BILVASHTAKAM J K SIVAN

வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
1 त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं
Tridalam trigunakaram trinetram cha triyayudham Trijanma papa samharam ekabilvam shivarpanam
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்ப்பணம்.
”பரமேசா, உனக்கு ஒரே ஒரு வில்வ தளத்தை அர்ப்ப ணிக்கிறேன், அது மூன்று பிரிவோடுள்ளது. அது எதைக் குறிக்கிறது? மனிதனை ஆட்டுவிக்கும் மூன்று குணங் கள், சத்வ, ரஜோ, தமோ குணங்கள். அவற்றை தான் அது குறிக்கிறது. உன்னுடைய முக்கண், த்ரி நேத்ரங்கள் போல், உன்னுடைய த்ரிசூலம் போல, என் கர்ம வினைகளை, பாபங்களை மூன்று பிறவியிலும் நான் செய்ததை அழிக்கும் சக்தி கொண்டது அந்த ஒரு வில்வதளம்.
2. त्रिशाखैः बिल्वपत्रैश्च अच्चिद्रैः कॊमलैः शुभैः तवपूजां करिष्यामि ऎकबिल्वं शिवार्पणं
Trishakhaih bilvapatraishcha achchidraih komalaih shubhaih Tavavapujam karishhyami ekabilvam shivarpanam
த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை: தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்ப்பணம்.
ஆஹா ஒரு வில்வ தளமே எவ்வளவு அழகாக அள வோடு மூன்று பிரிவுகளாக ஒரு வித துவாரமும், துளையும், இன்றி இணைந்து இருக்கிறது. முத் தொழில் புரியும் ப்ரம்மா விஷ்ணு மகேஸ்வரன் மூவரும் இணை பிரியாமல் ஒன்றாக இருக்கிற மாதிரி இருக்கிறதே. மஹேஸ்வரா, இந்தா, இந்த ஒரு தளத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன் சர்வேசா. உனக்கு த்ரிப்தியா ?
3. कॊटि कन्या महादानं तिलपर्वत कॊटयः काञ्चनं क्षीलदानॆन ऎकबिल्वं शिवार्पणं
Koti kanya maha danam tila parvata kotayah Kanchanam sheela danena ekabilvam shivarpanam
கோடிகன்யாமஹாதானம் கில பர்வத – கோடய: காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்ப்பணம்.
இதோ இந்த ஒரே ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ச்சனை செய்வது எதற்கு சமம் தெரியுமா? கோடி கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் பண்ணிவைத்து கன்னிகா தானம் செய்த பலன் ஒரு மலையளவு எள் போன்ற தானியங்களை தானம் செய்த பலன். நிறைய தங்கத் தை வாரி தானம் செய்த பலன், இதெல்லாம் விட அதிக பலன் தருவது.
4. काशीक्षॆत्र निवासं च कालभैरव दर्शनं प्रयागॆ माधवं दृष्ट्वा ऎकबिल्वं शिवार्पणं
Kashikshetranivasam cha kalabhairavadarshanam Prayaga madhav am drushtva ekabilvam shivarpanam
காஸி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம், ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்ப்பணம்.
”பரமேஸ்வரா, இந்தா” என்று ஒரு வில்வ இலையை, தளத்தை, அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன் இன்னும் என்ன தெரியுமா?, காசி க்ஷேத்ரத்தில் பல காலம் வசித்து தினமும் காசி விஸ்வநாதனை தரிசிக்கும் பலன். காசியில் காலபைரவனை, பிரயாகையில் பிந்து மாதவனை நமஸ்கரிக்கும் பலனை விட மேலானது. எல்லாம் இந்த ஒரே ஒரு வில்வ இலை அர்ச்சனையால் கிடைப்பது. இதற்கு மேல் என்ன சொல்வேன்?
5. इन्दुवारॆ व्रतं स्थित्वा निराहारॊ महॆश्वराःनक्तं हौष्यामि दॆवॆश ऎकबिल्वं शिवार्पणं.
Induvare vratam sthitwa niraharo maheshwara Naktam haoushy ami devecha eka bilvam shivarpanam
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர: நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்ப்பணம்.
சோமவார விரதம் என திங்கட்கிழமைகளில் ஒரு துளி ஜலம் கூட பருகாமல், நிர்ஜல உபவாச விரதம் இருந்து பரமேஸ் வரனுக்கு பூஜை பண்ணினால் கிடைக்கும் பலனை விட கூடுதலாக எளிதில் ஒரே ஒரு வில்வ இலையை,தளத்தை அரிச்சிப்பதால், அர்ப்பணிப்பதால் பெறலாம் என சுருக்கு வழி காட்டுகிறார் ஆதி சங்கரர். ஒரே ஒரு வில்வ இலைக்கு இத்தனை பலனா? ஆச்சர்யமாக இருக்கிறதே! சிவன் அபிஷேகப்பிரியன். வில்வத்தால் அவனை அர்ச்சிப் பதே வில்வாபிஷேகம். சிவன் ஸ்தோத்ர ப்ரியனும் கூட. அவனைப் போற்றி புகழ்ந்து பாடினால் வேண்டிய வரம் தந்துவிடுவான். கேட்பது என்ன என்று கூட யோசிக்க மாட்டான். எதுவும் எப்போதும் தன்னை மீறி நடந்து விட முடியாது என்ற நம்பிக்கை எப்போதும் அவனுக்குண்டு. ஸ்தோத்ரம் என்பது வார்த்தைகளால் குளிப்பாட்டுவது தான் அல்லவா. அதுவும் அப்படி குளிப்பாட்டுவது ஒரு வித அபிஷேகம் தானே. அவனுக்கு ப்ரியமானது தானே. .
6. अखण्ड बिल्वपत्रं च आयुतं शिवपूजनं कृतं नाम सहस्रॆण ऎकबिल्वं शिवार्पणं
Aganda Bilwa Pathrena Poojithe Nandikeshware, Shudhyanthi Sarva Papebhyo, Eka Bilwam Shivarpanam
அகண்ட பில்வ பத்ரேண பூஜிதே நந்திகேச்வரே | சுத்யந்தி ஸர்வபாபேப்யோ ஹ்யேகபில்வம் சிவார்ப்பணம் ||
கண்கொட்டாமல் பகவானையே நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? முடியும் என்றால் நாம் தான் உண்மையில் நந்திகேஸ்வரர். அதனால் தான் அவருக்கு பிரதோஷ காலத்தில் விசேஷ பூஜை அர்ச்சனை, அலங்காரம், அடேயப்பா, அவருக்கு ஒரு த்ரி தளம் வில்வம் சார்த்தினால் எத்தனை புண்யம் நமக்கு, முந்தைய ஜென்மங்களில் புரிந்த பாபங்கள் கரைந்து விடுகிறதே என்கிறார் ஆதி சங்கரர். சிவனுக்கு வில்வம் அளிப்பதும் நந்திக்கு அளிப்பதும் ஒன்றே தான்.
7. सालग्रामॆषु विप्राणां तटाकं दशकूपयॊः यज्नकॊटि सहस्रस्च ऎकबिल्वं शिवार्पणं
Salagrameshu vipranam tatakam dasha koopayo Yagyakoti saharacha eka bilvam shivarpanam
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ: யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்.
சாளக்ராமம் கண்டகி நதியில் கிடைப்பது . நிறைய ஏழுதி இருக்கிறேன். ஞாபகம் இருக்கிறதா? மிகவும் ஸ்ரேஷ்டமானது சாளக்ராமம். அத்தனையும் விஷ்ணு பரம். அப்படி ஒரு புனிதமான சாளக்ராமத்தை ஒரு வைஷ்ணவனுக்கு தானமாக அளித்தால் எத்தனை புண்யமோ, குளங்கள் கிணறுகள் கட்டி எல்லோருக்கும் உதவினால் என்ன புண்ய பலனோ, (வள்ளுவரை ”ஊருணி நீர் நிறைந்தற்றே….”” ஞாபகம் இருக்கிறதா?) ஒரு கோடி சோமயாகம் சிரத்தையாக சாஸ்த்ரோக்த மாக நடத்தினால் தேவர்கள் மகிழ்ந்து ஆஹுதி பெற்று திருப்தியடைந்து எப்படி மனமுவந்து ஆசிர்வதிப்பார்களோ, அத்தனை புண்யமும் ஒரே ஒரு, ஆமாம், ஒரே ஒரு , த்ரி தளம், மூன்று தளங்கள் கொண்ட வில்வத்தை சிவனுக்கு அர்பணித்தால் நாம் பெறலாம்.
8. दन्ति कॊटि सहस्रॆषु अश्वमॆध शतक्रतौ कॊटिकन्या महादानम् ऎकबिल्वं शिवार्पणं
Dantikoti sahasreshu ashwamedha shatakratau Kotikanya mahadanam ekabilvam shivarpanam
தந்தி கோடி ஸஹஸ்ராணி அச்வமேத சதக்ருதௌ கோடி கன்யா மஹாதானம் ஏக பில்வம் சிவார்பணம்.
ஒரே ஒரு வில்வத்தை, மூன்று தளங்கள் கொண்ட சுத்த மான வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணியுங்கள். அதால் நீங்கள் பெறும் லாபம், பலன் எதற்கு இணை தெரியுமா? சங்கரர் ரெண்டு உதாரணம் கொடுக்கிறார். ஆயிரம் யானைகளை தானமாக கொடுத்த பலன், அது போல், கோடி கன்னிகைகளுக்கு கல்யாணம் செயது வைத்த கன்னிகா தானம் செய்த பலன், நூறு அஸ்வமேதயாகம் பண்ணிய பலன், இந்த மூன்றையும் கஷ்டப்பட்டு செய்வதை விட, ஒரே ஒரு வில்வ இலையால் பூஜை செய்து அர்ப்பணித்தால் அத்தனை புண்யமும் சுலபமாய் கிடைக்கிறதே. இப்போதே ஆரம்பிப்போம். ஓடுங்கள் வில்வ இலை தேடி பறித்துக் கொண்டு வாருங்கள்.
9. बिल्वस्तॊत्रमिदं पुण्यं यः पठॆश्शिव सन्निधौ शिवलॊकमवाप्नॊति ऎकबिल्वं शिवार्पणं
Bilvashhtakam idam punyam yah patheth shivasannidhau. shivalokamavapnoti Shiva Loka Maapnuyath
பில்வாஷ்டகமிதம் புண்யம் ய: படேச்சிவஸன்னிதௌ | ஸர்வபாபவினிர்முக்த: சிவலோகமவாப்னுயாத்.
இந்த பில்வாஷ்டக ஸ்லோகங்களை சிவன் எதிரே அமர்ந்து சுத்தமாக மனத்தை அவன் மேல் செலுத்தி படியுங்கள், பாராயணம் பண்ணுங்கள். நமது பாபங்கள் அனைத்தும் விலகிவிடும். முடிவில் சிவலோகப்பிராப்தி தானாகவே கிடைக்கும் . இது ஆதிசங்கரர் தரும் காரண்டீ.
ஆதி சங்கரருக்கு நன்றி, ஒரு சுலப வழி காட்டியதற்கு. இப்படி நம் மேல் அக்கறையோடு ரொம்ப கஷ்டமில்லாத காசு செலவழியாமல் மோக்ஷம் பெறும் வழி கமிஷன் வாங்காமல் யார் காட்டுவார்கள்?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;