INTERESTING INFO J K SIVAN

ருசிகர தகவல்கள் – நங்கநல்லூர் J K SIVAN
புராணங்கள் பொய்யோ புருடாவோ இல்லை. அவற்றை ஊர்ஜிதப்படுத்து என்றால் காற்றைப் பிடித்து கையில் கொடு என்பதைப் போல் தான். நம்பிக்கைக்கு ஏதோ ஒரு சில சான்றுகள், ஊன்றுகோல்களாக இருப்பதால் நமது முன்னோர்கள் அவற்றை ஆதரித்தனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. நம்மைவிட புத்திசாலிகள். இல்லாவிட்டால் இவ்வளவு அற்புத உலகத்தை நமக்கு விட்டுச் சென்றிருப்பார்களா?
மஹா பாரதம் நமக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்தது. ராமாயணம் இன்னும் முன்னால் ஏழாயிரம் வருஷம் முன்பு த்ரேதா யுகத்தில் நடந்தது. அதற்கு சான்றுகள் இன்னும் ஆங்காங்கே சில இருக்கின்றனவே. நானே நேரில் சித்ரகூடம், அயோத்யா பிரயாகை சென்றபோது பார்த்தேனே.
மஹாபாரத சம்பவங்களை டாக்டர் K N S BATNAIK என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு புராணங்கள் பஞ்சாங்கங்களை தேடி அலசி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். மஹாபாரதம் பற்றிய சில விஷயங்கள் அதில் சில தேதி நாள்கள் குறிப்பு ருசிகரமானதாக இருந்ததால் சுருக்கமாக அதைத் தருகிறேன்.
கர்ணன் மாசி மாத வளர்பிறை முதல் நாள் பிறந்தவன். யுதிஷ்டிரனை விட 16 வயசு பெரியவன் என்கிறது ஏதோ சில ஆதாரம்.
பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை பாண்டு மஹாராஜா, ஐப்பசி மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். அப்போது யுதிஷ்டிரனுக்கு ஒரு வயஸு ஆகிவிட்டது. யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி வருடம், ஐப்பசி மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை நட்சத்திரத்தில், தனுசு லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. கி.மு. 3229 – 8 -15 நாளில்.
பீமன் ஆங்கீரச வருடம், ஐப்பசி மாதம் தேய்பிறை 9வது நாளில் மக நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அண்ணா யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் சின்னவன்.
அர்ஜுனன் ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தான். பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் சின்னவன்.
நகுல சகாதேவர்கள் பவ வருடம், பங்குனி மாதம் பௌர்ணமி நாள் மத்தியானம் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தனர். அர்ஜுனனை விட 1 வருடம் 15நாட்கள் சின்னவர்கள்.
கிருஷ்ணன் ஸ்ரீ முக வருடம் ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள், ரோகிணி நக்ஷத்ரம், நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.
துரியோதனன் பீமன் பிறந்த மறுநாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.
பாண்டு மஹாராஜா, சர்வதாரி ஆண்டு, சித்திரை மாத, வளர் பிறை உத்திரம் நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருஷம் 7 நாள். யுதிஷ்டிரனுக்கு 16 வயது 6 மாதங்களும் 7 நாள் .
பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு சர்வதாரி வருடம், சித்திரை மாதம் தேய்பிறை 13வதுநாள் அழைத்து வரப்பட்டனர். அதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.
பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13வருடங்கள் தங்கி இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.
துருபதன் மகள் த்ரோபதி ஸ்வயம்வர வில் வித்த்தை போட்டி பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்ற போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது, அர்ஜுனனுக்கு 28-29.
துரோணருக்கு குரு தக்ஷிணையாக பாஞ்சால ராஜா துருபதனை பாண்டவர்கள் சிறைபிடித்தது பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சோபகிருது வருடம் திருவாதிரை மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 31 வருடம் 5நாள்.
பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க வருடம் மாசி மாதம் அமாவாசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.
பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.
கீலக வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்த அரக்கு மாளிகை திகு திகு என்று இரவில் தீ வைக்கப்பட்டு எரிந்தது. ஒருநாள் = 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) ஆகவே இரவு 3வது ஜாமத்தில் தீப் பற்றி எரிந்தது. பீமன் தோண்டிய சுரங்கம் வழியாக கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் பாண்டவர்கள் கங்கை நதியைக் கடந்தனர்.
சவுமிய வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் பீமனால் கொல்லப்பட்டான் பீமனுக்கு அப்போது வயது 37
சவுமிய வருடம், ஐப்பசிமாதம் வளர்பிறை 2ம் நாளில் கடோத்கசன் பிறந்து ஒரே நாளில் பெரியவனாக வளர்ந்தான்.
பாண்டவர்கள் சாலிஹோதாஸ்ரமம் என்ற இடத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.
பாண்டவர்கள் ஏகசக்கரபுரத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம்நாள் வரைஆகும்.
சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாள் பீமனுக்கும் பகனுக்கும் யுத்தம் நடந்து பீமன் பகனைக் கொன்றான். பீமன் வயது 37. பாண்டவர்க்ள ஏக சக்ரபுரத்தில் இன்னும் 1 மாதம் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண வருடம் மார்கழி மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால தேசம் நோக்கி நடந்து மூன்று நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் பதினைந்து நாட்கள் தங்கினர். பதினெட்டாவது நாளில் பாண்டவர்கள் பாஞ்சால நாட்டுத் தலை நகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண வருடம் தை மாதம் 7ம் நாள் அடைந்தனர். திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது. பாஞ்சால தேசத்தில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதி கிருது வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.
விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைத்து ஹஸ்தினா புரம் அழைக்கப்பட்டு பாதி நாட்டைப் பெற்றார்கள். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.
பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் 46வது வயதில் பட்டம் சூட்டப்பட்டான்.
அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் காளயுக்தி வருடத்தில் சென்று பிரமோதூத வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் 57வது வயதில் சுபத்ராவோடு கல்யாணம் நடந்தது. அபிமன்யு பிரமோதூத வருடத்தில் பிறந்தான்.
அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.
பிரமோதூத வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிர னுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.
பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும். இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.
பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் பீமனால் கொல்லப்பட்டான்.
சர்வதாரி வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.
ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரன் சகுனி ரெண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கி சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்கள் மட்டுமே இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள். சூதாட்டத்தில் தோற்றபோது யுதிஷ் டிரனுக்கு வயது 76. பீமனுக்கு 75, அர்ஜுனனுக்கு 74, நகுல சகாதேவர்களுக்கு 73. துரியோதனனுக்கு 75 கர்ணனுக்கு 92 ,கிருஷ்ணனுக்கு 74. இந்த வயது களைப் பார்த்துவிட்டு அடாடா கிழவர்களா இத்தனை அட்டகாசம் பண்ணினார்கள் என்று நினைக்க வேண் டாம். அப்போது ஆயுசு ரொம்ப அதிகம் எல்லோ ருக் கும். இதெல்லாம் இளவயது, நடு வயது அவ்வளவு தான். கிருஷ்ணனுக்கு மொத்தம் 125 வயது என்று தெரியுமல்லவா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;