
வரத மகாத்மியம்- நங்கநல்லூர் J K SIVAN
காளமேக புலவர் -1
உங்களுக்கு வரதனைத் தெரியுமா? என்றால் அது அசட்டுக் கேள்வி. எத்தனையோ வரதன்கள் இருக்கி றார்களே. அடையாளம் வேண்டாம். நான் சொல்லும் வரதன் ஸ்ரீரங்கம் மடப்பள்ளியில் சமையல் கார வைஷ்ணவர். அவரது நினைப்பு பூரா திருவானைக் கா என்கிற பக்கத்து ஊரில் இருந்த மோகனாங்கி என்கிற சைவப்பெண் மேல் போனதால் சைவரானார். காதலுக்காக எதையும் செய்பவர்கள் அக்காலத்திலேயே உண்டு.
ஒரு பெண் வாசகர் என்னிடம் சொன்னது;
‘சிவன் மாமா, முதன் முதலில் சைவ வைணவ கலப்பு எந்த குடும்பத்தில் நடந்தது? என்னை ஒருநாள் என் சிறு பெண் என்னிடம் கேட்ட இந்த கேள்வியில் நான் அசந்து போனேன்? அதான் உங்களைக் கேட்டேன். என் பெண்ணே பிறகு பதில் சொன்னாள் :
”அம்மா சிவ பெருமான், சைவம், அவர் மனைவி திருமாலின் சகோதரி, வைஷ்ணவம், இவர்கள் இருவரும் மணந்ததால் முதலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள் தானே? ”
அந்த வாசகரின் பெண் ரொம்ப கெட்டிக்காரி. உண்மையில் சைவ வைணவ பேதமே அக்காலத்தில் இல்லை.
மீண்டும் வரதன் கதைக்கு திரும்புவோம்.
ஒரு நாள் அந்தப் பெண்ணுக்காக வரதன் திருவானைக் கா கோவிலில் காத்திருந்து, அப்படியே களைத்து தூங்கிப் போனதில் அதிருஷ்டம் அடித்தது வரதனுக்கு. அன்றிரவு ஒரு அந்தண பக்தன் செய்த தவத்தை மெச்சி சரஸ்வதி தேவி பிரத்யக்ஷமாகி கோவிலில் படுத்திருந்த அந்த அந்தணனைப் பரிசோதிக்க தனது வாய் தாம்பூலத்தை அவனுக்கு அளிக்க முன்வந்த போது, அந்த அந்தணன் அவளை யார் என்று அறியா மல், ”உன் எச்சில் எல்லாம் எனக்கு வேண்டாம்” என்று தடுத்து மறுக்க, அருகே படுத்துறங்கிய வரதனுக்கு அந்த தாம்பூலத்தை வாயில் அளித்தாள் ஸரஸ்வதி தேவி.
சமையல்கார வரதனும் தூக்கத்தில் காதலி மோக னாங் கியையே நினைத்து கனவு கண்டதால் தனது காதலி மோகனாங்கி தான் வாயில் தாம்பூலம் தருகிறாள் என்று என்று அரைத்தூக்கத்தில் சந்தோஷத் தோடு வாங்கி மென்று உண்டான். அந்தக் கணம் முதல் கல்விக்கடவுள் ஸரஸ்வதியருளால் கவி இயற்றும் சக்தி வந்தது. சகல சாஸ்திரங்களும் அவனுள் அடக்கமானது. கருமேகம் அடித்து நொறுக்கி மழை பொழிவது போல் தமிழ் கடல் மடையாக அவனிடமிருந்து வெளிப்பட்டது. அதனால் வரதனின் பெயர் ” காள -மேகம்” ஆயிற்று. ஆசு கவியானான். இனி சில காளமேகப்புலவர் பாடல்களை ரசிப்போம்.
திருமலைராயன் பட்டினம் என்று காரைக்கால் பக்கம் ஒரு ஊர். அதில் காளமேகம் போய்க் கொண்டிருக் கும்போது சில புலவர்கள் அவரை மடக்கி ஒரு சிலேடை சொல்ல வைத்தனர். அவரோ கண்ணிமைக் கும் நேரத்தில் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் உள்ள ஒற்றுமையை வைத்து அருமையான ஒரு சிம்பிள் சிலேடைப்பாட்டு இயற்றினார். இது தான் இது. அர்த்தம் தானாகவே புரிகிறதே. இருந்தாலும் சொல்கிறேன் ;
வாழை சில நன்றாக பழுத்து கனிந்து, நஞ்சுபோய், போய் இருக்கும். பாம்பு நஞ்சை.விஷத்தை உடையது வாழையைத் தோல் உரித்து உள்ளே தள்ளுகிறோம். பாம்பு சட்டை உறிக்கும் (தோல்). நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே… உங்களுக்கு தெரியும். வாழை உச்சியிலிருக்கும் பல் பட்டால் வாழைப்பழம் துண்டாகி வயிற்றில் இறங்கும். பாம்பின் விஷப்பல் பட்டால் ஆள் மீள மாட்டான். எனவே பாம்பும் வாழைப்பழமும் ஒன்றே ….
”நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்”
ஒரு தரம் பழனியில் முருகனை தரிசிக்கி றார் காள மேகம். எனக்கு இந்த பெரும் உடம்பு (பெருங்காயம்) வேண்டாம். சீரான உள்ளத்தை, மனதை தந்தால் போதுமே. (சீரகம்) இந்த உபயோகமற்ற உடல் (வெங்காயம்) சுருங்கி சக்தியிழந்து பிரயோசனமில் லாமல் இருந்து என்ன பயம் (சுக்கானால், வெந்தயத்தால் ) எதற்கு இந்த சரக்கை (நாட்டு மருந்து) நான் சுமக்கவேண்டும். இந்த தத்துவப் பாடலில் வெங்காயம், சீரகம், சுக்கு, வெந்தயம், என்ற பல மூலிகை மருந்து சரக்கு வரும் அழகை ரசிக்கலாம்
”வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல் வேண்டேன்
பெருங்காயம் வேரகத்துச் செட்டியாரே”
எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் பாம்பையும் எள் எண்ணெய் இரண்டையும் உணர்த்தும் ஒரு சிலேடை காளமேகத்தால் கிடைத்துள்ளது..
எள் செக்கில் ஆட்டப்படும்,. எண்ணையாக அரை படும்போது சத்தம் வரும்.. எண்ணை ஆனவுடன் குடத்தில் சேமிப்பார்கள். எண்ணைக்குடத்தை மூடியைத் திறந்து பார்த்தால் நமது முகம் தெரியும். தலையில் அழுத்தி எண்ணையைத் தேய்த்தால் சூடு அடங்கி பரபர வென்றிருக்கும். எண்ணெய் ஆட்டியபின் எள் பிண்ணாக்கும் சக்கையாக கிடைக்கும்.
பாம்பு படமெடுத்தாடும். அதை பாம்பாட்டி ஒரு கூடையிலோ, மூடி போட்ட பாத்த்ரத்திலோ விட்டு மூடுவான். ஆடும்போது புஸ் புஸ் என்று சீரும். மூடி யைத் திறந்து உள்ளே பார்த்தால் உடனே தலை தூக்கி நம்மை எதிர்த்து பார்க்கும். அதன் மண்டையில் பாம்பாட்டி ஒரு தட்டு தட்டி அதைப் பிடித்தால் பர பர வென்று நெளியும் வார்த்தை ஜாலத்தில் உள்ள ஒற்றுமை எள்ளுக்கும் பாம்பிற்கும் இருப்பதை நாலே வரியில் அழகான சிலேடையாக்கியது தான் சிறப்பு..
‘ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் – ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது’
அடுத்தது ரொம்பவுமே கடினமானது. பொருள் புரியாது. ஏதோ பிதற்றல் போல இருக்கும்
காக்கைகா காகூகை, கூகைக்கா காகாக்கைகோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க — கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா”
இதற்கு அர்த்தம் சொல்லாவிட்டால் அடிக்க வருவீர்கள்.காக்கைக்கு — காக்காவிற்கு
ஆகா கூகை — ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது.
கோக்கு – கோ என்றால் அரசன்.
கூ = பூமி, அவன் நாடு,
காக்கை – காப்பது அரசாள்வது
கொக்கொக்க — கொக்கைப் போன்று
கைக் கை – விரோதிகளை வென்று
கா காப்பது.
கோர்வையாகச் சொன்னால் காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ரெண்டுக்கும் நட்பு கிடையாது காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும்.
ஒரு ராஜாவுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றிய மையாதது. எதிரிகளை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்று பொருள்.
மீண்டும் .சந்திப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



