுநிலஅரசன் வெங்கட பாண்டியராயர் தன் பிள்ளை வியாதியின் உச்சி கட்டத்தில்  உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்   நிலையில்   துயரத்தில் ராகவேந்திரரை வேண்டினார்.  “மன்னா, அவன் பாவம் முடிந்தது, ஆனால் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறி, தீபாராதனை செய்தார். சில மணி நேரங்களில் ராஜாவின்  பிள்ளை  தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பது போல்   உட்கார்ந்தான். ராஜாவுக்கு எப்படி இருக்கும்? ஒரு பட்டயம் எழுதினான்.  “மந்திராலய  மடத்திற்கு எந்நாளும் வரி விலக்கு”
பாவனாஸுரன் என்ற அசுரன் ராகவேந்திரரை அவமதிக்க முயன்றான். அவரோ அமைதி, அருள், சக்தியோடு அவனைவரவேற்றார். அவன் உள்ளும் புறமும் உடனே மாறிவிட்டான்.  மன்னிப்பு கேட்டு அழுதான். நல்ல வழியில் செல்லும் சக்தியை அவனுக்கு மஹான் அளித்தார்.

 1671ல்   சீடர்களிடம்   ”நான் இப்போது தியான நிலையில் நுழைகிறேன்.  என் மேல் சந்தனம் பூசி, தாமிர படுக்களால் மூடுங்கள்.  நான் இன்னும்  700 ஆண்டுகள் இங்கு ஜீவனாக இருப்பேன்.” என்றதும்  தியானத்தில் இருந்த  அவர் மேல்  சந்நிதானம் கட்டப்பட்டது.
மந்திராலயத்தில் ராகவேந்திரரின் பிரயோக நாள் முதல் தொடர்ந்து ஒரு தீபம் அணையாமல் எரிகிறது. “ஜீவனாக உள்ள ராகவேந்திரரின் சின்னம்” என அது  கருதப்படுகிறது.
ஒரு நாள் சில பக்தர்கள் ஸ்வாமியின் சந்நிதானம் அருகே பஜனை செய்தனர்.அவர்கள் ஒரு பாணம் (அழகான நாதம்) கேட்டு அதிசயித்தனர்.அது ராகவேந்திரரின் தெய்வீக அனுக்ரஹம்.  அதே ஒலி, எங்கும்  திவ்ய கந்தம் வீசுவதை வாசனையை அனுபவித்ததாகக் கூறினர்.
“மந்திராலயத்தில் சந்நிதியிலோ  அல்லது அவர்  வீட்டிலோ வேண்டினால், சில நாட்களில் வேண்டுதல் நிறைவேறுகிறது.”
உண்மையுடன், நம்பிக்கையுடன் அவரின் மந்திரத்தை ஜபிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அருள்புரிவதாக பலர் அனுபவித்துள்ளனர்.
ஒரு நாள் ராகவேந்திரர் தனது சீடர்களுடன் வெகு தூரம்  வெகுநேரம் பயணம் சென்றபோது பசி, எங்கும் உணவு கிடைக்க வழியில்லை.  ராகவேந்திரர் ஜெபித்தார்.  அவர்கள் கொண்டு  வந்திருந்தபாத்திரங்களில் சூடாக  ஆகாரம் பொங்கி வழிந்தது. “பக்தருக்கு பசி வருவது எனக்கு பாவம்.” என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவரிடமிருந்து மெதுவாக வந்தது.
நல்லவர் ஒருவர் இருந்தால் அவர் மேல் அநேக தீயவர்களுக்கு கட்டாயம்  பொறாமை இருந்தே தீரும் அல்லவா? ராகவேந்திரர் ஒரு போதும், எவரிடமும் கோபித்ததோ, வெறுப்படைந்ததோ கிடையாது. பாரபக்ஷம் இல்லாமல் எல்லோரையும் அன்போது அரவணைப்பவர். “நீங்கள் நலமாக இருங்கள்” என்று மனமார வாழ்த்துபவர்.  எத்தனையோ பேர் திருந்தி இருக்கிறார்கள்.
ராகவேந்திரர் சந்நிதானத்தில்   இயற்கையாகவே   மல்லிகை, சந்தனம் போன்ற நறுமணம்  கமகமக்கிறது என்று  அனுபவித்து சொல்கிறார்கள். .“ஓம் ஸ்ரீ ராகவேந்தாய நம:” என்ற மந்திரத்தை ஜபித்து மந்திராலயத்தில் நமஸ்காரம் செய்தபின், எத்தனையோ குடும்பங்களில் புத்ர பாக்யம் கிடைத்திருக்கிறது கண்கூடான ரஹஸ்யம். எத்தனையோ பேருக்கு  ஆஸ்பத்திரியில் குணமாகாத  நோய்கள் விரைவில் மந்திராலயம் வந்தபிறகு குணமாகி சந்தோஷமாக வாழ்ந்தவர்கள். ராகவேந்திரரின் ஜீவசமாதி 1671 இல் மந்திராலயா  க்ஷேத்திரத்தில் நடந்தது.  பிரயோக  சன்னிதானம் கர்நாடகாவில்,,ரெய்ச்சூர்  மாவட்டம் அருகே உள்ளது.
பாலேந்து பூஷித முகம், பவ பீத ஹாரம் |  ஸ்ரீ ராகவேந்திர யதீந்த்ரமஹம் நமாமி || யதிராஜ ராகவேந்திரம், வந்தே ஹம் ஸததம் முநிம் | காமதாம் கல்யாண தாம், கலே திகாமதம் ||  என்ற மந்த்ர ஜபம் போதும் அவரை அடைவதற்கு. அவர் அருள் பெற.
ராகவேந்திரர்  இயற்றிய நூல்கள்;  நியாய முக்தாவளி, தத்வ மஞ்சரி, பட்ட ஸங்கிரஹா, தந்த்ர தீபிகா, த்வாதச ஸ்தோத்ர வ்யாக்யானம், கீதா விவ்ருதி, உபநிஷத் பாஷ்யம்,   ப்ரபஞ்ச மித்யாத்வ அனுமான காண்டன.  எல்லாமே  த்வைத வேதாந்த தத்துவத்தின் சாரம். இன்று வரை எத்தனையோ கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் மூலமாக  மந்த்ராலய க்ஷேத்ரம்  விளங்குகிறது.Poojyaaya Raaghavendraay, satya Dharma Rathaayacha,Bhajathaam Kalpa Vrikshaaya  Namathaam Kaamadhenuveyபூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய, ஸத்ய தர்ம ரசாயதா, பஜதாம் கல்ப வரிகஷாய, நமதாம்  காமதேனுவே.  என்கிற ரெண்டு வரி ஸ்லோகம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்போம். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;