
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN
குலத்தளவே ஆகுமாம் குணம்.
வள்ளுவர் பலே ஆள். பார்ப்பதற்கு சாதுவாக ஒருகையில் ஏட்டுச்சுவடி, இன்னொரு கையில் எழுத்தாணியோடு உட்கார்ந்திருக்கிறாரே தவிர ரொம்ப ரொம்ப விஷய ஞானி. எதையும் பளிச்சென்று ஒன்றரை அடியில் சொல்லிவிடுபவர். இதோ சில உதாரணங்கள்.
”நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்”
இந்த ஆள் ஏன் இப்படி உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படி அவன் குணம் இருக்கிறது?. அன்பு, பொறுமை, பரந்த மனப்பான்மை எதுவுமே இல்லையே என்று தோன்றினால் நிச்சயம் அவன் வந்த வழி, பரம்பரை, குடும்பம் சந்தேகத்துக் குட் பட்டது என்கிறார்.
”.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.”
ஒரு நிலத்தை பச்சை பசேல் என்று பார்க்கிறோம், இன்னொன்று கல்லும் முள்ளும் புதிருமாக தண்ணீர் என்ற வஸ்துவே இல்லாமல் வரண்டு கிடைக்கிறது. இந்த இரு இடங்களிலும் விதை விவகாய்க்கிறோம். நல்ல நிலத்தில் போட்ட விதை முளைக்கும் விதத்திலேயே அந்த நிலத்தின் தன்மை, வளமை, செழுமையை அதன் வளர்ச்சி காட்டிவிடும். இதைப் போல தான் ஒருவனின் பரம்பரை குணத்தை அவன் பேசும் ஒரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் காட்டிக் கொடுத்துவிடும் என்கிறார் வள்ளுவர்.
”நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டும் யார்க்கும் பணிவு.”
ஒருவன் வினயமாக, எல்லோரிடமும் பண்போடு, நன்மையை மனதில் கொண்டு இருப்பவனாக இருந்தால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். எடுத்தெறிந்து பேசாமல் அமைதியாக, தவறுகள் புரியாமல், பணிவுடன் பழக வேண்டும். அவனது பரம்பரை, இப்படிப்பட்ட குணத்தால் உயர்வாக பேசப்பட்டு அவனுக்கு புகழைத் தேடித்தரும்.
”இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.”
ஒருவன் தான் செய்கிற செயல்களால், பேசும் வார்த்தைகளால் தனது குடும்பத்துக்கு, பரம்பரைக்கு, வம்சத்துக்கு கெட்ட பெயர் உண்டாக்கினால், அது அவன் தனக்கே, தனது பரம்பரைக்கே புரியும் துரோகம்.
”சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்’.
இப்படி செய்வதால் தனக்கு அதிகாரம், பதவி, பணம் கிடைக்கும் என்பதற்காக நல்ல குணம் படைத்தவர்கள்,சிறந்த பாரம்பரியம் கொண்டவர்கள், இழிந்த செயல்களை புரிய மாட்டார்கள்.
”பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு”.
நல்ல பெருமை வாய்ந்த பாரம்பரியத்தில் உதித்தவர்கள், நிறைய செல்வம் இருந்தபோது, தனவந்தர்களாக இருந்த போது ஊருணி நீர் போல, பொது இடத்தின் கிணறுபோல, எல்லோருக்கும் உதவுபவர்களாகவே திகழ்பவர்கள். எல்லோ ரிடத்திலும் அவர்களுக்கு உள்ள அன்பு, பண்பு, மரியாதை, பாசம் , நேசம் எல்லாமுமே அவர்கள் நொடித்துப் போன நிலையிலும், ஏழ்மையான நிலையிலிலும் சிறிதும் குறையாது அதே மனநிலையில் இருப்பவர்கள். தமது தரம் தாழ்ந்து போகாமல் நிலையாக இருப்பவர்கள்.
”தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை”
மக்கள், தங்கள் உயரிய நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் போது தலையிலிருந்து நீங்கிய மயிரைப் போன்று இகழப்படுவார்கள். அவனுக்கு மதிப்பு அவ்வளவு தான். தெருவில் ஓடும் சொறிநாய் கூட அவனை மதிக்காது. பணம் இதில் முக்கியம் இல்லை. அவன் மானம் மரியாதை, கல்வி, அவன் பொறுமை, தன்னலமற்ற சேவை, பண்பு, பெருந்தன்மை இதைத் தான் மக்கள் நன்றாக கூர்ந்து கவனிக்கிறார்கள். வேஷதாரி அடையாளம் காணப்பட்டு விடுவான்.
”குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் ”
வள்ளுவர் மேலே கண்ட குறளில் சொல்வதென்ன?
செல்வம், சிறப்பு, மதிப்பு, மானம், மரியாதை, முதலியவை மலை போல் நிறைந்து நிலையில் உள்ளபோதும், தமது நிலைப்பாட்டுக்கு உரிய செயல்கள், சொற்களில் ஒரு குந்து மணி அளவு கூட குறைந்து போகாமல் பணிவோடும், அன்போடும், எளிமையோடும் நடந்து கொள்வார்கள். மதிப்பில் குறையாமல் இருந்து மறைந்து போவார்களே தவிர இம்மியும் மாற மாட்ட்டார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



