
நஷ்டம் எத்தனை? – நங்கநல்லூர் J K SIVAN
”ஸஹஸ்ரநாமம் , உலகத்திலேயே பெரிய ஏமாளி, கோட்டை விடுவதற்கென்றே உருவான தேசம் நமது பாரத தேசம் தான் போல் தோன்றுகிறது” .
”ஸார், இப்படி எல்லாம் குறைகளை பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள்? நாம் பாக்கியசாலிகள், நமக்கு என்ன நஷ்டம்.?’ என்றார் ஸஹஸ்ரநாமம் .
‘உலகத்தில் இப்படி வேறே எங்காவது வெளிநாட்டு கொள்ளையன் ஒரே ஊரில் 18 முறை வந்து கோடிக்கணக்கான பொன்னும் வெள்ளியும் விலைமதிக்க முடியாத நகைகளையும் கொண்டு போய், கோவில் விக்ரஹத்தையும் உடைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறீரா? வியாபாரியாக வந்து நாட்டையே ஆக்கிரமித்து முன்னூறு வருஷங்களுக்கு மேல் எங்காவது யாராவது அரசாட்சி நடத்தியது உமக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்?””…….””ஸஹஸ்ரநாமம் சார், வேறே நாடுகளில் எங்காவது இத்தனை பேர்களை, குழந்தைகளைக்கூட, கொன்று, பெண்களை கற்பழித்து, மதம் மாற்றி, கோவில்களை இடித்து, மசூதி சர்ச் கல்லறை, கட்டியதாக படித்ததுண்டா?முஹம்மது பின் காசிம் கொன்றது பத்தாயிரம் பேருக்கு மேல் என்கிறதே சரித்திரம்? வேறே எந்த நாட்டு சரித்திரம் இது போல் சொல்கிறது? ஒளரங்க சீப் ஆட்சி காலத்தில் நடந்த அக்கிரமங்களை சரித்திர பக்கங்கள் சொல்வது போல வேறே எங்காவது படித்ததுண்டா?தாஜ் மஹால் கட்ட உபயோகித்த பொன் , வைர, நவரத்ன விலையுயர்ந்த கற்களை வெள்ளைக்காரர்கள் பெயர்த்து எடுத்துக் கொண்ட போனதின் மதிப்பு பல மில்லியன் டாலர்களுக்கு மேல் என்று சொல்வது கூட பொய்யா? ‘……………’எவ்வளவோ சிலைகள் உடைபட்டு, பொன்னும் பொருளும் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு போனதாக வேறே எங்காவது சரித்திரம் உண்டா?”’……………..””கொள்ளையடிப்பது, திருடுவது, எங்கே நடக்கும்? பொன்னும் பொருளும் இடத்தில் தானே? இந்த தேசத்தில் இருந்தது போல் இயற்கை வளங்கள், செல்வம் வேறே எங்காவது இருந்து கொண்டுபோனதாக தெரியுமா? கோஹினூர் வைரம், நாதிர்ஷாஹா கொண்டு போன தங்கமயில் சிம்மாசனம், கப்பல் கப்பலாக ராபர்ட் கிளைவ் இங்கிலாந்துக்கு கடத்திய செல்வம் ரெண்டரை கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புஉள்ளது (ஐநூறு வருஷங்களுக்கு முன்பே!) என்று சரித்திரம் சொல்கிறதே. இதைப்போல் வேறே ஏதாவது தெரியுமா?’…………………””வெளிநாட்டினரை விட்டு தள்ளுங்கள், நாமே நமது செல்வங்களை அறியாமல் கோட்டை விட்டது பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”’தெரியாது ஸார் , நீங்களே சொல்லுங்கள்?”’ பொருட்செல்வம், பொன், பொருள் எல்லாவற்றையும் விடுங்கள், எத்தனையோ ஏட்டு சுவடிகள், நூல்கள் நாள்கணக்கில், மாதக்கணக்கில் தீப்பற்றி எரிந்தது நாளந்தா பல்கலைக் கழகத்தில் என்பதாவது தெரியுமா? பக்தியார் கில்ஜி என்ற இஸ்லாமியன் அருமை பெருமை தெரியாமல் அழித்த களை செல்வங்கள் அவை”’எத்தனையோ வீடுகளில் ஏட்டுச்சுவடிகள் செல்லரித்து, கரையான் தின்று அழிந்தது புரியுமா? தமிழ்த்தாத்தா கண்ணில் ரத்தத்துடன் சொல்லியிருப்பது அறிவீர்களா? எண்ணற்ற வைணவ நூல்கள், சைவ நூல்கள் காணாமல் போனது எப்படி?” சிவன் ஸார் தலை சுற்றுகிறது. நீங்களே சொல்லுங்கள்””அதெல்லாம் வேண்டாம் ஒரே ஒரு சின்ன உதாரணம் சொல்லி நிறுத்துகிறேன், நாமாக கோட்டை விட்டது பிறர் மூலம் வேட்டையாடப்பட்டு இழந்ததை விட அதிகம். அது தான் மன்னிக்க முடியாத குற்றம்””என்ன அப்படி, ஒன்று சொல்லுங்களேன்?”வேதவியாசர் 4 வேதங்கள், 18 புராணங்கள், மஹா பாரதம் எல்லாம் எழுதினார் என்கிறோமே..அது உண்மையில் எவ்வளவு தெரியுமா?’வியாஸர் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் , 1180 சாகைகளாக, வேதங்களை எழுதி நான்கு வேதங்களாக பிரித்தார். ரிக் வேதத்தில் மட்டும் 21 சாகைகள் (பிரிவுகள், கிளைகள் , ஸம்ஹீதை, ஆரண்யகம், பிராமணம், உபநிஷத் என்று) ஆனால் இருப்பது என்னவோ இப்போது ஒரே ஒரு சாகை மட்டுமே. மற்ற இருபது? காற்றில் கலந்து விட்டது. யஜுர்வேதத்தில் 101+ சாகைகள், இருப்பது மூணோ நாலோ , 97?… சாமவேதத்தில் 1000+ சாகைகள் இயற்றி, நமக்கு மிஞ்சியது மூன்று மட்டுமே. மீது 997?? அதர்வண வேதத்தில் ஒன்பது, உள்ளது ரெண்டு மட்டுமே. உபநிஷத்த்துக்கள் சம்ஹிதைகள், ஆரண்யகங்கள் ப்ராமணங்கள் என்று எத்தனையோ இழந்ததைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு தான் சமஸ்க்ரிதமே தேவை இல்லையே! படிக்கவேண்டிய அவசியமே இல்லையே. செத்த மொழி என்றல்லவோ அதற்குப் பெயர் ?இருப்பதை தேடி படித்து அறிந்து பயன் பெற்றால் அதுவே புண்யம் என்று சொல்ல தோன்றுகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


