

யார் யா, அதிர்ஷ்டக்கட்டை? — நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் எத்தனையோ அதிர்ஷ்டக் கட்டைகள் இருக்கிறார்கள். சிலர் எதைத் துவங்கினாலும் அது நஷ்டத்தையே அளிக்கும். சிலர் வாயினால், காரியத் தை கெடுத்துக்கொள்ளும் சாமர்த்யசாலிகள். சிலரை நேரில் பார்த்தாலே ‘போ நீ வேண்டாம்’ என்று திருப்பி விடுவார்கள். எல்லாவற்றிலும் மேலாக சிலர் பேரை சொன்னாலே சாதாரணமாக நடக்க கூடிய காரியமும் துளியும் நடக்காது. அப்படி ஒரு வடிகட்டிய அதிர்ஷ்டக்கட்டை ராமண்ணா.
B .A. படித்தான் நல்ல மதிப்பெண். இருந்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை. வாத்யாராக ட்யூஷன் எடுத்து பார்த்தான் ஒருவரும் வரவில்லை. B .COM படித்தான் அப்படியும் வெகுநாள் கிடைக்காமல் ஒருநாள் ஒரு கம்பெனியில் வேலைக்கு வா என்று அழைத்தார்கள் அவன் போகும்போது பஸ்ஸிலிருந் து இறங்கும்போது கீழே விழுந்து கால் உடைந்து ஆஸ்பத்ரியில் ரெண்டு மாசம் இருந்த செலவு தான் மிச்சம். வேலை அவனுக்காக காத்திருக்க வில்லை. பம்பாயில் சில நாட்கள் இருந்து வேலை தேடினான். ஒரு வேலையில் மூன்று மாதம் இருந்தும் சம்பளமே தரவில்லை. இன்னொரு கம்பெனியில் வேலை கிடைத்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒப்புக்கொண்டான். ஏதோ சட்டத்துக்கு எதிராக தில்லு முல்லு செய்வதாக புகார். அந்த கம்பெனி தண்டிக்கப் பட்டு மூடிவிட்டார்கள். அவன் புதிதாக வேலைக்கு சேர்ந் ததால் அவனை காவல் துறை விசாரணை மட்டும் செய்து விட்டு அவனுக்கு ஒன்றும் தெரியாத தால் வெளியே விட்டது.
தண்டாங்கோரை கிராமத்தில் அம்மா பாஷையை தொத்தல் வீட்டை வித்து கடன் அடைத்து மீதி இருந்த தை கொடுத்தாள் . அந்த பதினான்காயிரம் ரூபாயும் கரைந்து விட்டது. அம்மா தள்ளாத வயதில் எங்கோ சத்திரத்தில் தங்கி வீட்டு வேலைகள் ஏதோ செய்து வயிறு கழுவிக் கொண்டிருந்தாள்.
ராமண்ணாவுக்கு பம்பாயில் ஏதோ ஒரு பாவ் பாஜி சமோசா கடையில் கணக்கெழுத வேலை கிடைத்தது. அதுவும் அந்த கடை முதலாளி தஞ்சாவூர்காரர் என்பதால். அவருக்கு எப்படியோ ராமண்ணாவை பிடித்து அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
தண்டாங்கோரை தங்கம்மா விடம் இருந்து போஸ்ட் கார்ட் வரும். அதில் அவனைப் பற்றி நிறைய விசாரித்து விட்டு கடைசி வரியில் “ராமு, நீ சம்பாதிப்பதில் ஏதாவது மிச்சம் இருந்தால் எனக்கு ஏதாவது பணம் அனுப்பு கிறாயா? என்று கேட்பாள், அந்த கடைசி வரியை அவனால் படிக்க முடியாது. அவன் கண்களில் தான் காவேரி பிரவாகமாக வெளிப்பட்டு எழுத்தை மறைக் குமே.
இந்த வருஷமாவது எப்படியாவது தீபாவளிக்கு ஊர் போகணும். அம்மாவுக்கு கொஞ்சம் பணம் கொண்டு போகவேண்டும். முதலாளியை கெஞ்சி கூத்தாடி அவர் 1150 ரூபாய் கொடுத்தார்.
”ஆனால் நீ லீவு கிடையாது. நீ போக முடியாது. இங்கே வியாபாரம் தடைபடும்”. என்று சொல்லிவிட்டார். அந்த 1150 ரூபாயும் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தில் கழித்துக் கொள்ள ஒப்புக்கொண்டார்.
இன்னும் பதினைந்து நாளில் தீபாவளி. எப்படியோ ஒரு நண்பனை கண்டுபிடித்து அவன் தஞ்சாவூர் பக்கம் போகப் போகிறேன் என்று சொன்னபோது அவனிடம் கெஞ்சி எப்படியாவது என் அம்மாவை பார்த்து இந்த கடிதம் கொடுத்து அதோடு இந்த கவரிலேயே வைத்தி ருக்கும் 1150 ரூபாயைக் கொடுத்து விடுகிறா யா என்று கேட்டான். அவனும் ஒப்புக் கொண்டு கடிதம், பணம் ரெண்டும் உள்ள கவரை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
ராமண்ணா அதிரிஷ்டக்கட்டை என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேனே. அதன்படி நடக்க வேண்டாமா? பணத்தை எடுத்துக் கொண்ட போன முஸ்லீம் பையன் ட்ரெயினில் ரிசர்வ் பண்ணாமல் திடீரென்று ஒருநாள் ரயிலில் முந்தி அடித்து டம் பிடித்து ஏறிக்கொண்டு பம்பாயில் இருந்து சென்னைக்கு ரயில் நகர்ந்தது. சென்னையில் ஒரு பஸ் பிடித்து தஞ்சாவூர் போனான் அந்த பையன். தீபாவளி சமயம் அநேகர் பிரயாணம் செய்ய நினைத்ததால் ரயில் பஸ் எல்லாமே கஜகஜ வென்று கூட்டமாக இருந்து. மூன்று பைகள் வைத்திருந் த பையன் கும்பல் நெரிசலில் தஞ்சாவூரில் இறங்கிய போது ரெண்டு பையோடு மட்டும் இறங்கினான். எங்கு தேடியும் மூன்றாவது பையை காணோம். சின்ன நீல கலர் பையில் ராமண்ணா கொடுத்த அம்மாவுக்கு சேலை,பக்ஷணம், கவர் அதில் லெட்டர் பணம். எல்லாம் இருந்தது எங்கே மாயமாக மறைந்தது. பையன் தேடி அலுத்து கடைசியில் எப்படியாவது ராமண்ணாவை சந்தித்து சமாதானம் செயது கொஞ்சம் கொஞ்சமாக 1150 ரூபாயை கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தான்.
தீபாவளிக்கு முதல் நாள் தண்டாங்கோரை கிராம போஸ்ட் மாஸ்டர் டெலிபோன் நம்பர் அவனுக்கு தெரிந்ததால் அவரை எப்படியோ லைனில் பிடித்து அம்மாவை பார்த்து லெட்டர் பணம் கிடைத்ததா என்று கேட்க சொன்னான். அவர் ரெண்டு நாள் கழித்து உங்கம்மாவை பார்த்தேன் நீ வரப்போவதாக சொன்னாள். உன்னிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று வருந்துகிறாள். வறுமையில் வாடுகிறாள். நீ ஏதாவது பணம் அனுப்ப முடியமா என்று கேட்டாள் என்றார்.”
தீபாவளி முடிந்து பதினைந்து நாள் ஆகிவிட்டது. ஒரு போஸ்ட் கார்டு வந்தது. கடைசி வரி அவனால் படிக்க முடியவில்லை வழக்கம் போல். என் நண்பன் ஏன் இன்னும் அம்மாவை பார்க்கவில்லை பணம் கொடுக்க வில்லை என்று கவலை வேறு வாட்டியது.
நான்கு நாள் கழித்து ஒரு கடிதம் அம்மாவிடம் இருந்து வந்தது. பிரவுன் கவர். அம்மா எப்போதும் போஸ்ட் கார்ட் தானே எழுதுவாள். இப்போது ஏன் கவரில் கடிதம் எழுதுகிறாள் என்று பயந்து கொண்டே பாரத்தால் கவரின் மேல் விலாசம் அம்மா கையெழுத்து இல்லை. பிரித்து பார்த்தான். உள்ளே இருந்த ரெண்டு கடிதங்க ளில் அம்மா கையெழுத்தில் ஒன்று.
ஊர் விஷயங்கள் எல்லாம் எழுதி விட்டு ‘போன ஞாயிற்றுக்கிழமை தீபாவளிக்கு ஒரு வாரம் கழிந்து சுப்ரமணியன் என்பவர் என்னை வந்து பார்த்தார். நீ கொடுக்க சொன்னதாக ரூபாய் 2000 கொடுத்தார் . நீ அனுப்பியதாக ஒரு சேலையும் கொடுத்தார், பக்ஷணங் கள் நிறைய வாங்கி வந்தார். இதை வைத்துக்கொண்டு சவுகரியமாக இருக்க சொன்னார். அப்புறம் இனி லீவு கிடைத்தால் வருவதாக சொன்னார். அவர் விலாசம் எதுவும் தரவில்லை. அவரிடம் தான் இந்த எழுதி கொடுக்கிறேன்- ஆசியுடன் உன் அம்மா தங்கம்மா .”
யார் இந்த சுப்ரமணியன்? எப்படி 2000 ரூபாய்? நான் 1150 ரூபாயும் கடிதமும் தானே முஸ்லீம் பையனிடம் கொடுத்தேன் அம்மா என் கடிதாசை பார்க்கவில்லை யோ? அதில் நான் படும் கஷ்டங்களை சொல்லி , கஷ்டப்பட்டு கிடைத்த 1150 ரூபாய் தான் அனுப்புவதாக எழுதினேன்.. நான் அனுப்பிய புடவை பக்ஷணங்கள் கிடைத்ததாக மட்டும் சொல்கிறாளே. ஆச்சர்யமாக இருக்கிறதே என்னவென்று புரியவில்லையே” என்று வாயைப் பிளந்த ராமண்ணா அப்போது தான் அந்த கவரில் இருந்து கீழே விழுந்து கிடந்த ரெண்டாவது சிறிய கடித்ததைப் பார்த்தான்.
”நண்பா. நீ யாரோ நான் யாரோ. எனக்கு அம்மா இல்லை. ஒரே ஒரு சகோதரி. அவளை மாதா மாதம் பார்க்க போவேன். அப்படி சமீபத்தில் பஸ்ஸில் போகும் போது கும்பலில் யாரோ தவறவிட்ட ஒரு சின்ன நீலப் பை என் காலடியில் என் பெட்டிக்கு பின்னால் இருந்தது. எனக்கு ஒரு கால் ஊனம். ஆகவே, மெதுவாக கடைசி யாக நான் இறங்கும்போது வேறு யாரும் பஸ்ஸில் இல்லை. மழை வேறு. இருட்டு நேரம். அந்த பையையும் என் பெட்டியையும் எடுத்துக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன். உன் கடிதம், சேலை, பக்ஷணங்கள், பணம் எல்லாம் பார்த்தேன். உன் விலாசம் இருந்தது. கவர் மேல் உன் அம்மாவின் விலாசம் இருந்தது. . நானே உன் தாயைக் கண்டு பிடித்து உன் பணத்தை சேர்த்து விடலாம் என்று புறப்பட்டேன். உன் அம்மாவை பார்த் ததும், அவள் உன்மேல் கொண்டுள்ள பாசம், அவளும் நீயும் படும் கஷ்டம் எல்லாம் அறிந்து நானே மேற் கொண்டு என்னால் முடிந்தவரை 850 சேர்த்து ரெண்டா யிரமாக உன் தாயிடம் நீ கொடுத்ததாக தந்தேன். உன் கடிதம் கொடுத்தால் நீ தந்தது 1150 ரூபாய் மட்டும் என்று அவள் புரிந்து கொள்வாள். 2000 ரூபாயுமே நீ தந்தாக இருக்கட்டுமே. ஆகவே உன் கடிதம் இதோ இணைத்திருக்கிறேன். ஒரு தீபாவளி அன்று ஒரு ஏழை அம்மாவுக்கு என் பரிசும் சேர்த்து தந்ததில் எனக்கு மட்டற்ற மன மகிழ்ச்சி. சுப்ரமணியன்”
. விலாசம் போன் நம்பர் எதுவும் இல்லை.
பி. கு. ரெண்டு மாதம் கழித்து முஸ்லீம் பையன் கண்ணில் பட்டான். அவன் கும்பலில் ரயிலிலோ பஸ்ஸிலோ ராமண்ணா தந்த நீல பையை தொலைத் துவிட்டதாக அழுதான். எப்படியாவது 1150 ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக தந்து விடுவதாக சொன்னான். ராமண்ணா விஷயம் சொன்னதும் ரெண்டு பேருக்குமே சந்தோஷம். பையன் வேலை பார்த்த ப்ரிண்ட்ங் பிரஸ் ஸில் ஒரு வேலை காலி இருப்பதால் முதலாளி யான தனது பெரிய மாமாவிடம் சொல்லி அந்த வேலையில் ராமண்ணா சேர்ந்துவிட்டான். மாதம் 12ஆயிரம்
சம்பளம்..
.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




