
@followers பகவத் கீதை 4 நங்கநல்லூர் J K SIVAN
நம்மில் அநேகருக்கு நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. நமக்கு எதெல்லாம் நிறைய நன்றாக சாப்பிட , குடிக்க, பிடிக்குமோ அது அத்தனையும் கிட்டவே வரக்கூடாது என்பார் டாக்டர். அப்படி சொன்னவருக்கு நிறைய காசு கொடுத்து பீஸ் ஆக கொடுத்து விட்டு அதிருப்தியுடன், அரை இல்லை கால் மனதோடு வீட்டுக்கு திரும்புவோம். உண்மையில் நாம் சாப்பிடும் ஆகாரம் தான் நம் உள்ளத்தையும் உடலை யும் சீர் படுத்துவது. துறவிகள் ஸ்வயம்பாகம் என்று தாமே சாத்வீக உணவை தயாரித்து சாப்பிடுப வர்கள். வெளியே பிறர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். எந்த உணவுப் பொருள் எப்படி வந்ததோ, அதன் பின் என்ன தவறோ, துயரமோ, துக்கமோ, தெரியாதே, உணவாக அது நம்முள்ளே செல்லும்போது அது சம்பந்தப்பட்ட அதர்ம, தீய குணங்களும் நம்முள்ளே வளர்ந்து விடும்.
ஒரு துறவி கதை சொல்லட்டுமா.அப்போது தான் மேலே சொன்னது புரியும்.
ஏதோ ஒரு சின்ன ராஜ்யம். அதற்கு ஒரு ராஜா. அவன் வேட்டையாட காட்டுக்கு போன போது அங்கே ஒரு துறவி யை ஒரு சின்ன ஆஸ்ரமத்தில் சந்தித்து அவரிடம் தனக்கும் தனது குதிரைக்கும் நீர் வாங்கி பருகி சற்று நேரம் மரத்தடியில் தங்கி, அவரிடம் பேசி அருள் மொழிகள் கேட்டு களைப்பு நீங்கினான் . அந்த துறவி மரத்தடியில் மூன்று கற்கள் வைத்திருந்ததை பார்த்தான். அது தான் அவர் படுக்கை. ஒன்று தலை யணை, மற்றொன்று முதுகுக்கு இன்னொன்று காலுக்கு. இது தான் அவர் படுக்கை.
பிடிவாதமாக எப்படியோ ஒப்புக் கொள்ளவைத்து அந்த துறவியை ஒரு நாள் மட்டும் அவன் அரண்மனைக்கு வந்து தூங்குகிறேன் என்று வாக்கு பெறுகிறான். ஒருநாள் துறவி ராஜா அரண்மனைக்கு வருகிறார். அங்கே அவருக்கு ஏகபோக உபச்சாரம். ஒரு வேளை யாவது கொஞ்சம் உணவு அருந்த வேண்டும் என்று சம்மதிக்க வைத்து அவரை தனது சப்ரமஞ்ச கட்டிலில் படுக்க வைக்கிறான்.
துறவி எப்படி படுத்துக்கொண்டு சுகமாக தூங்குகிறார் என்று போய் பார்க்கும்போது அவர் ராஜாவின் சப்ர மஞ்ச கட்டில் மேல் தான் கையோடு கொண்டு வந்திருந்த மூன்று கற்களை வைத்து அதன் மேல் வழக்கம் போல் படுத்திருந்தார்.
இரவு ஒரே ஒரு வேளை சாப்பிட ஒப்புக்கொண்டு சாப்பிட்டார். மறுநாள் விடிகாலை அரசனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார். இரவு முழுதும் அவருக்கு வயிற்றில் வலி. சாப்பிட்டதால் ஏற்பட்ட சங்கடம், வழக்க மான தியானம் கெட்டு விட்டது. மனம் அதில் ஏன் ஈடுபட வில்லை? அதைத் தவிர அவரது ஜோல்னா பை ஏன் இப்போது ரொம்ப கனமாக இருந்தது? . அதில்
இருப்பதை தரையில் கொட்டினார். ஜோல்னா பைக்குள் வெள்ளி கரண்டிகள், டம்பளர், தட்டு ஸ்பூன் எல்லாம் எப்படி வந்தது? ஓஹோ ராத்திரி சாப்பிடும்போது உபயோ கித்த வஸ்துக்கள் அல்லவா இவை?
ராஜாவிடம் நேராக சென்றார். ”ராஜா நேற்று நான் சாப்பிட்ட உணவு எனக்கு ஏற்கவில்லை. உங்கள் சமையல் காரரை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா. அவரிடம் நான் பேசவேண்டும்.’
‘ சமையற் காரர் கையைக் கட்டிக்கொண்டு எதிரே நின்றார்.
”ஐயா,நீங்கள் சமைத்த அரிசி பருப்பு எல்லாம் எங்கிருந் து வந்தது?’
‘தளபதி ஐயா அனுப்பித்த மூட்டைகளிலிருந்து தான்”
தளபதியை கூப்பிட்டு எங்கே இந்த மூட்டைகள் கிடைத்தது என கேளுங்கள் ராஜா”
‘அரசே ஆறுமாதத்துக்கு முன் நமக்கு கப்பம் கட்டாத பாளையக்காரர் கிராமத்திலிருந்து. அவர்கள் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருள்களை வட்டிக்கு ஈடாக நமது வீரர்கள் சூறையாடி அரண்மனைக்கு கொண்டு வந்தோம்.”
”ஆஹா இப்போது புரிகிறது. ஒருவர் அனுமதியில்லாமல் அவர்களது பொருள்களை கொண்டு வந்து உணவாக்கி சாப்பிட்டதால் என்னிடம் இதுவரை இல்லாத குணங்கள் என் உடலில், மனதில், சேர்ந்துவிட்டதால் தான் இங்கே உபயோகித்த இந்த வெள்ளி தங்க சாமான்களை உங்கள் அனுமதியில்லாமல் என் பைக்குள் என்னை அறியாமல் போட்டுக்கொண்டுள்ளேன். இது என் தவறல்ல. என்னுளே சென்ற தவறான உணவால் நேர்ந்தது
‘இந்தாருங்கள் உங்கள் சாமான்கள் . நான் என் காட்டுக்கு செல்கிறேன்”
என்று எல்லாவற்றையும் அங்கேயே வைத்துவிட்டு துறவி கிளம்பினார்.
இந்த கதை கீதை தத்துவத்தை சொல்கிறது. நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் தவறான வழியில் வந்ததாக இருக்க கூடாது. சமையல் செய்யும் பாண்டங் களும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். சமையல் செய்ப வரும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். நாம் உண்ணும் உணவு நமக்குள்ளே இருக்கும் வைச்வானரம் எனும் தீயினால் ஜீரணமாகி சக்தியை தருகிறது. அதற்கு நாம் பக்வானுக்கு படைத்த ப்ரசாதத்தையே உணவாக தரவேண்டும்.
எதை உண்டாலும், நீர் பருகினாலும் ‘ஸ்ரீ க்ரிஷ்ணார்ப் பணமஸ்து’ என்றும் சொல்லும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் நீண்டநாளாக பழக்கம்.
குணங்களை எப்படி விலக்குவது என்பதற்கு சின்ன உதாரணம். முள்ளை, முள்ளால் எடுப்பது. தாமச குணத்தை ராஜஸ குணத்தாலும் ராஜஸ குணத்தை சத்வ குணத்தாலும் போக்கலாம். காலில் தைத்த முள்ளை இன்னொரு முள்ளால் எடுத்துவிட்டு கடைசி யில் ரெண்டு முள்ளையுமே தூரமாக போட்டு விடுகி றோமே அது போல் கடைசியில் குணங்கள் எதுவுமில்லா மல் பரமனைப்போல் நிர்குண ப்ரம்மமாகிறவன் தான் யோகி. நாம் எல்லோருமே யோகிகளாக முடியும்.
நரகத்துக்கு மூன்று வாசல்கள் எது தெரியுமா?, கோபம், பேராசை, பற்று.
பதிவு ரொம்ப நீளமாக போவதற்கு முன் நிறுத்தி அடுத்த பதிவில் இன்னும் சொல்கிறேன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

