
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
ஓலைச்சுவடியில் டோ . டேவிட் ஸ்டான்லி படித்து சொன்னது ;
விக்ரமாதித்தன் சூரியன், ப்ரம்மா விஷ்ணு, மஹேஸ்வரி, சிவன் என்று பலரை சந்தித்து ஆசி பெற்று ஆயிரம் வருஷம் ராஜ்ய பாரம் செய்ய பூமிக்கு நூலேணியில் இறங்கி வந்து உச்சி மாகாளியிடம் நடந்ததை சொல்லி அவளும் ஆசி தர அவன் தம்பி பட்டி அவனுக்கு காத்திருக்கிறான். அவனுக்கும் நடந்ததை சொல்லும்போது 2000 வருஷம் எப்படி வாழ்வது என்று கேட்க பட்டி ஒவ்வொரு வருஷமும் ஆறு மதம் நாட்டில் இருந்து ஆட்சி செய்வோம், மீதி ஆறு மாதம் காடுகளில் சுற்றுவோம். அப்படி செய்வதால் ரெண்டாயிரம் வருஷம் இருந்தாலும் ஆயிரம் வருஷம் ஆட்சி செய்ததாகுமே என்றார் யோசனை சொல்ல அப்படியே செயகிறான். இதற்கிடையில் விக்ரமன் முடிவு சாலிவாகனன் கையால் என்று சிவன், மஹா விஷ்ணு மூலம் தெரிந்துவிட்டது.
ஆயிரம் வருஷம் நாட்டில் ஆண்டு முடிந்த நிலையில் அந்த நாளையிலே குசவன் வீட்டிலே சாலிவாகனன்
வளருகிறது தெரிந்து கொள்கிறதை விக்கிரமாதித்தன் கேட்டு இந்தப் பிள்ளையைஆக்கினை பண்ண வேணுமென்று தன்னுடைய படையெல்லாம் கூட்டிக் கொண்டு விக்கிரமாதித்தன் வருகிற சேதி
சாலிவாகனன் கேட்டு தான் விளையாடின மண் குதிரை, மண்யானை, மண்காவாள் , மண்கத்தி, மண்கேடயம் , வில்லு, அம்புராத்தோணி இதுகளுக்கு உயிருண்டாக வேணுமென்று எண்ணினான் . அதற்காக: காவேரியிலே முழுகி பூசை முடித்துக் கொண்டு பரமேஸ்வனையும் ‘ மகாவிஷ்ணுவையும் தோத்திரம்
பண்ணிக்கொண்டு செம்பிலே நீரும் திருநீற்றுப்பையையும் பிரம்பும் கையிலே பிடித்துக் கொண்டு வந்து தான் விளையாடின மண்குதிரை யானை சேனைகளுக்கெல்லாம் அபிமந்திரித்து விபூதியிரைத்து தண்ணீரைத் தெளித்துப் பிரம்பாலே தட்ட அதுகள் எல்லாம் உயிருண்டாகி ஆயுதத்துடனே வெளியே
புறப்பட்டது. அப்போது சாலிவாகனன் வாயுவேகமென்கிற குதிரை மேலேறிக் கொண்டு தன்னுடைய ரத கஜ ச துரக பதாதியுடனே வந்து விக்கிரமாதித்தன் சேனையெல்லாம் கொன்று விக்கிரமாதித்தன் . தலையை வெட்டியெறிந்தான் . அந்தத் தலை விக்கிரமாதித்த தேவி மஞ்சரியென்கிறவள் மடியிலே போய்
விழுந்தது. அது கண்டு அழுது பட்டி வந்து அவள் அழுகையிலே அவளுக்கு புத்தி சொன்னான் . அப்போ மஞ்சரியென்கிறவள் பட்டியைப் பார்த்து இந்த பிள்ளையை நீ வளர்த்துக்கோவென்று அவன் கையிலே பிடித்துக் கொடுத்துவிட்டு அவள் விக்கிரமாதித்தனுடனே அக்கினிப்பிரவேசமானாள் .
அப்போது அந்தப் பிள்ளையை வைத்துக் கொண்டு பட்டியும் ராச்சியயாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறபோது “விக்கிரமாதித்தன் இருந்த சிம்மாசனத்தின் பேரில் இந்தப் பிள்ளை இருக்கக்கூடாது. விக்ரமாதித்தன் அமர்ந்த ஸிம்ஹாஸனம் இந்திரன் தந்தது. இதை ஒரு இடத்திலே குழியை ட்டிப் புதைத்துப் போடுங்கள் ” என்று அசரிரி வாக்கியம் கேட்டது.
காலம் சென்றது. விக்ரமாதித்தன் ஸிம்ஹாஸனம் புதையுண்ட இடம் ஒரு மேடாக மாறி அதன் மேல் காய்கறிகள் வளரும் கொல்லையாய் போயிற்று. அந்தக் கொல்லையை ஒரு பிராமணன் சரவண பட்டன் என்பவனுக்கு சொந்தமானது. அந்தக் கொல்லையிலே கம்பு சோளம் வெள்ளரி என்று பல தானியமும் பயிரிட்டான். அந்த கொல்லையிலே நடுவிலே மேடாயிருந்தது. அதன் மேல் பந்தல் போட்டுக் கொண்டு காவலிருப்பான் .
அப்போது உச்சனிக்கு வடக்கே காதவழியிலே தருமபுரி என்றொரு பட்டணமுன்டு. அந்தப் பட்டணத்தை போஜ ராஜா ஆளுகிறார் . அந்த ராச்சியத்திலே போசராசா தரும சிந்தனையுடனே இருக்கிறபோது ஒருநாள் ராசா மந்திரியை அழைத்து இன்றைக்கு வேட்டைக்கு போக வேண்டும் . ரத கெச துரக பதாதிகள் முஸ்தீபு பண்ணி வேட்டைக்காரர் பன்றி வலை முயல் வலை மான் வலை காடை கவுதாரி கண்ணிகள் நாய்களும் பிடித்துக் கொண்டு தலையிலே தோல் குல்லாவும் கட்டி, கல்லடம் காலில் பில்லை செருப்பும் போட்டுக்கொண்டு
பாங்கு கையிலே பிடித்துக் கொண்டு முஸ்தீப்புடனே வந்து ராசாவைக் கும்பிட்டார்கள் . அப்போது ராசாவும் மந்திரியும் பயணமாகி புறப்பட்டு வந்து காட்டிலே வேட்டையாடி திரும்புகிறபோது சரவண பட்டன் கொல்லை வழியாய் வந்தார்கள் . அந்த பிராமணன் கொல்லையின் நடுவே பந்தல் போட்டுக் கொண்டு பந்தலிலே இருக்கிறவன் போஜனின் சேனைகளையெல்லாம் கண்டான். ‘ஓஹோ, பரிவாரமே! ராசாவே, நீங்கள் வேட்டைக்குப் போய் அலைந்து இளைப்பாய் போகிறீர்கள் . என் கொல்லையிலே கம்பு சோளம் அவரை துவரை கடலை வெள்ளரிக்காய் இது வெல்லாம் இருக்கிறது. வேணுமென்கிறது சாப்பிட்டு மடுவிலே தண்ணீர் குடித்துப் பசியாறுங்கள் ” என்றான். இதைக்கேட்டு சந்தோஷமாக சேனைகளெல்லாம் கொல்லையிலே புகுந்து வேண்டியது தின்று மடுவிலே தண்ணீர் குடித்துக்
கொண்டிருக்கிற போது பிராமணன் பந்தலை விட்டிறங்கி வெளியே வந்தான். போஜராஜன் சேனைகள் கொல்லையிலே புகுந்து அழிக்கிறதைப் பார்த்து ”அபயம் அபயம் ஓஹோ ராஜாவே, உம்முடைய சேனையெல்லாம் என் கொல்லையிலே புகுந்து பயிரையெல்லாம் அழித்து விட்டார்களே ” என்று கத்தினான். போஜன் ஏன் இப்படி செயதீர்கள் என்று சேனைத்தலைவனை கேட்டான். ”நாங்கள் வழியோடே போகிறச்சே இந்த பிராமணன் பந்தலிலேயிருந்து எங்களைக் கூப்பிட்டு நீங்கள் வேட்டைக்குப் போய் இளைப்பாய்
போகிறீர்கள் என் கொல்லையில் வேண்டிய பதார்த்தமிருக்கிறது.சாப்பிட்டு மடுவிலே தண்ணீர் குடித்து மரத்தடியிலே யிருந்து இளைப்பாறிப் போங்களென்று சொன்னான் . ஆனபடியினாலே நாங்கள் கொள்ளையில் நுழைந்தோம் சாப்பிட்டோம் ” என்று சொன்னான். –
ஆச்சர்யப்பட்ட போஜன் தன் மந்திரி புத்திரிகன் என்கிறவனை அழைத்து இந்த பிராமணன் பந்தலிலே யிருக்கிறபோது தானாக கூப்பிட்டுப் பசியாறிப் போங்களென்று சொல்லி அதன்பிறகு பந்தலைவிட்டு இப்பால் வந்து இப்படி கூச்சல் போடுகிறானே ஏன்?” என்று கேட்டான். யோசித்து விட்டு மறுபடியும் சரவணா பட்டனை பார்த்து ”நீர் இந்த பந்தலிலே போய் இரும் ”என்று போஜனும் மந்திரியும் சொன்னார்கள் . அப்படியே பிராமணன் பந்தலிலே போயிருந்து ராசாவைப் பார்த்து பேசினான் ”போஜ ராஜாவே உம்மைக் கண்ட மாத்திரத்திலே என்னுடைய தரித்திரம் நிவாரணையாச்சு” என்று சொல்ல போஜனும் மந்திரியும் பிராமணனை இப்பாலே அழைத்து இந்த கொல்லையை பத்து லட்சம் பொன்னுக்கு விற்று விட்டு சந்திர சூரியனுள்ளவரைக்கும் போஜ ராஜன் உடைமையாக இருக்க சாஸனம் த…. பிராமணனுக்கு எழுதிக் கொடுத்து அந்த கொல்லையை வாங்கிக் கொண்டு பிராமணனை அனுப்பினார்கள்.
அந்தப் பந்தலின்மேல் போஜன் போய் அமர்ந்தான். திரிலோகமும் தானே ஆளவும் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் பண்ணவும் சகல ஜனங்களுக்கும் உபகாரம் பண்ணவும் மகா தரும சிந்தனையாகநடக்கவும் மனதில் தோணிற்று. ”மந்திரி, இந்தத் தலத்திலே இப்படியிருக்கிற விதம் என்ன ? என்று கேட்க அதுக்கு மந்திரி, ”இவ்விடம் தெய்வீகமான ஸ்தலம் . இவ்விடத்தில் ஏதோ ஒரு அதிசயமுண்டு. அதை தோண்டி வெட்டி சோதிக்க வேணும்” என்றான். அந்த மேட்டை தோண்ட ஒரு ஆள் மட்டம் வெட்டுகிறபோது அதிலே ஆயிரம் சந்திரோதயமானதைப் போல ஒரு சிம்மாசனமிருந்தது. அந்த சிம்மாசனத்தை எடுக்க முடியவில்லை. மந்திரி சொன்னான்;”ராஜா. இது ஏதோ ஒரு தெய்வீகமான சிம்மாசனம் . பிராமண போஜனம். பூசையும் பண்ணி பலி யும் கொடுத்தால் தான் வெளியே அசைக்க முடியும்.” ராஜா அதற்கு ஏற்பாடு பண்ணினா பிறகு சிம்மாசனம் வெளியே எடுக்க முடிந்தது. அந்த சிம்மாசனத்தை தர்ம புரி பட்டணம் கொண்டு போய் ஆயிரம் தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் கட்டி அந்த இட த்தில் சிம்மாசனத்தை வைத்து பூசை நைவேத்தியம் கொடுத்து பட்டணத்திலேயுள்ள பிராமணரையும் குடியானவர்கள் சகல ராசாக்களும் காரியக்காரர் மற்றுமுண்டான எல்லா ஜனங்களும் கூட, யானை குதிரை சதுரங்க சேனாதிபதிகளும் வந்து நிறை கொலுவாக நின்று அதன் மேல் போஜராஜா அமர முயற்சித்தான். சிம்மாசனத்திற்கு 32 படிகள் அதில் முப்பத்திரண்டு பெண் புதுமைகள். முதல் பொம்மை போஜனை நிறுத்தியது. கேள்வி கேட்டது. நீ எந்த விதத்தில் விக்ரமாதித்தனைப் போல் தகுதியானவன் இதில் அமர? என்று கேட்டு ஒரு கதை சொல்கிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



