
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் –
நங்கநல்லூர் J K SIVAN
மஹரிஷி : ”எப்போது எதையாவது அடையவேண்டும் என்ற விருப்பம் நின்று போகிறதோ அப்போது தான் பகவானையோ, ஆத்மாவையோ புரிந்து கொள்ள முடியும். எங்கிருந்து இந்த விருப்பம் எண்ணங்கள் எல்லாம் உருவாகிறது என்று ஆராய்ந்தால் போதும்”
பக்தர்: ‘ஸ்வாமி, உங்களுடைய உள்ளது நாற்பது அற்புதமாக இருக்கிறது. எல்லாம் ஒன்று தான் எனும் போது செயலில் எல்லாம் ஒன்றாக இல்லை என்கிறீர்களே. முரண் பாடாக இருக்கிறதே .அப்படி இருக்க முடியுமா?”
ரமணர். ”இப்போது நான் உட்கார்ந்திருக்கும் ஆஸனத்தில் நீயும் உட்கார முடியுமா சொல்?”
பக்தன்: ”என்னால் உட்கார முடிந்தாலும் மடத்தில் ஆஸ்ரமத்தில் மற்றவர்கள் அதை ஏற்பார்களா சுவாமி. அடித்து விரட்ட மாட்டார்களா என்னை”
ரமணர்: ”ஒரு பெண்ணை ஒரு ஆண் பலாத்காரம் பண்ணுவதைப் பார்த்தால் நீ பேசாமல் எல்லாம் ஒன்றே என்று போய் விடுவாயா?’ ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு பிராமணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், ஒரு அஞ்ஞானி என்று இந்த நான்கு ஜீவன்களையும் பரம ஞானி ஜனகர் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனகர் பிராமணனை பிராமணர்கள் இருக்கும் அக்ரஹாரத்துக்கு அனுப்பினார், பசுவை அரண்மனை கோசாலைக்கு அனுப்பினார். யானையை அரண்மனை யானை கொட்டகைக்கு அனுப்பினார், நாயை அரண்மனை வாயில் காப்போன் இருக்குமிடத் துக்கு காவல் காக்க அனுப்பினார். அஞ்ஞானியான மனிதனை ஒரு சத்திரத்துக்கு அனுப்பினார். எல்லா விருந்தாளிக ளுக்கும் தக்க உணவளிக்க கட்டளையிட்டார். சிலர் ராஜாவிடம் கேட்டார்கள். ”அரசே, எல்லாம் ஒன்றே என்பீர்களே, ஏன் தனித்தனியே வித்யாசமான பல இடங்களுக்கு அனுப்பினீர்கள்?”
ராஜா ஜனகர், ”ஆமாம் எல்லாம் ஒன்றே தான், அவரவருக்கு தனித்தனியே திருப்தி என்று ஒன்றிருக்கிறதே. பசுவுக்கு கொடுக்கச் சொன்ன வைக்கோலை மனிதன் திங்க முடியுமா. மனிதனின் உணவை யானையோ பசுவோ திருப்தியாக சாப்பிட முடியுமா.?
பல வேஷங்களில் மேடையில் தோன்றும் ஒரே மனிதன் அந்தந்த வேஷங்களுக்கு தக்கவாறு தானே நடிக்க முடியும். ராஜாவாக நடிக்கும்போது அரண்மனையில் சிம்மாசனத்தில் உட்கார்வான். வேலையாளாக நடிக்கும்போது எஜமானின் காலணிகளை தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடப்பான். ஞானி மட்டுமே தான் எல்லா வேஷங்களையும் போட்டு மேடையில் தோன்றியவன் என்பதை மறக்க மாட்டான்.”
பக்தர்: ”ஸ்வாமி , பகவான் எதற்கு அவ்வப்போது ஒவ்வொரு யுகத்திலும் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டும். அவர் தான் சர்வ வியாபி ஆயிற்றே. இருக்கும் இடத்திலிருந்தே தனது கடமையைச் செய்ய முடியாதா? நினைத்தால் எல்லா இடத்திலேயும் எல்லாக்காலத்திலும் இருக்க முடியாதா?”
ரமணர்; ஈஸ்வர சங்கல்பத்தால், அருளால் தேர்ந்தெ டுக்கப் பட்ட மஹான்கள் பூமியில் அவ்வப்போது பிறக்கிறார்கள். அவர்கள் அவதாரங்கள். பக்தர்களுக்கு கருணை வழங்குபவர்கள். தீங்கு செய்வோரை ஒடுக்கு பவர்கள். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறி யவுடன் மறைபவர்கள். பல்வேறு உருவங்களில் வந்தாலும் அனைவரும் ஒன்றே. ஆத்ம ஸ்வரூபங்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் பல வேறு நிலைகளில் பல வேஷங்கள் இட்டு நடிப்பவன். .பால்யம், இளமை, வாலிபம், முதுமை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவரும் வெவேறு அனுபவங்களை பெறுபவர் கள். ஒரே மனிதனே வெவ்வேறு குணாதிசயங்களை அவ்வப்போது வெளிப்படுத் துகிறான். அவதார புருஷர்கள் வெவ்வேறு பிறவியில் வேறுபட்டு தோன்றினாலும் எல்லோரும் ஒன்றே. ஒரே இரவில் நாம் அனுபவிக்கும் வெவ்வேறு கனவுகள் மாதிரி.
இந்த கேள்விகள் எல்லாம் ஆத்மாவை உணர்ந்த வனுக்கு எழாது. ஆத்ம சத்தியத்தை அறியும் வரை வெவ்வேறு அவதாரங்களின் உபதேசங்களை புரிந்து கொள்வது எளிதல்ல, கால விரயம் தான். ”
பக்தர்: ” ஸ்வாமி, ஈஸ்வரனுக்கும் முக்தி பெற்ற ஞானிக்கும் என்ன வித்யாசம்?”
ரமணர்: ” இருவரும் ஒருவரே. ஒரே வித்யாசம் ஞானிக்கு அவன் ஞானம் பெறுவதற்கு முன் அவன் ஆத்மா என்பது ஞாபகத்தில் இல்லை. புரியவில்லை. விடா முயற்சியால், ஆத்ம விசாரத்தால் ஞானம் பெற்றவன். ஈஸ்வரன் அப்படியல்ல. எப்போதுமே ஞான ஸ்வரூப மாக இருப்பவன். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், காருண்யம் என்ற பல தொழில்களை புரிபவன். இச்செயல்களில் ஈடுபடும் ப்ரம்மம் என்று அறியப்படுபவன். வெவ்வேறு தொழில்களை புரிபவனாக அவனை அறிவது சமுத்திரத்தில் சங்கம மான நதியை சமுத்ரமாக மாறிய நதி என்று அடையா ளம் காண்பது போல. ப்ரம்ம ஞானி, ஈஸ்வரன் இருவரின் கார்யங்களும் ஒன்றே. அவதாரங்களைப் பொறுத்தவரை அந்தந்த கல்பத்தின் முடிவில் உருவம் நோக்கம் எல்லாம் மாறும். ஞானிகளுக்கு அப்படி யில்லை. ஒரே ஒருவம் மட்டுமே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



