NARASIMMAA J K SIVAN

பயங்கர சிவ பக்தி — நங்கநல்லூர்_J_K_SIVAN
பக்தி என்பது தீவிரமாக பயங்கரமானதாக வழிபடப் பட்டு வருவதும் உண்டு. உதாரணமாக கபாலிகர்கள் , காபாலிகர்கள் என்றும் சொல்வதுண்டு, காளாமுகர்கள் ஆகியோர் இப்படிப்பட்ட பக்தர்கள். கபாலத்தை ஏந்தியவர்கள், மனித மண்டை யோட்டை , எலும்புகளை மாலையாக அணிபவர்கள். நரபலி கொடுத்து நர மாமிசம் உண்பவர்கள். சுடுகாடுகளில் வசிப்பவர்கள். சிவனை பைரவ ரூபத்தில், காளியை, சின்னமஸ்தா போன்ற தெய்வங்களை , வழிபடுபவர்கள். உடல் பூரா சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொள்பவர்கள். பார்ப்ப தற்கே பயங்கர தோற்றம் கொண்டவர்கள். பலர் நிர்வா ணமாக ஆடையின்றி அலைபவர்கள். கஞ்சா புகை யிலை சாராயம் போன்ற போதைப் பொருள்களை சதா உபயோகிப்ப வர்கள். கூட்டமாக வாழ்பவர்கள். மண்டை யோடு தான் பிக்ஷை பாத்திரம் அவர்களுக்கு. நல்ல திடகாத்திரமான உடம்பினையும், கையில் மந்திரக் கோலையும், மண்டையோட்டு மாலையையும், மிருகத்தோல் அல்லது அங்கியும் அணிந்து காணப் படுபவர்கள். வடக்கே கும்பமேளாவில் அவர்கள் படம் பார்த்திருக்கிறேன். நேபாளத்தில் வடக்கே இன்றும் சில இடங்களில் அகோரிகள் என்று காணப்படுகி றார்கள். சூலாயுதம் உடலில் குத்திக் கொள்வதுண்டு. நெருப்பில் நடப்பார்கள். யாகத்தில் ரத்தத்தை அர்ப்பணிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
காளாமுகர்கள் என்றால் கருப்பு முகங்களை கொண்ட சிவபக்தர்கள் என்று அர்த்தம். கோவில்களில் பணி புரிபவர்கள். இவர்கள் காபாலிகர்கள் போல் அவ்வளவு பயங்கரமானவர்கள் இல்லை. சைவ சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். தென்னிந்தியாவில் லிங்காயத்து கள், பாசுபதேயர்கள் ஆகியோருடன் இணைந்தவர்கள். அதிகம் காணப்படாதவர்கள். சோழர்கள், சாளுக்கியர் கள், ரசித்ரகூடர்கள் காலத்தில் ராஜாக்களால் ஆதரிக் கப் பட்டவர்கள். இவரக்ளும் மயான வாசிகள், நரபலி கொடுத்து நரமாமிசம் உண்பவர்கள் தான்.
கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்களில் மஹா கபால பைரவர் போன்ற காபலிக்கர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். ஓவியர் மணியம் பயங்கர உருவமாக படம் போட்டு என்னை சிறுவயதில் பயமுறுத்தி இருக்கிறார்.
ஒரு காலத்தில் ஹிந்து சமயம் க்ஷீண கதியில் இருந்தது. பௌத்தம், ஜைன மதங்கள் நாடெங்கும் தலை தூக்கி இருந்தது. நல்லவேளை அப்போது கிறிஸ்தவ இஸ்லாம் மதங்கள் இல்லை. பல உதிரி நம்பிக்கைகள், சடங்குகள் தெய்வ வழிபாடுகள், பரவலாக இருந்தது. அவற்றில் ஒன்று காபாலிகம், காளாமுகம். மேலே சொன்னது. ஆதி சங்கரர் தோன்றி பிற மதத்தினரோடு வாதம் புரிந்து ஹிந்து சமயத்தை காப்பாற்றி அத்வைத மார்க்கத் துக்கு வழி காட்டினார். சைவம் துளிர்த்து வளர்ந்தது. ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.
காபாலிகர்கள், காளாமுகர்களை அவர் விட்டு வைக்கவில்லை. அவர்களை சாத்வீகர்களாக மாற்றினார் .
காபாலிகர்களின் தலைவன் ஒருவன் க்ரூரமாக ‘வாமாசார’ ங்களை பின்பற்றி வந்தவனுக்கு ஆதி சங்கரர் மேல் கடும்கோபம். ஆதி சங்கரரை பரம வைரியாக கருதினான். சங்கரரை வாதத்தில் அவனால் எதிர்க்க முடியுமா? ஆகவே தந்திரமாக கருணையுள்ளம் கொண்ட ஆதி சங்கரரர் தனித்தி ருந்த சமயம் பார்த்து நைசாக அவருக்கு நமஸ்காரம் பண்ணினான். கருணையோடு அவனை பார்த்தார் சங்கரர்.
”ஐயா, நான் இதுவரை வித விதமாக நர பலி கொடுத் தும் கபாலி ஏனோ ப்ரத்யக்ஷமாகவில்லை. ஸாம்ராஜ்ய பட்டாபி ஷேகமான ஒரு ராஜாவின் தலையையோ, அல்லது அஷ்ட மஹாஸித்தி பெற்ற ஒரு ஆத்மஞானி யின் தலையையோ பலி கொடுத்தால் நிச்சயம் என் முன்னால் கபாலி ப்ரத்யக்ஷமாவார். ராஜாவின் தலைக்கு நான் எங்கே போவேன்? ராஜாவின் தலைக்கு நான் முயற்சி பண்ணினால் அவ்வளவு தான்… அவன் என் தலையை வாங்கிவிடுவான்! தாங்கள் மஹாஞானி, மஹா யோகஸித்தர். அதனால் என் மனோரதப் பூர்த்திக்காகக் கருணாமூர்த்தியான தங்களிடம் உதவி கேட்டு வந்தேன்” என்றான்.
தைரியமாக அவரிடம் போய் அவருடைய தலையை யே கேட்டான்.காபாலிகன் கேட்டதில் சங்கராச்சார் யருக்கு கோபம் வரவில்லை. ரொம்பவும் ஸந்தோஷம் உண்டாயிற்று:
‘அட, ஒன்றுக்கும் உதவாதது என்று நினைக்கிற இந்த மநுஷ சரீரம் கூடவா ஒருத்தனுக்கு ஈச்வர தர்சனமே கிடைப்பதற்கு உதவுகிறதாம்! மரம் பட்டுப்போனாலும் விறகாக உபயோகப்படுகிறது. மாட்டுக் கொம்பு ஈச்வர அபிஷேகத்துக்கே உபயோகமாகிறது. யானை தந்தமும் எத்தனையோ ப்ரயோஜனங்களைக் கொடுக்கிறது. மான் தோல், க்ரூரமான புலித் தோல்கூட, த்யானத்துக்கு ஆஸனமாகிறது. மநுஷ்ய சரீரம்தான் எதற்கும் ப்ரயோஜ னப் படாதென்று நினைத்தால், இதைக் கூட ஒருத்தன் கேட்டுப் பெற வருகிறானே!’ என்று ஸந்தோஷம் அவருக்கு .
“உன் ஆசைப்படியே ஆகட்டுமப்பா! ஆனால் என் சிஷ்யர்களுக்கு நீ கேட்ட இந்த விஷயம் தெரியப்ப டாது. அவர்கள் பொல்லாதவர்கள்! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டாக்குவார்கள். ஆகையால் நான் தனியாக த்யானத்தில் இருக்கும் ஸமயத்தில் வந்து என்னுடைய சிரஸை எடுத்துக் கொண்டு போ”என்றார்.
காபாலிகன் அவர் எப்போது தனியாக இருக்கிறார் என்று கவனித்துக்கொண்டே வந்தான். தக்க சமயம் வந்தது. அவரை நெருங்கி தனது கூரிய கத்தியை உருவினான். ஆச்சாரியார் தலையை சௌகரியமாக குனிந்து காட்டிக்கொண்டிருந்தார். காபாலிகனின் ஓங்கிய கத்தி சங்கரர் கழுத்தை நோக்கி இறங்கியது.
அந்த க்ஷணம் பார்த்து எங்கேயிருந்தோ ஒரு ஆக்ரோஷமான சிம்ம கர்ஜனையோடு நரசிம்ம ஸ்வரூபத்தில் ஒரு மனிதன் தோன்றினான். அப்படியே காபாலிகன் மீது பாய்ந்து அவனை அலக்காகாக கையால் தூக்கி சுழற்றினான். காபாலிகனின் கத்தி காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது. அடுத்த கணம் காபாலிகன் அந்த நரசிம்மனின் மடியில் கிழிந்த வயிறோடு ரத்தம் சொட்ட சொட்ட இறந்து கிடந்தான்.
க்ஷண கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் காபாலி கனின் கோர சப்தமும், சிம்ம கர்ஜனையும் ஒரே சம யம் கேட்டு ஆதிசங்கரரை கண் விழிக்கச் இந்த செய்தது. திரும்பி பார்த்த ஆதிசங்கரரின் கண்ணில் அவரது சிஷ்யர் பத்மபாதர் தெரிந்தார்.
ஆச்சரியமடைந்த ஆச்சார்யர், பத்மபாதா, “என்ன ஆச்சு? நீ எப்படி இங்கே வந்தாய், யார் இந்த காபாலிகனைக் கொன்றது. நீயா? சிம்மக்குரல் கர்ஜனை கேட்டதே. இது யார் பண்ணிய கார்யம்?”
”குருநாதா, எனக்கு ஒண்ணும் தெரியலை. நான் கங்கையில் த்யானத்தில் இருந்தேன். அப்புறம் எனக்குள்ளே என்னவோ மாதிரி ஒரு ஆவேசம், அவசரமாக ஆட்டி வைத்தது. . இப்பத்தான ஸ்வய ப்ரக்ஞை வந்திருக்கு” என்றார் பத்ம பாதர்
ஆசார்யாள், “ஓஹோ, உனக்கு நரஸிம்ஹ மந்த்ரம் உபதேசமாயிருந்ததா?” என்று கேட்டார்.
“இருந்தது. ஆனால் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை குருநாதா. நரசிம்ம ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டு யாரோ ஒரு வேடனுக்கு தர்சனம் தந்தார். என்னவோ சொன்னார், அவஸ்யம் ஏற்பட்ட சமயத்திலே உன்னி டம் வருவேன்’ என்று” – இப்படி பத்மபாதர் சொல்லும் போதே அவருக்கு பொறிதட்டியது. சட்டென்று தெளிவாயிற்று.
“குருநாதா, நரசிம்மஸ்வாமி தான் என் மேல் வந்திருக் கிறார். அவர் சொன்னபடிதான் இப்போது பண்ணியி ருக்கிறார்! உங்களுக்கு இந்த காபாலிகனால் உயிருக்கு ஆபத்து நேர்வதை அறிந்து என்மேல் ஆவிர்பவித்து என்னை ஒரே தாவு தாவி இங்கே ஆவேசமாக ஓடி வரச்செயது ஆக்கிரோஷத்தோடு அவனைக் கிழித்து கொல்லச் செய்திருக்கிறார். அவர் ஆவேசித்துத்தான் இந்தக் கார்யம் நடந்திருக்கிறது. இதைவிட ஆபத்தில் ரக்ஷணம் காட்ட ஸமயமுண்டா?”
ஆதி சங்கரர் கண்களை மூடினார். அவர் மனதில் நரசிம்ம ஸ்துதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆபத் பாந்தவா, அநத ரக்ஷகா என்று பத்மபாதரும் வேண்டிக் கொண்டு நின்றார்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;