
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மண்வாசனை பிராப்தமில்லை …
நாளைக்கு அனுஷம். மஹா பெரியவா ஆராதனை…. என்னவோ ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. உடனே மறந்து போவதற்கு முன்பு அதை எழுதி உங்களுக்கெல்லாம் சொல்லணும்னு ஒரு ஆசை. அதை நிறைவேத்திடறேன் முதல்லே..அப்புறம் எப்படியோ.+
அந்த வயோதிகர் என்னைப்போல 85+. மைலாபூரிலே ஒரு சின்ன வீட்டிலே குடித்தனம். ஒத்தை ரூமிலே … பாதி நாள் உபவாசம். பெரியவா தியானம். காஞ்சி வச்சு குடிப்பார். அதை முதல்லே பெரியவாளுக்கு நைவேத்தியம் பண்ணிட்டு தான் அவர் வயித்துக்குளே போகும். கொஞ்சநாளா பெரு மூச்சு தொந்தரவு. மார் படபடன்னு அடிச்சுக்கிறது. முதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போக முடியாது. ஆட்டோ, டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது .அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும். ஒரே ஒரு தடவை வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக, ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே போயிற்று.
வாசற்படியில், காலடிச் சத்தம் கேட்டாலே, அவன் தானோ? வந்துட்டானோ, நான் உடனே போயாகணுமோ? பயம் ஒண்ணுமில்லை. ஒரே ஒரு ஏக்கம். அவரைப் பாக்காமல், தரிசிக்காமல் அவனோடு போக வேண்டியிருக்கிறதே? அவன் வர்ரதுக்குள்ளே ஒரு தடவை அவாளைப் போய் பாத்துடுவேனா? .
ஒருநாள் வாசல் பக்கத்திலே யாரோ வருகிறார்கள். சத்தம் கேக்கிறதே?.
ஆமாம், யாரோ வேகமாக நடந்து வருகிற காலடிச் சத்தம்.
யாரு ?
அவன் வந்தா காலடி சத்தம் கேக்குமோ? மனுஷா வந்தா தானே கால் பூமியிலே பட்டு காலடி சத்தம்.. அவன் மனுஷன் இல்லையே. அப்பாடா வந்தவர் மனுஷன் தான்.
”வரகூர் சாம்பசிவய்யர் என்கிறது .?.”
”நானே தான், நீங்க யார்?”…..
” நான் காஞ்சி மடத்திலிருந்து வந்திருக்கிறேன். உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு”..
வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது.தனக்குள் தானே பேசிக் கொண்டார்?” அது எப்படி மஹா பெரியவாளுக்குக் கேட்டிருக்கும்? அவர் அந்தர்யாமியாச்சே. ; அதனாலே எனக்குள் பேசிக்கொண்டது உள்ளே இருக்கிற அவருக்கும் கேட்டிருக்குமோ?நான் யார்? யாருமே இல்லாத ஒண்டிக்கட்டை. எப்பவோ கவர்ன்மென்ட் ஆபீஸ்லே ரிட்டையர் ஆன ஒரு கிழம். நிறைய படிச்ச பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவரா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை. என் மனசுலே மஹா பெரியவா எப்போதும் அப்பவும் உண்டு இப்பவும் உண்டு. அவ்வளவு தான்.
வந்தவர் மடத்துப் பணியாளர், என் தோளைப் புடிச்சிண்டு நடந்து வந்து கார்லே ஏறிக்கிறேளா? என்றார்.
காரா? நான் விண்ணுலகத்திலிருந்து புஷ்பக விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்! என்னுடைய புஷ்பக விமானம் கருப்பு குண்டு எருமைக்கடா, அதுக்குமேல ஒரு கையில் நீள தாம்புக்கயிறுடன் ஒரு பயங்கரன்…
”பகவானே மஹா பெரியவா….!!
பெரியவர் காரில் வந்தவருடன் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், மஹா பெரியவாள் அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தா.
”சுவாமி நாம்ப முதல்லே அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டு மடத்துக்குப் போவோமா?’ என்றார் கூட வந்த மடத்து சிப்பந்தி.
”தப்பா நினைச்சுக்காதேங்கோ, எனக்கு முதல்லே, மஹா பெரியவா தரிசனம் அப்புறமா தான் மத்ததெல்லாம்…….
மடத்தில் வழக்கம்போல் அநேக பக்தர்கள் கூட்டம்.. சாம்பசிவய்யர் மூச்சுத்தி திணறலோடு மெதுவாக நடந்து பெரியவாள் முன்னால் எப்படியோ போய் நின்றுவிட்டார். பேச்சு வரவில்லை. தலை சுற்றல். எப்படியோ அவர் கண்கள் பெரியவா கண்களை சந்தித்து நிறைய பேசிக் கொண்டன. சாம்பசிவய்யர் ஆனந்தத்தில் திளைத்தார். என்ன பாக்யம், கடைசியில் நான் ஜெயிச்சுட்டேன். மஹா பெரியவாளை நேரிலே பார்த்துட்டேன். இதோ நமஸ்காரம் பண்ணறேன்..ஆடும் உடம்பை ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு, தடாலென்று கீழே சாய்ந்து மஹா பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
ஐந்து நிமிஷத்துக்கு மேலே ஆனாலும் கூட சாம்பசிவய்யர் எழுந்திருக்கவில்லை.
அவரையே பார்த்துக்கொண்டிருந்த மஹா பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தை மேலே இருந்து எடுத்து அருகே இருந்த ஒரு சிப்பந்தியிடம் கொடுத்தார். ”இதை அவர் சரீரத்து மேலே போர்த்து”மஹா பெரியவா வஸ்திரம் சாம்பசிவய்யர் என்று பூலோகத்தில் இதுவரை வாழ்ந்த அந்த முதியவர் சரீரத்தின் மேல் போர்த்தப்பட்டது .
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளைச் செய்யும்படி உத்தரவாயிற்று.
முதல்லே பெரியவா தரிசனம்; அப்புறமா…..அப்புறமா அம்பாளைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தானே விரும்பினார். அவர் விருப்பம் ரெண்டுமே நிறைவேறிவிட்டது. முதல்லே மஹா பெரியவா, அப்புறம் இல்லை, அப்பவே காமாக்ஷி ஸ்வரூபமான அவரே காமாக்ஷி தரிசனமும் கொடுத்துட்டாரே… இனிமே ஒண்ணுமே சாம்பசிவய்யருக்கு பாக்கியில்லியே..
அரைமணி கழித்து, அவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அம்பாளை தரிசிக்க. இனி, எந்த ஒரு தாயின் கர்ப்பமும் அவருக்குக் கிருஹம் ஆகமுடியாது!
யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



