SISUPALA STORY J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN

அவலக்ஷண அத்தை பிள்ளை.

குழந்தைகளே, வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் ரெண்டு துவாரபாலர்கள் ஜய விஜயர்கள் ரிஷி சாபத்தால் பூமியில் மூன்று பிறவிகள் எடுக்க நேரிட்டது. அந்த மூன்றிலும் விஷ்ணுவின் எதிரிகளாக . விஷ்ணு நரசிம்ம னாக அவதரித்தபோது, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக, விஷ்ணு ராமனாக அவதரித்தபோது அவர்கள் ராவணன் கும்பகர்ணன். விஷ்ணு கிருஷ்ணனாக தோன்றியபோது அவர்கள் சிசுபாலன் தந்தவக்ரனாக பிறவி எடுத்தார்கள்.

​சேடி தேச ராஜா தாமகோஷன், ராணி ஸ்ருததேவி ஆகியோருக்கு பிறந்தவன் சிசுபாலன். பிறந்த போது மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் கழுதையின் குரலுடனும் அமானுஷ்யமாக பிறந்ததால் அவனை அபசகுனம்,
அவலக்ஷணம் என்று​ மந்திரிகளும் ராஜாவுக்கு உபதேசித்தார்கள். அவனை காட்டில் விட்டு​ விட ​ முடிவெடுத்தார் கள்.மனதில் வருத்தத்தோடு நாட்டின் நன்மையைக் கருதி குழந்தை சிசுபாலனை காட்டில் எறிந்துவிட புறப்படும் சமயம் ஒரு​ அசரீரி குரல் கேட்டது.

“இவன் சாமான்ய குழந்தை அல்ல. மிக்க பலசாலி. இவனை யாராலும் வெல்ல முடியாது ஒருவனை​த் தவிர, அவனால் தான் இவனுக்கு மரணம்”

​ஸ்ருத​தேவி ​ பெற்ற தாயல்லவா? “யார் அவன், என் மகனை கொல்ல பிறந்தவன்?”​ என்று கேட்டாள் .
“எவன் மடியில் உன் மகன் இருக்கும்போது ​அவனுடைய உபரி ரெண்டு கரங்கள் செயலிழந்து கீழே விழுகிறதோ,அவன் மூன்றாம்​ கண் மறைகிறதோ அவனால் மட்டுமே உன் மகனின் மரணம் நிகழும்”​ என்றது அசரீரி. ஆகவே ஸ்ருததேவி குழந்தை சிசுபாலனை அன்று முதல் வீட்டுக்கு, அரண்மனைக்கு வருவோர் மடியில் எல்லாம் கிடத்தினாள். எதுவும் அதிசயம் நடக்கவில்லை.

​ஸ்ருததேவி கிருஷ்ணனின் தந்தை வஸுதேவரின் சகோதரி​ குந்திக்கு இளையவள். ​ எனவே கிருஷ்ணனின் அத்தை பிள்ளை சிசுபாலன். ​
ஒருநாள் அத்தை வீட்டுக்கு கிருஷ்ணன்​ ​பாலகனாக சென்றான். எல்லோரிடமும் செய்வது போல அத்தை அவன் மடியிலும் தன் குழந்தையை​க் கிடத்தினாள். என்ன ஆச்சர்யம்? சிசுபாலனின் நான்கு கரங்க​ளில் ரெண்டு கரங்கள் தானாகவே கீழே விழுந்தன. அவன் நெற்றிக்கண்ணும் மறைந்தது .​
​சுருதாதேவி திடுக்கிட்டாள். நடுங்கினாள். சொந்த மாமன் மகனாலேயே சிசுபாலனுக்கு மரணமா? கிருஷ்ணனை வேண்டினாள்;
“அப்பா, கிருஷ்ணா, நீ ஒரு அதிசய பிறவி என்று எனக்கு தெரியும். ஆனால் நான் உன்னை கெஞ்சி உன் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். “என் மகன் என்ன தவறு செய்தாலும்​ அவனை தண்டிக்காதே. உன் அத்தை நான் உன்னிடம் கேட்கும் வரம் இது. அவன் நூறு தவறுகளைச் செய்தாலும் பொறுத்து​க்கொள் அவனைக் கொல்லாதே .தயவு செய்து இதை எனக்கு வாக்குறுதியாக​க் கொடு.”

“அத்தை, இதெல்லாம் எதற்கு வீணாக, நான் அவனை கோபிக்க மாட்டேன். அவனை தண்டிக்க மாட்டேன் தூறு தப்பு அவன் செய்தாலும்​ எனக்கு அவன் மேல் கோபம் வராது . போதுமா? கவலைப்படாதே. அதற்கு மேல் எது நடக்கவேண்டுமோ அது நடந்து விட்டு போகட்டுமே” என்று கண்ணன் வாக்குறுதி கொடுத்தான்.”

​சிசுபாலன் கிருஷ்ணனால் தான் தனக்கு மரணம் என்று அறிந்ததும் அவனை வெறுத்தான். அவமதித்தான் தகாத வார்த்தைகளால் திகழ்ந்தான். கிருஷ்ணனின் எதிரிகளோடு சேர்ந்து கொண்டான். க்ரிஷ்ணனோடு இருந்த யாதவர்​ களையும், பாண்டவர்களையும் இகழ்ந்தவன்.

​பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன் ​இந்த்ரப்ரஸ்தத்தில் இராஜசூய யாகம் செய்த​ போது அந்த நிகழ்ச்சிக்கு தலைவராக, அக்ராசனராக,அதிதி வணக்கத்துக்கு உரியவர் யார்? என்ற விவாதம் எழுந்தது.​ பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர்​ இருந்தபோதும், ​பாண்டவர்கள் உறுதியாக கிருஷ்ணன் தான் முதன்மை விருந்தினராக​ வணங்கப்பட வேண்டும் என்று ஒருமித்​து கண்ணனுக்கு முதன்மை கௌரவம் அளி​க்கப்பட்டது. இதை அறிந்து சிசுபாலன் ஆத்திரம
டைந்தான்.​ராஜசூய யாகத்தில் பல ராஜாக்கள் கூடிய சபையில் கிருஷ்ணனை “​ மாடு மேய்ப்பவன். அறிவிலி,
மோசடியானவன், கள்ளன், ​ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளையடி​பவன். திருடன், நம்பிக்கை துரோகி, மா​யாவி, ராஜாக்கள் கூடிய இந்த ராஜசூய யாகத்தில் பங்கேற்க அருகதை இல்லாதவன், அவன் எப்படி முதன்மை அழைக்கப்படலாம் ” என இகழ்ந்து பேசினான்.​ இதைக் கேட்டு எல்லோரும் மனம் உடைந்தார்கள். மனம் புண்பட்டார்கள். கிருஷ்ணனும் சிரித்துக்கொண்டே அவன் மேல் கோபம் இல்லாமல் அவன் இகழ்வதை, அவமதிப்பதை கேட்டுக்கொண்டே இருந்தார். ஏனெனில் இன்னும் 100 தவறுகள் நிறைவடையவில்லை.​ நூறாவது முறையாகவும் சிசுபாலன் கண்ணனை தகாத வார்த்தைகளால் இகழ்ந்தான். எல்லை தாண்டினான்.​ இந்த இழிகுலத்தவனை நானே என் வாளால் வெட்டுகிறேன் என்று அதிக கோபத்தோடு வாளை வீசி கிருஷ்ணன் மேல் பாய்ந்தான் சிசுபாலன். கிருஷ்ணன் அவன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியும் நிறைவேறியது. நூறு தவறுகளும் அதோடு முடிந்தது. அதற்கு மேல் பொறுத்துக்​ கொள்ள ​அவசியம் இல்லாதால் சிசுபாலனை தண்டிக்க அந்த மஹா சபையில் கிருஷ்ணனின் சக்ராயுதம் புறப்பட்டது. சிசுபாலனின் தலையை​த் துண்டாக்கியது. அவன் ஆத்மா உடலிலிருந்து வெளியேறி கண்ணனோடு ஒன்றானது.​ வைகுண்டத்தில் ஆரம்பத்தில் ஸ்ரீமன் நாராயணனின் ரெண்டு துவாரப்பாலர்களில் ஒருவன் அல்லவா?

ம​ஹா பாரதத்தில் (சபா பர்வம் – சி​சுபால​ வத பர்வம்) சிசுபாலனின் அவமதிப்புப் பேச்சுக​ளை ஸமஸ்க்ரித ஸ்லோகங்களில் வர்ணிக்கிறது.“சி​சு பால வாக்கியங்கள்” என​ அதற்குப் பெயர்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;