SIVA THATHA STORIES 5 J K SIVAN

.
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
அசுரனின் மரணம்.
கதை என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தால் மட்டும் போதாது. அது குழந்தைகளை யோசிக்க வைக்க வேண்டும். நமது பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், முன்னோர்  பின் பற்றிய சில நெறி முறைகள் என்றும் உதவுவனவாக இருப்பவற்றை அறிய, புரிய, தெரிய வைக்கும்படியாக இருக்க வேண்டும்.
நமது இதிகாசங்கள்,  முக்கியமாக ராமாயண மஹாபாரத  சம்பவங்கள் எத்தனையோ விஷயங்களை போதிக்கின்றன அல்லவா. தீமையை அழிக்க, தீங்கை ஒழிக்க, தீயவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட  சில அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம்.கிருஷ்ணனின் கதைகள் அவன் பிறந்தது முதல் தொடரப்படுபவை. இதோ ஒரு கதை. மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளரும் கிருஷ்ணன் நந்தகோபர்  யசோதா தம்பதியரின்மகனாக வளர்கிறான்.
கிருஷ்ணனுக்கு  வயது ஒன்று  நெருங்கி வரப்போகிறது.  நாள்  நகர்வதே தெரியவில்லையே.  கண் மூடி கண் திறப்பதற்குள் என்ன என்னவெல்லாம் மாறுதல் இந்த மாய லோகத்தில்!!

நந்தகோபனும் யசோதையும்  இப்போதிருந்தே  எப்படி எல்லாம்  முதல பிறந்தநாளை  கொண்டாடலாம் என்று  யோசனை செய்துகொண்டிருகிறார்கள்.   ஒவ்வொரு நாளும்  ஊரார் உற்றார் கூட்டம் நிரம்பி வழிந்தது வீட்டில், தப்பு, அந்த ஊரே கொண்டாடியது. பார்க்குமிடத்தில்  எல்லாம்  வண்ண  வண்ண  கொடிகள்,  தோரணங்கள், மாலைகள், தீபங்கள், தெருவெல்லாம்  கூட்டமாக  மக்கள்  நின்று கொண்டு வருவோர் போவோர்க் கெல்லாம் நீர் மோர்,  பானகம்,  இனிப்பு வகைகள்,  அவல், பொறி,  வெல்லம்  வாரி  கொடுத்தார்கள் .  சிலர் கூத்து,  நாடகம்  நாட்டியம் எல்லாம் ஏற்பாடுகள்  பண்ணியிருந்தார்கள். பக்கத்து ஊரிலிருந்து ஒரு கழைக் கூத்தாடி  வந்து வித்தை காட்டி கொண்டிருந்ததை  சிறுவர் கூட்டம்  சூழ்ந்து கொண்டு  ஆர்பரித்து மகிழ்ந்தது. கன்று, பசு, காளைகளுக் கெல்லாம்  மஞ்சள், குங்குமம், மணி மாலைகள்,  வஸ்த்ரங்கள்,  கொம்பு கொளம்புகளுக்கு  வண்ணம்  பூசி இருந்தது.

அன்று  பெரிய  விருந்து  நடைபெறுகிறது. நந்தகோபனும்  யசோதையும்  விழுந்து விழுந்து வருவோர்க் கெல்லாம் பரிமாறு கிறார்கள். குழந்தையை  எல்லாரும் தூக்கி, கொஞ்சி, அணைத்து  அவன்  ரொம்ப  டயர்ட் ஆகிவிட்டான். ஏற்கனவே  புத்தாடைகள்,  நகைகள், சந்தனம் குங்குமம், கஸ்துரி திலகம்,  தலையில்  சின்ன  கிரீடம், காதில்  மூக்கில்  கழுத்தில்  நிறைய  தங்க, வைர  நகைகள் அவனை விரைவில்  தூங்க வைத்ததால் யசோதை  அவனை  தூங்க ஒரு இடம் தேர்ந்தெடுத்தாள்  அந்த மாளிகையில் ஒரு பெரிய அறையில் அவர்கள் தயிர் பால், வெண்ணை ஆகியவற்றை பெரிய பானைகளில் வைத்து தெருவில் இழுத்துச் செல்ல  ஒரு  சக்கர வண்டி உபயோகமில்லாமல் அந்த அரையில்  நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் அடியில்  மெத்தென்று  துணி விரித்து  கிருஷ்ணணை படுக்க விட்டாள்.
உடல் அசதி, கண்ணை சுழற்றும் தூக்கம்  ஆகவே   நிசப்தமாக  இருந்ததால் கிருஷ்ணனின்  தூக்கம்  கெடாதே யாரும்  வந்து  அவனை தொந்தரவு செய்ய மாட்டார்கள் அல்லவா, இங்கு  சப்தமில்லாமல்  கிருஷ்ணன் தூங்கட்டுமே  என்று  இந்த  இடத்தை தேர்வு செய்தாள்.
அந்த  வண்டி மேல் பல  பானைகள்  நிறைய பால்,  தயிர்,  வெண்ணை   நிரப்பி  அடுக்கி வைக்கபட்டிருந்தன. அந்த இடத்தை  யசோதை மட்டுமா  தேர்வு செய்தாள்? இங்கு தான் இருக்கிறது இந்த கதையின் விறுவிறுப்பான அம்சம்.
கிருஷ்ணனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று மதுராவில்  கம்சன் பல திட்டங்கள் தீட்டி பல ராக்ஷஸர்களை அனுப்பிக்கொண்டே இருந்தான். அவர்களில் ஒருவன் இந்த கதையில் வரும்  அசுரன். 

மாயமாய் யார் கண்ணிலும் படாமல் மதுராவிலிருந்து கோகுலம் வந்த அசுரன் கிருஷ்ணன் எப்போது தனியாக அகப்படுவான் அவனைக்  கொள்ளலாம் என்று சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தான்.  யசோதனை கிருஷ்ணனை  தூக்கிக்கொண்டு வந்து அந்த தனி அறையில்  நின்று கொண்டிருந்த வண்டியின் அடியில் அவனை தூங்கவைத்தபோது அவனும் அந்த அறைக்குள் மாயமாக யார் கண்ணிலும் படாமல் புகுந்து கொண்டான்.
அந்த அறையில் குழந்தை கிருஷ்ணனும் அவனைக் கொல்ல வந்த ராக்ஷஸனும் தான். சத்தம் போடாமல் அந்த வண்டியின் சக்கரத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். சக்கரம் நகர்ந்து குழந்தை கிருஷ்ணனை நசுக்கி கொன்றுவிட்டது என்று எல்லோரும் நம்பி ஏமாறட்டும். இது நல்ல யோசனை. தான் வந்து கொன்றது வெளியே தெரியாது என்று தீர்மானித்து சக்கரத்தில் புகுந்து கொண்டான்.  சக்கரத்தில் அவன் புகுந்து மறைந்து கொண்டதால் அவன் பெயர் இந்த கதையில் சக்கராசுரன். ஜகடை என்றாலும் சக்கரம்.  ஆகவே ஜகடாசுரன் என்றும் அவனுக்கு பெயர்.
 சக்கராசுரனுக்கு ரொம்பவே  சந்தோஷம். பழம் நழுவி  பாலில் விழுந்துவிட்டதே யாரும் இல்லாத இந்த  அறையில்  கிருஷ்ணன்  தன்னந் தனியனாக  நம்மிடம் வசமாக அகப்பட்டுகொண்டான்.  அவனை இப்போதே  தீர்த்து கட்ட வேண்டும். இதைவிட சிறந்த சமயம் அகப்படாதே என்று எண்ணி  மெதுவாக அந்த வண்டியின் பெரிய  சக்கரத்தை நகற்ற ஆரம்பித்தான்.  “ஒரே நசுக்கு –கிருஷ்ணன்  காலி”. என்று அவனுக்கு  எண்ணம். கிருஷ்ணன் அசுரர்களைக் கொல்லவென்றே பிறவி எடுத்த பரம சக்தி வாய்ந்தவன் அல்லவா. அவன் குழந்தை உருவில் இருந்தாலும் இங்கு நடக்கப்போவது பூரா  தெரியும்.அசுரன் சக்கரத்தில் புகுந்து கொண்டதை கவனித்துவிட்டான்.  கிருஷ்ணன் கண் விழித்தான். தூங்குவது போல்  இத்தனை  நேரம்  நடித்த மாயாவி, ஆஹா இந்த அசுரன் வகையாக தனியாக என்னிடம் அகப்பட்டுக்கொண்டான். இவனை தப்பிக்க விடக்கூடாது  என்று கிருஷ்ணனும் முடிவெடுத்தான்.அதற்காக தானே  யசோதையின்  மனத்தில் புகுந்து அவள்  தன்னை இந்த  வண்டியின் அடியில்  படுக்க வைக்க எண்ணத்தை தந்தவன். சகடாசுரன் தன்னை நோக்கி சக்கரத்தை  உருட்டி வருவதை கண்ட கிருஷ்ணன் துளியும் கவலைப்படவில்லை.அருகில் வரும் வரை  வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவன்  கிட்டே வந்ததும் தனது  இடது காலால்  அந்த  வண்டி சக்ரத்தை உதைத்தான்.  என்ன  பலமோ  அந்த  காலுக்கு!!.  பெரிய சக்ரம் எதிர் திசையில் வெகுண்டு ஓடி அங்கிருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்து சிதறியது. அதனுள் இருந்த சகடாசுரன் எலும்பெல்லாம் நொறுங்கி வலியில்  கத்திய  சப்தம் கேட்டு  அனைவரும்  உள்ளே  ஓடி வந்தனர். வண்டி திசை மாறி யிருக்கிறது.  நான்கு சக்கரங்களில் ஒரு  பெரிய  சக்ரம்  வண்டியிலிருந்து  கழன்றிருக்கிறது.  பால் தயிர் வெண்ணை எல்லாம்  கொட்டி  கீழே  படுத்திருந்த கிருஷ்ணன் வாயெல்லாம் வெண்ணையும் பாலும்!!
கூக்குரல் வந்த அந்த அறைக்குள் எல்லோரும் நிற்கிறார்கள்.  நிற்க வைக்கப்பட்ட அந்த பெரிய வண்டியின் ஒரு  சக்கரம் தூரத்தில் எதிர் சுவற்றில்   மோதி துண்டுகளாக உடைந்து விழுந்து  காட்சியளிக்கிறது. இது என்ன  கோரம்.  அதன்  அடியில் ஒரு ராக்ஷசன் ரத்த வெள்ளத்தில் நகர முடியாமல் கிடக்கிறானே  அவர்கள்  அவனை  நெருங்கி கொல்வதற்கு  முன்னே  அவன் உயிர் பிரிந்து விட்டது .
சகடாசுரன்  கம்சனால்  அனுப்பப்பட்டவன்  என்று  புரிந்து கொள்ள எல்லோருக்கும் வெகுநேரம்  ஆகவில்லை.
“கிருஷ்ணா”  என்று  அடி வயிற்றிலிருந்து   பாசத்தோடு கதறிக் கொண்டு ஓடிவந்தாள்  யசோதை  “என்ன  பாதகி  நான்.  உன்னை தனியே அந்த  ராக்ஷசனிடம் விட்டு வைத்தேனே.  ”கடவுள் தானடா கிருஷ்ணா உன்னை காப்பாற்றினார்” என்று ஆதங்க பட்டாள்   யசோதை .
“அது  யார் அந்த  இன்னொரு  கடவுள்  என்றோ  அடுத்த  ராக்ஷசன்  யாராக  இருக்கும் என்றோ கிருஷ்ணன் யோசித்ததாக  தெரியவில்லை. ஒன்றும் நடக்காதது போல் வழக்கம்போல  சிரித்துக்கொண்டே தன் வாய்க்குள் விழுந்த வெண்ணையும் பாலும் அளித்த ருசியில்  மகிழ்ந்து கொண்டிருந்தான்!!.    

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;