KUNTHI DEVI’S PRAYER J K SIVAN

குந்தியின்  பிரார்த்தனை  –  நங்கநல்லூர்  J K  SIVAN பதிவு 2
”என் அருமை கிருஷ்ணா,  நீ சாதாரணனாக தோன்றினாலும்,  ப்ரபஞ்சத்துக்கே  ஆத்மாவானவன்.   சகல ஜீவன்களுக்கும்  ஆதார  ப்ராணன்  நீ. என் போன்றவர்களின் சிற்றறிவுக்கு  எட்டாதவன். வேண்டியது வேண்டாதது இல்லாதவன்.   பாரபக்ஷமில்லாத கருணா சாகரம்.  என்போல்  உன்னை வேண்டுபவர்களுக்கு  அருள்பவன். காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன் .

”கிருஷ்ணா, நீ செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும், சொல்லும் வார்த்தைக்கும் எத்தனையோ அர்த்தங்கள், காரணங்கள் இருக்கிறதே. நீ எவருக்கும் உடந்தையும் அல்ல, விரோதியும் இல்லை. சர்வ ஜீவன்களிடமும் அன்பு கொண்ட ரக்ஷகன் நீ. எனக்கு உன்னை நன்றாக தெரியும். பார்ப்பவர்களுக்கு நீ தவறு செய்பவ னாகவோ, தவறுக்கு உடந்தையாக இருப்பது போலோ, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பக்ஷபாதம் உள்ளவன் போலவோ  தெரிவாய். அப்படி  எண்ணுபவர்கள்  உன்னை அறியாத அஞ்ஞானிகள். நீ எதுவும் எவரிடமும் தேவையற்றவன்.  எல்லாமே உன் செயலால் நடந்தாலும்  எந்த கர்மத்திலும்  சம்பந்தமில்லாதவன் பரம் பொருள். என் மனம் நீ அறிவாய், உன்மனம் நான் அறிவேன்.

”கிருஷ்ணா,  பிரபஞ்ச காரணனே.  பரம ஆத்மாவே,  எனக்கு தலை சுற்றுகிறது.   நீ  ஒரு புதிர்.  புரிபடாதவன்.  ஏன் தெரியுமா?  உனக்கு என்று எந்த காரியமும் இல்லை.  ஆனால்  எல்லா காரியத்தையும்  நீயே  செய்பவனாக இருக்கிறாய்.  ஜனன மரணம் இல்லாதவன் நீ என்றாலும் நீ எல்லாவற்றிலும் தோன்றி மறைகிறாய். மரமாகவும், மன்னிக்கவும், மாந்தராகவும், மக்களாகவும் , மஹரிஷிகளாகவும், மலர்களாகவும் உன்னை காண்கிறேனே.”

குந்தி கிருஷ்ணனை மனத்திலே இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டவள். இருந்தாலும் கிருஷ்ணன் ”அத்தை, அப்போ, நான் போய் வரட்டுமா?” என்ற அவன் கேள்வி அவளைத் துளைத்தது. இவனைப்  பிரிவதா, அது முடிவதா?  என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே என ஏங்குகிறாள்,

‘கண்ணா, நீ இங்கேயே இரு.. என்கிறாள். பழசை எல்லாம் நினைக்கிறாள், கெஞ்சுகி றாள்..வேண்டுகிறாள்….

”அப்பா, கிருஷ்ணா,  ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு பழைய நினைவுகள் தொடர்ச்சியாக மனக்கண் முன் வருகிறதே. சொல்கிறேன் கேள்.

உன்னை ஒருநாள் யசோதை என்ன செய்தாள் என்று ஞாபகம் வருகிறதா? உன் விஷமம் தாங்கமுடியாமல் போய் விட்டது. எப்போதும் உன்னைப்பற்றி எல்லோருமே அவளிடம் புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தால் அவள் என்ன செய்வாள்?   எப்படி உன் விஷமத்தை குறைப்பது. அவளுக்கு தோன்றிய ஒரே யோசனை. உன்னை வெளியே விடாமல் எப்படி நிறுத்துவது?. ஆம், ஒரே வழி உன்னை கட்டிப்போட வேண்டியது தான். ஒரு சிறு தாம்புக்கயிறு கண்ணில் பட்டது. .ஓஹோ. அதனால் தான் கண்ணினுள் சிறு தாம்போ!, ”வாடா இங்கே” என்று  அவளிடமி ருந்து தப்பி ஓடிய   உன்னை இழுத்துப்  பிடித்து வயிற்றில் கயிற்றைக்  கட்டி அதன் மறுமுனையை எதோடு கட்டுவது? கண்ணில் ஒரு உரல் தென்பட்டது. உன் வயிறும் உரலும் கயிறோடு இணைந்தன.

”இப்போ எப்படி வெளியே ஓடுவாய், எப்படி ஒவ்வொருத்தர் வீட்டிலும் போய் வெண்ணெய் திருடுவாய் என்று பார்க்கிறேன்?” என்று உன்னைப்பார்த்த யசோதைக்கு நீ எப்படி தோன்றினாய்?

அழகிய மலர்ந்த கரு நிற காந்த முகம். அதில் பரந்த விரிந்த கண்கள். அவை இரண்டுமே முழுதும் கண்ணீ ரால் நிரம்பி பொங்கின. நீ வேதனையோடு செய்வதறியாது பரிதாபமாக அவளைப்  பார்த்தாயே , உன் கண்களில் அவள் தீட்டிய மை கண்ணீரில் கரைந்து கலந்து கன்னத்தில் வழிந்ததே. பயம் உன் கண்களில் தெரிந்ததா? உனக்கு பயமா? இந்த காட்சியை அவள் கண்டாள் , நான் கேள்விப்பட்டேன். திகைத்தேன் … பிரேமையால் அவள் கட்ட நீ தானாகவே உட் பட்டவன். நீ கட்டுண்ணப்  பண்ணிய மாயன்.

கிருஷ்ணா,  உன்னைப் பற்றி யார் பேசினாலும் நின்று ஆர்வமாக கேட்பேன்.   பிறப்பற்ற நீ பிறந்ததே   ராஜாக்களுக்கு  சந்தோஷம் தரவாமே,  அதுவும் நீ  யது வின் குலத்தில் பிறந்தது இன்னும் விசேஷமாமே.  உனக்கு  யதுவையும் அவன் குலத்தையும் ரொம்ப பிடிக்குமாம் அதனால் நீ   மிக ஸ்ரேஷ்டமான  மலய  சிகரத்தில் மலய  பர்வதத்தில்,  விளைந்த  ஒரு சந்தன மரமாமே.  உனக்கு சந்தனம் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.

வேத வியாசர் மலய மலைகளில் இருக்கும் சந்தனமரங்கள், சந்தன த்தின்  ‘கம கம’ வாசனை பற்றி சொல்கிறார்.   எதிலும் மற்றவர்கள் போல் ஜனிக்காத நாராயணன் ஒரு சிறந்த ராஜ குடும்பத்தை தேர்ந் தெடுத்து அதில் பிறக்கிறான்  என்றால், அதுவும்  மஹாராஜா யது வை பக்தனாக பிடிக்கும் என்பதால் யது குல நந்தனாக அவதரித்தவன் என்பதால்   என்னென்னவோ மரங்கள் தோன்றும் மலய மலைச்சாரலில் அழகிய வாசமிகுந்த சந்தனமரமாக கிருஷ்ணன் பிறந்தான் என்று குந்தி சொல்வதாக எழுதுகிறார் வியாசர்.

”ஆமப்பா , கிருஷ்ணா, நீ பிறப்பு இறப்பு அற்றவன் தான். என்றாலும் வசுதேவன் தேவகி  நீ அவர்களுக்கு   பிள்ளையாக  பிறக்கவேண்டும் என்று வேண்டியதால் அவர்களுக்கு மகனாக பிறந்தவன். தேவர்களைக்  காக்க,  ராக்ஷஸர்களை அழிக்க,  இப்படி ஒரு வேஷம் உனக்கு என்று அறிந்து கொண்டேன். அது எப்படி உன்னால் மட்டும் பக்தர்கள் எல்லோரையும் திருப்தி பண்ண முடிகிறது?

”கிருஷ்ணா, யார்  யாரோ சொல்லி நான் கேட்டேனே.
 நீ  ப்ரம்மாவின்  பிரார்த்தனையால் இந்த பூமியில் அவதரித்தவனாம்.  எப்படி  நீர் பரப்பில் செல்லும் படகு  எல்லா சுமைகளையும் சுமந்து  அக்கரைக்கு கொண்டு செல்கிறதோ அப்படி  நீ  இந்த உலக வாழ்வில் என் போன்றோர்களுக்கு எல்லாம் விளையும் எல்லா  துன்பச் சுமையையும்  சுமப்பவன், எங்களை எல்லாம்   மோக்ஷத்திற்கு கொண்டு செல்பவன்..  உன்னை  எப்படிப் போற்றுவேன்?

இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே எனக்கு தெரியும் . இந்த பூமியில் பாரம் பெருகிவிட்டது. பூமாதேவி அலறினாள். ‘ என்னால்  இப்படி  என்  மேல் திணிக்கப்படும்  அநீதி, அக்கிரமம், அதர்மம்,  அளவு கடந்துள் ளதை சுமக்க முடியவில்லை. என்னால் தாங்க, பொறுக்க, முடியவில்லையே, பெருமானே, வாருங்கள் என் துயர் தீருங்கள்’ என்றாள். படைக்கும் கடவுள் ப்ரம்மா, உன் மகன், ”அவசியம் நீங்கள் தலையிட்டு பூமாதேவியின் துன்பம் தவிர்க்க வேண்டும்” என்றான். நடுக்கடலில் செல்லும் படகு அனைவரது சுமையும் தூக்கி ஆழமான கடலைக் கடக்க உதவுவது போல் பூமாதேவி நம்மைச்  சுமக்கிறாள். ஒரு நேரத்தில் படகின் சுமை , பாரம், அதிகமானால் முழுகும் அபாயம் உண்டல்லவா?  

 ”வா கிருஷ்ணா வா என் சுமையைக் குறை. நானே காணாமல் போய்விடுவேன் போல் இருக்கிறதே”  என்று பூமா தேவி  வேண்ட, நீ உடனே பூமிக்கு சென்று அவதரித்து அக்ரமக்காரர்களை அழித்து, அதர்மத்தை ஒடுக்கினாய் கிருஷ்ணா. பூமி பாரத்தை குறைத்த நீ காருண்யமூர்த்தி அல்லவா?

இன்னும் கூட  உன்னைப் பற்றி சில அருமையான விஷயங்கள் அறிந்தேன் கண்ணா.  நீ  அஞ்ஞானிகள், அறியாதவர்கள், என்னைப்போல உலக நாட்டங்களின் ஆசையாலும், உணர்ச்சிகளாலும், அறியாமையாலும் அவதிப்படுவர்களை   உன்னைப் பற்றி கேட்க,  தெரிந்துகொள்ள, வழிபட  மாற்றிக்கொள்ள, திருந்த உதவு பவனாம்.
” கண்ணா, நான் கல்வியறிவு அற்றவள். பேதை. ஆனால் ஞானிகள் ரிஷிகள், பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த பூமியில் அஞ்ஞானத்தை போக்கவும், பக்தியை பெருக்கவும் சுருதி, ஸ்ம்ருதி நிதித்யாஸம் சரணாகதியை மக்கள் உணர, சம்சார துன்பங்களிலிருந்து விடுபட குருவாக நீ அவதரித்தாய் என்று சொல்வதை அறிவேன்”
குந்தியின் பிரார்த்தனை  தொடரும்..

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;