HUMAN WONDERS J K SIVAN

அதிசய உலகமடா…நங்கநல்லூர்  J K SIVAN
சிலர்  வாழ்க்கை  நமக்கு  பாடமாக  அமைகிறது. ஏன்?  அங்கே  அயராத உழைப்பு மட்டும்  இல்லை. தன்னம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும்,  இறைவன் அருளும் சேர்ந்ததால் தான் அவர்கள் நம் கண்ணுக்கு   உதாரண புருஷர்களாக  மனித சமுதாயத்தின்   பாதையில் நமக்கு வழிகாட்டும் மைல் கற்களாக  பரிமளிக்கிறார்கள்.
சிலரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.வாய்க்கு வாய் அம்பானி அதானி என்கிறார்களே, உழைப்பினால் உச்சிக்கு போனவர்கள், அந்த திருபாய் அம்பானி ஆரம்பத்தில் ஒரு சாதாரண குஜராத்தி வாலிபனாக ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி தான். அவரை உலக பணக்காரர்களில் ஒருவனாக மாற்றியது எது?
அல்லா  பிச்சை ஜைனுல்லாபுதின்   அப்துல் கலாம் எனும் APJ  கலாம் இந்திய விண்வெளி அணு ஆராய்ச்சியில் சிறந்து புகழ் பெற்று, தன்னுடைய திறமையால், படிப்பால் உழைப்பால், இந்தியாவின் ஜனாதிபதியானவர், பாரதரத்நா  ஆரம்பத்தில் ஆகாய விமான ஒட்டி பைலட் தேர்வில் ”இவன் லாயக்கு இல்லை” என்று நிராகரிக்கப்பட்டவர்.
இந்திய சினிமா உலகின்  என்றும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குரல் அலாதி பெருமை வாய்ந்தது.  அவரை ஆரம்பகாலத்தில்  அகில இந்திய ரேடியோ   குரல் தேர்வில் நிராகரித்தது. ” இவன் கட்டை குரல்  செல்லுபடியாகாது  எவரும் விரும்பமாட்டார்கள்.”
உலக கிரிக்கெட் கடவுள் என்று எல்லோரும் போற்றும் சச்சின் டெண்டுல்கர் முன்னேற்றத்துக்கு அவர் படிப்பு தடையாக நிற்க வில்லை.. ” நான்  எட்டாவது வகுப்பு தேர்வு பரிக்ஷையில் FAIL  ஆனவன்” என்று சொல்கிறாரே. அது அவர் வளர்ச்சிக்கு  குறுக்கே நின்றதா?
கணினி உலகமே கண்டு வியக்கும், அதி அற்புத மூளைக்கு சொந்தக்காரர்  பில் கேட்ஸ் என்ன சொல்கிறார்?” நான் காலேஜ் யூனிவேர்சிடி   BA  MA  என்று எதையும் நிறைவாக முடிக்காதவன்”
ஆப்பிள்  கம்ப்யூட்டர் தோற்றுவித்த  ஸ்டீவ் ஜாப்ஸ் படுக்க இடமில்லாமல் நண்பர்கள் வீட்டு தரையில் படுத்துறங்கியவர். பழைய கோக் பாட்டில்களை விற்று உணவுக்கு  பணம் சம்பாதித்தவர். அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கோவிலில் வாரக்  கடைசிநாட்களில் க்யூவில் நின்று இலவச உணவு வாங்கி சாப்பிட்டவர்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டோனி பிளேர் பள்ளிக்கூட காலங்களில் என் வாத்தியார்கள் என்னை ” நீ தண்டம் உதவாக்கரை”  என்று திட்டி இருக்கிறார்கள்.  அப்படியும் அவரால் எப்படி  ஒரு நாட்டின் பிரதமராக முடிந்தது..
உலகப்புகழ் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பள்ளியில் படிக்கும்போது அவரது  வாத்யார்கள் ”டேய் , உனக்கு மூளையே கிடையாது, எதையும் நத்தை வேகத்தில் தான்  உன்னால் கொஞ்சமாவது புரிந்து கொள்ளமுடிகிறது என்று திட்டி இருக்கிறார்கள். நாலு வயது வரை பேசாத ஆசாமி. ஏழாவது வயதில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்.
துடைப்பத்தின் மேல் பறக்கும்  ஹாரி பாட்டர் உலகப்பிரசித்தி பெற்ற  குழந்தைகள்  கதாநாயகன்.  ஹார்ரி பாட்டர் உலகப்புகழ் பெற்ற   ஜே.கே.  ரௌலிங்  புத்தகத்தை 12முறை   இது பதிப்புக்கு  ஏற்றதல்ல என்று திருப்பித்தந்தார்கள்.
இங்கிலாந்து பிரதமர்  வின்ஸ்டன் சர்ச்சில் ஆறாம் வகுப்பில் fail. பலமுறை தேர்தலில் தோல்வி. 62வது  வயதில்  பிரசித்தி பெற்ற  இங்கிலாந்து பிரதமர்.
சார்லி சாப்ளின் என  உலக புகழ் சிரிப்பு நடிகரைத் தெரியாதவரே  கிடையாது. ஆனால் அவரை ஹாலிவூட்  தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில்  ”நீயும் உன் நடிப்பும் சுத்த பேத்தல்,  முட்டாள் தனம்” என்று  விரட்டி விட்டார்கள்.
நியூட்டன் எனும்  புவி ஈர்ப்பு சக்தி கண்டுபிடித் தவரை  அவர் அம்மா இளம் வயதில் பள்ளிக்கூடத்திலிருந்து தராதர வென்று இழுத்து வந்து வயலில் மாடு மேய்க்க விட்டாள் . உனக்கு படிப்பும் வரலை ஒரு மண்ணும் வரலை என்ற அவள் சொல் எவ்வளவு பொய்யாகிவிட்டது.
இதிலிருந்து என்ன தெரிகிறது. வாழ்க்கை எனது நாம் எதை இது வரை  முயன்று செய்ததில் தோற்றுப்போனது மட்டுமா ? இல்லை. நம்மால் சாதிக்கபடவேண்டியது நமக்குத் தெரியாமலே  பல விஷயங்கள் இருக்கிறது. இது பகவான் சங்கல்பம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;