
ஒரு ”அரை நிமிஷம்” – நங்கநல்லூர் J K SIVAN
நான் தமிழன். என் மொழி இனியது, அளவற்ற இன்பம் தருவது. இதில் சங்கநிதி பதுமநிதி போன்ற எல்லையற்ற செல்வத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் அள்ளித் தந்திருக்கிறார்கள். எண்ணற்ற ஞானிகள் அருட்கவிகள், அமர கவிகள் பேசிய மொழி. இந்த தமிழுக்கென்றே அமைந்த ஒரு கடவுள் தான் முருகன். கந்தன். குமரன். அவனை நினைத் தாலே இன்னொரு பெயர் கட்டாயம் ஞாபகத்துக்கு வந்தே தீரும். அது வேறு யாருமில்லை.சாக்ஷாத் அருணகிரி நாதர் தான். அவர் எழுதிப் பாடிய திருப்புகழை ”அரை நிமிஷ” நேரமாவது ஆனந்தமாக பாடவேண்டும். அரை நிமிஷ நேரம் பற்றி அவரே பாடிய ஒரு பாடல் ஒன்றை இன்று படிப்போம். அருணகிரி நாதர் முருகன் எங்கெல்லாம் குடி கொண்டிருக் கிறானோ அங்கெல்லாம் சென்று தரிசித்து அவனைப் புகழ்ந்து பாடியவர். ஆயிரக் கணக்கான பாடல்களைக் கொண்டது அவரது திருப்புகழ்.
ஒரு தடவை அருணகிரிநாதர் நடந்து ஸ்வாமிமலைக்கு சென்றார். வெயில் நேரம். தாகம். ஒரு சிறுவன் அருகில் தென்பட்டான். தம்பி இங்கே முருகன் கோயிளுக்கு எப்படி போகணும்?”எனக்கு குடிக்க சிறிது நீர் இங்கே கிடைக்குமா?”ஒரு அரை நிமிஷம் இருங்க ஐயா ” வழி சொல்றேன். பையன் கன்றுக்குட்டியை மரத்தில் கட்டிவிட்டு வந்தான். ஒரு ”அரை நிமிஷம் இப்படிப்போய் திரும்புங்க” கோயில் வரும். ”தம்பி உன் கையில் செம்பு இருக்கிறதே கொஞ்சம் குடிக்க நீர் தருகிறாயா?””செம்பு காலிங்க , ஒரு அரை நிமிஷம் நில்லுங்க கொண்டு வந்து தாரேன்”. என்று அந்த பையன் சொல்லியிருப்பானோ?. அவனைப் பார்த்தால் அருணகிரிக்கு முருகனாக தோன்றியதோ?தகப்பன் சாமியோ?அவருக்கு நீர் அளித்தான். வயிறும் மனமும் நிறைந்தது. அடிக்கடி அவன் சொன்ன ”அரை நிமிஷம்” நெஞ்சில் ரீங்காரம் செய்து ஒரு திருப்புகழுக்கு அடியெடுத்து தந்ததோ?
”சரணகம லால யத்தில் அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ன மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழனிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே
”கந்தவேளே , முருகப்பா, நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் என்று உனக்கு தெரியாதா? வேண்டியவர்க்கு என்றும் சரணாலயமாக அடைக்கலம் கொடுக்கும் உன்னுடைய தாமரை மலர்ப் பாதங்களை நான் ஒரு அரை நிமிஷம் கூட நினைக்கவே இல்லையடா குமரா. எத்தனையோ மஹான்களைப் போல் அறிவுள்ளவனாக நான் உன் திருவடியே சரணம் என்று என்றாவது ஒருநாளும் தியானம், மனனம் செய்ததில்லையே. நான் தான் கசடன் , மூடனாயிற்றே. பொய்யன், பிறவிபெருங்கடலில் தத்தளிப்பவன். தங்கம் இருக்க தகரம் தேடிய முட்டாள். இல்லாவிட்டால் உன் அருள் செல்வத்தை நாடி இருக்க மாட்டேனா?
சர்வேஸ்வரன் பரமேஸ்வரன் சிவனின் மைந்தனே, தந்தைக்கு ப்ரணவ மந்திரம் உபதேசித்தவனே. என் தவறை மன்னித்து என் மேல் கருணை புரியாமல் கால தாமதம் செய்யலாமா? நீ கருணைக்கு கடலல்லவா?
நான் தான் என் தவறுகளுக்கு வருந்தி உன் திருவடிகளையே பிராயச்சித்தமாக கெட்டியாக பிடித்துக்கொள்ள அலைகிறேனே .
உன் அழகை என்னென்று சொல்வேன்? நீ வீராதி வீரன். தேவ சேனாபதி. தோள்களில் கட்கம் அணிந்த வீரன். உன் திண் தோள்களில் நவ ரத்தின மணிமாலைகள் அணிந்தவன், தங்கமாலை, வெட்சி, கடம்ப மலர் மாலைகள் அணிந்தவன்.
இதோ பார் முருகா, நல்ல சமயம் இது நழுவ விடக்கூடாது. மணி வாசகர் போல் நானும் உன் திருப் பாதங்களைச் ‘சிக்’ கெனப் பிடித்துக்கொண்டேன். நான் உன்னிடம் வேண்டும் செல்வம் உன் அருள் ஒன்றே. உனைப்பாடும் பெரு வாழ்வு ஒன்றே.
உனக்கெனவே சிறப்பாக அமைந்த பளபளவென்று ஒளிவீசும் வேலாயுதம் கொண்ட வடிவேலா, எனக்கு சிவ ஞானம் தா. முக்தி அளிப்பாய். உன் திருவடி நிழலில் சிறிது இடம் கொடு. சாதாரண பாதங்களா அவை. செவ்விதழ் கொண்ட செந்தாமரை மலர்களல்லவோ! அனுதினமும் விடாமல் துதி செய்ய தக்கவை ஆயிற்றே! எனக்கு ‘முத்தைத் தரு’ என்ற அடியெடுத்துக் கொடுத்து உனைப் பாட வைத்த தமிழ்க் கடவுளே. மாமயில் வாகனனே. சொல்லச் சொல்ல வாயினிக்கும் வானோர் வந்து தொழும் பழனியாண்டி, கோவணாண்டியாகி கண்ணைப் பறிக்கிற பாலகுமாரா. திருவேரகத்தோனே.
என்று முருகன் புகழ் பாடும் அருமையான பாடல் இது.
குறை தீர்க்கும் குமரன் கால் களை நாமும் அரை நிமிஷம் இல்லாவிட்டாலும் ஒரு ”கால் நிமிஷ” நேர மட்டிலாவது நினைப்போம். ஒருக் கால் நாமும் அருணகிரி போல் மோக்ஷம் பெற வாய்ப்பு இருக்கும் இந்த தருணத்தை வீணாக்காமல் பயன் பெறுவோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



