THE FINALL DECISION J K SIVAN

முடிவு   –   நங்கநல்லூர்  J K SIVAN
இது  ஒரு  வித்யாசமான கதை.  வெகுநாள் முன்பு படித்த ஒரு கதையின்  மாற்றம்.  கதைகள் என்பதே  வாழ்க்கையில் எங்கோ  எவருக்கோ  எப்போதோ நடந்த  ஏதோ ஒரு சம்பவத்தின் நிழல் தானே.  நிஜமாக இருந்தால் கூட ஆச்சர்யம்  இல்லையே.  இதை எழுத காரணம் சித்ரா மாதிரி ஒரு சில பெண்மணிகள் இருக்க வேண்டும் என்ற  வேட்கையில்,  பிரார்த்தனையில்.
குப்புஸ்வாமி சாஸ்திரி  வேதம்  நிறைய படித்த முருக பக்தர்.   லோக்கல்  திருப்புகழ் மணி என்று ஊரில் சொல்வார்கள். சதா சர்வகாலமும் சுப்ரமணிய ஸ்மரணை. எண்பது வயது.  சந்திரா  போய் பதினைந்து வருஷமாகிவிட்டது. ஒரே பிள்ளை பால சுப்ரமணியன் எனும் பாலு (முருகன் பேர் வைத்தார்). நன்றாக படித்தான். அப்பா மேல் ஆசை. சித்ராவை கல்யாணம் பண்ணி கமலா என்று ஒரு 7 வயது குழந்தை.  பாலு இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் தான் ஊரில். அப்புறம் அங்கேயே  அமெரிக்க வாசம். வருஷா வருஷம் சில நாள் வந்து போவான்.
சித்ரா அம்மாவை சிறுவயதில் இழந்தவள்.  ஊரில்  பெரியம்மா. சாவித்ரி மாமியிடம் வளர்ந்தவள். அவள் தான் சித்ராவை தாயில்லாத பெண்ணாக வளர்த்த எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர். நன்றாக படிக்க வைத்து பேங்க்ல  வேலை கிடைத்தது.  பாலுவுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாள். சித்ராவின் அப்பா என்றோ ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் காணாமல் போய்விட்டார். சன்யாசியானார் என்பார்கள். பல வருஷங்களாகிவிட்டது.  பெரியப்பா  சுந்தரமய்யர்  வக்கீல். ஒரு கார்  விபத்தில்  அவரும் அவர் ஒரே மகன் வக்கீல்  ராமுவும்   நடு ரோடில்  பிணமாகி விட்டார்கள்.  மதுரையில் ஒரு கேஸ்  முடிந்து சென்னை வரும்  வழியில் திண்டிவனம் அருகே ஒரு ராக்ஷத லாரி ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் காரை மோதி இருவரும்  மறைந்தும்   சாவித்ரி மாமி எப்படியோ தைரிய மனத்தோடு சித்ராவை வளர்த்தாள் .
பாலு அடிக்கடி சித்ராவை ”நீயும் குழந்தை கமலாவோடு அமெரிக்கா  வந்துவிடு” என்று  வதைக்கிறான். ஐந்து வருஷங் களாக அவள் பிடி கொடுக்கவில்லை.
”;ஏன் கூப்பிட்டால் நீ வரமாட்டேன் என்கிறாய்?  என்று பல முறை அவளோடு சண்டை. அவள் அமைதியாக பதிலே சொல் லாமல் இருந்தாள் .
சித்ரா  நல்ல பெண். வீட்டில் வயதான மாமனார் குப்புஸ்வாமி சாஸ்திரியை பெற்ற தந்தையை விட மேலாக மதித்து போற்றி பாதுகாத்து பராமரிக்கிறாள். அவருக்கு தினமும் வேஷ்டி தோய்த்து போட்டு, பூஜை, முருக பஜனைக்கு சிஷ்ருஷை செயது, நல்ல ஆகாரமாக சமைத்து வைத்து விட்டு,  ஒரு குறையுமில்லாமல் அன்போடு பார்த்துக் கொள்கிறாள்.   ”முருகா நீ எனக்கு அருமையான மகளாக  சித்ராவைக் கொடுத்தாய்,  வள்ளிமணாளா அவள்  சௌபாக்யவதியாக  குழந்தை கமலாவோடும் பாலுவோடும் பல்லாண்டு  வாழவேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்வார்.
 பட்டுக்கோட்டையில் தனியாக இருந்த பெரியம்மாவையும் நிலம் வீடு எல்லாம் விற்றுவிட்டு தனது வீட்டுக்கு பக்கத்தி லேயே ஒரு சிறிய அறையில் வாடகைக்கு அமர்த்தி  தாயை விட மேலாக அவளையும்  சித்ரா பாதுகாக்கிறாள். தினமும் அவளுக்கும்  சமையல் பண்ணி ஆகாரம் கொண்டு தருவாள். குழந்தையை கவனித்து பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு, தனது பேங்க் வேலைக்கு போவாள்.
இந்த காலத்தில் படித்த வசதியான, அமெரிக்காவில் கணவன் வேலை செய்யும் எந்த பெண் இப்படி மெஷினாக உழைத்து, வீட்டை பராமரித்து, குழந்தையை கவனித்துக் கொண்டு, வயதான  மாமனார் தன்னை வளர்த்த பெரியம்மா இருவரையும் மனம் கோணாமல் வேளா  வேளைக்கு ஆகாரம், டிபன் எல்லாம் தினமும் பண்ணி கொடுத்து தானும்  ஆபிஸ் செல்வாள்? என்று  பெரியம்மா எல்லோரிடமும் வாய்க்கு வாய் சொல்வாள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொன்று வரை  முகம் சுளிக்காமல் சகல  வேலைகளும் ஒண்டியாக  சித்ரா செய்கிறாள்.இடையிடையே  பாலு போன் பண்ணி நீ எப்போது அமெரிக்கா வரப்போகிறாய் என்று கடிந்து கொள்கிறான்.  அதையும் சமாளிக்கிறாள்.
ஆறாவது வருஷம்  ஆரம்பித்ததுமே புது வருஷத்தில் பாலுவின் பிடுங்கல் தொடர்ந்தது.   பாலு அப்பாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான். அதைப்  படித்ததும் ”ஷண்முகா வேலாயுதா, என்னைக் கொண்டுபோய்விடு. இனி என்னால் ஒரு கணமும் வேதனை தாங்க முடியாது. நான் என்றாவது உன்னை ஏதாவது வேண்டும் என்று கேட்டவனா? எல்லோரும் க்ஷேம மாக இருக்கவேண்டும் என்று தானே கெஞ்சுவேன். என் பிள்ளைக்கு நல்ல புத்தியை ஏன் கொடுக்க தவறிவிட்டாய்/?”  என்று கதறினார்.  ஏன்? அப்படி என்ன பாலு  கடிதத்தில் எழுதி விட்டான்?  நீங்களே படியுங்கள்;
அன்புள்ள அப்பாவிற்கு,
நான் இன்னும் மூணு நாலு மாசத்தில்  மே மாசம்  அங்கே வருவேன். இதோடு சில வக்கீல் காகிதங்கள் அனுப்பியிருக்கிறேன். சித்ராவிடம கையெழுத்து வாங்கி நமது குடும்ப வக்கீல்  சோமசுந்தரத்திடம் கொடுக்கவும். அவரோடு பேசிவிட்டேன். அவர் சொன்னபடி எழுதி தயாரித்து கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறேன். அது எனக்கும் சித்ராவுக்குமான விவாகரத்துப் பத்திரம்.  அவளோடு இனிமேல் என்னால்  வாழ முடியாது. எத்தனையோ தடவை படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக் கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வா என்று.  அப்பாவையும் உன் பெரியம்மாவையும்                  ஏதாவது  ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்துடுவோம்னு”  அவள் ஒன்றுமே பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று  நிச்சயம்  நடக்கணும் .அவள் வேறு ஒருவரைக்  கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  மனசிலே ஏதோ ஒரு ரஹஸ்யம் இருக்கு. அதனால் தான் அமெரிக்கா வ வரமாட்டேன் என்கிறாள்.   நானும் இங்கேயே  வேறு ஒருத்தியை  கல்யாணம் பண்ணிக்கொண்டு  சந்தோஷமா இருக்கேன். இதை அவள்கிட்டே  கறாராகச் சொல்லிடுங்கோ. மே மாசம்  ரெண்டில ஒண்ணு முடியணும்— .இப்படிக்கு பாலு.”
அழுது அழுது  குப்புஸ்வாமி ஸாஸ்திரிக்கு  ஜூரம்.  .அன்னம் ஆகாரம் செல்லவில்லை. மூன்று நான்கு நாளாகிவிட்டது. உடம்பு முடியாமல் முருகன் சந்நிதியில் மனமுருகி கதறினார்.   சித்ரா ஆபிசிலிருந்து திரும்பிய அன்று மாமனார் உடல் நிலை அவளுக்கு கவலை தந்தது.  சாப்பாடு வைத்தது வைத்தபடி இருந்தது. உடல் நெருப்பாக சுட்டது.
”அப்பா  என்ன ஆச்சு? சாப்பிடவே இல்லையே. காலம்பற வைச்சது வச்ச படியே இருக்கே. உடம்பு சரியில்லையா? ‘ கிட்டே சென்று கழுத்தில் கை வைத்தபோது நெருப்பு சுட்டது. ”ஒண்ணுமில்லைமா”  தடுமாறினார். நாக்கு குழறியது.  “அப்பா, நல்ல  ஜுரம் இருக்கு.  டாக்டர் பலராம  ராவை கூப்பிடறேன்.
“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. கொஞ்சம் படுத்தால் சரியாகிவிடும்!”
“சரி… படுத்துக்குங்கோ. இப்போது சூடாக ஒரு காப்பி போட்டுத் தருகிறேன். சாப்பிடுங்கோ.  ராத்திரி கண்ட திப்பிலி ரஸமும் சுட்ட அப்பளமும் தரேன்””காலம்பற முருகன் விபூதி யாலே எல்லாம் சரியாகிடும்  மா”.   முனகினார். “ஐயனே ,  என்னப்பா ஷண்முகா, பெற்றெடுத்த மகள்கூட இப்படி தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேளே! இந்த மஹாலஷ்மியைப்போய்   அந்த மஹா பாவி விவாகரத்து பண்றேன் என்கிறானே!  ஏன் எனக்கு இப்படி ஒரு கம்ஸனை  பிள்ளையா கொடுத்தாய்? இவள் கால் தூசி பெறுவானா  அந்த ராஸ்கல்” அழுதுகொண்டே தூங்கினார்.
மாமனாருக்கு வியாதி உடம்பில் இல்லை, மனதில் தான் என்று எப்படியோ கண்டுபிடித்துவிட்டாள்  சித்ரா. காலண்டர் சஷீட்  நான்கு கிழித்தாகி விட்டது. மே  மாசம் வந்து பாலு வீட்டுக்கு வந்தான்.இரண்டு, மூன்று நாள்கள் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை!
நான்காவது நாள் ராத்திரி சித்ரா தானே  பாலுவிடம் பேசினாள் .”பாலு உங்க கிட்டே  பேசணும் ”.
“உன் கிட்ட பேச ஒண்ணும்   இல்லை எனக்கு. அப்பாக்கு  மூணு மாசம் முன்னாலேயே விஷயம் எல்லாம் விவரமா  எழுதியிருக்கேன். உன்கிட்டே சொல்லி இருப்பாரே.”
“அப்பா வாயைத் திறந்து ஒரு வார்த்தை என்கிட்டே எதுவும் சொல்லலே  . அவர் அலமாரியில்  எனக்கு தெரியக்கூடாதுன்னு ஒளிச்சு வச்சிருந்த உங்க லெட்டரை நானே கண்டுபிடிச்சு  எடுத்து படிச்சுட்டேன்.”
“ரொம்ப சரி.  பத்திரத்தில்  நீ  கையெழுத்துப்  போட்டு வைச்சிட்டியா?”  வக்கீல் கிட்டே கொடுக்கணும். ‘
“இன்னும் கையெழுத்து போடலே. இப்போ போடறேன். ஆனால்ஒரு கண்டிஷன் !”
“என்ன?”
“உங்களை விவாகரத்து செய்த பின்னால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்.  நோ அப்ஜக்ஷன்  ஆனால்  கமலாவும் உங்கப்பாவும்  என்னோடுதான் இருக்கணும் . எந்த காரணத்தைகொண்டும்  அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க  நான் அனுமதிக்க மாட்டேன்! பத்திரத்தில் இந்த கண்டிஷனும் போட்டா  கையெழுதது போடறேன்.  நான்  இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இதுக்கு  சம்மதமா?”
“என் அப்பாவைப் பற்றி உனக்கென்ன கவலை?”
“எப்போ இந்த வீட்டுக்கு வந்தேனோ அந்த நிமிஷத்திலேருந்து அந்த மனுஷர் ஒரு தெய்வமா தான் எனக்குத்  தெரியறார்..  உங்கள் அப்பா என் அப்பா ஆகிவிட்டார். அந்த  அன்பான புண்ய புருஷனை இந்த விவாக ரத்தினால்  என்னால் இழக்க முடியாது! இந்த வயதான காலத்தில் அவருக்கு  நான் தான் துணை. அவரை வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்ல முடியாது!
இந்த சௌகர்யம் அங்கே கிடைக்காது.
“அதனால்  தான் அவரை ஓர் நல்ல  உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னேனே!”
“safe  ஆக ஜாக்கிரதையா இருக்கணும்னு உங்க  ரெண்டு கண்ணையும் எங்காவது பேங்க் லாக்கரில் வச்சிட்டு உங்களாலே  வெளியே போக முடியுமா? சொல்லுங்கோ.
“என்ன சொல்றே  நீ சித்ரா?”
“ஆம். பாலு,   என் பெரியம்மா, உங்கப்பா ரெண்டுபேரும் எனக்கு ரெண்டு கண்கள். அவர்களை  பேங்க் சேப்டி லாக்கரில் வைப்பதுபோல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்துவிட்டு, நான்  போகமுடியாது. அவர்கள் தியாகிகள். நமக்கு வழிகாட்டிகள்! உயிர் உள்ள ஜீவன்கள்! எப்போதும் கூடவே இருந்து வழிநடத்துகிற தெய்வங்கள் .எவ்வளவு கல்நெஞ்சம் உங்களுக்கு. அவர்களை போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அமெரிக்காவில் ஜாலியா  வாழறதா? இப்படி ஒரு கீழ்த்தர மிருக சுயநலமா ? சே.  உங்களை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது?
ஒன்னு தெரியுமா உங்களுக்கு? நான்தான் அவர் மனம் படும்பாட்டைப் புரிந்துகொண்டு, அவர் இல்லாத நேரத்தில்உங்க லெட்டரை எடுத்து படித்துத் தெரிந்து கொண்டேன்! கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு!”
‘எப்படிப்பட்ட மஹான் உங்க அப்பா  இல்லை என் அப்பா. இதுவரை ஒரு நிமிஷம் கூட உங்க லெட்டர் பத்தி என்கிட்டே மூச்சு விடலே. முருகன் காலில் விழுந்து கதறுகிறார். பார்த்துண்டே இருக்கேன். சரியாய் சாப்பிடலே. தூஙகலே .மூன்று நாலு மாசம்  நரக வேதனை படறார். நெஞ்சிலே தாங்கிண்டு துடிக்கிறார்.  பாவம். யார் கிட்டே போய் சொல்வார். அந்த முருகனைத் தவிர/”
“போதும் சித்ரா. ஸ்டாப் இட். என்னை  மன்னிச்சுடு. என் கண்ணை திறந்துட்டே. உன்னை புரிஞ்சிக்க இந்த முட்டாளுக்கு ஆறு வருஷம் ஆயிடுத்து. காலைலே அப்பா காலிலே  விழுந்து மன்னிப்பு கேட்டுடறேன். இனிமே அமெரிக்கா எனக்கு கிடையாது.  இங்கேயே  ஏதாவது ஒரு வேலை தேடிக்கிறேன். குழந்தை நீ,  என் அப்பா, உன்  பெரியம்மா  எல்லோரும் ஒரே இடத்தில் இருப்போம்.  என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு. சொல்லு சித்ரா சொல்லு.  அப்பாகிட்டே காலம்பர மன்னிப்பு கேக்கறேன்.
மறுநாள் காலையில்  வழக்கமாக  ஆறு மணிக்கே குளித்துவிட்டு முருகனுக்கு பூஜை பண்ணும் குப்புசாமி ஐயர் ஏனோ இன்னும்  எழுந்திருக்கவில்லை. பாலு போய் எழுப்பினான்.  சில்லென்று இருந்தார்.  அலறினான்.
ஒன்பது மணிக்கு வாத்யார் நான் வரேன் வந்து  காரியங்கள் எல்லாம் நடக்க  ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்.  சித்ராவும் அவனும் எல்லோருக்கும் சேதி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…..
மூன்று மாசத்தில் முடிவு என பாலு சொன்னாலும் மூன்று நிமிஷம் பேசிய  சித்ரா சரியான முடிவு கண்டுவிட்டாள் . பாவம்  குப்புஸ்வாமி ஸாஸ்திரி தான் பயந்து கொண்டே  மூன்று மாதத்தில் முடிந்து போனார். முருகனடி எய்தின அன்று, காலண்டர் ஷஷ்டி என்று காட்டியது. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;