
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சாணக்கியனுக்கு மட்டும் எப்படி இத்தனை அற்புத ஞானம். தெளிவான தீர்க்கமான எண்ணம்!!. சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும் போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு அதிசயத்தைக் கொடுத்தானோ? அப்படிதான் இருக்க வேண்டும்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை கிடைக்குமே என்ற அடிப்படையில் தனித்தனியே நிறைய மூளையை அடைத்து மனிதர்களை படைத்து பூமிக்கு அனுப்பி, அவர்கள் அதை ஜார்க்கிரதையாக உபயோகிக்காமல் வீணாவதைத் தடுக்க அத்தனையும் உம்மைப் போன்ற சிலருக்கு கொடுத்து அனுப்பினால் ஊருக்கே, நாட்டுக்கே, உலகுக்கே அது பயனாகும் என்ற எதிர்கால நோக்குடன் தீர்க்க தரிசியான உம்மை படைத்தி ருக்கிறான். ப்ரம்மதேவனுக்கு நன்றி சொல்வோம். இதோ சில சாணக்கியன் வார்த்தைகள். .
”நமது சனாதன தர்மத்தின் சின்னம் எது? ”அஹிம்ஸை தான்” ..
”ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஐந்து முக்கிய விஷயங்கள் அவன் கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறதே அவை என்ன தெரியுமா? ”1. அவனுக்கு எவ்வளவு ஆயுஸு ? 2. என்ன தொழிலில், வேலையில் ஈடுபடுவான்? 3.அவனுடைய பொருளாதார வசதி எப்படி இருக்கும்? 4. அவன் படிப்பு எந்த அளவு? 5.அவன் மரணம் எப்போது. எங்கே, எப்படி ?” இதெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை.
”இந்த உலகத்தை ஜெயிக்க ஆசைப்பட்டால் ஒரே ஒரு காரியத்தினால் தான் முடியும். மற்றவர்களை அவமரியாதையாக, தூஷணையாக பேசத் துடிக்கும் உன் நாக்கை அடக்குவதால். வள்ளுவர் அதனால் தானே ”நா காக்க” என்கிறார்.
‘வீட்டை விட்டு வெளியேறி எங்கோ வெளிதேசம் செல்லும்போது எது ஒருவனுக்கு அவசியமான துணைவன்? பணமா? இல்லவே இல்லை. அவனது அறிவும் படிப்பும் தான் கை கொடுக்கும். . அதேபோல் வீட்டுக்குள் உன் மனைவி தான் உன்னுடைய உண்மையான நண்பன். நோயாளிக்கு மருந்து தான் நண்பன். நீ செய்த தர்ம காரியங்கள் தான் உன் மரணத்திற்குப் பின் உன் நண்பன்.”
‘ஒருவனை அப்படியே கொன்று எரிக்க எது இன்ஸ்டன்ட் நெருப்பு.?
‘ ரொம்ப ஆசையோடு இருந்தவர்களிடமிருந்து பிரிவு, ரொம்ப ரொம்ப நெருங்கிய உறவினன் சொன்ன அவமானமான, அவமதிப்பாக வார்த்தைகள், தீர்க்க முடியாத கடன் சுமை, கொடுங்கோல் அரசனுக்கும், கெட்டவனாக எஜமானனுக்கும் சேவை செய்வது. ரொம்ப தீயவர்களின் நட்பு” இவை போதும் ஒருவனை தீர்த்துக் கட்ட.”-
”வயோதிக காலத்தில் மனைவியின் மரணம், சகோதரர்கள், சகோதரிகளின் கையில் பண அதிகாரம், அன்றாட சோற்றுக்கு எவரிடமாவது கையேந்தி நிற்கும் நிலை. இது தான் நரகம், துக்கத்திற்கு காரணங்கள்.
”வாழ்க்கையில் படித்து முன்னேற விரும்பும் மாணவன் எதைச் செய்ய கூடாது தெரியுமா? மனதில் காமம், குரோதம், லோபம், தன்னை சிங்காரித்துக்கொள்ள நினைப்பு, தேவையற்ற விழங்களில் பொழுது போக்கில் நேரம் செலவழிப்பது, அதிக தூக்கம், எல்லா விஷயங்களில் பெரியோர் சொல் மீறி, தான்தோன்றியாக எல்லை மீறி நடப்பது. இவை போதாதா?”
”பகவான் நமக்கு தந்த இந்த அழகிய உலகம் ஒரு பழம் தரும் மரம். அது தரும் அற்புத சுவைமிக்க பழம் ரெண்டு. ஒன்று அழகான அளவான பேச்சு. ரெண்டாவது பேசுவதை மிருதுவாக பேசுவது. சத் சங்கம்”
நண்பர்களே, ரொம்ப ரொம்ப அவசியமான ஒரு பாடம் நாம் கற்க கௌடில்யன் எனும் சாணக்கியன் சொன்னதை டயரியில் குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து அதன் படி நடப்போம். அது என்ன”? ”பாம்பிற்குப் பல்லில் விஷம். விஷப் பூச்சிக்கு அதன் தலையில் விஷம். தேளுக்கு அதன் வாலில் விஷம். கெட்ட குணம் படைத்த மனிதனுக்கு, அடேயப்பா, உடல் பூரா விஷம்” எவளவு நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமான வார்த்தை.
கௌடில்யனை அடிக்கடி நினைவு படுத்துவேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



