
தீபாவளி கதை – நங்கநல்லூர் J K SIVAN
விடிந்தால் தீபாவளி. வருஷத்துக்கு ஒருநாள் வரவேற்கப்படும் பிரதான பண்டிகை. முன்பெல்லாம் இதைக் கொண்டாட அதிக பணம் செலவழிக்க தேவையில்லாமல் இருந்தது. வீடுகளில் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவது, உறவுகளை சந்திப்பது, பக்ஷணம் அவரவர் வீட்டில் செய்து பரிமாறிக் கொள்வது. புத்தாடை அணிவது, ஒரு சில எளிய பட்டாசுகள் வாணங்களை கொளுத்துவது, கோயிலுக்கு போவது என்பதோடு நின்றது. பெரியவர்களை விட சிறுவர் சிறுமிகளுக்கு உற்சாகம் அதிகம் அளித்த ஒரு பண்டிகையாக இருந்தது. காலம் மாற காட்சிகளும் மாறிவருகிறது. தீபாவளி கதை சொல்கிறேன்.
பௌமாசூரனுக்கு ( பூமாதேவியின் புதல்வன்) ,இன்னொரு பேர் நரகாசுரன். அந்தக் காலத்தில் நாம் ஐயர் , ஐயங்கார் என்று பேருக்கு பின்னால் போட்டுக் கொள்கிறோமே அது போல் அசுரர்களும் அசுரன் என்று தம்மை சொல்லிக் கொள்வார்களோ? அல்லது மற்றவர்கள் ஆத்திரத்தோடு மக்கள் இட்ட பட்டப் பெயரோ தெரியவில்லை. அம்மாவைத்
அசுரர்கள் பொதுவாக ரொம்ப கஷ்டப்பட்டு கடும் தவம் செய்து வரம் பெறுவார்கள். நிறைய யோசித்து கெட்டிக்காரத் தனமாக வரம் கேட்பார்கள். பௌமாசூரன் (எ )நரகாசுரன் அவ்வாறே ஒரு விசித்திர வரம் கேட்டான். ”என்னை என் அம்மாவைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாது” என்ற விசித்திரமான வரம் பெற்றான். எந்த தாயும் பெற்ற மகனை கொல்லமாட்டாளே என்ற தைரியம் அவனுக்கு. பாவம் கலிகாலம் பற்றி அவனுக்கு தெரியாதே. அவன் துவாபர யுகத்து ஆள். அதனால் இந்த நம்பிக்கை. எனவே தான் கிருஷ்ணன் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவைக் கூட்டி வந்து, தானே அவளுக்கு சாரதியாக உதவி செய்து அவள் மூலம் நரகாசுரனைக் கொன்றார் . இதை தான் கதையாக சொல்கிறேன்.
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!! என்று யார் சொல்லியிருந்தாலும் அதை முற்றிலும் தவறு என ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது நமக்கு இப்போதைய ஆராய்ச்சி அல்ல. அதற்கு நேரமும் இல்லை. ஏனெனில் அதோ பாருங்கள், எதிரே பெரும் சைன்யம். வெகு வேகமாக கண்ணனின் தேரை சத்யபாமா ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.
இடி யோசை போன்ற பிளிறலுடன் நரகாசுரனே எதிரே வருகிறான். பயங்கர கோபமும் ஆத்திரமும் அவனுக்கு!!.
நரகனுக்கு ஒரே ஆச்சர்யம் . என்ன இது? அசகாய சூரன், வீராதி வீரன், எவருமே எதிர்க்க அஞ்சும், ஆனானப் பட்ட முரன் கூட இந்த கிருஷ்ணனால் கொல்லப்பட்டானே. மலை போல அல்லவா முரனை நம்பியி ருந்தோம். கஷ்டங்கள் தனித்தே வருவதில்லையா?”
என் ஆசை சகோதரி, சக்தி வாய்ந்தவள், மாயாவி, நக்ரதுண்டி வெறுங்கையுடன் திரும்பியதல்லாமல் அவமானப்பட்டு மல்லவா அழுது கொண்டு வந்தாள். இதற்கெல்லாம் பழிக்குப் பழி இதோ இப்போதே தீர்க்கிறேன். இன்றோடு கிருஷ்ணன் ஒழிந்தான்! இந்த எண்ணங்களுடன் தான் நரகன் யுத்தத்தில் இறங்கினான்.
நரகாசுரன் படைகளும் த்வாரகை விருஷ்ணி குல வீரர்களும் அங்கங்கு மோதிக்கொண்டிருக்க நரகன் கிருஷ்ணனையே குறி வைத்தான். அம்புகள் மழையெனப் பொழிந்தன. யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பு, வீரர்களின் ஆக்ரோஷ சப்தம், இடியென முழங்கும் கதாயுத மோதல், வாட்கள் உராய்வு, ரத்தமும் வலியும் பெருக வீரர்களின் மரணக் கூச்சல், மேலே கூகைகள்,பருந்துகளின் சப்தம், இவற்றுக்கிடையே கிருஷ்ணனின் தேர் வளைந்து நெளிந்து சென்று நரகனின் தாக்குதலை, அம்புகளைத் தவிர்த்தது. கிருஷ்ணனின் சரங்களும் குவிந்து சென்று நரகனை வாட்டின.
நேரம் சென்றதே தவிர வெற்றி தோல்வி எதுவும் சொல்ல முடியாமல் நரகாசுரன்-கிருஷ்ணன் யுத்தம் நீண்டது. கிருஷ்ண னால் நரகாசுரனைக் கொல்ல முடியவில்லை.
சத்யபாமா பாமா தேர் ஓட்டுவதில் அனுபவசாலி என நிரூபித்தாள். அவள் க்ரிஷ்ணனுக்காக தேர் ஓட்டினாலும் அவ்வப் போது கிருஷ்ணனுக்கு ஆயுதம் தேர்ந்தெடுத்து உதவினாள். கிருஷ்ணனின் உடலிலும் வியர்வையும் ரத்தமும் ஆறாகப் பெருகி தேரில் வழிந்தது. நரகனோ ரத்தத்திலேயே குளித்துக் கொண்டிருந்தான். மாலை வேளையும் வந்துவிட்டது. இருள் இன்னும் சற்று நேரத்தில் கவிந்து வரும். இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகரிக்கும்.
கிருஷ்ணனுக்கு பளிச்சென்று மனதில் அந்த எண்ணம் தோன்றியது. திடீரென்று அந்த முடிவு எடுக்கவேண்டும் என தோன்றியது. ஒரு இளம் சிரிப்பு அவன் முகத்தில் மின்னிற்று.
“ எனக்கும் வயதாகிவிட்டதே!! சே,சே, மறந்தே போனேனே . அனாவசியமாக ஒரு சிறு கதையை தொடர் கதையாக்கி விட்டேன்!!””. அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது கிருஷ்ணனுக்கு.
”பாமா!! தேரை யானைப் படைகள் பின்னால் செலுத்து. தேரை நிறுத்து. நீ தேர் தட்டுக்கு வா. நான் தேரைச் செலுத்துகிறேன். இந்தா நான் கொடுக்கும் இந்த பாணங்களை நரகனின் மேல் விடாது நீ செலுத்து. நரகாசுரனை நீ தாக்கு ”.
எங்கே கிருஷ்ணனைக் காணோம் என்று தேடிக்கொண்டிருந்த நரகாசுரனின் கண்களில் மீண்டும் கிருஷ்ணனின் தேர் தென் பட்டதும், அவன் தேரை நரகன் துரத்தினான். கிருஷ்ணனும் தேர் செலுத்திக் கொண்டே எப்படி அம்புகளை எய்ய வேண்டும் என்று வாய் ஓயாமல் பாமாவுக்கு சொல்லிக் கொண்டி ருந்தான். அவ்வாறே பாமாவும் சரமாரி பொழிந்தாள். முதலில் நரகனின் குதிரைகள் மாய்ந்து விழுந்தன. கொடி அறுந்து விழுந்தது. அதற்கும் முன்பாக நரகனின் கிரீடமும் போட்டி போட்டுக் கொண்டு கீழே விழுந்து உருண்டது. அவனது ரதத்தின் சக்கரங்களை ஓடித்தாள் . ஓட முடியாமல் வில்லின்றி நரகன் தேர்க்காலில் விழுந்தான். நரகாசுரனை வாட்டியது பாமாவின் கணைகள்!!.
கிருஷ்ணனின் சக்ராயுதத்தை பாமா செலுத்தினாள் . நரகனின் மார்பு இரண்டாக பிளந்தது. அரை உயிருடன் தடுமாறும் வார்த்தைகளில் நரகன் பேசினான்.
“கிருஷ்ணா!!, நீ ஒரு பேடி. ஒரு பெண்ணை முன் நிறுத்தி யுத்தம் செய்தாய்,!! உன்னால் என்னை ஜெயிக்க முடியாதல்லவா??
“நரகா, மறந்து விட்டாய் போலிருக்கிறதே. நீ விரும்பியது அவ்வாறே அல்லவா?? நீ கேட்டபடியே தான் நான் உன் முடிவைத் தந்தேன்! வரம் கேட்பதும் பெறுவதும் எளிதல்ல. கடும் தவம் செய்து பெற்றதை விரயம் செய்து உன் அழிவை நீ தேடிக் கொண்டாய்! ஆனால் ஒன்று நிச்சயம். உன்னுடன் யுத்தம் செய்ய நான் மிகவும் பிரயாசைப் பட வைத்தாய். அப்போது தான், ஒரு பெண்ணால், அதுவும் உன் தாயால் மட்டுமே உன் முடிவு என்று நீ கேட்டு பெற்ற உன் வரம் எனக்கு நினைவுக்கு வந்தது. என்னுடன் யுத்தம் செய்த நீ நற்கதியே அடைவாய்!!”
“நரகாசுரனுக்கு அவன் கேட்ட வரம் நினைவுக்கு வந்தது. எதிரே அவன் தாய் அல்லவா நிற்கிறாள் பாமா ரூபத்தில். அவன் கண்களில் நீர் வடிந்தது. ஸ்வாசம் மெதுவாக அடங்கிக் கொண்டே வந்தது. நினைவு இருந்தது. பேச முடிந்தது. தனது நிலையை உணர்ந்தான் நரகன். இரு கைகளை கூப்பினான்.
”கிருஷ்ணா ! உன் பெருமை உணர்ந்தேன். மனிதர்களே, அரசர்களே, தேவர்களே, மறந்து தவறு செய்யும்போது நான் ஒரு அசுரன் தவறு செய்வதில், மறந்ததில், என்ன ஆச்சர்யம்!!??. இந்த நாளில் நம் யுத்தம் அனைவருக்கும் நினைவு வரட்டும் நான் உன் கையால் மடிவதில் எனக்கு பாக்யமே!”
“ நரகா. உன் விதியை நீயே தேடிக் கொண்டாய். சத்யபாமா உன் தாய் பூமாதேவி அம்சம். நீ பௌமாசுரன் என்ற பேர் அவளால் தானே பெற்றவன் அல்லவா ?
”நரகா, எனினும் நீ விரும்பியவாறே ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐப்பசி சதுர்த்தசி நரக சதுர்த்தசி என உன் பெயராலேயே தீபாவளி என ஒரு சிறந்த நாளாக மக்கள் பூமியில் கொண்டாடுவர். நமது யுத்தம் ஒரு சில வாண வேடிக்கைகளுடனும் (பட்டாசு) சரங்களுடனும், (தரை, விஷ்ணு) சக்கரங்களுடனும், ஒளியும் ஒலியுமாக நினைவுக்கு வரும். அனைவரும் இனிப்பு உண்டு வழங்கி, புத்தாடை உடுத்தி, கொண்டாடப்படும் மகிழ்ச்சி தரும் பண்டிகை நாள் ஆகும் திருப்தியா, நரகா??!.
நரகன் பேசவில்லை. அவன் கண்கள் பேசின. அவன் ஆனந்தமயமான கிருஷ்ணனை தரிசித்தான். இரு கரங்கள் மேலே எழும்பி கூப்பின. திருப்தி திருப்தி திருப்தி என உணர்த்தின.
கண்ணன் ஆசி அருளினான். நாமும் ஒரு விதம் என்ன, பல விதத்தில் நகரங்களில் வாழும் நரகர்களாக திகழ்கிறோமே. சிரம் மேல் கரம் உயர்த்தி ”கிருஷ்ணா” என தீபாவளி நன்னாளில் வணங்குவோம். நம்மையும் அன்போடு நேசத்தோடு வாழ்த்துவான் கண்ணன்.
என்ன தான் நாம் வரம் பெற்று பலம் அடைந்தாலும் தெய்வ பலம் என்று ஒன்று இருக்கிறதே, அதற்கு உட்பட்டது தான் அனைத்து மற்ற பலமும். ஆகவே ஆணவம் அழிவைத்தரும் என்று புரிய வைக்கிறது நரகன் கதை. அடுத்த கதையில் சந்திப்போம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

