VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN

வேதாளம் விக்ரமாதித்தன் கதை நங்கநல்லூர் J K SIVAN

மதனசேனை கதை

வழக்கம்போலவே விக்கிரமாதித்தன்‌ வேதாளத்தை முருங்கை மேலிருந்து பிடித்து கீழே இறக்கி அது இருந்த இறந்த உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். வேதாளமும் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தது.
”விக்ரமா, உனக்கு நான் இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேள். மகத நாட்டை வீரபாகு என்ற ராஜ ஆண்டுவந்தபோது அந்த ராஜ்ஜியத்தில் அநங்கபுரம் என்ற ஊரில் அர்த்த தத்தன் என்கிற பெரிய வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனுக்கு தனதத்தன் என்ற பிள்ளை, மதன சேனை என்ற பெண். அழகி, நல்ல குணம். அண்ணனின் நண்பன் தர்மதத்தன் சிறுவயதிலிருந்து அவளோடு பழகி விளையாடுபவன். மதன சேனை வளர்ந்து பெரியவளானதும் அவளையே கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பினான். அவளை ஒருநாள் சந்தித்து தனது காதலையும் விருப்பத்தையும் சொன்னான். ஆனால் அவள் தந்தை அர்த்த தத்தன் வேறு ஒரு ஊரில் வசித்த வியாபாரி சமுத்திர தத்தனுக்கு மதன சேனையை கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்துவிட்டார். ஆகவே தந்தை சொல் மீறமுடியாதே. தர்மதத்தனிடம் மதனசேனை இதை சொன்னாள் .
”தர்மதத்தா, நான் ஒரு கன்னிப்‌ பெண்‌. என்னை ஏற்கனவே வேறொரு வணிககுமாரருக்கு மணம்‌ முடித்துக்‌ கொடுக்க நிச்சயமாகி விட்டது. சிறிது காலத்திற்குள்ளாகவே எப்படியும்‌ விவாகம்‌ நடந்தே தீரும்‌. ஆகவே உங்கள்‌ காதலானதுமணம்‌ பெற வழியேயில்லை! யார்‌ கண்ணிலும்‌ படாமல்‌ வந்தவழியே திரும்பிச்‌ சென்று விடுங்கள்‌. இல்லாவிட்டால்‌ வீண்‌
அபவாதம்‌ ஏற்படக்‌ கூடும்‌” என்றாள் . “மதனா, எது வேண்டுமானாலும்‌ வரட்டும்‌. நீ ‘இல்லாமல்‌ என்னால்‌ வாழ முடியாது!“ என்றான் தர்மதத்தன்.
“தருமதத்தா! உன்னுடைய நோக்கம்‌ பிசகானதென்றாலும்‌ உன்ம்து எனக்குக்‌ கோபம்‌ ஏற்படவில்லை! என்‌ கன்னி அழகுதான்‌ உன்னை இவ்வாறு தூண்டுகிறது. அதை நீ ஒரு முறை பருகிவிட்டால்‌ உன்‌ மோகம்‌ தீர்ந்து போகும்‌ என்பது எனக்குத்‌. தெரியும்‌! ஆனால்‌ உன்‌ ஆசையை இப்போது அடக்கிக்‌ கொள்‌! நான்‌ கன்னிப்‌ பெண்‌! கலியாணமாகும்‌ முன்‌ கன்னித்‌ தன்மையை அழிப்பதனால்‌ உனக்கு மகாதோஷம்‌ உண்டாகும்‌! முதலில்‌ எனக்கும்‌ அந்த வணிக குமாரருக்கும்‌ கலியாணம்‌ முடியட்டும்‌. அதனால்‌ என்‌ தந்தைக்குக்‌ கன்யா பலன்‌ கிட்டட்டும்‌. அதன்‌ பிறகு உன்னைச்‌ சந்திக்க ஒரு நாள்‌ நானாகவே வருகிறேன்‌” என்றாள்‌ மதனசேனை.
“தாமரையிலே ஒரு வண்டு தேன்‌ அருந்திய பிறகு மற்றொரு வண்டு அதை அடையுமா? பிறன்‌ ஒருவன்‌ தொட்ட பெண்ணை நான்‌ தொடமாட்டேன்‌. உன்‌ முதல்‌ முக மலர்ச்சி எனக்குத்தான்‌ முதவில்‌ சமர்ப்பணமாக வேண்டும்‌!” என்றான்‌ தருமதத்தன்‌.
“தர்மதத்தா, காதலித்த கன்னிகையின் அழகு முதலில்‌ உனக்குத்தான்‌ உல்லாசம்‌ தரவேண்டும்‌ என்கிறாய்‌! . அப்படியானால்‌ எனக்குக்‌ கல்யாணம்‌ ஆனவுடனே நான்‌ உன்னை அடைகிறேன்‌. அதன்‌ பிறகே கொண்ட கணவனை அடைவேன்‌! என்‌ கணவர்‌ என்‌ அழகை. ரசிக்கும்‌ முன்‌. கன்னித்தன்மை அழியாதவளாகவே, ஆடாத: மலராகவே,
உன்னிடம்‌ ஒரு நாள்‌ வருவேன்‌! என்னை நம்பு! அர்த்ததத்தரின்‌ மகள்‌ சொன்ன சொல்‌ தவறமாட்டாள்‌!” என்று தெரிவித்தாள்‌.
அவள்‌ இவ்வாறு சத்தியம்‌ செய்து கொடுத்த.பிறகே அவளைப்‌போகவிட்டான்‌.
மதன சேனைக்கு கல்யாணம் நடந்தது. புருஷன்‌ வீட்டை அடைந்த மதனசேனை, பகல்‌ முழுவதும்‌ குதூகலத்துடன்‌ இருந்தாள்‌. ஆயினும்‌ இரவு வந்து புருஷன்‌ அவளை நெருங்கியதும்‌, அவள்‌ அழ ஆரம்பித்தாள்.திகைத்துப் போன புருஷன் “பெண்ணே! ஏன் அழுகிறாய்? என்னை உனக்குப் பிடிக்க வில்லையா? நீ என்னை நேசிக்காவிட்டால் நானும்‌ உன்னைத்‌ தொட விரும்பவில்லை. ஆகவே, உன்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்த காதலன்‌ யாராக இருந் தாலும்‌ சரி. அவனிடம்‌ செல்‌!” என்றான்.
மதனசேனை புருஷனுக்கு கை கூப்பி பதிலளித்தாள் “நான்‌ உங்களை என்‌ உயிரினும்‌ அதிகமாக நேசிக்கிறேன்‌. ஆயினும்‌ நான்‌ சொல்வதை தாங்கள்‌ சாவதானமாகக்‌ கேட்க வேண்டும்‌. முதலில் என்னை மன்னிப்பதாக வாக்குறுதி அளிக்கவேண்டும். பிறகு தான் சொல்வேன்” என்றாள் வேண்டா விறுப்பாக அவனும் வாக்களித்து கேட்க ஆரம்பித்தான்.
“ஐயா, நான் ஒரு நாள்‌ தோட்டத்தில்‌ தனியே இருக்கையில்‌ என்‌ அண்ணனின் நண்பன் தருமதத்தன்‌ என்னைக்‌ கண்டு என் மேல் உள்ள மோகத்தை தெரிவித்தான்‌. என்னை பலாத்காரம்‌ செய்யப்போகும்‌ தருணத்தில்‌ என்‌ தந்தைக்குக்‌ கன்யாதான பலனை அளிக்கவும்‌, வீண்‌ அபவாதத்துக்கு இடம்‌ கொடுக்காமல்‌ இருக்கவும்‌ நினைத்து,எனக்குக்‌ கல்யாணம்‌ ஆனவுடன்‌ கணவனை அடைவதற்கு முன்னதாக அவனிடம்‌ வருகிறேன்‌ என்று அவனுக்கு வாக்குறுதி அளித்து அவனை அனுப்பினேன்‌. ஆகவே என்‌ வாக்கை நான்‌ காப்பாற்றவேண்டும்‌. என்‌ குழந்தைப்‌ பருவத்திலிருந்து நான்‌ உண்மையாக நடந்து வருகிறேன்‌. கொடுத்த வாக்கைக் காப்பதே எங்கள்‌ குல தர்மம்‌. ஆகவே அதை மீறாமல்‌ அவனைப்‌ போய் பார்த்துவிட்டு தங்களை அடைவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்‌” என்று வேண்டினாள்‌.
இதைக்‌ கேட்ட கணவன் சமுத்திர தத்தனுக்கு தலை மேல் இடிவிழுந்தது போல் ஆனது. என்ன செய்வது? என்பது விளங்கவில்லை. ஆயினும்‌ கொடுத்த வாரக்கை மீறக்கூடாதே. ”மதன சேனை வேறு ஒருவன்‌ மீது நாட்டம்‌ கொண்டாலும் இல்லையென்றாலும் வாக்குறுதி கொடுத்தபடி அவள் போகத்தான்‌ வேண்டும்‌. நான்‌ எதற்காக அவளைத்‌ தடுக்க வேண்டும்‌? ” என நினைத்தான்.’மதனா, நீ கொடுத்த சத்யத்தைக்‌ காப்பாற்ற கலியாணமாகியும்‌ கன்னியாகவே போ!’ என அனுமதித்து அவள்‌ முகத்தைக்‌
கூடப்‌ பாராமால் வேறு பக்கம் திரும்பிப்‌ படுத்துக்கொண்டான்‌.
மதனசேனை எழுந்து முக்காடிட்டுக்‌ கொண்டு தன்‌ புருஷன்‌ வீட்டைவி ட்டுக்‌ காதலன்‌ ஊருக்குக்‌ கிளம்பினாள்‌. நடுநிசியிலே,
அவள் செல்லும்போது வழியில் நடுவே சிறுகாடு. அதில் பயங்கரமான ஒரு வழிப்பறிக்‌ கள்வன்‌ இருந்தான்‌.
நள்ளிரவிலே. மதனசேனை தனியே போவதைப் பார்த்தவன் பாய்ந்து வந்து, அவள் முந்தானையைப்பற்றி இழுத்து அவளைப்‌ பிடித்துக்‌ கொண்டான்‌. “நீ யார்‌? எங்கே போகிறாய்‌?” என்று கேட்டான்‌.
“ நீ யார் அதைப்பற்றி கேட்க உனக்கென்ன? என்னைவிட்டுவிடு! நான்‌ அவசரமாகப்‌ போகவேண்டும்‌!” என்றாள்‌.
“நான்‌ திருடன்‌, உன்னை விட்டுவிடுவேனா?” என்றான் அவன்.
“அப்படியானால்‌ என்‌ நகைகளை எடுத்துக்கொள்‌!”
“பார்த்தவர்களை மயக்கும்‌, பெண்கள்‌ குலத்துக்கே ஆபரணமான உன்னை விட்டுவிடுவேனா? உன்னை விட்டுவி ட்டு.
இந்தக்‌ கல்‌ நகைகளைப்பற்றியா நான்‌ யோசிக்கப்‌ போகிறேன்‌?” என சொல்லி திருடன் ஹாஹா என்று சிரித்தான்.
மதன சேனை கலங்கினாள். “ஐயோ! என்‌ உடல்‌ அழகால்‌ யோக்கியர்களும்‌ அயோக்கியர்களாக மாறுகிறார்களே! ஆனால்‌ என்‌ உள்ளத்தின்‌ அழகால்‌ கெட்டவனும்‌ நல்லவனாக மாறக்கூடாதாவென ஏங்குகிறேனே!” என்று புலம்பினாள்‌.
“திருடனே! என்‌ கன்னித்‌ தன்மையை மட்டும்‌ திருடாதே! அதை முதன்‌ முதலாக என்னிடமிருந்து திருடிக்‌ கொள்ள
வாக்குறுதி பெற்றவன்‌ வேறொருவன்‌ இருக்கிறான்‌. அந்தத்‌ திருடனிடம்‌ போகத்தான்‌ இந்த அர்த்தராத்திரியில்‌ கணவன்‌
அனுமதியுடன்‌ கிளம்பி வந்திருக்கிறேன்‌!” என்று அவள்‌ தன்‌ கதையையெல்லாம்‌ அவனிடம்‌ சொல்லி வேண்டினாள்‌.
தருமதத்தனிடம்‌ நான்‌ கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தான் நடுநிசி காட்டுப்பாதை என்றும்‌ கலங்காமல்‌ நடுநிசியில்‌
தனியாக கணவன்‌ வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்‌. அதைக்‌ காப்பாற்ற நீ மனமிளகி அனுமதி கொடு! சத்தியம்‌ காப்பது எங்கள்‌ குல தர்மம்‌! இப்போது என்னை விட்டுவிடு! என்னைக்‌ காதலித்தவனிடம்‌ .கலியாணமாகியும்‌ கன்னி யாகவே என்‌ முதல்பலி கொடுத்து, என்‌ வாக்கைக்‌ காப்பாற்றி விட்டு. மறுபடி உன்னிடம்‌ வருகிறேன்‌. நிச்சயம்‌ இதே இடத்திற்கு வருகிறேன்‌. நான்‌ திரும்பி வரும்போது நீ இங்கே இருந்தால்‌ உன்‌ ஆசையை நிறைவேற்றிக்‌ கொள்ளலாம்‌! என்னை நம்பு! இது சத்தியம்‌!” என்று மதனசேனை வாக்குறுதி கொடுத்தாள்‌.
இதைக்‌ கேட்ட திருடன்‌ அவள்‌ வார்த்தையில்‌ ஓரளவு நம்பிக்கை கொண்டு, அவள்‌ தன்‌ சொல்லை மீறமாட்டாள்‌ என்று
என்னவோ ஒன்று அவன்‌ மனச்சாட்சியில்‌ உறுத்தவே, மதனசேனை போக விட்டான். அவள் திரும்பி வருவதை எதிர்நோக்கி அங்கேயே காத்திருந்தான்.
தரும தத்தனை அடைந்த மதனசேனை நடந்ததை எல்லாம் அவனிடம் சொன்னாள் .அதைக் கேட்டதும் அவளை ஏறிட்டுப்‌
பார்க்கவே அவன்‌ கண்கள்‌ கூசின.
“இதோ பார்‌! தர்மதத்தா, கொடுத்த வாக்கின்படி கலியாணமாகியும்‌ பசுமை மாறாமல்‌, புதுமை மறையாமல்‌, வழிப்பறிக்‌ கள்ளனிடம்‌ சிக்கியும்‌ எச்சிற்‌ பாண்டமாகாமல்‌, கன்னிப்‌ பெண்ணாகவே உன்னிடம்‌ வந்திருக்கிறேன்‌! இந்த ஒர்‌ இரவில்‌ அவ்வளவையும்‌ உன்னிடம்‌ பலிகொடுக்க வந்திருக்கிறேன்‌! அருகில்‌ வா! ஏறிட்டுப்பார்‌ என்னை!” என்றாள்‌ மதனசேனை.
தருமதத்தனால்‌ அவளை ஏறிட்டுப்‌ பார்க்க முடியவில்லை. உடம்பெல்லாம்‌ சிலிர்த்தது.
“மதனசேனா! உன்‌ கணவனின்‌ பெருந்தன்மையையும்‌, ஒரு வழிப்பறிக்‌ கள்ளனின்‌ பெருந்தன்மையையும்‌ விட என்‌ மனது
குறுகியதல்ல! :என்னிடம்‌ பதிதையாக வந்தவள்‌ இந்த இரவில்‌ என்‌ வீட்டைவிட்டுப்‌ புனிதவதியாகவே போய்விடு! சொன்ன
சொல்‌ தவருமல்‌ நடந்து கொண்ட உன்‌ நடத்தை ஒன்றே என்னைப்‌ புதுமனிதனாக்கிவிட்டது. என்‌ காதல்‌, கள்ளனின்‌ இருதயத்தையும்‌ விடக்‌ குறுகலானதோ, குரூரமானதோ அல்ல!” என்று தருமதத்தன்‌ கூறி அந்த மங்கையைத்‌ திருப்பி அனுப்பிவிட்டான்‌.
மதன சேனை சரியென்று அங்கிருந்து கிளம்பி, வழியிலே காட்டில் தனக்காகக்‌ காத்திருந்த திருடன்‌ இருக்குமிடம்‌ வந்து
சேர்ந்தாள்‌. அவளைக்‌ கண்டவுடனே, “போன இடத்திலே என்ன நடந்தது என்பதைச்‌ சொல்‌!“ என்று அந்தத்‌ திருடன்‌ கேட்டான்‌.
அவளும்‌ நடந்தது நடந்தபடி, தருமதத்தன்‌ எவ்விதம்‌ தன்னைத்‌ தொடாமல்‌ திருப்பி அனுப்பிவிட்டான்‌ என்பதைக்‌ கூறத்‌
தொடங்கி, “தருமதத்தனுக்கு இப்போதுதான்‌ கண்‌ திறந்தது! கள்ளனுக்கு இருக்கும்‌ இதயம்‌ காதலனுக்கு இராதா என்று
சொல்லி என்னைக்‌ கன்னிப்‌ பெண்ணாகவே திருப்பி அனுப்பி விட்டான்‌!” என்றாள்‌. அதைக்‌ கேட்டதும்‌ கள்ளன்‌ கண்ணீர்‌
வடித்தான்‌.
“அப்படியானால்‌ நானும்‌ உன்னை விட்டு விடுகிறேன்‌! உன்‌ நேர்மையை நான்‌ பெரிதும்‌ பாராட்டுகிறேன்‌! விலைமகளும்‌
கண்டு மிரண்டோடும்‌ பயங்கரக்‌ கள்ளனான என்னிடம்‌ குலமகள்‌ வந்திருக்கிறாய்‌, சத்தியம்‌ காக்க! உன்னைப்போல்‌ ஒரு பெண்ணை என்‌ வாழ்நாளில்‌ கண்டதில்லை. உன்‌ நகைகளும்‌ எனக்கு வேண்டாம்‌. நீயே எடுத்துக்‌ கொண்டு புனிதவதியாக வீடு போய்ச்‌ சேர்‌! இருதயம்‌ என்ற விலை மதிப்பற்ற நகை உன்னால்‌ எனக்குக்‌ கிடைத்திருக்கிறது. அதுவே, இணி என்‌ ஆயுள்‌ முழுவதற்கும் போதும்.” என்று சொல்லி அவளுக்கு துணையாக தானே சென்று அவளை வீட்டில்‌ சேர்த்துவிட்டுப்‌ போனான்‌ திருடன்.
இவ்வி தம்‌ அவள்‌ தன்‌ கற்புக்கும்‌ பங்கம்‌ ஏதும்‌ நேரிடாமல்‌ திரும்பி வீடு வந்து சேர்ந்த மதனசேனை கணவன் சமுத்திர தத்தனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல்‌ முழுவதையும்‌ சொன்னாள். தன்‌ உடல்‌ அழகால்‌ ஒழுக்கம்‌ கெடவிருந்த இருவர்‌,
உள்ளத்தூய்மையாகி நல்லவர்களாக மாறிய விந்தையையும்‌ குறிப்பிட்டாள்‌. தன்‌ மானத்தையும்‌ குடும்ப கெளரவத்தையும்‌
இழக்காமல்‌, சொன்ன சொல்லைக்‌ காப்பாற்றிய தன்‌ மனைவியை கண்ட சமுத்திரதத்தன்‌, உள்ளம்‌ பூரித்தான்‌. அவ்வளவு தூய உள்ளம்‌ படைத்த அவளை அவன்‌ மறுபடியும்‌ ஏற்றுக்கொண்டு அவளுடன்‌ ஆனந்தமாக மணவாழ்க்கை நடத்தி வந்தான்‌.”
மேற் கண்ட கதையை மயானத்தில்‌ வேதாளம்‌ சொல்லி முடித்துவிட்டு, ” விக்ரமாதித்தா. இந்தக்‌ கதையில்‌ கணவன்‌, காதலன்‌, கள்ளன்‌ ஆகிய மூவரும்‌.பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்‌ என்றாலும்‌, மூவரில்‌ யாருடைய செயல்‌ மிகவும்‌ சிறப்பானது?” சொல். சரியான விடையை சொல்லவில்லையென்றால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும். ஜாக்கிரதை. என்றது .விக்கிரமாதித்தன்‌ பதில்‌: காதலன்‌ கணவன் ஆகிய இருவரும்‌ நாணயம்‌ மிக்க வணிக குலத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌. நாணயம்‌ கெட்ட இருதயமில்லாதவன்‌ என மனித சமூகத்தால்‌ ஒதுக்கப்பட்ட கள்ளன்‌ இருதயத்தோடு பெருந்தன்மையாக நடந்து கொண்ட செயலே மிகவும்‌ சிறப்பானது! கணவனாகப்பட்டவன்‌ தான்‌ மணந்து கொண்ட மனைவியை வெளியே போக அனுமதித்தது பெருந்தன்மையானதென்றாலும்‌, காதலனுடைய பழைய மோகம்‌ தணிந்து போயிருக்கலாம்‌ என்றோ. அவளுடைய கணவனுக்கு எல்வா விஷயங்களும்‌ தெரிந்து போய்விட்டதால்‌ மறுநாள்‌ மனஸ்தாபமும்‌ சமுதாயப்‌ புறக்கணிப்பும்‌ ஏற்படுமெனப்‌ பயம் ஏற்பட்டிருக்கலாம்‌ என்றோ கருதலா மல்லவா? ஆனால்‌ முன்னிரவில்‌ அஞ்சாநெஞ்சுடன்‌ யாருக்கும்‌ பயப்படாமல்‌ திருட்டுத்‌ தொழில்‌ செய்யும்‌ ஒரு வழிப்பறிக்‌ கள்ளன்‌ அழகான அந்தப்‌ பெண்ணைச்‌ சிறிதும்‌ தொடாமல்‌ அவளுடைய நகைகளையும்‌ கொடுத்துத்‌ திருப்பியனுப்பிய செயலே மிகவும்‌ பெருமைப்‌
பபடத்தக்கதாகும்‌! ஆகையால்‌ கள்ளனின்‌ பெருந்தன்மைதான்‌ மிகவும்‌ சிறப்பானது!”
பதில் சொன்னதால் மௌனம் களைந்து விடவே, வேதாளம் கட்டவிழ்த்துக்‌ கொண்டு பழையபடியே முருங்கமரத்தை நோக்கி பறந்து தலைகீழாக உச்சாணிக்கிளையில் தொற்றி தொங்க ஆரம்பித்தது. அடுத்த கதையில் வேதாளத்தை சந்திப்போம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;