BHANA BHATTA J K SIVAN

ஹர்ஷ சரித்திரம்  –  பாண  பட்டர் –   நங்கநல்லூர்  J K  SIVAN  ” உங்களுக்கு  பாண பட்டர் தெரியுமா?”‘ எந்த கோவில் பட்டாச்சாரியார்?”’கோவிலா? பட்டாச்சார்யரா?  ஐயா நான் சொல்றது ஒரு கவிஞர், புலவர், பண்டிதர்””ஓ, பாண பத்ரரை சொல்றீரா?’ திருவிளையாடல் சினிமா படத்தில்   T R  மஹாலிங்கம்  உச்சாணி குரலில் பாடுவாரே ”இசைத்தமிழ் ..னு  பாண பத்ரர், அவரை சொல்றீளா?”ஐயையோ , இதென்ன அக்கிரமம்… நான் சொல்றது பாணபட்டர் , ஒருத்தருக்கும் அவரை தெரியலையா?  ஹர்ஷ சக்ரவர்த்தியை பத்தி எழுதியவர். ‘காதம்பரி; ன்னு ஒரு அருமையான காவியம் சமஸ்க்ரிதத்திலே எழுதியவர். சிறந்த கவி.”தெரியாது சார். சொல்லுங்கோ அவரைப் பற்றி.7ம் நூற்றாண்டிலே  ஹர்ஷ சக்ரவர்த்தி அரண்மனை சபையிலே ஆஸ்தான கவி. ப்ரிதிக்குடா ன்னு ஒரு கிராமம் கன்யா    குப்ஜம் என்கிற தேசத்தில் (இப்ப  கன்னோஜ்) பிறந்தவர். அம்மா அப்பாவை சின்னவயசிலேயே இழந்தவர்.யாரோ  கோள் மூட்டி பாணபட்டரை பற்றி  தவறாக சக்கரவர்த்தியிடம் சொல்லி  அவர் கோபமாக இருந்தார். அரண்மனையில் ஒருநல்ல புலவர் சக்ரவர்த்தியிடம் பாணபட்டரை, அவர் திறமை, மஹத்வம் பற்றி சொல்லி சக்ரவர்த்தி ஆளை அனுப்பி ”கொண்டுவா பாண பட்டரை இங்கே” என்று அனுப்பினார்.ஹர்ஷ சரித்ரம்  முதன் முதலில் எழுதிய அற்புத புலவர். சமஸ்க்ரித பண்டிதர். ஹர்ஷர் கால விபரங்கள் தெள்ள தெளிவாக வியாக்குகிறார். இதையே  ஹ்யுயென்சாங் என்கிற  சீன   யாத்ரிகர்,  சரித்ராசிரியர்,  தனது புத்தகங்களில் குறிப்பிடுகிறார்.   ஹர்ஷ சரித்திரம் 8 அத்யாயங்கள் கொண்டது.  பாணபட்டர் சொல்வது போலவே  சுருக்கமாக சொல்கிறேன். ”நான்  பாண பட்டன்.  என் அம்மா  போன பின், அப்பா  என்னை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தார். என் துரதிர்ஷ்டம் அவரும்  என்னுடைய 13-14 வயதில் என்னை விட்டு  மறைந்து விட்டார்.   உலகமே  சூன்யமாகி விட்டது. அனாதையான நான் ஊர் ஊராக  காட்டிலும், மேட்டிலும் சன்யாசிகள் ஆஸ்ரமம், ராஜாக்கள் சபைக்கும் அலைந்தேன்,  பண்டிதர்களை, ரிஷிகளை, ராஜாக்களை யெல்லாம் சந்தித்தேன். வித விதமான மனிதர்கள், வியாபாரிகள், வேதாதிகள், ராணுவ வீரர்கள், துறவிகளை எல்லாம் சந்தித்தேன். அவந்தி, விதிஷா, கன்யாகுப்ஜம்,  தானேசர் நகரங்களுக்கு  சென்று என் அறிவை பெருக்கிக் கொண்டேன். கவிதையில் மனம் போனது.  ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் என் கண்ணை திறந்தது.   எனக்கும் ஒரு நல்ல ராஜா, கல்விமான், சக்திமான்,  புகழும்  பெருமையும் உடையவன், இலக்கியம், இசையில் ஈடுபாடுடையவன் கிடைத்து என்னை ஆதரிக்கமாட்டானா என்ற தாகம் தணியவில்லை.
ஒருநாள்  இப்படி சிந்தித்துக்கொண்டு கங்கைக்கரையில் உட்க்கார்ந்திருந்தபோது ஒரு  துறவி வந்தார்.  அவர் தானாகவே என்னிடம் வந்து முதுகை தட்டி  ”இளம் ப்ராமணா , உன் தேசாந்திரம் முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில்  நீ ஒரு பெரிய  மகாராஜாவை, ஏன், சக்ரவர்த்தியை சந்திக்கப்போகிறாய். உனக்கு நல்ல நண்பனாக இருப்பார். எதிரிகள்  பேர் சொன்னலேயே  வேஷ்டி ஈரமாகும்  பராக்ரமன்   பாரத சாம்ராஜ்யத்தின் ஹர்ஷ மஹா சக்ரவர்த்தி தான் அது என்று சொல்லி காட்டுக்குள் மறைந்து விட்டார் அந்த துறவி.
கன்னோஜி ராஜ்யத்தின் தலைநகர் தானேசருக்கு நடந்தேன். வழியெல்லாம்  செழிப்பான வயல்கள், புண்ய நதிகள், நீர் இலைகள், மரம் செடி கொடிகள், ஜனங்கள் சந்தோஷமாக வாழும் கிராமங்கள். சுபிக்ஷமான ராஜ்ஜியம்.மாடமாளிகை கூட கோபுரம் நிறைந்த நகரம் தானேசர் .  அந்த  அரண்மனையில் ஒருவர் என்னை ராஜாவிடம்   அழைத்து சென்றார்.  ராஜ சபையில் சுற்றிலும் மந்திரிகள்  தளபதிகள், சேனாபதிகள்.
”நீ தான்  பாணபட்டனா?  எங்கெல்லாம் சென்றிருக்கிறாய்?என்ன படித்திருக்கிறாய், உன் குடும்பம் பற்றி சொல்லு என்று  புன்னகையோடு  என் மீது ஒரு வாஞ்சையோடு  சக்ரவர்த்தி மிருதுவான குரலில் கேட்டபோது என்னை மறந்தேன்”
”உன்னைப்பற்றி கேள்விப்பட்டேன். சரஸ்வதி கடாக்ஷம் நிறைந்தவனாமே, ஸரஸ்வதி  நதிபோல் தெளிவாக உன் ஸ்லோகங்கள் இருக்குமாமே ..இனி நீ  இங்கேயே  தங்கலாம்.”
”இன்று முதல்  இந்த கருணை வள்ளல் பற்றி சகலமும் எழுதவேண்டும் என  தீர்மானித்தேன். சக்ரவர்த்தியின்  உதாரம், கருணை, சேவை மனப்பான்மை எல்லாம் உலகுக்கு தெரியவேண்டும்.
வர்தனர்கள்  புகழ் வாய்ந்த பரம்பரை. தர்ம பரிபாலனம் புரிந்தவர்கள்.  ராஜ  பிரபாகரவர்தனன் மிகச்சிறப்பு மிக்க ராஜா. புலவர்கள் பண்டிதர்கள்,  பிராமணர்களை  நிறைய தானம்  தந்து  ஆதரித்தவன். ஹர்ஷ சக்ரவர்த்தியின் தந்தை.  தானேசர் அப்போது ஸ்தானேஸ்வரம். அண்டை நாட்டு அரசர்கள் அவன் பராக்ரமம்  கண்டு நடுங்கியவர்கள். அவன் வீரத்தால் ஹிமாச்சலத்தை தாண்டியும், மேற்கே மால்வா வரை, தெற்கே  லதாஸ், கிழக்கே  கௌடாஸ்  வரை பரவிய சாம்ராஜ்யம்.மஹாராணி யசோமதி தேவி, அழகும், அறிவும், பக்தியும், பண்பும் நிறைந்த பெண்மணி.   ரெண்டு பிள்ளைகள் ராஜ்யவர்தனன், ஹர்ஷவர்த்தனன், ஒரு பெண் ராஜ்யஸ்ரீ  கன்னோஜ் இளவரசன் மௌகரி என்பவன் மனைவி.
ஹர்ஷன் பிறந்தபோது நாடெங்கும் மகிழ்ச்சிப்  பேரலை.  கமகம வென்று எங்கும் நறுமணம், பூக்கள் செடிகொடிகளால் அலங்காரம், வாத்ய கோஷம்.   ஜோசியர்கள் அவன் ஜாதகத்தை பார்த்து  ” இவன் சிறந்த கல்விமான், ராஜ தந்திரி, வீராதி வீரன், இரக்கம் கருணை மிக்கவன்.  தைரியலட்சுமி, ஜெய லட்சுமி அருள்படித்த மாவீரன். பெரிய  சக்ரவர்த்தி யாக  திகழ்வான். இவன் காலம் நிச்சயம் ஒரு பொற்காலம்” என்று  ஆருடம் ஜாதகப்பலன் சொன்னார்கள்.
பலம் மிகுந்த யானைப்படை, தேர்ந்த  வீரர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றி தேடி தந்தார்கள்.”வயதானால் என்ன, படைக்கு தலைமை  தாங்கி முன் நின்று போர் புரிவேன். என் மக்களைக் காக்கவே  என் உடல் உயிர் எல்லாம் என்று சொல்வான் கிழ ராஜா. அந்திம காலம் நெருங்கவே, பிரபாகர் வர்த்தனன்  இரு பிள்ளைகளையும்  அழைத்து மனம் விட்டு பேசினான்.”என் மூத்த மகனே, ராஜ்யவர்த்தனா, எனக்குப்பின்  நீயே  ராஜா. ராஜ்யபாரம் சுகமானதல்ல. முள் மேல்  அமர்வது.உன் முழு பொறுப்பும் நாட்டையும் மக்களையும் உன் உயிரைக் கொடுத்தாவது காப்பது  தான். நீதி நேர்மை தவறாது அரசாள்வாய்.   ஹர்ஷா,நீ தான் அண்ணாவுக்கு வலது தோள். கண்ணை இமை காப்பது போல் ராஜாவை நீ நிழல் போல் தொடர்ந்து காக்கவேண்டும். உன் இன்று பொறுப்பு உன் சகோதரி  ராஜ்யஸ்ரீ. கண்கலங்காமல்  அவளை காப்பாற்று.
  ராஜா  பிரபாகரவர்தனன் இறந்து நாடே கண்ணீர் விட்டு  கங்கைக்கரையில் அனைவரும்  சந்தனக்கட்டைகளில் அவனுக்கு சிதை  அமைத்து நெய் பரிமளகந்த நறுமணத்துடன் எரியூட்டினார்கள்.  சாஸ்த்ர பிரகாரம் தஹனம் ஆரம்பிக்கும் முன்  ராணி யசோமதி குளித்து மஞ்சள் குங்குமம் ஆபரணங்கள் , புஷ்பங்கள்  தாம்பூலம் தரித்து  ராஜாவின் உடலை மூன்று தடவை ப்ரதக்ஷிணம் வந்து அவன் கால்களைக் கும்பிட்டாள் . எல்லோருக்கும் கையசைத்து விடை கொடுத்தாள். பிரார்த்தனை செய்தவாறே,  திகு திகு  வென்று அக்னி  ராஜாவை உடலைப் பற்றிய  நேரம்,  ராணியசோமதி ஒரே தாவலில்  அந்த அக்னியில் பிரவேசித்தாள் . இருவர் உடலும் பொசுங்கி சாம்பலானது.  வேத கோஷங்கள் முழங்கின. நாட்டு மக்கள்  அவர்களை தெய்வங்களாக வணங்கி வீட்டு சென்றனர்.
பாணபட்டர் மேலும் சொல்வதை  அடுத்த பதிவில் தருகிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;