
ஒரு ரஹஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பாரதத்தின் விறுவிறுப்புக்கும் அதன் விசேஷ ருசிக்கும் காரணம் ரெண்டு பாத்திரங்கள். ஒன்று கர்ணன் இன்னொன்று கிருஷ்ணன். ரெண்டு பேருமே விசித்ரமானவர்கள்.
குந்தி பெற்ற சூர்ய புத்ரன் கர்ணன். கவச குண்டலங்களோடு பிறந்தவன். தான தர்மத்தில் தலை சிறந்தவன். வீரத்திலும் தனுர் வித்தையிலும் நிபுணன். பிறந்த குழந்தையாக இருந்த போதே பெற்றோரை அறியாது, ஆற்றில் பெட்டியில் கைவிடப்பட்டு ஒரு தேர்ப்பாகனிடம் வளர்ந்து பல அவமானங்களுக்கு ஆளான பாண்டவன்.பாண்டவர்களுக்கே ஜென்ம வைரியாக கடைசி வரை இருந்தவன். தான் யார் என்று உணர்ந்தும் நன்றிக்கடனால் தாய், சகோதரர்களின் உறவை மறைத்தவன்.
கிருஷ்ணனும் அப்படித்தான் ஆனால் வேறே மாதிரி வளர்ப்பு. தாய் தந்தையிடமிருந்து பிறந்தபோதே பிரிந்து யாதவ குல நந்தகோப குமாரனாக வளர்ந்தவன். அவதார புருஷன். பாண்டவர்களுக்கு நேயன். தர்மத்தை ரக்ஷித்தவன். ஒருவன் கண்ணன் இன்னொருவன் கன்னன் . கன்னன் தீயசக்திகளோடு வாழ்ந்தவன். கண்ணன் தீய சக்திகளை அழிக்கவே பிறந்தவன்.
கண்ணனின் சமாதான தூது ஹஸ்தினாபுரத்தில் தோற்றது. ஹஸ்தினாபுரத்தை விட்டு கிளம்பும் முன் கிருஷ்ணனின் தேர் கர்ணன் தனியாக விடிகாலை சூரியனை பிரார்த்திக்கும்போது காத்திருந்தது.
”வா கிருஷ்ணா, ஆச்சர்யமாக இருக்கிறதே . என்னிடம் உனக்கு என்ன வேலை?. நேற்றே அரசவையில் முடிவைச் சொல்லிவிட்டோமே. இனி பாண்டவர்களோடு யுத்தம் மட்டுமே. அதற்காக தான் நான் இத்தனை வருஷங்கள் காத்திருக்கிறேன். அது நிறைவேறும். சந்தோஷம் எனக்கு”
உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்லத் தான் கர்ணா நான் இப்போது வந்தேன்.
உன் கபட நாடகம் எதுவும் என்னிடம் வேண்டாம். நீ என்ன சொல்லப்போகிறாய் என்று தெரியும். என்னிடம் கெஞ்சி பாண்டவர்கள் உயிரை காப்பாற்ற முயற்சிக்காதே. நீ யார் எப்படிப்பட்டவன் எனும் ரஹஸ்யம் எனக்கு தெரியும்”
”கர்ணா, .ரொம்ப சந்தோஷம். நான் யார் என் ரஹஸ்யம் என்பது கிடக்கட்டும். நீ யார்? உன் ரஹஸ்யம் என்ன? என்று உனக்கு முதலில் தெரியுமா. அதைச் சொல்லவே வந்தேன்..
”என்ன உளறுகிறாய் கிருஷ்ணா?”
கண்ணன் குந்தி தான் கர்ணனின் தாய், அவளே, ஒரு புடவையை சுற்றி அவனை குழந்தையாக பேழையில் வைத்து ஆற்றில் விட்டு தேரோட்டி வீட்டில் ஹஸ்தினாபுரத்தில் அவன் வாழ்வதை நினைவூட்டுகிறான். கர்ணன் உண்மையை கேட்டு உறைந்து போகிறான்… எனினும் மன உறுதி தளரவில்லை.
அவனை பாண்டவர்களோடு சேர்ந்துகொண்டு ராஜாவாக தேசத்தை ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்து, கௌரவர்களை அழிக்க வேண்டும் என்று சொல்கிறான். கேட்டதில் கர்ணன் தான் பாண்டவன், ராஜகுமாரன் என்று உணர்ந்து மகிழ்கிறான். என் தம்பிகள் அசகாய சூரர்கள், உலகப்புகழ் பெற்றவர்கள் என மகிழ்கிறான். அதே நேரம் அவன் மன உறுதி தளரவில்லை.
”இல்லை கிருஷ்ணா, நீ என் சகோதரர்கள் பாண்டவர்களுக்கு உதவுவதில் எனக்கு பெருமை. என் தம்பி அர்ஜுனன் எவ்வளவு சிறந்த வில்வீரன் என பெருமை. ஆனால் அவனைக் கொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு. அது என் வைராக்யமாகி விட்டது. வளர்த்த நன்றிக்கடன் செயல் அது. தயவு செய்து எனக்கு பாண்டவர்களுக்கும் உள்ள உறவை வெளியே மூன்றாம் மனிதர் எவருக்கும் தெரிவிக்காதே . என்னோடு என் ரஹஸ்யமும் மறையட்டும். நான் துரியோதனன் வீட்டுக்கு செல்லும் முன்பே நீ என்னை பார்த்திருக்க வேண்டும் என் வாழ்க்கையே மாறி விட்டிருக்கும். நீ தவறி விட்டாய். இப்போது காலம் கடந்துவிட்டது. கடமை முந்திக் கொண்டுவிட்டது.”
”கிருஷ்ணா இந்த சந்திப்புக்கு நன்றி. என் கண்களில் நீர் பெறுக வைத்துவிட்டாய். உலகப்புகழ் பாண்டவர் கள் என் தம்பிகள் என உணரவைத்தாய். காலம் கடந்த பின் இனி ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி நான் அவர்களோடு சேர்வதோ அவர்களுக்காக கௌரவர்களை அழிப்பதோ, அவர்களுக்கு முதல்வனாக ராஜ்யமாள்வதோ நடக்காத காரியம். பகல் கனவு. இதை மறந்துவிடு. எல்லாவற்றையுமே மறந்து விடு. இந்த உடலும் உயிரும் துரியோதனனுக்கு மட்டுமே சொந்தம். பாண்டவர்களை அழிக்கவே என் உடம்பில் ரத்தம் ஓடுகிறது. போய் வா. அதற்கு முன் ஒரே ஒரு வேண்டுகோள். ”இந்த சந்திப்பை ரஹஸ்யமாக வைத்துக் கொள்வேன்.பாண்டவர்களிடம் சொல்ல மாட்டேன்” என்று எனக்கு ஸத்யம் செய். என் கடமையைச் செய்ய விடு.’
கிருஷ்ணன் தலையை ஆட்டி ஆமோதித்தான். கண்களில் நீர் பெருகியதை துடைத்துக் கொண்டான்.
இது மகாபாரதத்தின் மிக உணர்ச்சிபூர்வமான தருணங்களில் ஒன்று . கிருஷ்ணனின் தூது யுத்தத்தை நிறுத்துவதிலோ, கர்ணனோ பாண்டவர்களோடு சேர்ப்பதிலோ ஜெயிக்கவில்லை என்று நினைக்கவே வேண்டாம். அதுவும் கிருஷ்ணனின் ராஜ தந்திரம். துரியோதனாதியர்களை பூண்டோடு அழிக்க கிருஷ்ணன் எடுத்த அவதார நோக்கம். எல்லாம் சரியாகவே நடக்கிறது கிருஷ்ணன் வழியில்.
கர்ணனால் அர்ஜுனன் மற்ற பாண்டவர்கள் அழிவது உறுதி என அறிந்த கண்ணன் குந்தியை அவனிடம் அனுப்புகிறான்.
”அம்மா வாருங்கள், எதற்கு என்னை காண வந்தீர்கள்?”
”மகனே நான் உன்னைப் பார்க்க வந்த தாய் அப்பா”
”அம்மா, நீங்கள் உங்கள் வாயால் மகனே என்று என்னை அழைத்த கணத்தில் என் மனம் இனிக்கிறது. உண்மையில் நீங்கள் என் எதிரிகளின் தாய் என எனக்கு தெரியும்”
”உனக்கு தெரியாதவையும் உண்டு கர்ணா, நான் உனக்கும் தாய் தான்”
”ஓஹோ, இப்படி ஒரு நாடகமா? உங்கள் ஐந்து மக்களை காப்பாற்ற ஏன் இந்த வேஷம்? என்னை எதற்கு மகனே என்று அவர்களோடு கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்”
” நீ போற்றி வைத்திருக்கும் புடவையை கொண்டுவா நான் உடுத்திக் காட்டி உன் தாய் என நிரூபிக்கிறேன்”
‘அம்மா நீங்கள் தானா என் தாய். நான் என்ன பாக்கியசாலி, அதே நேரம் துர்பாக்யசாலியும் கூட.”
இவ்வளவு நேரம் நாம் பேசியதில் நான் யாரென உண்மையை அறிந்தேன். ஒரே ஒரு வரம் தருகிறேன். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களை நான் கொல்ல மாட்டேன். அர்ஜுனனைக் கொல்லவே , துரியோதனனால் நான் வளர்க்கப்பட்டவன். நன்றி மறவேன். மேலும் நீங்கள் வேண்டியபடி அர்ஜுனன் மேல் அவனைக் கொல்வதற்கு நான் தயாராக வைத்திருக்கும் நாக அஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்கமாட்டேன். நான் சத்யம் தவறாதவன். நமது உறவு இத்தனை வருஷங்கள் போலவே இனியும் ரஹஸ்யமானதாகவே
இருக்கட்டும்.
அந்த அன்பு மௌனமானது, புலம்ப முடியாதது, அறியப்படாதது – ஆனால் மிகவும் உண்மையானது.
இது இருவருக்கும் இடையே ஒரு கண்ணியமான வலிமையான பாசம்,
அது தர்மம் மற்றும் நெஞ்சறிவு இடையே நடந்த ஓர் ஒத்திசைவு போல.
கிருஷ்ணன் கர்ணனை உள்ளூர நேசித்தவன். கண்ணன் கன்னனுக்கு கொடுத்த வாக்குறுதி பாண்டவர்களிடம் சொல்லக்கூடாது என்பதால், குந்தியை மட்டும் தனியாக சந்திக்கிறான்.
”அத்தை, உனக்கு ஒரு விஷயம் ஞாபகப்படுத்த வந்தேன்”
‘என்னப்பா கிருஷ்ணா, நீ தான் எதையும் மறக்காதவனாயிற்றே”
உனக்கு ஞாபகம் இருக்கிறதா,.. ஆற்றில் ஒரு பெட்டியில் ஒரு சிறு குழந்தை பல வருஷங்களுக்கு முன்பு மிதந்ததே.அப்புறம் அது என்னாயிற்று?”
குந்தி சிலையாக உறைந்தாள் . கண்களில் ப்ரவாஹம் .
”கண்ணா அது உனக்கும் தெரியுமா.. என்ன ஆயிற்று அந்த குழந்தைக்கு?? அது என் முதல் மகன்… என் மனத்தை ஈட்டி போல் குத்தி குளறி வாட்டும் துக்கம் அது… வேறு வழியின்று நான் செய்த மஹா பாபம்”
கர்ணன் சரித்திரத்தை கிருஷ்ணன் உரைத்தான்.
”கிருஷ்ணா, உனக்கு நன்றி, இப்போதே ஓடுகிறேன். கர்ணனை பார்த்து யுத்தத்தை நிறுத்தி என் ஆறு மகன்களையும் ஒன்று சேர்த்து மகிழ்வேன்.”
”அத்தை உன் ஆசை பேராசை. அது நடக்காது. நானும் முயன்று தோற்றேன்”
”கிருஷ்ணா, என் தாய்ப்பாசம் உன்னைவிட சக்தி மிகுந்தது. அது வெல்லும்”
”ஆஹா அதை உணர்ந்து தான் உன்னிடம் இப்போது வந்தேன்”
பிறகு தான் கண்ணன் குந்தியை கர்ணனிடம் அனுப்பி அவளிடம் பாண்டவர்களில் அர்ஜுனன் தவிர மற்றவர் உயிரை காப்பாற்ற, அர்ஜுனன் மேல் ஒரே ஒரு முறை மட்டும் நாகாஸ்திரம் விட வரம் பெற்றாள் .யுத்தத்தில் கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து கிருஷ்ணன் அர்ஜுனனைக் காப்பாற்றி அர்ஜுனன் கர்ணனைக் கொல்ல வழி வகுத்தான்.
கண்ணன் கர்ணனைப் பற்றிய உண்மையை முன்பே பாண்டவர்களிடம் வெளிப்படுத்தியிருந்தால்
மஹாபாரத யுத்தம் நடந்திருக்காது. கிருஷ்ணன் தான் எடுத்த அவதார நோக்கத்தால் இந்த ரஹஸ்யத்தை பாண்டவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. ஆகவே கண்ணன் விரும்பியபடியே தான் நமக்கு மஹா பாரதம் கிடைத்திருக்கிறது. அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே, உறவெல்லாம் பொய் என்று கண்ணன் கீதையில் சொல்லியிருப்பதை நினைவில் வைப்போம். சீர்காழி பாடிய ஒரு பாடல் எப்போதும் காதில் ஒலிக்கிறது…. ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது….’
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

