31.5.2025 PILGRIMAGE PART 2 j k sivan

புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
2வது பகுதி

18 பேர், வெவ்வேறு வயதினர், ஆண் பெண், முதியவர் கள் ஒரே வேகத்தில் நடக்க முடியாது. படி ஏற முடியாது. வெறும் காலில் கோவில்களின் சுடும் கல் தரையில் நடப்பது சுகம் இல்லை. அப்படியும் என்னுடன் வந்த அனைவரும் தொய்வின்றி நடந்தார்கள். மனம் நிறைய சந்தோஷம் காலுக்கு தெம்பு கொடுத்தது. பன்னிரண்டு மணிக்குள் எவ்வளவு கோவில் பார்க்க முடியுமோ அதை பார்த்து விட வேண்டும். எங்கே அடுத்தது என்று தேட நேரமில்லை என்பதற்காகவே சுதா என்ற உள்ளூர் பெண் உதவி தேவையானது. அவளும் விடாமல் நேரம் தாமதமாகாமல் முடிந்தவரை ஒன்றன் பின் ஒன்றாக கோவில்களுக்கு அழைத்துச் சென்றாள் . நமஸ்காரம் அந்த பெண்மணிக்கு.
அடுத்து நாங்கள் திருவேளுக்கை எனும் திவ்யதேச கோவிலுக்கு சென்றோம். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்றது. திருத் தண்கா எனும் விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்றால் ”ஆசை” . வேட்கை என்போமே அது. ”இங்கே இருக்கவேண்டும்” என்ற ஆசை அஹோபில நரசிம்மருக்கு தோன்றியதால் இந்த இடம் செலக்ட் செய்தார். ”வேள் இருக்கை” என்பது நாளடைவில் ‘வேளுக்கை’ ஆனது. அழகிய சிங்கர் இங்கே நரசிம்மரின் நாமம்.. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும் இன்னொரு பெயர். யோக முத்திரை யுடன் மேற்கு நோக்கி அழகிய சிங்கர் அமர்ந்த திருக்கோலம். தாயார் வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கள் கொண்டவர். 8ம் நூற்றாண்டு பல்லவ கோயில். பின்னால் சோழர்கள் விஜயநகர நாயக்கர்கள் பராமரித்து இன்று நமக்கு தரிசிக்க கிடைத்திருக்கிறது. கோயிலில். கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது.
அழகிய சிங்கர் தரிசனம் பெற்று திருத்தண்கா, தூப்புலுக்கு ஓடினோம். இந்த ஆலயத்துக்கு இன்னொரு பெயர் விளக்கொளி பெருமாள் கோயில். பெருமாள் தீபப்ரகாசர். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திவ்ய தேசம். வேதாந்த தேசிகன்” அவதாரம் செய்த திருத்தலம் இந்த தூப்புல். ”தண்”=குளிர்ச்சி. ”கா”= சோலை. குளிர்ச்சியாக இருக்கும் சோலை பற்றி சம்மரில், கோடைகாலத்தில் பெயர் கேட்கும்போதே உடலில் சுகமாக இருக்கிறது.
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த திருமால் உதவி புரிந்தபோது, யாகத்தைத் தடுக்க ஸரஸ்வதி தேவி நினைத்து அதை தடுக்க முயன்று தோற்று கடைசியில் உலகையே இருளடைய செய்தாள். ப்ரம்மா மகாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகம் தொடர தீப பிரகாசம் கொடுத்ததாக புராணம். மேற்கு நோக்கி நிற்கும் பெருமாள் கையில் அக்னி தான் தீபம். . தாயார் மரகதவல்லி.
விளக்கு ஒளிச்சம் தேவைப்படாமல் வெயிலில் அடுத்து வேகமாக நாங்கள் சென்றடைந்தது பாண்டவ தூத பெருமாள் கோவில். அது பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது. திருப்பாடகம் என்ற பெயர் கொண்டது. திவ்ய தேச க்ஷேத்ரம். கிருஷ்ணன் கோவில். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. அற்புதமான கிருஷ்ணன் கருப்பு சிலையாக 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த நிலையில் எங்களை தலை தூக்கி உயரே பார்க்க வைத்து ஆசி அளித்தார்.
கண்ணன் பஞ்ச பாண்டவர்களுக்குத் தூதுவராக ஹஸ்தினாபுரம் சென்றதால், கிருஷ்ணனுக்கு “பாண்டவ தூதப் பெருமாள்” என பெயர். கல்வெட்டுகள் “தூத ஹரி” எகிறது. இங்குள்ள கோலம் திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் காட்டிய சம்பவம் இங்கே சிலையாக நாம் காண்கிறோம்.
வைசம்பாயன மகரிஷிக்கு தானும் கிருஷ்ணனின் விஸ்வரூபம் தரிசிக்க ஆசை. ஆகவே இங்கே வந்தார். தவமிருந்தார். நமக்குச் சிலையாக காட்சி தரும் கிருஷ்ணன் அவருக்கு ஸ்வயமாக விஸ்வ ரூபத்தை காட்டினார் என்பார்கள்.
சூரியன் உச்சியை தொட்டு விட்டான். பகல் பன்னிரண்டு ஆகி கடிகார முள் நகர நேராக 1230க்கு சென்றால் காஞ்சி சங்கர மடத்தில் அதிஷ்டானத்தில் தீர்த்த பிரசாதம் பெறலாம் என்று ஓடினோம். வரிசையில் நின்றோம். மெழுகு உருவத்தில் தத்ரூபமாக மஹா பெரியவா அமர்ந்திருக்கும் காட்சியை க் கண்டு மகிழ்ந்து வணங்கி வரிசையில் நின்று தீர்த்தம் வாழைப்பழ பிரசாதம் பெற்று அருகே குமர கோட்டம் சென்றோம். அங்கே பூக்கடை வைத்திருக்கும் சுதா எப்படியோ எங்களை ஆலயம் மூடுவதற்குள் உள்ளே அழைத்து சென்று தரிசனம் பெற வைத்தார்.
காஞ்சிபுரத்தில் முருகன் ஆலயம் குமரகோட்டம் என பிரபலமானது. தேவ சேனாபதீச்வரம் என்றும் பெயர். இங்கே தான் கந்தபுராணம் கச்சியப்பரால் இயற்றப்பட்டு அரங்கேறியது. அந்த கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகம். அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் தரிசித்து பாடல் பெற்ற ஸ்தலம். வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர், ருத்ராக்ஷம் தரித்து கமண்டலம் ஒருகையில் ஏந்தி இன்னொரு கையில் வேல் தாங்கி அழகாக நிற்கிறார். இடையில் மான் தோல் வஸ்திரம், தர்ப்பை அரைஞாண். இந்த ஆலயம் செல்வோர் கட்டாயம் இங்கே உள்ள நாக சுப்ரமணியரை தரிசிக்கவேண்டும்.
கர்நாடகாவில் குக்கே சுப்பிரமணியனுக்கு அடுத்தபடி இங்கே தான் நாக சுப்ரமணியன் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருள் பாலிக்கிறார். சர்ப்ப தோஷம் விலகும்.
முருகன் தமிழ்க் கடவுள். கச்சியப்ப சிவாசாரியாருக்கு முதல் வார்த்தை “திகடச் சக்கரம்” என அடி யெடுத் துக் கொடுத்து கந்தபுராணம் எழுத வைத்த அற்புத ஸ்தலம். ஒரு தரமாவது கண்டிப்பாக பார்க்க வேண்டிய க்ஷேத்ரம். காஞ்சிபுரம் நடுப்பகுதியில் பெரிய காஞ்சிபுரம் எனும் சிவகாஞ்சியில், மேலண்டை இராசவீதி யில் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு முக்கிய விஷயம். காஞ்சி காமாக்ஷி ஆலயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆதி காமாக்ஷி ஆலயம் இருப்பது தெரியுமா? குமரகோட்டத்தின் அருகே உள்ளது ஆதிகாமாக்ஷி எனும் காளிகாம்பாள் ஆலயம்.
நேரம் அதிகமாகி விட்டது. பிற்பகல் ஒரு மணிஆகிவிட்டதால் எல்லோர் முகத்திலும் களைப்பு, கண்களில் பசி. ஆகவே பஸ் ஓட்டும் சுப்பிரமணியர் தயவால் பஸ்ஸை வேகமாக ஓடவைத்து கலவை அருகே, வெம்பாக்கம் தாலுக்காவில் மோரணம் கிராமம் நோக்கி பறக்க செய்தோம். 41 கி.மீ. சென்ற பிறகு தான் கண் எதிரே இலையில் சுடச்சுட சாதம் விழப்போகிறது.
நீங்களும் காத்திருங்கள். அடுத்த பதிவில் சாப்பிடுவோம், சந்திப்போம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;