
குந்தியின் பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 3
குந்தியால் கிருஷ்ணனுக்கு ”போய் வா” என்று விடை கொடுக்க முடியவில்லை. அவன் தேரிலே புறப்பட தயாராகிவிட்டாலும் அவன் கையை பிடித்துக்கொண்டு கதறுகிறாள். அவள் மனதில் கடைசியாக உத்தரைக்கு கிருஷ்ணன் செய்த ஈடற்ற உயிர்ப்பிச்சை சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
உத்தரை வயிற்றில் பரீக்ஷித் சிசுவாக இருக்கும் நிலையில் அவனைக் கொல்ல அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரத்தை அனுப்புகிறான். அதன் சக்தியிலிருந்து எதுவும் எவரும் தப்பவே முடியாது. உத்தரை கிருஷ்ணனை நோக்கி ஓடிவருகிறாள். அவளோடு குந்தியும் அலறிக்கொண்டே ஓடி வருகிறாள். உத்தரையை அஸ்வத்தாமனின் ப்ரம்மாஸ்திரம் துரத்திக் கொண்டு வருகிறது.
”கிருஷ்ணா, மகாயோகியே. தேவதேவா, லோக நாயகனே, ஒருவருக்கொருவர் யமனாக உள்ள இந்த உலகத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லையே அப்பா !” (இது தற்காலத்திலும் ரொம்ப ரொம்ப பொருந்தும் )’ உத்தரை குந்தியை தொடர்ந்து ஓடிவந்தவள் கிருஷ்ணன் காலில் விழுந்தாள்.
” பகவானே, பழுக்கக் காய்ந்த இரும்பு போல் என்னை ஒரு பாணம் தொடர்ந்து வந்து தஹிக்கிறது. அதால் நான் மரணமடைந்தாலும் என் கர்ப்பம் அழியாமல் நீங்கள் தான் காக்க வேண்டும் .” என்று அலறினாள்..
கிருஷ்ணனுக்கு தெரிந்துவிட்டது. ‘ஓஹோ இது அஸ்வத்தாமன் செலுத்திய ப்ரம்மாஸ்திரம். அதை எதிர்க்க ஒரே வழி, தனது சக்ராயுதம் தான்’ என்று. உத்தரையின் கர்ப்பத்துள் சக்ராயுதம் புகுந்து அதன் சக்தியால் உத்தரையின் கருவை காப்பாற்றி ப்ரம்மாஸ்திரத்தின் சக்தி குன்ற வைத்தார். பரீக்ஷித் கருவில் கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்டான்.
யோகேஸ்வரன் கிருஷ்ணன் எல்லா ஜீவன்களின் உள்ளே ஹ்ருதயத்திலும் பிரகாசிக்கும் ஆத்மா அல்லவா? உத்தரை யினுள்ளும் இருந்து கொண்டு குரு வம்சத்தை அழியாமல் காக்க தன் மாயாசக்தியால் அவள் கருவுக்கு கிருஷ்ணன் சுதர்சன சக்ர கவசம் அளித்தார். உண்மையில் பகவான் கிருஷ்ணனால் உத்தரையின் கர்ப்பத்தினுள் சுதர்சன சக்ரம் புகாமலேயே சிசுவைக் காப்பாற்ற இயலும். ஆனால் பரீக்ஷித்திற்கு அருள வேண்டி சங்கு சக்கரத்துடன் அங்குஷ்ட மாத்ரமாக சிசுவின் முன் தோன்றினான். அதனால் பரீக்ஷித் மிகச்சிறந்த பாகவதன் ஆனான். சிசு உயிர் பிழைத்தாலும் ப்ரம்மாஸ்திரத்தின் கடுமையால் கரிக்கட்டை போல் பரீக்ஷித் பிறந்தான். கிருஷ்ணர் தன் பாதத்தால் அதை வருடிய பின் அதற்கு உயிர் வந்தது. பிறந்ததும் அந்த சிசு தன் முன்னால் கர்பத்தில் தோன்றியவர் யார் எனத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரையும் சோதித்து ஆராய்ந்து பார்த்ததால் பரீக்ஷித் என்ற பெயர் ஏற்பட்டது.
”கிருஷ்ணா, ஆதிபுருஷனான ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட இறைவனான, எல்லா உயிர்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவனான, ஆனால், அவைகளால் அறியப்பப்டாதவனான உன்னை வணங்குகிறேன். அறியாமை என்ற மாயத் திரையினால் மறைக்கப்பட்டு இந்த்ரியங்களால் அறியப்படாதவன் மாறுபாடற்றவன் நீ. எவ்வாறு ஒரு நடிகன் நாடகத்தின் வேஷம் போடுகிறானோ அதுபோல் உள்ள நீ மூடர்களின் பார்வையில் காணப்படுவதில்லை
பரிசுத்த இதயம் உள்ள முனிவர்களுக்கும் முற்றும் துறந்தவர்களுக்கும் அவர் மனதில் பக்தியை தோற்றுவிப்பதற்காக
அவ்வாறே நீ மறைந்துள்ளாய். அப்படியிருக்க எவ்வாறு ஸ்திரீகளாகிய நாங்கள் உன்னைக் காண்பது? கிருஷ்ணனுக்கு, வாசுதேவனுக்கு, தேவகி நந்தனனுக்கு, நந்தகோபனின் குமாரனுக்கு, கோவிந்தனுக்கு, நமஸ்காரம்.
தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம்
ரிஷிகேசா,பிரபோ, எவ்வாறு தேவகி துஷ்டனான கம்சனால் சிறைப்படுத்தப்பட்டு துக்கமுற்று விடுவிக்கப்பட்டாளோ அதேபோல, நானும் என் பிள்ளைகளுடன் எங்கள் ரக்ஷகனான உன்னால் அடிக்கடி ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டோம்.
விஷத்தில் இருந்தும் ( பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்தது)பெரிய நெருப்பில் இருந்தும் ( அரக்கு மாளிகை)
ராக்ஷசர்களிடம் இருந்து ( ஹிடும்பன் பகாசுரன் முதலியவர்கள்) தீயவர்களின் கூட்டத்தில் இருந்து ( சூதாட்டம் வஸ்த்ராபஹரணம் முதலியவை ) வனவாசத்தின் கஷ்டங்களில் இருந்து ( அக்ஷயபாத்ரம் , துர்வாசர் முதலியவை)
யுத்தங்களில் பெரும் யுத்தவீரர்களின் அஸ்திரங்களில் இருந்து தப்பிய நாங்கள், இப்போது அச்வத்தாமாவின் ப்ரம்மாஸ்திரத்தில் இருந்து ஹரியே உன்னால் அபிரக்ஷிதா காப்பாற்றப்பட்டோம்.
கிருஷ்ணா, ஆபத்துகள் எப்போதும் எங்களுக்கு தொடர்ந்து ஏற்படட்டும். ஜகத்குருவே அப்போதெல்லாம் தான் உன்னைக் காண்போம். பிறப்பு, செல்வம், பதவி, புகழ், இவைகளால் மனித மனம் இறுமாப்படைகிறது. உண்மையில் பக்தி ஒன்று தான் உன்னை அடைய உதவும். மூன்று குணங்களின் செய்கைக்கு அப்பாற்பட்டவன் நீ. .ஆத்மானந்தமானவன். சாந்தன். மோக்ஷகாரகன். நீயே ஈசன். ஆதி அந்தம் அற்றவன். எங்கும் உள்ளவன். காலம் மக்களிடையே பேதத்தை உண்டுபண்ணி முடிவில் அழிக்கிறது. ( மகாபாரத யுத்தமே உதாரணம்) . எல்லாம் உன் செயலே என்கிறாள் குந்தி..
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

