
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
” நீ ஆடிண்டே இரு”
மஹா பெரியவா என்றால் அந்த ஒருவர் தான் அந்த தகுதிக்கு பெருமைக்கு உரியவர். வேறு எவரையும் அப்படி ;அழைக்க முடியாது. மஹா பெரியவா இருந்த போது இருந்த காஞ்சி மடம் வேறு இப்போது வேறு. நான் புனிதத்தை பற்றி சொல்லவில்லை, அங்கே குழுமிய பக்தர்கள் கூட்டத்தை பற்றி சொல்கிறேன். உலகத்தின் பல பாகங்களிலிருந் தெல்லாம். மஹா பெரியவா பக்தர்கள் வந்து கொண்டே இருந்த காலம் அது.
இரண்டு இளைஞர்கள் – நிறைய ஆங்கிலத்தில் படித்தவர்கள், கர்நாடக இசை, பாரத நாடிய கலை பாண்டித்யம் பெற்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் சென்னையில் சரியான உத்யோகம் கிடைக்க காத்திருந்தார்கள். ரெண்டுபேரில் ஒருவருக்கு மஹா பெரியவா மேல் சின்ன வயதிலிருந்தே அதீத பக்தி. அடிக்கடி மடத்துக்கு வந்து பெரியவா தரிசனம் பெற்றவர்.
அந்த பெரியவா பக்தன் மற்றவனிடம் ஒருநாள் காலை ”டேய் , வா நாம் இன்று காஞ்சிபுரம் போய் மடத்தில் பெரியவா தரிசனம் பண்ணுவோம்”’சரி, பெரியோயவா என்கிறாயே அவருக்கு டான்ஸ் லே விருப்பம் உண்டா? .நான் டான்ஸ் எக்ஸ்பர்ட் expert ஆச்சே. அது பத்தி சொன்ன புரியுமா?”தெரிஞ்சிருக்கலாம், எதுக்கும் நீ உன் நடன வேஷ்டி, மேல் துண்டு எடுத்துண்டு வா. அங்கே போய் உடுத்துண்டு அவர் பெர்மிஷன் குடுத்தா ஆடு. அவர் முன்னாலே ஆட நீ பாக்யம் பண்ணி இருக்கணும். எனக்கும் அவர் முன்னாலே பாட புண்யம் கிடைக்கும்”
காஞ்சிபுரத்துக்கு பஸ்ஸில் சென்று ரெண்டு மணி நேரத்தில் மடத்தை அணிந்தார்கள். ”பெரியவா இப்போ,இங்கே இல்லையே. ஓரிக்கையில் னா இருக்கார். அங்கே போய் பாருங்கோ” என்று மடத்தில் சேதி கேட்டு ஓரிக்கை போனார்கள்.
ஓரிக்கையில் மஹா பெரியவா ஒரு சிவன் கோயிலில் மேடையில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி வழக்கம்போல் பெரிய கூட்டம்.ரெண்டு இளைஞர்களும் கையைக் கட்டிக்கொண்டு கும்பலில் நின்றார்கள். மெதுவாக கிட்டே போக நேரம் கிடைத்ததும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அன்று மஹாபெரியவா காஷ்ட மௌனம் அனுஷ்டித்தார். சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.
சங்கீதம் பாடும் இளைஞர். வாய்பொத்தி அவரிடம் ” பெரியவா, இவன் என் நண்பன் பரதநாட்டியம் நன்னா கத்து ண்டவன். பெரியவா முன்னாலே ஆட ஆசையா இருக்குங்கிறான். உத்தரவு கொடுக்கணும்” என்றான்.
ஆடு என்று அவனைப்பார்த்து பெரியவா சைகை காட்ட அடுத்த கணமே அந்த இளைஞன் ஓடி ஆடை மாற்றிக்கொண்டு வந்தான். சங்கீதம் தெரிந்த இளைஞன் ” நடனம் ஆடினார்..” என்ற பாடலை ஜம்மென்று ஆரம்பிக்க டான்ஸ் இளைஞன் பர்த நாட்ய அபிநயம் பிடித்தான். அந்த சின்ன இடத்தில் பெரியவா உட்கார்ந்த இடம் தவிர மற்ற கொஞ்ச இடத்தில் அவனுக்கு ஆட முடிந்தது. “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் டான்ஸ் இளைஞன் ஆட ஆரம்பித்தான். ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.
அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கை களில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “ சும்மா இருங்கள். நிறுத்துங்கள்” என்பதாகவும், சிரித்துக்கொண்டே டான்ஸ் ஆடிய இளைஞரைப் பார்த்து, “ நீ தொடர்ந்து ஆடு” என்பதாகவும் ஒரே நேரத்தில் அவரும் சைகையில் அபிநயம் பிடித்து காட்டினார்.
ஆட்டமும் பாட்டும் மஹா பெரியவா முன் அரங்கேற்றம் ஆகி ரெண்டு இளைஞர்களும் பிரசாதம் பெற்றுக்கொண்டு திரும்பினார்கள்.
பாரத நாட்யம் ஆடின இளைஞர் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் ரிடையர் ஆகி Head of the Faculty of Performing Arts of M.S. University , Baroda வில் பட்டம் பெற்றார். 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் விருதும், 2011 ஆம் வருடம் ”பத்ம பூஷன்” விருதும் கிடைத்தன.. 60 ஆண்டுகளுக்கு மேலாக பல உலக மேடைகளிலும் ஆடி, விருதுகள் பெற்று, தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடினார். எல்லாம் அந்த ஒருநாள் இளைஞனாக முதன் முதலில் மஹா பெரியவா முன் ஓரிக்கையில் ஆடி ”தொடர்ந்து ஆடு” அனிரு அவரிடம் ஆசி வாங்கியதின் பலன் என்று நம்பினார். அந்த டான்ஸ் ஆடிய இளைஞர் தான் பிரபல புகழ் பெற்ற ” பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர்”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



