
தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J.K. SIVAN
”நகுமோமு ” – ஆபேரி
மனிதன் ஒருவன் தான் இறைவன் கொடுத்த குரல்வளை நாண்களை நன்று பயன்படுத்தி அற்புதமான ஒலியை எழுப்பி செவிகளை நிரப்பி மகிழ்விக்க முடியும். பறவைகள் குரல் இனிமையானது. அதில் இயற்கையின் இன்பத்தையும் சில ஸ்வர சப்தங்களையும் கேட்கமுடிகிறது. ஆனால் மனம் செலுத்தி அதை விஸ்தாரமாக பரிமளிக்க செய்ய அவற்றுக்கு சக்தி இல்லை.
அப்படி நமக்கு இனிமையூட்டி பக்தி கலந்து ஆனந்த அம்ரித சாகரத்தில் திளைக்க வைத்தவர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் . அவரை விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை. ராமனை, கிருஷ்ணனை,சிவனை விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை என்பதைப் போல. தியாகராஜ ஸ்வாமிகள் தெலுங்கர் என்பதால் கீர்த்தனங்கள் தெலுங்கு காரர்களுக்கு மட்டும் என்றில்லாமல் உலகம் முழுதும் பலதேசத்தில் பல மொழியினரால் கேட்கப் படுகின்றன. அவரது கீர்த்தனங்களுக்கு ஜீவன் ஊட்டுவது போல் அவர் அமைத்து இருந்த ராகங்கள் இதற்கு முக்ய காரணம்.
ரெண்டாவது பக்தி உணர்ச்சி. ஸ்வாமிகளின் கீர்த்தனங்களை எவர் பாடினாலும் அதன் ருசி அந்த ராகம் வழியாக செவிக்குள் நுழைந்து பக்தி பாவம் மனதுக்குள் இடம் பெறும். ராக தாளத்தை விட பாவம் முக்கியம்.
இன்று நாம் ருசிப்பது தியாகராஜ ஸ்வாமிகளின் பிரபலமான ஒரு கீர்த்தனை ‘நகுமோமு”.
என்னைப் பொறுத்தவரை நான் முதலில் இந்த கீர்த்தனையால் ஈர்க்கப் பட்டது காலஞ்சென்ற ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில். அதை அவர் விசேஷமாக ரசித்து, ஆலாபனை பண்ணி விஸ்தாரமாக பாடியதை சின்ன வயதில் கேட்டபோது மயங்கினேன். சங்கீதம் அறியாத, தெலுங்கு தெரியாத, இசை வயப்பட்ட வாலிபன்.
அதற்கப்பறம் எத்தனையோ முறை,இன்றைய மாலை வரை அதை கேட்கும்போதும் அதே ஆர்வம், அதே தாகம், அதே உணர்ச்சி. கொஞ்சம் காது மந்தமாகிவிட்டதால் சற்று வால்யூம் மிகைப் படுத்தி கேட்க வேண்டியிருக்கிறது. மற்றபடி சங்கீத தாகம் குறையவில்லை.
நமக்கு எத்தனையோ வசதிகள் வந்தாலும் அவற்றில் சங்கீதம் கேட்க வாய்த்திருக்கும் யூ ட்யூப், ஆடியோ வீடியோ வசதிகள் மிகவரும் வரப்பிரசாதமாக அமைந்தவை என்று சொல்வேன்.
அப்போதெல்லாம் மெழுகில் வார்த்த RPM லாங் பிளே ரிகார்டுகள், இசைத்தட்டுகள் 3 நிமிஷம் பாட பலமுறை ஒரு வெல்வெட் தட்டின் மேல் கிர்ரென்று சுற்றும். அது சுற்றும்போது சவுண்ட் பாக்ஸ் ஊசி அந்த வார்ப்பு தட்டு மேல் மேலும் கீழும் ஆடிக்கொண்டே பிரயாணம் செய்யும். வரிசையாக வரிவரியாக தட்டு சுற்ற சுற்ற புனல் மாதிரி பெரிய ஸ்பீக்கர் வழியாக இசையின் ஓசை கேட்கும். சரியான வேகத்தோடு ரிக்கார்ட் பிளேட் சுற்றினால் தான் இசையை சுகமாக கேட்க முடியும். இல்லாவிட்டால் கர்ண கொடூர அழுகை. இன்னொரு விஷயம். இப்படி பிளேட் சுற்ற சாவி கொடுக்கவேண்டும். அதிகமாக கொடுத்தால் ஸ்ப்ரிங் .அறுந்து போகும். ஊசியை அடிக்கடி மாற்றவேண்டும்.
இன்னொரு முக்கிய சமாச்சாரம். மெழுகு இசைத் தட்டில் எங்காவது கீறல் இருந்ததோ அவ்வளவு தான். அந்த இடத்தையே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கும். மேற்கொண்டு கேட்க ஊசியை மெதுவாக தூக்கி நகர்த்தி அடுத்த கோட்டில் சரியாக மிருதுவாக வைக்க வேண்டும்.
ஒருமுறை MS சுப்புலக்ஷ்மி பாடிய ”கண்டதுண்டோ கண்ணன் போல” என்ற பிளேட் ”கண்ணன் போல” என்ற இடத்தில் கீறல் விழுந்து ஊசி மேலே நகராமல் தட்டு மட்டும் சுற்றிக் கொண்டிருக்க, திரும்ப திரும்ப ”போல போல லபோ லபோ” என்று ”லபோ லபோ” என்று கத்திக்கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கிறது.
Pallavi:
Nagumomu Ganaleni Naajaali Delisi
Nannu Brova Raa Raadaa Sri Raghuvara! Ni
நகுமோமு கனலேனி நாஜாலி தெலிசி
நனு ப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர – நகு
Anupallavi:
Nagaraajadhara! Nidu Parivaarulella
Ogi Bodhana Jesevaaralu Gare Yatulundadura Ni
நகராஜ தர நீது பரிவாருலெல்ல
ஓகி போதன ஜெஸேவாரலு காரே யதுலுந்ததுரா நீ
Charanam:
Khagaraaju Niyaanativini Vega Chanaledo
Gaganaanikilagu Bahu Durambani Naado
Jagamele Paramaatma! Evarito Moralidudu
Vagajupagu Taalanu Nannelukora Tyagarajanutani
ககராஜு நியா நதிவினி வேக சானலேதோ
ககனாநிகி லகு பஹு தூரம் பானி நாடோ
ஜகமேலே பரமாத்மா எவரித்தோ மோரலிடுது
வகஜூபகு தாளனு நன்னெலு கோறா த்யாகராஜனுதனி (நகு )
இந்த கீர்த்தனை எழும்போது ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் மனத்தில் தோன்றிய எண்ணம்:
”ரகு குல ஒளி விளக்கே, ஓ ஸ்ரீ ராமா, உன் புன்னகை தவழ் திரு முக மண்டலத்தை காணாமல் அனலிலிட்ட மெழுகாக தவிக்கிறேனே, என் தாபத்தை உணர்ந்து வரமாட்டாயா?, என்னைக் காத்திடவாயேன் காகுத்தா!
நீ தானே கோவர்தன கிரியை சுண்டுவிரலில் உயர்த்திப் பிடித்தவன். கோப கோபியரைக் காத்தவன். கேசவன்.
உன் பரிவாரங்கள் என்ன செய்கின்றன?. உனது கடமையை உனக்கு உணர்த்த வேண்டாமா? அன்றாட வேலைகளை நினைவு படுத்த வேண்டாமா? என்னை நீ காக்க வேண்டாமா? அவர்கள் கடமையில், வேலையில் அவர்கள் ஏன் தவறுகிறார்கள்? ஏன் கருடன் நீ இட்ட வேலையை, கட்டளைகளை சரிவர வேகமாக செய்வதில்லையா? வைகுண்டம் தான் ரொம்ப தூரத்தில் இருக்கிறதே எப்படி பூமிக்கு உன்னைத் தூக்கி சென்று என் வேலையை செய்வது என்று சாக்கு போக்கு சொல்கிறானா? என்னிடம் நீ வராமல் பண்ணுகிறானா? மகா ப்ரபோ, லோக நாயகா, வேறு நான் யாரிடம் முறையிடுவேன். என் ஆதங்கத்தை எங்கே போய் எவரிடம் சொல்வேன்? என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறம் தள்ளாதே, நான் தாங்க மாட்டேன். என்னை உன் பரிவாரத்தோடு சேர்த்துக் கொள்ளேன்”
அசாத்தியமாக ஆபேரி என்று ஒரு மனம் கவரும் ராகத்தை ஸ்வாமிகள் இந்த கீர்த்தனத்துக்கு பொருத்தி இருக்கிறார். பால முரளியை சுகமாக கேளுங்கள். இது தான் லிங்க் அதை சொடுக்கி தியாகராஜரோடு லயித்து ராமனை தேடுங்கள்
https://youtu.be/ZY0GQfLXkfE?si=iR_90gLODiz32VkH
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


