
சில ஆச்சர்ய விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
இதில் காணும் சில சமாச்சாரங்கள் நம்மை ஆச்சர்யத் தில் திக்குமுக்காட வைக்கிறது.
நாம் இறந்த பிறகும் நமது கண்களுக்கு 6 மணிநேரம் பார்க்கும் தன்மை இருக்குமாம். இறந்தவர் கண்ணை மூடி விடுகிறோமே அப்புறம் எப்படி பார்க்கும்? என்று கேட்பீர்கள். நான் சடலம் பார்க்கும் என்றா சொன்னேன். ‘பார்க்கும் தன்மை’ உள்ளது. ஆனால் நாம் பார்க்க விடுவதில்லை.
இப்போதெல்லாம் சுகபிரசவம் ஏட்டில் தான் படிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 குழந்தைகள் பிறந்தார்கள். நான் 13வது. எந்த டாக்டரிடமும், ஆஸ்பத்திரிக்கு, எக்ஸ்ரே, ஸ்கேன் எதற்கும் என் அம்மா, மற்றும் பல தாய்மார்கள் போனதில்லை. சிஸேரி யன் என்ற வார்த்தை கேள்விப்பட்டதே இல்லை. பள்ளிக்கூடம் பார்க்காத மருத்துவச்சி வெத்திலை பாக்கு புகையிலையோடு இடுப்பில் கத்தியோடு வருவாள். வெந்நீர் தவலையில் சூடான வெந்நீர் இருக்கும். அப்புறம் குழந்தை பிறந்த அழுகுரல் கேட்கும்…
முதன் முதலில் சுகப்ரஸவம் இல்லாமல் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவன் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீஸேரியன்’ என்று பெயர் வந்தது.
சில ஆஸ்பத்திரிகள் சுகப்பிரசவத்தை விட CAESARIAN டெலிவரியை ஆதரிக்கிறார்கள். பணம் பல மடங்கு கூடவாச்சே என்று சொல்வதை .ஜீரணிக்க முடியவில் லை. உடம்பு எவ்வளவு பாழாகும் என்று நினைத்து பார்க்கக் கூட முடியவில்லை. இயற்கைக்கு விரோதமாக நிறைய காரியங்கள் நாம் செயகிறோம்.
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. இனி கவனித்து பாருங்கள்.
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். என் பேத்தி ஆறுவயதிலும் என்னை துளைத்தெடுக்கிறாள்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்..
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. இவ்வளவு மொபைல் போனா ? என்று வாயைப் பிளக்காமல் செல் என்றால் ‘உடலில் உயிர் அணுக்கள்” என்று அர்த்தம் புரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் ஜெனெரேஷன் என்கிறோமே அந்த தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
மார்க்கோ போலோ MARCO POLO என்கிற சிகரெட் பாக்கெட் நான் சிறுவயதில் நிறைய சேர்த்து பண்டமாற்று மூலம் WILLS , SCISSORS , OLD PLAYERS NAVY CUT, LUCKY STRIKE, PASSING SHOW, BIRKLEY போன்ற பல சிகரெட் பாக்கெட் அட்டைகளை பெற்றிருக்கிறேன். நிறைய சிகரெட் பாக்கெட் அட்டைகள் வைத்திருந்த முத்துகிருஷ்ணன் என்ற சிநேகிதன் எங்களால் பெரும் பணக்காரனாக கருதப்பட்டவர். அவனைச் சுற்றி பலபேர் வளைய வருவோம்.
நெருப்பு பேட்டி matches சேர்ப்பது, stamps, கிளிஞ்சல்கள், SHELLS , COINS சேர்ப்பது ஒரு உற்சாகமான பொழுதுபோக்காக இருந்தது. MARCOPOLO சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி மாண்டவர்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தருமாம் .
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம்.
அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம். அதன் விதைகள் நிறைய இருக்கும்.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோ மொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
பச்சோந்திஎன்ற ஓணானின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம். யாரோ ஒரு மா மேதை எவ்வளவு நேரம் காலம் செலவ ழித் து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்திருக் கிறான். பாராட்டுகள்.
ஒரு புள்ளி POINT. FULLSTOP அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் AMOEBA நிரப்ப முடியும்.
இன்னும் நிறைய அடுத்த பதிவு ஒன்றில் சொல்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



