
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 31-40
31. भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।शास्त्रे वादिभयं गुणे खलभयं काये कृतान्ताद्भय सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ॥
Bhoge rogabhaya.n kule chyutibhaya.n vitta nR^ipaalaadbhayaM maane dainyabhayaM bale ripubhaya.n ruupe jaraayaa bhayam.h . shaastre vaadibhaya.n guNe khalabhaya.n kaaye kR^itaantaadbhaya.n sarva.n vastu bhayaanvitaM bhuvi nR^iNaa.n vairaagyamevaabhayam.
போ⁴கே³ ரோக³ப⁴யம் குலே ச்யுதிப⁴யம் வித்தே ந்ரு’பாலாத்³ப⁴யம் மாநே தை³ந்யப⁴யம் ப³லே ரிபுப⁴யம் ரூபே ஜராயா ப⁴யம் । ஶாஸ்த்ரே வாதி³ப⁴யம் கு³ணே க²லப⁴யம் காயே க்ரு’தாந்தாத்³ப⁴யம் ஸர்வம் வஸ்து ப⁴யாந்விதம் பு⁴வி ந்ரு’ணாம் வைராக்³யமேவாப⁴யம் .
க்ஷணப⁴ங்கு³ரே ததி³தரே போ⁴கே³ ரதிம் மா க்ரு’தா:² ॥ 40॥
புலன்களை உபயோகித்து மகிழும் நமக்கு வியாதி பற்றிய பயம் நீங்குவதில்லை. ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் எங்கே தமது வாரிசு நின்று விடுமோ என்று பரம்பரை பற்றிய பயம் உண்டு. பணக்காரனுக்கு தனது சொத்து வேறு யார் கைக்காவது போய்விடுமோ என்ற பயம் தூக்கமில்லாமல் பண்ணிவிடும். அரசியல், ஆளுமை இதில் எதிரிகள் பற்றிய பயம் நடுங்க வைக்கும். மக்கள் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற பயம் நடுக்கம் தரும். அழகு குலைந்து வருகிறதோ, வயதாகிறதே எப்படி சுருக்கத்தை, நரையை மறைப்பது என்ற கவலை பலருக்கு , அதிலும் முக்யமாக நடிகர் நடிகைக்கு உண்டு. அழகு நிரந்தரம் என்று யார் சொன்னது? கல்வியில் பெருமை, பேருக்கு போட்டி – அரைகுறைகளுக்கு இது நிம்மதியை குலைக்கும்..ஒவ்வொரு நிலையிலும் மனித வாழ்க்கையில் பயம் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் போகமும் ரோகமும் தான் புத்தியில் கிளர்ச்சியை தருகிறது. உலகப்பற்றில்லாதவனுக்கு எந்த கவலையும் இல்லை.
32. आक्रान्तं मरणेन जन्म जरसा चात्युज्ज्वलं यौवनं सन्तोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः । लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैः अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ॥ ३२॥
ஆக்ராந்தம் மரணேந ஜந்ம ஜரஸா சாத்யுஜ்ஜ்வலம் யௌவநம் ஸந்தோஷோ த நலிப்ஸயா ஶமஸுக²ம்
ப்ரௌடா⁴ங்க³ நாவிப்⁴ரமை: । லோகைர்மத்ஸரிபி⁴ர்கு³ணா வநபு⁴வோ வ்யாலைர்ந்ருʼபா து³ர்ஜநை: அஸ்தை²ர்யேண
விபூ⁴தயோঽப்யுபஹதா க்³ரஸ்தம் ந கிம் கேந வா ॥ 32 ॥
ஜனனம் என்றாலே அதை தொடர்ந்து உடனே மரணம் மெதுவாக அதை விழுங்க வருகிறது. கவரும் யௌவனம் என்றால் அதன் நிழலாக தொடர்ந்து வருவது முதுமை. இருப்பதில் கொண்டாடி மகிழும் திருப்தியை தின்பதற்கு வருவது பேராசை அமைதியான மனம் என்றால் அதை சலனப்படுத்த்த பெண்ணாசை. வனத்தில் சென்று இருப்போம் என்றால் அங்கே நம்மை அடித்து உண்பதற்கு காத்திருக்கும் கொடிய வன விலங்குகள் பற்றிய பயம். நேர்மையான நீதி மான் கள் ராஜாக்களுக்கும் ஒரு வித பயம். அவர்களின் கொடிய மனம் கொண்ட மந்திரிகள். எவர் எப்போது . எப்படி துரோகம் செய்து கவிழ்ப்பாரோ? அதிகாரம், பணம் எல்லாமே நிரந்தரம் தான்.எப்போது இந்த உலகத்தில் பயமோ அநித்யமோ விலகப்போகிறது?
33 . आधिव्याधिशतैर्जनस्य विविधैरारोग्यमुन्मूल्यते लक्ष्मीर्यत्र पतन्ति तत्र विवृतद्वारा इव व्यापदः । जातं जातमवश्यमाशु विवशं मृत्युः करोत्यात्मसात
तत्किं तेन निरङ्कुशेन विधिना यन्निर्मितं सुस्थिरम् ॥ ३३॥
(33) ādhivyādhiśatairjanasya vividhairārōgyamunmūlyatē lakṣmīryatra patanti tatra vivr̥tadvārā iva vyāpadaḥ । jātaṁ jātamavaśyamāśu vivaśaṁ mr̥tyuḥ karōtyātmasāt tatkiṁ tēna niraṅkuśēna vidhinā yannirmitaṁ susthiram ॥ 33॥
ஆதி⁴வ்யாதி⁴ஶதைர்ஜநஸ்ய விவிதை⁴ராரோக்³ய
முந்மூல்யதே லக்ஷ்மீர்யத்ர பதந்தி தத்ர விவ்ருʼதத்³வா ரா இவ வ்யாபத:³ । ஜாதம் ஜாதமவஶ்யமாஶு விவஶம் ம்ருʼத்யு: கரோத்யாத்மஸாத் தத்கிம் தேந நிரங்குஶேந விதி⁴நா யந்நிர்மிதம் ஸுஸ்தி²ரம் ॥ 33 ॥
மனித உடம்பை நூற்றுக்கணக்கான வியாதிகள் சூழ்ந்து கொள்கிறது. அவனது ஆரோக்யத்தை பாழாக்குகிறது., மஹா லக்ஷ்மி எனும் செல்வம் தரும் தெய்வம் நம்மிடம் வராமல் எத்தனையோ தீய சக்திகள் தாக்குகிறது. சாஸ்வதமான, மனிதனின் இயல்பான ஆனந்தத்தை துய்க்க விடாமல் மரணம் எனும் பயத்தையம், புலன்களால் உருவாகும் உணர்வுகளையும் நிரப்பி மனதை கெடுக்கிறது. பகவான் நமக்கு அருளிய சதானந்தத்தை அனுபவிக்க முடியாமல் நாம் திண்டாடுகிறோம். இது தான் சம்சார சாகர அவஸ்தை.
34 भोगास्तुङ्गतरङ्गभङ्गतरलाः प्राणाः क्षणध्वंसिनः स्तोकान्येव दिनानि यौवनसुखस्फूर्तिः प्रियासु स्थिता । तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुधा बोधकाः लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ॥ ३४॥
(34) bhōgāstuṅgataraṅgabhaṅgataralāḥ prāṇāḥ kṣaṇadhvaṁsinaḥ stōkānyēva dināni yauvanasukhasphūrtiḥ priyāsu sthitā । tatsaṁsāramasāramēva nikhilaṁ buddhvā budhā bōdhakā lōkānugrahapēśalēna manasā yatnaḥ samādhīyatām ॥
போ⁴கா³ஸ்துங்க³தரங்க³ப⁴ங்க³தரலா: ப்ராணா: க்ஷணத்⁴வம்ஸிந: ஸ்தோகாந்யேவ தி³நாநி யௌவநஸுக²ஸ்பூ²ர்தி: ப்ரியாஸு ஸ்தி²தா । தத்ஸம்ஸாரமஸாரமேவ நிகி²லம் பு³த்³த்⁴வா பு³தா⁴ போ³த⁴கா: லோகாநுக்³ரஹபேஶலேந மநஸா யத்ந: ஸமாதீ⁴யதாம் ॥ 34 ॥
கடலில் ஹோ வென்று உயர எழும்பி மோதி தாக்கும் அலைகள் நிலையானவை இல்லை. அது போல் தான் வாழ்வில் நம்மை தாக்கும் எண்ண அலைகளும். சாஸ்வதமாக நிரந்தரமாக இருப்பவை போல தோன்றினாலும் அவை அழிவன . புலன்கள் துய்க்கும் இன்பம் அப்படிப்பட்டது தான். வாழ்வு எந்நேரமும் முடிவுக்கு வந்துவிடும். யௌவனம், கவர்ச்சி, அற்ப சுக போகங்கள் சந்தோஷங்கள் எல்லாமே கொஞ்ச காலம் தான். ஞானிகள், கற்றவர்கள், ஆச்சார்யர்கள் நமக்கு இதெல்லாம் எடுத்துச் சொல்பவர்கள். அதெல்லாம் கேட்டு பயனுற யாருமே தயாராக இல்லையே என்ன செய்வது?
35. भोगा मेघवितानमध्यविलसत्सौदामिनीचञ्चला आयुर्वायुविघट्टिता ब्जपटलीलीनाम्बुवद्भङ्गुरम् । लोला यौवनलालसास्तनुभृतामित्याकलय्य द्रुतं
योगे धैर्यसमाधिसिद्धसुलभे बुद्धिं विधध्वं बुधाः ॥ ३५
(35) bhōgā mēghavitānamadhyavilasatsaudāminīcañcalā āyurvāyuvighaṭṭitābjapaṭalīlīnāmbuvadbhaṅguram । lōlā yauvanalālasāstanubhr̥tāmityākalayya drutaṁ yōgē dhairyasamādhisiddhasulabhē buddhiṁ vidhadhvaṁ budhāḥ ॥ 35॥
போ⁴காமேக⁴விதாநமத்⁴யவிலஸத்ஸௌதா³மிநீசஞ்சலா ஆயுர்வாயுவிக⁴ட்டிதாப்³ஜபடலீலீநாம்பு³வத்³ ப⁴ங்கு³ரம் । லோலா யௌவநலாலஸாஸ்தநுப் ⁴ருʼதாமித்யாகலய்ய த்³ருதம் யோகே³ தை⁴ர்ய ஸமாதி⁴ஸித்³த⁴ஸுலபே⁴ பு³த்³தி⁴ம் வித⁴த்⁴வம் பு³தா:⁴ ॥ 35 ॥
புலன்களால் நாம் துய்க்கும் சுகம் இன்பம் என்பது க்ஷண கால நேரத்துக்கு தான். மின்னல் மின்னும் நேரம் கூட இல்லை. தாமரை இலை மேல் அழகாக உருளும் நீர் உருண்டை எந்நேரமும் கீழே விழலாம் மறையலாம். அது போல் தான் மின்னல் போலாகும் இந்த மானுட வாழ்க்கை. யௌவனம், ஆசை எல்லாமே அப்படிதான். அதனால் தான் ஞானிகள், பெரியோர்கள் கற்றுணர்ந்த ஆச்சார்யர்கள் நமக்கு அடிக்கடி மனதை சாஸ்வதமான ஆத்மாவை அறிந்து கொள்வதில் ஈடுபடுத்து என்று உணர்த்துகிறார்கள். அப்போது மனதில் பயம் விலகும் , தைர்யம் கூடும், உண்மை புலப்படும்.
36. आयुः कल्लोललोलं कतिपयदिवसस्थायिनी यौवनश्रीः अर्थाः संकल्पकल्पा घनसमयतडिद्विभ्रमा भोगपूगाः । कण्ठाश्लेषोपगूढं तदपि च न चिरं यत्प्रियाभिः प्रणीतं ब्रह्मण्यासक्तचित्ता भवत भवभयाम्बोधिपारं तरीतुम् ॥ ३६॥
(36) āyuḥ kallōlalōlaṁ katipayadivasasthāyinī yauvanaśrīḥ arthāḥ saṁkalpakalpā ghanasamayataḍidvibhramā bhōgapūgāḥ । kaṇṭhāślēṣōpagūḍhaṁ tadapi ca na ciraṁ yatpriyābhiḥ praṇītaṁ brahmaṇyāsaktacittā bhavata bhavabhayāmbōdhipāraṁ tarītum
ஆயு: கல்லோலலோலம் கதிபயதி³வஸஸ்தா²யிநீ யௌவநஶ்ரீ: அர்தா:² ஸங்கல்பகல்பா க⁴நஸமயதடி³த்³விப்⁴ரமா போ⁴க³பூகா:³ । கண்டா²ஶ்லேஷோபகூ³ட⁴ம் தத³பி ச ந சிரம் யத்ப்ரியாபி:⁴ ப்ரணீதம்ப்³ரஹ்மண்யாஸக்தசித்தா ப⁴வத ப⁴வப⁴யாம்போ³தி⁴பாரம் தரீதும் ॥ 36 ॥
ஆசையே அலைபோல், நாமெல்லாம் அதன் மேலே. வாழ்க்கையே நீர் மேல் மிதக்கும் நீர்க் குமிழி . ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் உருண்டோடுவது தான் செல்வம். யௌவனம் அழகு கவர்ச்சி அப்படித்தான். எண்ணங்கள் போல தோன்றி மறைவது. கீழ்வான மின்னல் தான் வாழ்க்கை. சொந்த பந்தம், ஆசை பாசம் எல்லாம் நிரந்தரம் அல்ல. ஜனன மரணசுழலில் சிக்காமல் என்றும் சாஸ்வதமான பிரம்மத்தின் மேல் மனதை ஈடுபடுத்தவேண்டும். கஷ்டம் ஒன்றுமில்லை. மனதை விடாமல் அதையே சிந்திக்க வைத்தால் அதுவே பழக்கமாகிவிடுமே.
37. कृच्छ्रेणामेध्यमध्ये नियमिततनुभिः स्थीयते गर्भवासे \कान्ताविश्लेषदुःखव्यतिकरविषमो यौवने चोपभोगः ।वामाक्षीणामवज्ञावि हसितवसतिर्वृद्धभावोऽप्यसाधुः संसारे रे मनुष्या वदत यदि सुखं स्वल्पमप्यस्ति किंचित् ॥ ३७॥
kr̥cchrēṇāmēdhyamadhyē niyamitatanubhiḥ sthīyatē garbhavāsē kāntāviślēṣaduḥkhavyatikaraviṣamō yauvanē cōpabhōgaḥ । vāmākṣīṇāmavajñāvihasitavasativr̥ddhabhāvō’pyasādhuḥsaṁsārē rē manuṣyā vadata yadi sukhaṁ svalpamapyasti kiṁcit ॥ 37॥
க்ரு’ச்ச்²ரேணாமேத்⁴யமத்⁴யே நியமிததநுபி:⁴ ஸ்தீ²யதே க³ர்ப⁴வாஸே காந்தாவிஶ்லேஷது:³ க²வ்யதிகரவிஷமோ யௌவநே சோபபோ⁴க:³ । வாமாக்ஷீணாமவஜ்ஞாவிஹஸிதவஸதிர்வ்ரு’த்³த⁴பா⁴வோऽப்யஸாது:⁴ ஸம்ஸாரே ரே மநுஷ்யா வத³த யதி³ ஸுக²ம் ஸ்வல்பமப்யஸ்தி கிஞ்சித் ॥ 37॥
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்றால், மனைவியோ, மகளோ, மறுமகளோ கர்ப்பம் தரித்தால் எத்தனை சந்தோஷம் நமக்கு. எவ்வளவு பெருமைப் படுகிறோம். ஆனால் கர்ப்பவாசம் அனுபவித்த ஒவ்வொருவருக்கும் அதன் துன்பம் நினைவிருக்கிறதா? சதா இருட்டு, குறுகிய நெரிசலான இடம், நகர இடமில்லை, ஒரே மாதிரிதான் அசையாமல் கைகால்களை மடக்கிக்கொண்டு விடுதலைக்கு ,வெளிச்சத்துக்கு காத்திருக்க உட்கார்ந்திருக்க வேண்டும். சுற்றிலும் மலம் மூத்திரம் அதற்கு நடுவே இந்த கர்ப்பவாசம். சரி பிறந்து விட்டோம், வளர்ந்தோம்,யௌவன பருவம். அதில் எத்தனை சோகம், மோகம், ஏமாற்றம், காதல், பிரிவு வருத்தம், அலுப்பு, வெறுப்பு….. வயதாகி விட்டது கிழம் ஒரு மூலையில் படுத்திருக்கிறது. யாரும் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. சீக்கிரம் போய்த் தொலைய மாட்டேன் என்று இழுத்துக்கொண்டு இருக்கிறதே என்ற அவமதிப்பு. சொல்லுடா எப்போது நாம் உலகில் சந்தோஷமாக இருந்தோம்??
38. व्याघ्रीव तिष्ठति जरा परितर्जयन्ती रोगाश्च शत्रव इव प्रहरन्ति देहम् । आयुः परिस्रवति भिन्नघटादिवाम्भो लोकस्तथाप्यहितमाचरतीति चित्रम् ॥ ३८॥
(38) vyāghrīva tiṣṭhati jarā paritarjayanti rōgāśca śatrava iva praharanti dēham । āyuḥ parisravati bhinnaghaṭādivāmbhō lōkastathāpyahitamācaratīti citram
வ்யாக்⁴ரீவ திஷ்ட²தி ஜரா பரிதர்ஜயந்தீ ரோகா³ஶ்ச ஶத்ரவ இவ ப்ரஹரந்தி தே³ஹம் ।ஆயு: பரிஸ்ரவதி
பி⁴ந்நக⁴டாதி³வாம்போ⁴ லோகஸ்ததா²ப்ய
ஹிதமாசரததி சித்ரம் ॥ 38 ॥
யாரையாவது கேட்டுப்பாருங்கள், உனக்கு முதுமை வேண்டுமா? பிடிக்குமா? என்று. யாரிடமாவது ஒரு மாமியிடம் ” ஆஹா இந்த வயதிலும் நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? மனைவியிடம் உனக்கு இவ்வளவு வயாகியது தெரியவில்லையே என்று நாலு பேர் எதிரில் சொல்லிப்பார். புரியும். யாருக்குமே வயோதிகம், முதுமை ஒரு வேண்டாத விஷயம். ஆனால் அதை தவிர்க்க முடியாது. புலி வருகிறது என்றால் தோன்றும் பயம் போல தான் முதுமை வருவதும். எதிரிகள் போல் நிற்பதாக்ஷண்யமாக நோய்கள் வியாதிகள் நம் உடலை தாக்கும். ஓட்டைப்பாத்திரத்தில் எத்தனை நேரம் தண்ணீர் தங்கும்? இந்த உடலில் உயிர் அப்படி தான். பிறந்தது முதலே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறான்.
39 भोगास्तुङ्गतरङ्गभङ्गतरलाः प्राणाः क्षणध्वंसिनः स्तोकान्येव दिनानि यौवनसुखस्फूर्तिः प्रियासु स्थिता । तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुधा बोधकाः लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ॥ ३४॥
(39) bhōgā bhaṅguravr̥ttayō bahuvidhāstairēva cāyaṁ bhavaḥ tatkasyēha kr̥tē paribhramata rē lōkāḥ kr̥taṁ cēṣṭitaiḥ । āśāpāśaśatōpaśāntiviśadaṁ cētaḥ samādhīyatāṁ kāmōtpattivaśātsvadhāmani yadi śraddhēyamasmadvacaḥ ॥
போ⁴கா³ ப⁴ங்கு³ரவ்ருʼத்தயோ ப³ஹுவிதா⁴ஸ்தைரேவ சாயம் ப⁴வ: தத்கஸ்ஹ க்ருʼதே
பரிப்⁴ரமத ரே லோகா: க்ருʼதம் சேஷ்டிதை: । ஆஶாபாஶஶதோபஶாந்திவிஶத³ம் சேத: ஸமாதீ⁴யதாம் காமோத்பத்திவஶாத்ஸ்வதா⁴மநி யதி³ ஶ்ரத்³தே⁴யமஸ்மத்³வச: ॥ 39 ॥
உற்றார் ஊரார் சதமல்ல, வாழ்க்கை நிலையில்லை, நீரின் மேல் ஜ்வலிக்கும் நீர்க்குமிழி .இளமை, அழகு, எல்லாமே மாயை. கற்றோர் பெரியோர், ஆச்சார்யர்கள், குரு உதவியோடு ஆத்ம விசாரம் செயது எது நிரந்தரம் என்று அறிந்து அதை பின்பற்ற இந்த வாழ்க்கை காலம் போதுமானது. வாழ்க்கை தரும் அற்ப சுகங்களில் போகத்தில் மதி இழந்து சிக்கி திண்டாடுபவன் மீண்டும் பிறவி எடுத்து அதே மாதிரி வாழ்வையே தொடர்கிறான்.
40. ब्रह्मेन्द्रादिमरुद्गणांस्तृणकणान्यत्र स्थितो मन्यते यत्स्वादाद्विरसा भवन्ति विभवास्त्रैलोक्यराज्यादयः । भोगः कोऽपि स एक एव परमो नित्योदितो जृम्भते भो साधो क्षणभंगुरे तदितरे भोगे रतिं मा कृथाः ॥ ४०॥
brahmēndrādimarudgaṇāṁstr̥ṇakaṇānyatra sthitō manyatē yatsvādādvirasā bhavanti vibhavāstrailōkyarājyādayaḥ । bhōgaḥ kō’pi sa ēka ēva paramō nityōditō jr̥mbhatē bhō sādhō kṣaṇabhaṁgurē taditarē bhōgē ratiṁ mā kr̥thāḥ
ப்³ரஹ்மேந்த்³ராதி³மருத்³க³ணாம்த்ரு’ணகணாந்யத்ர ஸ்தி²தோ மந்யதே யத்ஸ்வாதா³த்³விரஸா ப⁴வந்தி விப⁴வாஸ்த்ரைலோக்யராஜ்யாத³ய: போ⁴க:³ கோऽபி ஸ ஏக ஏவ பரமோ நித்யோதி³தோ ஜ்ரு’ம்ப⁴தே போ⁴ ஸாதோ⁴ க்ஷணாபங்குரே ததிதரே போகே ரதிம் மா க்ருதா;
ஹே வைராக்ய சித்தனே, உன் மனம் சித்தம் எல்லாமே பிரம்மத்தை தேடுவதில் அதில் திளைப்பதில் ஈடுபடும்போது உனக்கு என்ன புரியும் தெரியுமா? பிரம்மா, இந்திரன் முதலான தேவாதி தேவர்கள் எல்லோருமே வெறும் புல் மாதிரி, மூன்று உலக சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பதவியும் வெறும் குப்பை என்றும் பிரம்மானந்தம் ஒன்றே என்றும் நிலையான சதானந்தம் என்றும் அறிவாய். உன் சித்தத்தை அதிலிருந்து ஒரு கணமும் விலகாமல் வைராக்யத்தோ டு இருப்பாய்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



