RAMALINGA SWAMIGAL J K SIVAN

இன்னாள்  நன்னாள் –   நங்கநல்லூர்  J K  SIVAN 

அக்டோபர் 5,  ஒரு அற்புத நாள். நமது தமிக்கத்தில் ஒரு மஹான் அவதரித்த நாள். அவரைப்போல்  இன்னொருவரை காண இயலாது. யாருக்குமே  அவர் யார் என்றே  நினைவில் இல்லை. அரசியல் வியாதிகள் பிறந்த நாளை  பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்பி கொண்டாடுகிறோமே  இன்று அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை,  வள்ளலார் ஸ்வாமிகள் பிறந்த தினம் என்று எத்தனை பேருக்கு தெரியும்?  இதே நாளில்  1823ல்  சிதம்பரம் அருகே மருதூர் எனும் கிராமத்தில்  ராமையா, சின்னம்மா தம்பதிகளுக்கு  பிறந்தவர்  ராமலிங்கம் பிள்ளை. சிறுவயதிலிருந்தே தெய்வீகமாக வளர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்தவர். கடவுளையே தாயாக ஏற்றவர். உலகத்தில் யாரும் பசியோடு இருக்க கூடாது. எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும். எல்லா உயிர்களையும் காக்க வேண்டும், பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர்  துன்பத்துக்கு ஆறுதல்  இதை  அளிப்பது தான்  உயர்ந்த தர்மம். இதுவே கடவுள் வழிபாடு”  என்ற லட்சியத்தோடு  கடைசிவரை  வாழ்ந்ததால் தான் அவருக்கு ‘வள்ளலார்’ என்ற பெயர்  நிலைத்தது.
1867ஆம் ஆண்டு வடலூரில்  வள்ளலார் நிறுவிய “சத்திய தர்மசாலை” மிகப் புகழ்பெற்றது. இன்றும் உள்ளது.இங்கே  சாதி, மதம்,பாலின வித்யாசம் எதுவுமில்லாமல் அனைவருக்கும் இலவசமாக இன்றும்  உணவளிக்கப்பட்டது. ஒரு நாளிரவு தரிசனம் செய்ய போன எனக்கு பசி வயிற்றை கிள்ளியது.  மந்தார இலையில்  சுடசுட சாதம், ரசம், மோர் வேண்டுமளவு போட்டார்கள்  வயிறு முட்ட சாப்பிட்ட நன்றிக்கடனை வாழ்நாள் பூரா  என்னால் தீர்க்க முடியாது. அந்த தர்மசாலையில் தீபம் எப்போதும் அணையாது — அது “அன்னதான தீபம்”  வள்ளலாரின் திருவருட்பா படிக்க இனிக்கும். தெவிட்டாத தேன் பாகு.  இன்று ஒன்றிரண்டு அருட்பாக்களை தருகிறேன்.
” பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே”

”என்னப்பனே, பரமேஸ்வரா, பெற்று பாசமாக வளர்த்த பிள்ளை அம்மாவை மறந்து போகட்டும். அப்படித்தான் எத்தனையோ பிள்ளைகள் இந்த உலகில் இருக்கிறார்கள்.  அந்த அம்மாவுக்கும் பிள்ளை பின்னாலே அலைந்து அலுத்துப் போய் அவன் நினைவே அவளுக்கு மரத்து , மறந்து போகட்டும். தேகம் உயிர் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தி ருந்தாலும் உடலை உயிர் மறந்து போகட் டும். தன்னுள்ளே கடைசி வரை இருக்கும் உயிரை அந்த உடல் மறக்கட்டும் . பள்ளிக்கூடத்தில் காலேஜ் மற்றும் பெரிய கலாசாலையில் எல்லாம் படித்தது அத்தனையும் மனது மறந்து போகட்டும். கண்ணை இமை மூடி மூடி இமைத்து காப்பது நின்று போகட்டும், பரவாயில்லை,  ”என்னப்பனே, எல்லாம் அறிந்த தவ யோகிகள் மனதில் நிறைந்திருக்கும் ”ஓம் நமவசிவாய ” எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை மட்டும்  நான் என்றென்றும் மறக்க மாட்டேன். அதன் உருவகமான உன்னையும் மறக்கவே மாட்டேன், மாட்டேன், மாட்டவே  மாட்டேன்”

 சென்னையில்,  ஏழு கிணறு, மண்ணடியில் இருந்த போது , ஒவ்வொரு நாளும்  வள்ளலார் கந்தசாமியை, கந்தகோட்டத்தில்  தரிசித்து  ‘அப்பா’  என்று அழைத்து  தனக்கு  என்ன வேண்டும் என  கேட்டதை நாமும் கேட்போம்..

” எல்லார் கிட்டேயும்,  எது கிட்டேயும்  நான் அன்பாக  இருக்கணும்.   உலகத்தில் எங்கே வேணாலும்  சுத்தணும். உன்னைப் பற்றி   உன் நல்ல குணத்தை பற்றி எப்போதும் எல்லோருக்கும்  எடுத்து சொல்லணும். எங்கும்  சுத்தமான உன் சைவமார்கத்தை  விளக்கி எல்லோரும் அருள்ஜோதி பெற்று  வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கனும்.  நான்  ஏதாவது தப்பு பண்ணிடுவேன். அப்போ  என்னை நீ கட்டாயம்  மன்னிக்கணும். பொறுத்துக்கணும்..கடைசியா ஒண்ணு  கேக்கறேன். அப்பா, நான் எப்போவும் உன்னோடு சேர்ந்தே இருக்கணும்.  செய்வியா?’  இந்த வேண்டுகோளை பாட்டாக பாடிய அற்புத பாடல் இது தான்;
”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே”.  

இப்படி நாமும்  கடவுளை கேட்போமா?.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;