ARUNACHALA CALLS J K SIVAN

ஒரு  ப்ரம்ம ஞானியின் பயணம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN 
 
1879ம் வருஷம், டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்த ஆண்  குழந்தைக்கு வெங்கட்ராமன் என்று பெயர் வைத்தவர்கள் தந்தை  வக்கீல் சுந்தரம் அய்யரும். தாயார் அழகம்மாளும். அவன் பிறந்த  ஊர் திருச்சுழி, மதுரையிலிருந்து  30 மைல் . விருதுநகரிலிருந்து 18 மைல் . அண்ணா  ரெண்டு வயது மூத்தவன். ஒரு தம்பி  தங்கை.  சுகமாக வாழ்ந்த இந்த நடுத்தர குடும்பத்துக்கு பெரிய கஷ்டம் அப்பா இறந்தது. வெங்கட்ராமனுக்கு 12 வயது.   குடும்பம் சிதறியது. வெங்கட்ராமனும் அவன் அண்ணாவும்  மதுரையில்  சித்தப்பா  சுப்பையர் வீட்டுக்கு சென்றார்கள்.    வேங்கடராமன் முதலில் ஸ்காட் நடுத்தர பள்ளியில் சேர்ந்து பின்னர்  அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில்  9வது வகுப்பில்  சேர்ந்தான்.  ஒருதரம் காதால் கேட்டாலே மனத்தில் பாடங்கள் பதிந்துவிடும். இயற்கையிலே  புத்திசாலி.  நல்ல பலசாலி என்பதால் படிப்பை விட  விளையாட்டுகளில் அதிக விருப்பம்.  தூக்கத்தில் கும்பகர்ணன்.  ஆழ்ந்த தூக்கம் அதிகம்.

அவன்  விழித்திருந்தால் நெருங்காத  நண்பர்கள்  தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனைத் தூக்கிக்கொண்டு போய் அடித்து, முகத்தில் கரி பூசி பின்னர்  கொண்டு வந்து வீட்டில் படுக்கையில் போடுவது வரை ஒன்றுமே வெங்கட்ராமனுக்கு தெரியாது.  அவர்களாக மறுநாள் நடந்ததை சொன்ன பிறகு தான் புரியும்.

16ம் வயதில், ஒருநாள்   ஒரு  உறவினர் வீட்டுக்கு வந்து, தான் தரிசித்த  அருணாசலத்தை (திருவண்ணாமலை) பற்றி விவரித்தார்.  அருணாசலம் என்ற  பெயரைக் கேட்டவுடனேயே  வெங்கட்ராமனுக்கு  மனதில் இனம் புரியாத  ஒரு ஆனந்தம்.

”மாமா,  நீங்க சொல்ற அருணாசலம் எங்கே இருக்கு?’  என ஆச்சர்யத்தோடு கேட்ட வெங்கட்ராமன் மனதில் ஒரு ஈர்ப்பு, அரிப்பு,  இருந்தது.  ஒரு வாரம் சென்றபின், ஒருநாள் வீட்டில்  பெரியபுராணம் பழைய புத்தகம் கண்ணில் பட்டது. அருபத்து மூன்று நாயன்மார்கள் சரித்திரம் ரொம்ப  பிடித்தது. ஆஹா  என்ன பரிபூர்ண சிவபக்தி. எவ்வளவு அதிசயங்கள்! இதெல்லாம் மனதை சந்தோஷப்படுத்தியது. அவன் மனதில் ஆன்மீக எண்ணங்கள், தாகம்  இதனால்  விஸ்வரூபம் எடுத்தது.
பதினாறரை வயசு ஆகும்போது ஒரு நாள்  அந்த அதிசயம் நிகழ்ந்தது.

”சித்தப்பா வீட்டில் மாடியில் தனியாக உட்கார்ந்திருந்தேன். திடீரென்று ஒரு மரண பயம் என்னை ஆட்கொண்டது.  எனக்கு உடம்புக்கு ஒன்றுமே இல்லை. ஆரோக்யமாகத்தான் இருந்தேன். நான் இறக்கப்போகிறேன் என்று தோன்றியது .  அடேடே மரணம் எனக்கு சம்பவிக்கப்போகிறதா? என்ன அர்த்தம்? இந்த உடம்பு தான் சாகப்போகிறது. நான் இல்லை என்ற ஒரு எண்ணம் பலம் பெற்றது. மரண நாடகம் ஆரம்பமாயிற்று. மூச்சை அடக்கினேன். உதடுகளை இருக்க மூடிக்கொண்டேன். எனக்குள்  ”இதோ என் உடம்பு சாகப்போகிறது..  ஆம். இதோ இந்த உடம்பு செத்துவிட்டது. இதை என்ன செய்வார்கள்? சுடுகாட்டுக்கு தூக்கி போவார்கள்.  எரிப்பார்கள் சாம்பலாகும்.  உடம்பு சாம்பலாகிவிட்டதே, அதனால் நான் செத்து விட்டேனா?நான் அந்த உடம்பா? அந்த உடம்பிலிருந்து  பிரிந்த  ஆவி சரீரமா,  உயிரா, அப்படியென்றால் ஆத்மாவுக்கு சாவு கிடையாதா?.” என்று மனம் சிந்திக்க தொடங்கியது.

அதற்கப்புறமே  வெங்கட்ராமன் முற்றிலும் மாறிவிட்டான்.  பிரஞையோடு  தன்னை மறந்த நிலையில், (சமாதிநிலையில் )
ஆழ்ந்து விடுவான். இந்த உடம்பு வேறே,   நான் என்கிற என்னுள் இருக்கும் ஆத்மா வேறே,  என்று புரிய ஆரம்பித்தது.  இந்த சம்பவத்துக்குப் பிறகு படிப்பிலோ, நண்பர்களிடமோ,, விளையாட்டிலோ எதிலும் புத்தி போகவில்லை. ஆத்ம சிந்தனை மட்டுமே எப்போதும் அவனை ஆட்கொண்டது.  முன்பெல்லாம் எதிலே நாட்டம், விருப்பம் உண்டோ, அதெல்லாம் இப்போது  காணோம்.  உணவிலும், விருப்பு வெறுப்பு அகன்றது. தட்டில் விழுந்ததை ருசியோ நாட்டமோ இன்றி விழுங்கினான்.

சித்தப்பாவும் அண்ணாவும், கூர்ந்து கவனித்தார்கள்.  இது நாடகம் என்று நினைத்தார்கள்.
1896 ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி,  பத்தாவது வகுப்பு   பொது பரிக்ஷைக்கு  படித்துக் கொண்டிருந்தான். ஆங்கில இலக்கண வாத்யார், இதை  ‘மூன்று தடவை எழுதிக்கொண்டு வா”  என்று  வேலை கொடுத்திருந்தார்.  ரெண்டு தடவை எழுதியவன் மூன்றாவது தடவை எழுத முயற்சிக்கும்போது  மனத்தில் ஒரு  குறுக்கு சுவர் தடை செய்தது.. ”இதனால் என்ன பயன்?  என ஒரு பலமான எண்ணம் உருவாகி  நோட்டை வீசி எறிந்தான். சப்பணம்  போட்டு உட்கார்ந்துகொண்டு கண்மூடி த்யானத்தில் ஆழ்ந்தான்.
அண்ணா இதை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு ரொம்ப கோபம்.
”என்னடா உன் மனதில் சாமியார், துறவி, பெரிய யோகி  என்ற எண்ணமா? என்று கத்தினார். யோகிக்கு  வீட்டிலே இருந்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டு  என்ன  வேலை ? படிப்பதாக பாவ்லா காட்டுகிறாய்? நீ  என்ன யோகியா?’


“ஆம்  அண்ணா சொல்வது சரியே. இங்கே எனக்கு இனி என்ன வேலை? மனதில் ஒரு  குரல் ஒலித்தது.  பளிச்சென்று சில மாதங்களுக்கு முன் கேட்ட அருணாசலம் பெயர்  ஞாபகம்  மனதில் படர்ந்தது. தொடர்ந்தது. கனவில் ஆக்கிரமித்த அருணாசலம்  அழைத்தது.

வீட்டை விட்டு அவ்வளவு  சுலபமாக வெளியேற முடியாதே. ஒரு சாக்கு போக்கு வேண்டும்.
”அண்ணா எனக்கு இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு  நான் ஸ்கூலுக்கு  இப்போ போகணும். கடவுளாக பார்த்து பணத்துக்கும் ஒரு வசதி பண்ணி கொடுத்தார்.  


”சரி சரி, அப்படின்னா,  நீ ஸ்கூல் போகிற வழியில்  ஐந்து ரூபாயை சுவாமி ரூமில் இருக்கும் டப்பாவில் இருந்து எடுத்துக் கொண்டு என் காலேஜ்க்கு போய் எனக்கு பீஸ் கட்டிவிடு ”

வேங்கடராமன்​  பூஜை அறையில் இருந்த டப்பாவில் இருந்து மூன்று ரூபாய் தான் எடுத்துக் கொண்டான்.  
அருணாசலம்  போக இது போதும் அதில் ஒரு துண்டு காகிதம் தமிழில் வேகமாக எழுதி  வைத்தான். 
 
​” அப்பா கட்டளையின் படி அவரைத்  தேடிப் போகிறேன். ‘இது”ஒரு புனித பயணமாக  செல்கிறது.  யாரும் வருந்த வேண்டாம்.  தேட  பணம் செலவு செய்யவேண்டாம்.  காலேஜ் பீஸ் கட்டவில்லை.  மீதி ரெண்டு ரூபாய் டப்பாவிலேயே இருக்கிறது. இப்படிக்கு  — ”.
 வெங்கட்ராமன் இல்லை வெறும் கோடு. இதுவரை வெங்கட்ராமனாக இருந்த பகவான் ஸ்ரீ ரமண  மகரிஷி பற்றி   மேற்கொண்டு அடுத்த பதிவில்
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;