krishna….! j k sivan

கிருஷ்ணா ……….  நங்கநல்லூர்  J K  SIVAN
 ஆன்மீக வாழ்க்கை  உண்மையில் அமைதி நிறைந்த வாழ்க்கை.  உன்னோடு நெருங்கிய  சுதந்திர  வாழ்க்கை.  அதில்  எந்த எண்ணமும், செயலும், வார்த்தையும்  நமக்கும் பிறர்க்கும்  நன்மை ஒன்றே தரும்.  நமக்கு ஒரு  பொற்காலம்  ஏற்படுத்திக்  கொள்ள   நாம்  செய்யவேண்டியது  ஒவ்வொருவரிடத்திலும்  உள்ள  நல்ல குணம், நல்ல செய்கை,  நல்ல  வார்த்தையை  மட்டுமே  மதிக்கவேண்டும்.   மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும்.  இதால்   எல்லோரிடமும் அன்பு வளரும்.  அன்பு  நிறைந்த இடத்தில்  அணு சக்தி அழிவு  எதற்கு  தேவை?.  அதற்கென்ற  அவசியம்   காணாமல் போய்விடும்.  பகவான் மீது  அன்பை செலுத்து.  சக  மனிதரை  நேசி.  ”அவன்  குழந்தை மனசு கொண்டவனடா” என்ற  பேர்  எடு. இது  தான்   அன்பு வழி.”

உடல்  வளர்ச்சி மாதிரியே  மன வளர்ச்சி, உள்ள  வளர்ச்சியும்  தேவை.   ஒன்றாம் வகுப்பிலிருந்து  நேரே அடுத்த  ஜூன்  மாதம்   காலேஜ்  போக  முடியுமா?  மன  அமைதி  கொஞ்சம்  கொஞ்சமாக  தான்  விருத்தி அடையும். அதற்கு  விடா முயற்சி தேவை. முக்யமாக பொறுமை  வேண்டும்.  ஒரே நாள்  ராத்திரியில்  அடையும்  சமாசாரம்   அல்ல இது.

 ஒரு மந்திரம்  சொல்கிறேன். அது  தக்க சமயத்தில் நம்மை  காக்கும்.   ”யாரையும்  தூக்கி எறிந்து  நிந்தித்து  பேசவேண்டாம்.  அப்போது தான்  நம்மை  யாரும்  நிந்திக்க மாட்டார்கள்.”

வாழ்க்கையில்  ” அடிபடாததால் ” ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்)  கஷ்டங்களை   அநேகர் எதிர்கொள்ள வேண்டி அமைகிறது. குழந்தைகள்  எப்படி  பெரியவர்கள்  ஆகிறார்களோ  அப்படித்தான்  வாழ்வில் அனுபவம் (maturity )  ஏற்படும்.  நாம்  நம்மை  ஆள  எவ்வளவு  தலைவர்களை நம்பி  பதவியில்  அமர்த்து கிறோம்.  அப்பறம்  தானே   ”அனுபவித்து ” உணர்கிறோம்.   இதையே வாழ்க்கையில்  ”பாடம் ”  என்று  கற்றுக் கொள்கிறோம்.  

நம்மை  விட ஏதோ  ஒரு  மேலான சக்தி  நிச்சயம் இருக்கிறது.   சந்தேகமே வேண்டாம்.  அது நம்முள்  குடி கொண்டு  நம்மை  ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல,  அங்கிங்கெனாதபடி   எங்கும்  எதிலும்  நிறைந்திருக்கிரது  என்பதை மறக்கவே கூடாது.  கடவுளை  நமக்குப் பிடித்த எந்த பெயராலும்  அழைப்போம்.    அன்பை எல்லோரிடத்திலும்  செலுத்தி   முழுமையாக இதை  உணரமுடியும். உள்ளத்தின்  அமைதியில்  அவனைக் காணலாம்.  ஒரு  தனி  ஆனந்தம்  உள்ளே   உருவாவதை அப்போது அனுபவிக்க முடியும். நன்றியை  எதிர்பாராமல் கொடுப்பவனுக்கு அமோகமாக  பிரதிபலன் கிடைக்கும். தனக்கு நல்லது  என்று  தெரிந்ததை, அறிந்ததை,  செயல்படுத்தி  மற்றோருக்கும் உதவுபவன்    உத்தமன். பகவானே  உன் செயல்  என்று  எதையும்  தன்னாலியன்றவரை  சிறப்பாக  செய்பவன்  நல்ல பலனையே பெறுவான்.
எல்லோரும்  நல்லவரே,  எல்லோரும்  என்னவரே  என்று  எவன்  அன்போடு பழகுகிறானோ அவன்  பலமடங்கு அன்பை பெறுபவன்.  நமக்கு  வரும்  கஷ்டங்கள், துன்பங்கள்  எல்லாமுமே  நாம் நம்மை  செலுத்தும் அந்த  பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால்  தான். மனதில்  எப்போது  அமைதி  தோன்றுகிறதோ,  ஆண்மீக வளர்ச்சியில் நாம் வளர்கிறோம்.   நம்மை  செலுத்தும்  நம்முள்ளே இருக்கும்  அந்த  அதீத  சக்தியை உணர ஆரம்பித்து விட்டோம்  என்று புரிந்துகொள்ளவேண்டும்.   பிறரிடம்  மாற்றத்தை  எதற்கு  எதிர் பார்க்க வேண்டும்?   முதலில் நாம்  மாறினாலே   எங்கும் எவரிடமும்  மாற்றம் தானாக  தெரியும்.

கடவுள் மீது  நம்பிக்கையும், பக்தியும்  உள்ளவனுக்கு  எதிலும்   பயம் தோன்றாது.   எங்கும் எதையும், எவரையும் அன்பினால்  சொந்தம்  கொள்ளும்போது பயத்துக்கு  ஏது  இடம்?  நமக்கு  கஷ்டங்களும்  துன்பங்களும்  வருவது  கூட ஒரு   விதத்தில்  அந்த  நேரங்களில்  நம்மை  அவனை நினைக்கச்செய்வதால்  அதுவும் நன்மையே. குந்தி தேவி  ”கிருஷ்ணா எனக்கு துன்பத்தை தொடர்ந்து கொடு. அப்போது தான் என் மனம் உனையே நினைக்கும்”என்று சொன்னவள்.
உடலில்  தோன்றும்  உபாதைகள்  உடம்பு அநித்தியம் அழிவடைவது  என்று  நினைவூட்டவே.    பழைய  சட்டையை  கழற்றி  தூரப்போட  போட நேரம் நெருங்கி வருகிறது;  புதியது  நமக்கு   எங்கோ தயாராகிறது  என்று  உணர்த்தவே.

மற்றவர் செய்கைகள்  தவறு, சரி  என்று  சொல்ல  நமக்கேது  உரிமை.   அவர்கள்    தாமாகவே தம்மை  ஆராய்ந்து கொள்ள  நீ  உதவினால்  இறைவன் உனக்கிட்ட  பணியை கொஞ்சமாவது  செய்து வருகிறாய்  என்று  அர்த்தம்.

ஒரு விஷயம்  ஞாபகமிருக்கட்டும்.  மனம்  எப்போது  இறைவனின்  தொடர்பில்  ஈடுபட்டுவிட்டதோ, அந்தக் கணம்  முதல்  நீ  தனியாக  இல்லை.  அவனது  அழகிய  ”நெட் வொர்க்”  திட்டங்கள்,  நேர்த்தியான  செயல்கள்  உனக்கு  பலனளிக்க தொடங்கிவிட்டது  என புரிந்து கொள். எப்போது  மனதில்  அமைதி  குடி புகுந்ததோ,  அப்போது  உனக்கு  வெளியே இருந்து ஒரு   புத்துணர்ச்சி  வந்து சேரும். களைப்பு  அலுப்பு  என்பதே  காணாமல்  போகும்.
எப்போது  நீ  அவனை  நினைக்க  ஆரம்பித்துவிட்டாயோ,  அப்போது ஞானப் பிரகாச வெளிச்சம் கிடைக்கும்.  வேறு விளக்கொளி நாட  தேவையே  இல்லை. சூரியனையே நோக்கி   நடக்க ஆரம்பித்து விட்ட பின் மற்ற விளக்கொளி  வெளிச்சம்  தேவை  இல்லையே.   உண்ணும்  உணவு  உடலை நன்றாக  செயல்  பட தேவையானதாக மட்டுமே  இருக்கட்டும். அது   தான் ஆரோக்கியம்.  வாழ்வதற்கு  தான்  உணவே  தவிர  உண்பது  தான்  வாழ்க்கை  அல்ல. இன்னும்  வேண்டும்  என்ற  எண்ணம்  வரும்போது உண்பதை நிறுத்திக்  கொள்ள  பழகினால்  டாக்டர்  வீடு  அட்ரஸ்  தெரிய வேண்டிய அவசியமில்லை.  வாழ்க்கை   இதால் முழுமை  பெரும்.
நமது  நல்ல  எண்ணங்களும் நற்செய்கைகளும் தான்   உள்ளும்  புறமும்  தூய்மையடைய உதவுகிறது.  இந்த தூய்மை  இருந்தால் அவன்   தானே  நம்முள்  வந்து  அமர்வான்.  குப்பையிலா  ஒருவன் வசிப்பான்?  ஒரு   இனிய சங்கீதம்   மனதை வருடவில்லையா?.  அது போல்  இதயம்  இதனால் குளிரும்.  

உள்ளே நின்று  அவன்  வழி காட்டினால், தப்பான  பாதையில் எப்படி நாம்  போகமுடியும்?.  கல்,  முள்,   எதுவும் இல்லாத  சீரான  பாதை  அல்லவா  அது.?  பயணம்  – ஒரு  சுற்று  பயணம்  ஆகிறது –  சுற்றி  சுற்றி  அவனையே  அல்லவா  சேர்கிறோம்.

 கடவுள் ஏதோ  ரொம்ப  படித்த,  யாகம் செய்த,   தானம் செய்த,  தனவந்தனுக்கு,  ஆயிரம்  கோவில்  குளங்கள்  சென்றவனுக்கு  மட்டும் தான் கிடைப்பான்  என்பது   ராங் அட்ரஸ்.   ஒரே ஒரு  கணம் மட்டுமே  போதும்.    சுத்தமாக  கலப்படமில்லாத  மனத்தால்  அவனை  நினைத்தால்  அவனை  உணரமுடியும்.
அவனை  அடைந்து  விட்டோம்  என்று  எப்படி  தெரியும்?   பேதமில்லாத  அன்பு  எதனிடமும்  எவரிடமும்  பெருகிவிட்டால், கடவுள்   நமக்காக காத்திருப்பதை உணரலாம்.  அவன்   உள்ளே  இருக்கும்  போது, நம்  இதயத்தை   பூரணமாக  ஆக்ரமித்தபோது, ” நான், எனது ”  எப்படி  உருவாகும் ? .  வீட்டை  வாடகைக்கு  விட்டு விட்டு  ”எனது என்று சொல்லலாமா,  ”நான்” அங்கு வசிக்கமுடியுமா” ?

 ஒரு   காற்றின்  சுகத்தில்,  நீரின் தெளிவில்,  பூவின்  மண த்தில்,  பறவையின்  குரலில்,  நிலவின்  ஒளியில்,  உலகத்தின்  இயக்கத்தில்,  விடியல் அமைதியில்,   நிசப்தத்தில்,  எதில் வேணுமானாலும்  அவனை  உணர முடியுமே.  கும்பலாக  சத்தம் வேண்டாம்.  ஸ்பெஷல் டிக்கெட்  தரிசனமே வேண்டாம்.  கண்ணை முடி  உள்ளே நோக்கினால் போதுமே.  ”நான்   இங்கே தான்  இருக்கிறேன்” என்று  குரல் கொடுப்பான். ஆரவாரத்தில்  அமைதியை  தேடலாமா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;