
கருணைக்கடலே ராமா,,, நங்கநல்லூர் J.K. SIVAN
பாரத தேசத்தில் ராமனும் கிருஷ்ணனும் ஹிந்துக்களுக்கு இரு கண்கள். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்கள் ஸ்தலங்கள் எத்தனையோ, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகா என்று இருப்பது போல் ராம க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான க்ஷேத்ரம் பத்ராசலம். தெலங்கானா மாநிலம், கோதாவரி நதிக்கரையில் .பத்ராசலத்துக்கு பத்ராத்ரி, பத்ரகிரி என்றும் பெயர் உண்டு. அற்புத ஆலயம் ஒன்றில் ஸ்ரீ சீதாராமசுவாமி லக்ஷ்மணனோடு காட்சி தருகிறார்.
ஸ்தலபுராணம் என்ன சொல்கிறது என்றால் “பத்ரகிரி” எனும் மலையில் பத்ரன் எனும் ஞானி விஷ்ணுவை தரிசிக்க தவம் இருந்தார். விஷ்ணு ராமாவதாரம் எடுத்து ஸ்ரீ ராமராக சீதை, லக்ஷ்மணருடன் பத்ரனுக்கு அருள் தரிசனம் அளித்தார். அந்த சிறிய குன்று அதன் பிறகு பத்ரன் பெயரால் பத்ராசலம் ஆனது. இந்த பத்ராசலம் ராமர் பதினான்கு வருஷங்கள் வனவாசம் இருந்த தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதி.
கிட்டத்தட்ட நானூறு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு ராமர் கோவில் கட்டப் பட்டது. ராமர் சீதா சிலைகள் ஸ்வயம்பு. பொக்கல தம்மக்கா என்ற ராம பக்தை ஒருவள் ஒரு இரவு கனவில் ”பத்ரகிரி மலையில் சில விக்ரஹங்கள் புதையுண்டு உள்ளன. அவற்றை வெளியே எடுத்து வேண்டியதை செய் ” என்று உத்தரவு பெற்றாள் .
பத்ராசலம், கம்மம் ஜில்லாவில் ஆந்திராவில் இருக்கிறது. கோதாவரி கரையில் தண்டகாரண்ய பிரதேசம். வனவாசத்தின் போது இங்கேதான் ராமர் லக்ஷ்மணர் சீதை, லக்ஷ்மணன் கட்டிய ஒரு பர்ணசாலையில் வசித்தார்கள். இங்கே தான் ராவணன் வந்து சீதையைக் கடத்தி சென்றான்.
பத்ரர் என்று ஒரு ரிஷி. ராமனின் தர்சனம் பெற த்ரேதா யுகத்தில் தவம் இருந்த மலை. சலம் என்றால் மலை. ஆகவே அதற்கு பத்ர கிரி, பத்ராசலம் என்று பெயர்.
கிட்டத்தட்ட நானூறு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு ராமர் கோவில் கட்டப் பட்டது. ராமர் சீதா சிலைகள் ஸ்வயம்பு. பொக்கல தம்மக்கா என்ற ராம பக்தை ஒருவளுக்கு ஒரு இரவு கனவில் ”பத்ரகிரி மலையில் சில விக்ரஹங்கள் புதையுண்டு உள்ளன. அவற்றை வெளியே எடுத்து வேண்டியதைச் செய் ” என்ற உத்தரவு கிடைத்தது..
மறுநாள் விடிந்ததும் அவள் ஓடித் தேடி அவற்றை கண்டுபிடித்து ஒரு கூரை வேய்ந்து சிறிய கோவில் ஒன்றை ஸ்தாபித்தாள். காட்டைத் திருத்தி வழி செய்து தினம் அங்கு சென்று பூஜை செய்து வந்தாள் .
எங்கே ராமரை சிலையாக அவள் வழிபட்டாளோ , அங்கேதான் ராமர் சீதா, லக்ஷ்மணனோடு த்ரேதா யுகத்தில் வாசம் செய்தனர். அங்கே தான் பர்ணசாலை கட்டப்பட்டது. பத்ராசலத்திலிருந்து 35 கிமீ தூரத்தில் இந்த பர்ணசாலை இருக்கும் இடத்தை த்ரேதா யுகத்தில் தேர்ந்தெடுத்தவர் அகஸ்தியர்.
இந்த பர்ணசாலையிலிருந்து ரெண்டு கி.மீ தூரத்தில் ஜடாயு பாகா என்கிற இடத்தில் தான் ஜடாயு ராவணனோடு சண்டையிட்டு சிறகு வெட்டப் பட்டு குற்றுயிரோடு ராமனுக்கு காத்திருந்த இடம். ஜடாயு சொல்லி தான் ராமனுக்கு ராவண சந்நியாசி சீதையை கடத்தியது தெரியவருகிறது.
தும்முகூடெம் என்று ஒரு இடம் இங்கே இருக்கிறது. இங்கே தான் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கர தூஷணர்களோடு ராம லக்ஷ்மணர்கள் கொன்றார்கள். அந்த ராக்ஷஸர்களின் மலை போன்ற சாம்பலில் உருவானது இந்த தும்முகூடம். இங்கே ராமனை ஆத்ம ராமன் என்று பெயரில் வழிபடுகிறார்கள்.
ஐந்து கி.மீ தூரத்தில் சில வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கிறது. குண்டாலா கிராமம் என்று அதற்குப் பெயர். குளிர் காலத்தில் ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள் சூடாக ஸ்நானம் செய்த வெந்நீர் ஊற்றுகள்.
இந்த ஆலயத்தில் ராமர், சீதை, லக்ஷ்மணர் மஞ்சள் கற்களால் ஆன ஒரே கல்லிலிருந்து உருவான விக்ரஹங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சீதாராம கல்யாண உத்ஸவம் விமரிசையாக நடக்கும் அன்று ஆந்திர–தெலங்கானா அரசாங்கம் வழக்கப்படி மணமகனுக்கு மணமகளின் பொருட்களை வழங்கும் மரபு உள்ளது.
பத்ராச்சலத்துக்கும் ராமாதாஸுக்கும் என்ன சம்பந்தம், யார் அந்த ராமதாஸ் என்பது தான் ஆச்சர்யமான விஷயம். சொல்கிறேன்.
கஞ்சிர்லா கோபன்னா என்பவர் 1620ல் நல்கொண்டா எனும் ஊரில் பிறந்த ஒரு ப்ராமண ராம பக்தர். அவரது மாமனார் மந்திரி அக்கன்ன–மாதன்ணா கோல்கொண்டா நவாப் அப்துல்லா குதுப் ஷா ஆட்சியில் வரிவசூல் உத்தியோகஸ்தர். அவரால் கோபன்னாவுக்கும் நவாப் அரண்மனையில் உத்யோகம் கிடைத்து அரசாங்க உத்யோக விஷயமாக பத்திராசலம் போன கோபன்னாவுக்கு அங்கே ஒரு சிதிலமான ராமர் கோயிலைப் பார்த்ததும் அதை புனருத்தாரணம் பண்ண சுல்தானின் கஜானா பணம் பூரா காலியானது. அருமையான ராமர் கோயில் உருவானது. இந்த விஷயம் சுல்தான் காதுக்கு எட்டியதும் அவனுக்கு எப்படி இருக்கும். உடனே கோபன்னாவை அழைத்து வரச்செயது நாளைக்குள் பணத்தை கஜானாவில் செலுத்தாவிட்டால் சிரச்சேதம் என்று கட்டளையிட்டான். எப்படியோ மாதன்னா சுல்தானை சமாதானம் செய் தானே பணத்தை சிறிது காலத்தில் கஜானாவில் செலுத்த ஒப்புக்கொள்ள கோபன்னாவின் தலை தப்பியது. 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. ”ராமா உன்னை பார்க்க முடியவில்லையே என்று கோபன்னா வாடி ராமனையே நினைந்து கண்ணீர் சிந்தி உருகி பாடினார்.
கோபன்னா பக்திப்பாடல்கள் அருமையாக நிறைய தெலுங்கில் மனம் உருகி பாடினார். பாடல்களில் ராமரை தோழனாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும், கணவராகவும் பாவித்து பாடியுள்ளார்.தமிழ் தேவாரம், திருப்பாவை போன்ற பாணியில், அவருடைய பாடல்கள் தெலுங்கு வைஷ்ணவ சாகித்யத்தில் உயர்ந்த இடம் பெற்றவை. அவையே பத்ராச்சல் கீர்த்தனைகள் எனப்படும். தமிழ் தேவாரம், திருப்பாவை போன்றது பத்ராசல ராமதாஸ் கீர்த்தனைகள்.
கோபன்னாவின் தீன , பரிபூர்ண பக்தி பாவம் கொண்ட குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?
ஒருநாள் கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானா ஷா வின் அரண்மனைக்கு இரண்டு வாலிபர்கள் வந்தார்கள்.
ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.
”யார் நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?”
”நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்”
”ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
”அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
”அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
ஓரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள்.
ராஜாவின் ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச் சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.
”சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்” – வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக்கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
”வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
”ஓஹோ எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.”
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா ‘
சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான்.
”கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி”.
கோபன்னாவுக்கு புரியவில்லை.
‘சுல்தான், நானா? செல்வந்தனா? என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? – குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.
”என்ன சொல்கிறீர்கள் கோபன்னா. இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக் கள் கொண்ட பை இருந்தது.
”சுல்தான் சுல்தான்…..என்ன சொல்கிறீர்கள். எனக்காக பணம் கட்டிய அவர்கள் யார் ?
”என்ன கோபண்ணா உங்களது பணியாளர்கள் என்கிறார்கள் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கேட்டேனே.”
கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது. ”சுல்தான் யாரும் எனக்கு அப்படி இல்லையே. என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை
”கொஞ்சம் இருங்கள் என் சேனாபதி அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர். சேனாபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான்.
”அஹமத், இங்கே வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?”
‘ நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் ‘ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி” என்று சொன்னார்கள் . ம். கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது.
சுல்தான் முன்பு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கியவாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.
தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ராமதாசனாக சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம்.
தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ”ராமதாசனாக” சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.
பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.
மறுநாள் விடிந்ததும் அவள் ஓடித் தேடி அவற்றை கண்டுபிடித்து ஒரு கூரை வேய்ந்த சிறிய கோவில் ஒன்றை ஸ்தாபித்தாள். காட்டைத் திருத்தி ஒற்றையடிப்பாதை வழி செய்து தினமும் அங்கு சென்று பூஜை செய்து வந்தாள் .
தம்மக்கா, எங்கே ராமரை சிலையாக கோவில் கட்டி வழிபட்டாளோ , அங்கேதான் ராமர், சீதா, லக்ஷ்மணனோடு த்ரேதா யுகத்தில் வாசம் செய்தார். அங்கே தான் லக்ஷ்மணன் கட்டிய பர்ணசாலை இருந்தது. பத்ராசலத்திலிருந்து 35 கிமீ தூரத்தில் இந்த பர்ணசாலை இருக்கும் இடத்தை த்ரேதா யுகத்தில் தேர்ந்தெடுத்தவர் அகஸ்தியர். நான் சென்று பார்த்திருக்கிறேன்.
இந்த பர்ணசாலையிலிருந்து ரெண்டு கி.மீ தூரத்தில் ஜடாயு பாகா என்கிற இடத்தில் தான் ஜடாயு ராவணனோடு சண்டை யிட்டு சிறகு வெட்டப் பட்டு குற்றுயிரோடு ராமனுக்கு காத்திருந்த இடம். ஜடாயு சொல்லித் தான் ராமனுக்கு ராவண சந்நியாசி சீதையை கடத்தியது தெரியவந்தது.
தும்முகூடம் என்று ஒரு இடம் இங்கே இருக்கிறது. இங்கே தான் பதினாலாயிரம் ராக்ஷஸர்களையும் கர தூஷணர்களையும் ராம லக்ஷ்மணர்கள் கொன்றார்கள். அந்த ராக்ஷஸர்களின் மலை போன்ற சாம்பலில் உருவானது இந்த தும்முகூடம். இங்கே ராமனை ஆத்ம ராமன் என்று பெயரில் வழிபடுகிறார்கள்.
ஐந்து கி.மீ தூரத்தில் சில வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கிறது. குண்டாலா கிராமம் என்று அதற்குப் பெயர். குளிர் காலத்தில் ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள் சூடாக ஸ்நானம் செய்த வெந்நீர் ஊற்றுகள்.
இதோடு ஸ்தல புராணத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும் கோபன்னாவிடம் செல்வோம்.
சுல்தான் முன்பு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கியவாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை.
தானா ஷாவும் ஆஹா கோபண்ணா கோவில் கட்டி வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ராம தாசனாக சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். ஒரு அருங்காட்சி நிலையம் மாதிரி வைத்திருக்கிறார்கள். சில காசுகளை தூரத்தில் இருந்து பார்த்தேன்.
பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பாடல்கள் பக்தி ரசம் மிகுந்தவை, மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி, பாவம் BHAVAM ஒன்றே போதும். பாலமுரளி கிருஷ்ணா குரலில் நிறைய கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரு சில பாடல்களை கற்றுக்கொண்டும் காமா சோமா என்று பாடுவேன். நான் அப்படி ஒரு பாட்டு பாடி ரெகார்ட் செய்ததை கேட்க கிளிக் செய்யுங்கள். பாலமுரளி கிருஷ்ணா என்ற மஹா வித்வான் பாடியதை நான் பாடிப்பார்த்ததின் விளைவு இது: https://youtu.be/MKXTj0qH42g
ராமனைப் பாடுவோம் ஜே கே சிவன்
ஸ்ரீ ராம பக்தர்களில் முதன்மையானவர் ஸ்ரீ பத்ராசலம் ராமதாஸ். சுல்தான் கொடுத்த பணத்தை ராஜ்ய காரியத்துக்கு பயன்படுத்தாமல் ஸ்ரீ ராமர் கோவில் கட்டிவிட்டு சிறைப்படுகிறார். கோல்கொண்டா சென்றால் போது அந்த கோட்டையில் அவர் இருந்த சிறை அறையை இன்னும் பார்க்க முடிகிறது. அதில் பல வருஷம் சிறை இருந்த ராமதாசருக்கு ஸ்ரீ ராமனும் லக்ஷ்மணனும் அவர் பணியாளர்களாக மூட்டை நிறைய பொற்காசுகள் நிரப்பிக்கொண்டு சுமந்து சுல்தானிடம் அவனுக்கு சேரவேண்டிய பணத்துக்கு மேலே அதிகமாக செலுத்தி ராமதாசரை சிறையிலிருந்து விடுதலை செய்ய சொல்கிறார்கள்.
சுல்தான் விடுதலை செய்ய ராமதாசரிடம் வந்து ”உங்களிடமிருந்து பெறவேண்டிய நிதிக்கு அதிகமாகவே உங்கள் பணியாளர்கள் என்னிடம் செலுத்தி விட்டார்கள் உங்களை விடுதலை செயகிறேன்” என்கிறான்.
”நான் பணம் அனுப்பினேனா, என் பணியாளர்களா? அப்படி ஒன்றும் இல்லையே, என்னிடம் பணமோ எனக்கு பணியாளர்களோ எதுவுமே இல்லையே” என்று திகைக்கிறார்.
‘இரு வீரர்கள் வாட்டசாட்டமாக கம்பீரமாக பொற்காசு மூட்டைகளை சுமந்து வந்தார்களே . உங்கள் விடுதலை செய்ய பணம் கட்டி ரசீது பெற்று விடுதலை பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார்களே”
யாரவர்கள், எப்படி இருந்தார்கள் என்று ராமதாஸ் ஆச்சர்யமாக கேட்டபோது ராம லக்ஷ்மணர்களை விவரிக்கிறான் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான். கண்களில் நீர் மல்க அது ராமர் லக்ஷ்மணர்கள் பத் ராசல கோவில் மூர்த்திகள் என்கிறார். சுல்தான் ராமதாசர் பக்தியை மெச்சி அவரை தக்க மரியாதையோடு பத்ராசலம் அனுப்பி வைக்கிறான். தானும் தொடர்ந்து போய் ராம லக்ஷ்மணர்களை தரிசிக்கிறான் என்று கதை தொடரும்.
ராமதாசர் கீர்த்தனைகள் மனதைத் தொடுபவை. தெலுங்கிலிருந்தாலும் எளிதில் புரிபவை. பக்தி பாவம் இருந்தால் மொழி தேவை இல்லை. ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய இந்த ஸ்ரீ பத்ராசல ராமதாஸ் கீர்த்தனை எளியது பாட ருசியானது. நானும் பாடிப்பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக் செய்து கேட்கவும். https://youtu.be/ft9AOVbQqzk
bhajarE SrirAmam hE mAnasa bhajarE raghurAmam
bhaja raghurAmam bhanDana bheemam
rajanee charaNa kamala rAmam rAmam |
vanaruha nayanam kanadaLi Sayanam
manasija kOTI samAnam mAnam ||
TAraka nAmam daSaradha rAmam
Sri tulaseedaLa Sreekara dAmam ||
SyAmala gAtram satya charitram
rAmadAsa hrud rAjeeva mitram |
”ஓ மனமே, ஸ்ரீ ராமன் பெருமையை பாடு. ரகுவம்ச நாயகன், ரகுகுல திலகன் ராமனைப் பாடு. எதிரிகளை நிர்மூலமாக்குபவன். அவன் பெயர் சொன்னாலே இடி கேட்ட நாகம் போல கொடியவர்கள் நடுங்குவார்களே . தாமரை திருவடிகளை பக்தர்களுக்கு என்று பிரத்யேகமாக தருபவன். ஸ்ரீ ராமனை வணங்கு. திருவடிகள் மட்டுமா, அவன் கண்களும் தாமரை இதழ் போன்றவை அல்லவா? ஆயிரம் மன்மதனுக்கு சமானமான அழகன் அல்லவா அவன்? போற்றத்தக்கவன் ஸ்ரீ ராமன். சம்சார சாகரத்திலிருந்து கரை சேர்ப்பவன். தசரதனின் புத்ரன் ஸ்ரீ ராமன். அவனை மனம் குளிர துளசி பத்ரங்களால் அர்ச்சிப்போம். தெய்வீகமான அனுபவம் பெறுவோம். அவன் தேகம் நீல நிறத்தில் எவ்வளவு அழகாக கண்ணைப் பறிக்கும் கம்பீர உருவம். சத்தியத்தின் உருவம் அல்லவா ஸ்ரீ ராமன். தாமரை மலராகிய பக்தி மிகுந்த இந்த ராமதாசனின் ஹ்ருதயத்தை மலரச்செய்யும் சூர்யன் அல்லவா ஸ்ரீ ராமன். என் உயிரினும் மேலானவன்.
—
Kindly visit http://amrithavarshini.proboards.com/ for reading more articles.
பக்தரின் சேவகர்கள் — நங்கநல்லூர் J.K. SIVAN
மாசு நீங்கி பொன்னொளி வீசவேண்டுமானால் தங்கம் நெருப்பில் உருகி ஸ்புடம் போட்டு,நன்றாக அடிக்கப்பட்டு வளைத்து வெட்டி ஒட்டி தான் பளபளவென்று ஆபரணமாகிறது. அது போல் தான் நாமும். நம்மை பல விதத்தில் சோதனைக்கு ஆளாக்கி பதப்படுத்த்தி பக்தி நீங்காமல் அவனை நாம் தொடர்ந்து பணித்து வணங்கினால் நமக்கு சகல நன்மைகளும் அருள்வான். பல மஹான்கள் இப்படி சோதிக்கப்பட்டவர்கள். அறுப்பத்து மூவர் கதைகளை படியுங்கள், பாண்டுரங்கன் பக்தர்கள் சரித்திரம் படியும் இதெல்லாம் புரியும். பத்ராச்சலத்தில் ஒரு பக்தர், அவர் பெயரே மறந்து போய்விட்டது. உலகமெங்கும் அவர் அறியப்படுவது பத்ராசல ராம தாஸர் என்று தான்.
கோபன்னா தான் பத்ராசல ராமதாஸர். கோல்கொண்டா சிறையில் வாடி பாடிய பாடல்கள் பக்தி பூர்வமானவை. ராமனை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துபவை.
கோபன்னாவின் மாமா மத்தன்னா, கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானாஷா வின் மந்திரி. அவர் செல்வாக்கால் சுல்தானிடம் கோபன்னாவுக்கு உத்யோகம் கிடைத்து, கஜானா விலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராசலம் ராமர் கோவிலைபுனருத்தாரணம் பண்ணி கட்டிவிட்டார். விஷயம் சுல்தான் காதுக்கு எட்டி தானா ஷா கொதித்தான்.
”கோபன்னா, கஜானாவில் இருந்து நீ எடுத்த பணத்தை உடனே செலுத்தி உன் தலையை காப்பாற்றிக்கொள்”. மத்தன்னா கெஞ்சி கேட்டுக்கொண்டதால் கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால் பன்னிரண்டு வருஷம் கோல்கொண்டா சிறையில் வாசம்.
சிறையில் ”ராமா உன்னை பார்க்க முடியவில்லையே என்று கோபன்னா வாடி ராமனையே நினைந்து உருகி பாடினார். கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்? பன்னிரண்டு வருஷமும் ஒவ்வொரு வினாடியும் ராம ஸ்மரணை. கண்ணீர் மல்க ராமனை பணிந்து வேண்டுதல்.
ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில் சுல்தானைப் பார்க்க ரெண்டு வாலிப வீரர்கள் வந்தார்கள் . ஒருவர் தோளில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி பெற்று உள்ளே சென்றார்கள்.
”யார் நீங்கள் ? என்ன விஷயம்? என்றான் தானாஷா ‘
”உங்கள் சிறையில் அடைத்திருக்கிறீர்களே கோபன்னா , நாங்கள் அவருடைய சேவகர்கள்.”
”ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
”அவர் உங்களுக்கு பணம் திருப்பி தர வேண்டுமாம். எங்களுக்கு கட்டளை இட்டிருந்தார். நாங்கள் அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சுல்தான் அதை எண்ணி சரி பார்த்து பெற்றுக்கொண்டு கோபன்னாவை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
”அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னா வை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
”இதோ” மூட்டை சுமந்த வாலிப வீரன் அதை சுல்தான் எதிரே இறக்கி வைத்தான்.
ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் மூட்டையிலிருந்த தங்க மோஹராக்களை கலகலவென்று வந்த இருவரும் கொட்டினார்கள்.
”அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்” .
சுல்தானின் ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். பணத்தை எண்ணினதில் சுல்தானுக்குச் சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம். கடன் பைசலாகி வசூலானதற்கு அத்தாட்சியை சுல்தான் முத்திரையோடு அவர்களுக்கு காட்டினான்.
”சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்” – வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக் கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
‘ஐயா எங்களோடு வாருங்கள். சுல்தான் அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
”ஓஹோ, எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.”
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா.
சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான்.
‘கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்குச் சேர வேண்டிய பணத்தாய் விட கூடுதலாகவே நீங்கள் திரும்ப செலுத்த்தி விட்டீர்கள். உங்களைச் சிறையில் இத்தனை காலம் துன்பப்படுத்திவிட்டதற்கு வருந்துகிறேன். நீங்கள் இப்போது விடுதலையாகி விட்டீர்கள். இனி நீங்கள் என் விருந்தாளி”.
கோபன்னாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘சுல்தான், என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. நான் செல்வந்தனா? செப்பாடித்த காசு ஒன்று கோடா என்னிடம் இல்லையே. என்னுடைய ஆட்கள் வந்து உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே ஆட்கள் கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? – குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.
‘என்ன விளையாட்டு இது? எவ்வளவு பெரிய தனவந்தர் நீங்கள் வேஷம் போடுகிறீர்களே கோபன்னா? இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே வந்து என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட மூட்டை இருந்தது.
”சுல்தான் சுல்தான்…..என்ன சொல்கிறீர்கள். எனக்காக யார் வந்து யார் பணம் கட்டியது? அவர்கள் யார் ? என்ன பெயர் சொன்னார்கள் எப்படி இருந்தார்கள் மீண்டும் சொல்லுங்கள்”
”என்ன கோபன்னா, உங்களது பணியாளர்கள் என்றார்கள், ஆனால் நீங்கள் அவர்களைத் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கூட கேட்டேனே.”
கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது.
”சுல்தான் யாரும் எனக்கு சேவகர்கள், பணியாட்கள் இன்றுவரை இல்லையே. அவர்கள் என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை!
”கொஞ்சம் இருங்கள் எனக்கு அவர்கள் பெயர் மறந்து விட்டது. இதோ என் சேனாதிபதி. அவர் அப்போது அருகில் இருந்தார் அவருக்கு நினைவு இருக்கும்.. அவரைக் கூப்பிடுகிறேன்”
சேனாதிபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான்.
”அஹமத், இங்கே கடன் தீர்க்க வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?”
‘ நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் பெயர் ‘ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி”
கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கிய வாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.
தானா ஷாவுக்கும் கோபன்னா கஜானா பணத்தை எல்லாம் செலவழித்து கோவில் கட்டி வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ”ராமதாசனாக” சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


