
ஒரு பாடம் – நங்கநல்லூர் J K SIVAN
காலச்சக்கரம் படுவேகமாக சுழல்வது. ஸ்ரீமந் நாரயணன் பூமியில் இன்னொரு அவதாரம் எடுத்தாகிவிட்டது. சிறையில் தேவகி வசுதேவர் மகனாக தோன்றும் சமயம் சதுர்புஜம், சங்கு சக்ரத்தோடு காட்சி தர தேவகி வேண்டுகிறாள் ”பகவானே, நீ சாதாரண குழந்தையாகவே எனக்கு வேண்டும்” கருப்பு குண்டு பையனாக கிருஷ்ணன் தோன்றி அந்த சில நிமிஷங்களிலேயே வசுதேவர் தன்னை தூக்கிக்கொண்டு போய் கோகுலத்தில் நந்தகோபன் யசோதை அரண்மனையில் தொட்டிலில் உள்ள குழந்தையை மாற்றி அங்கே தன்னை விட உத்தரவிட்டு, வளர்ந்து பல ராக்ஷஸர்களை கோகுலத்தில் பிருந்தாவனத்தில் வீழ்த்தி கம்சனைக் கொன்று, மதுராவில் ராஜ்ய ஏற்காமல் புதிதாக மேற்கே கடலில் துவாரகை நகரம் நிர்மாணித்து கிருஷ்ணனும் பலராமனும் துவாரகையில் அரசர்கள்ஆகி ஆட்சி பாரத்தை செவ்வனே ஏற்று நடத்தி வருகிறார்கள். பெரிய அரசன் பலராமன். அண்ணன் அல்லவா? அரசனுக்கு துணை அரசன் கிருஷ்ணன்
இருந்தபோதிலும், மக்கள் அன்றாடம் வெள்ளமாக வந்து தங்கள் குறைகள், தேவைகள், ஆலோசனைகள், அனைத்துக்கும் கிருஷ்ணனையே நாடுவது பலராமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது மட்டுமல்லாமல் கொஞ்சம் அவன் மனத்தில் “நம்மை தானே அரசன் என்ற முறையில் நாடவேண்டும்” என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து பலராமனைப் பிடுங்கி தின்பதை கிருஷ்ணன் கவனித்து விட்டான். பொறுமையாக பலராமனாக இதை வெளிப்படுத்த காத்திருந்தான். ஒருநாள் பேச்சோடு பேச்சாக பலராமன்
” கிருஷ்ணா, ராஜ்ய பாரங்களில் அதி முக்யமான வேலைகளை உன்னிடம் ஒப்படைக்கலாமென்று நினைக்கிறேன். அதற்கு உனக்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த அன்றாட மக்கள் குறை தீர்ப்பு போன்ற வேலைகளை நீ குறைத்துக் கொள்வது உனக்கு உதவுமே”!
” ஆம், அண்ணா, எனக்கும் அத்தகைய எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. நான் மற்ற அரசர்களை எல்லாம் சந்தித்து செய்ய வேண்டிய வேலைகள் நின்று போய் விட்டனவே. நாளை முதல் மக்களை நீயே சந்தித்து அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்வது நல்லது என்றே தோன்றுகிறது. தண்டோரா போட்டு மக்களுக்கு செய்தி சொல்ல ஏற்பாடு செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
அதே நேரத்தில் கிருஷ்ணன், கருடன் போக்கும் கொஞ்சம் சரியில்லை என்பதைக் கவனித்திருந்தான். கருடன் கொஞ்சம் மாறி விட்டான். இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை. தானே இன்றியமையாதவன். அரக்கர்களை எல்லாம் அழிப்பதில் தனை விட சிறந்த வீரன் இல்லை. கிருஷ்ணனுக்கு தன்னுடைய உதவியும் பலமும் இல்லாமல் வெற்றி இல்லை என்ற தலைக்கனம் வேறு சேர்ந்திருந்தது. நேரம் வந்து விட்டது கருடனையும் கொஞ்சம் அடக்கி அவனைச் சரியான நிலையில் நிறுத்த வேண்டும் என்று கிருஷ்ணன் தீர்மானித்தான்.
ஒரு நாள் நாரதர் கிருஷ்ணனைக் காண துவாரகை வந்தபோது கருடன் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. கிருஷ்ணன் தானே நேரில் அங்கு வந்தபோது காத்திருந்த நாரதரை உள்ளே அழைத்துச் சென்று “எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள் முனிவரே”.
“கட்டளை இடுங்கள் பிரபோ”
“கதலிவனம் சென்று அங்கு ஹனுமானைக் கண்டு இங்கே அழைத்து வாருங்கள்”
நாரதன் சென்ற போது ஹனுமான் வழக்கம்போல் கண் மூடி “ராம ராம ராம” என்று ஜெபத்தில் இருந்தார். கண் திறந்தபோது “வானர ஸ்ரேஷ்டரே கிருஷ்ணன் தங்களை அழைத்து வர சொன்னார்”
“யார் கிருஷ்ணன்?”
“கிருஷ்ணன் தான் இதற்கு முன் ராமனாக இருந்தவர்”….. ஹனுமான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. மீண்டும் ராம ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார் .
நாரதர் திரும்பினார்.
“எங்கே ஹனுமான்? அழைத்து வரவில்லையா” என்று கிருஷ்ணன் கேட்டபோது நாரதர் நடந்ததை சொன்னார். கிருஷ்ணன் சிரித்தான்.
“மீண்டும் சென்று ராமர் அழைத்தார் என்று சொல்லுங்கள்”
மறுபடியும் எதிரில் நாரதர் நிற்பதை கண்ட ஹனுமான் விழியை உயர்த்தி “என்ன” என்று ஜாடையாக கேட்க “உங்களை ராமர் அழைத்தார்” என்ற அடுத்த கணமே கை கூப்பி “ராம ராம” ஜபத்துடன் எழுந்து உடனே நாரதர் பின்னாலேயே சென்றார் ஹனுமான்.
துவாரகை அரண்மனை நந்தவனத்தில் ஹனுமனை விட்டுவிட்டு நாரதர் மறைந்தார். “ராம ராம” ஜெபத்தில் கண் மூடி நின்ற ஹனுமான் கண் விழித்து பார்த்தபோது ஏதோ ஒரு வனத்தில் இருப்பதை கண்டபோது அவருக்கு லங்காவில் ராவணன் அரண்மனை அசோக நந்தவனம் நினைவில் வர கோபத்தோடு துவாரகை நந்தவனத்தை அழித்து தீமூட்ட தொடங்கினார்.
யாரோ ஒரு வானரன் துவாரகை அரண்மனை நந்தவனத்தை அழிப்பது கண்டு கோபமுடன் கருடன் ஹனுமானோடு மோதி எதிர்கொள்ள முடியாமல் காயமுற்று தோல்வியோடு திரும்பினான். வீரர்கள் அனைவரும் படுகாய முற்று வீழ்வதைக்கண்ட பலராமன் தானே ஹனுமனை எதிர்த்து அவனை பிடிக்க முயற்சித்து. அவனது “பலம்” வாயுபுத்திரன் முன் செல்ல வில்லை. பலராமனை வாலில் சுருட்டி தூரே எறிந்தான் ஹனுமான்.
“ஆஞ்சநேயா” என்ற பழக்கமான குரல் கேட்டு ஆச்சர்யத்துடன் நின்ற ஹனுமான் கண்கள் ராமனைத் தேடின. எதிரே சீதையுடன் ராமன் நிற்பதைக் கண்ட ஹனுமான் “என் தெய்வமே உங்களை காண என் கண் பாக்கியம் செய்திருக்கிறது ” என்று கீழே விழுந்து வணங்கினான். ஹனுமான் கண்களுக்கு மட்டும் கிருஷ்ணன் ராமனாக தோன்றியதால் பலராமன், கருடன் மற்றும் கூடியிருந்தோர் அனைவரும் “ஹரே கிருஷ்ணா” என்று வாய் தானாகவே போற்ற செருக்கழிந்தனர்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

