
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்
பாடல்கள் 24-28
24 ”உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யல்துழனி
வெள்ளன் அலேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப்
பொள்ளநல் வேழத் துரியாய் புலன்நின்கண் போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை எறும்பெனவே”.
வளர்ந்த உயரமான யானையின் தும்பிக்கையின் முனையில் த்வாரம் இருக்கிறது. அது தான் அதற்கு மூச்சு விடும் மூக்கு, அதே சமயம் தண்ணீர் குடிக்க உதவும், தண்ணீரை இழுத்து அடக்கி வேகமாக தன்மீதே ஊற்றிக்கொண்டு குளிக்கும் கையும் அதே தான். அப்படிப்பட்ட யானையாகிய கஜன் என்ற ராக்ஷஸனைக் கொன்று அவன் தோலை ஆடையாக இடுப்பில் அணிந்தவன் சிவன். புலித்தோலும் யானைத்தோலும் சிவன் ஆடை. சிவபெருமானே, எனது ஐம்புலன்களும் உன் பால் என் மனதை செலுத்தமாட்டேன் என்கிறதே. என்னை நெய்க்குடத்தை மொய்க்கும் எறும்பு கூட்டம் போல் இந்த புலன்கள் என் மேல் ஆதிக்கம் செயகிறதே. சத்யம், சாஸ்வதம் ஆன,என்றும் நிலையாக இருப்பதான உன் மீது மனம் செல்லாமல் பொய்யான, தற்காலிகமான உலக மயக்கத்தில் மூழ்கி சுகம் என தவறாக நினைந்து அவஸ்தைப் பட வைக்கிறதே.. நான் உன் அடிமை, நீ என்னை தடுத்தாட்கொண்டவன். நான் பொய்யானவன், நீ மெய்யுருவம். உன் அடிமை நான் தூய்மை இல்லாதவன் என்றாலும் உன் அடிமை என்பதால், என்னைக் கை விட்டுவிடாதே.
25. எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிக்கண் டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர் உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத பெருமையனே.
அவனுக்கு காலன், யமன் என்று பெயர். அவன் ஒவ்வொரு நிமகிஷமும் நம்மை நெருங்கி வந்து கொண்டே இருக்கிறான். அவனை நெருங்கவிடாமல் உன் தாமரை மலர்த் திருவடிகளை சரணடைந்தவர்கள், உன் அடியவர்கள். நானும் அதில் ஒருவன். இருப்பினும் பல எறும்புகளுக்கு இடையே அகப்பட்ட புழு போல் ஐம்புலன்கள் என்னை அரித்து தின் கிறதே. நான் இதிலிருந்து தப்பவேண்டும். உன்னைவிட்டு நீங்காத பெருமை எனக்கு வேண்டும். நான் பயனில்லாதவன், தனியேன். என்னை கை விட்டுவிடாதே உத்தர கோசமங்கை அரசே.
26. பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே.
உத்தரகோச மங்கை அரசே, ஓவென்று அலைகள் ஆர்ப்பரிக்க, கங்கா பிரவாஹ த்தில் ஒரு சின்ன படகு வேகமான நீரோட்டத்தை எதிர்த்து பயணிப்பது போல, நான் என் ஐம்புலன்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு உன்னை அண்டினேன். வெள்ளை நிறமும் பால் போல் குளிர்ச்சியும் பொருந்திய, பிறைச்சந்திரன், தவழ்கின்ற, சடையினுடைய, பரமாகாஸத்திலுள்ள, செழுமையாகிய மாணிக்கமே, மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல, உன்னை விட்டு நீங்கின, அஞ்சுதலாகிய குணத்தையுடைய என்னை நீ கை விட்டு விடாதே .
27.கொழுமணி ஏர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண் டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னும் காட்டுகண் டாய்நின் புலன்கழலே.
உடல் முழுவதும், நடுக்கம். பக்தியால் மனமுருகி அழுகின்ற, அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து, அடிமை என்னை ஆட்கொண்டருளி, தூய்மைப் படுத்திய மாணிக்கமே, சிவபெருமானே, செழுமையாகிய முத்துப் போன்ற, அழகிய, பல்லினையுடைய மாதராரது, தனங்களாகிய இருகுன்றுகளின் நடுவில், போய், மயங்கி விழுகின்ற அடியேனை, இழிந்தவன் என எண்ணி என்னை கை விட்டுவிடாதே. இனியும் முன் போல, உனது ஞானமாகிய திருவடியை, அடியேனுக்குக் காட்டி அருள் புரி. திருப்பெருந்துறையில் நான் பார்த்து வணங்கிய குருவாக ஏற்ற அதே திருக்கோலத்தில் உத்தரகோசமங்கை அரசே, நீ மீண்டும் இங்கே எனக்கு உனைக் காட்டி அருளவேண்டும்.
28. புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே
துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என் தொழுகுலமே.
விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், அஞ்சிக் கலக்கமுற்ற போது, திருப்பாற்கடலில் திடீரென்று எழுந்த,கொடிய ஆலஹால விஷத்தை அப்படியே துளியும் யோசிக்காமல் அமுதமாக விழுங்கியவனே நீலகண்டா, என்னை ஆட்கொண்டவனே, என் சொற்றுணை வேதியனே, சோதி வானவனே மீண்டும் எனக்கு பிறப்பு வேண்டாம் ஐயா. நடுங்குகின்றேன். உன்னை அணுகுவதை விட்டு, ஏதோ ஒரு பொய் வழியிலே உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை கை விட்டுவிடாதே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



