ONCE UPON A TIME…. J K SIVAN

ஒரு காலத்திலே ஒரு ராஜா இருந்தான்..
.”NANGNALLUR J K SIVAN
வேப்பமரத்தடியில் கதையை நான் ஆரம்பிக்கும் போதே, என்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் குழந்தை களுக்கு ஒரு உத்ஸாகம். நிமிர்ந்து உட்காரும். எல்லா கண்களும் ஆர்வமாக கதை சொல்லுகிற தாத்தா என்னை நோக்கும். எல்லா வாய்களும் பிளந்திருக் கும்….. கதை என்றால் குழந்தைகள் மட்டுமல்ல நம் எல்லோருக்குமே பிடிக்கும். கதைப்பிரியர்கள் அல்லவா. என் சின்ன வயசில் எத்தனை கதைகளை அத்தைகள் சொல்ல கேட்டிருக்கிறேன்..
.+++
இப்போ ஒரு புது மாதிரியான கதை சொல்கிறேன்.
”ஒரு ஊரிலே ஒரு காலத்திலே ஒரு ராஜா….” எந்த ஊர், எந்த ராஜா, அவன் பெயர் இது வெல்லாம் குழந்தைக ளாக இருந்தபோது நமக்கு அவசியமில் லாமல் இருந்தது. அவன் என்ன செய்தான் என்று தான் ஆவலாக கேட்க காத்திருந்தோம். இப்போதைய குழந்தைகள் நம்மைப் போல் இல்லை. எந்த ஊர்? ராஜாவின் பெயர் என்ன. எப்போது இருந்தான்? ஏன், எதற்கு எப்படி …… கேள்விக ளுக்கு பதில் சொல்லி மாளாது. சில குழந்தைகள் பேய்க்கதை கேட்க பயப்படும். இருட்டில் எங்கு பார்த் தாலும் பேய்கள் நின்று கொண்டு வா வா என்று அழைப்பது போல் பதறும். நான் ராஜா கதை கேட்பதில் ஆனந்தம் அடைந்தவன்.
என் சிறு வயதில் நடந்தது ஒரு சம்பவம் ஞாபகம் வருகி றது. கல்கத்தாவில் வசிக்கும் எனக்கு அப்போது ஏழு வயது. வழக்கம்போல் அன்றும் கனத்த மழை. காற்று புயலாக வீசி சில்லென்று குளிர்காற்று உடலைத் துளைத்து எலும்புக்குள் சென்றது. எங்கும் பிரளயம் போல் மழை நீர். வெள்ளக்காடு. எங்கள் தெருவில் முழங்கால் ஆழம். எனக்குள் ஒரு ஆசை. பாழாய்ப்போன ட்யூஷன் வாத்யார் இன்று வரக்கூடாது. எங்கள் வீட்டு வெராண்டாவில் ஒரு மர ஸ்டூலில் நான் உட்கார்ந்து வெளியே தெருவில் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மார்பு படபடவென்று அடித்தது.
”கடவுளே, மழையை விடாமல் ராத்திரி ஏழரை மணி வரை விடாமல் பெய்யச்சொல். அப்போ தான் அந்த ட்யூஷன் வாத்யார் வரமாட்டார். ” என்னைப்பொறுத்தவரை மழை என்பது கல்கத்தாவில் ஒரு சந்தில் இருக்கும் என் வீட்டுக்கு ட்யூஷன் வாத்யார் வராமல் இருபதற்காக மட்டுமே பெய்வது. ட்யூஷன் வாத்தியாரிடம் இருந்து தப்ப வைப்பதற்கு தான் மழை பெய்யணும். அவர் ஒரு ராக்ஷஸன் தலையில் பலமாக குட்டுவாரே.
அடடே, என் பிரார்த்தனை பலித்ததோ? இல்லை, இயற்கை தானாகவே மழையை விடாமல் பெய்ய வைத்ததோ? தெரியவில்லை. ஆனால் அந்த ராக்ஷச ட்யூஷன் வாத்தியார் குடையைப் பிடித்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து தொலைத்துவிட்டார். அதோ தெரு முனையில் மெதுவாக தண்ணீரில் நடந்து கொண்டு குடையைப் பிடித்துக்கொண்டு வரும் அவர் தலை தெரிகிறதே. என் நம்பிக்கை சுக்கு நூறாக வெடித்தது.”கடவுளே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், பாபத்திற்கு தண்டனை என்று ஓன்று இருந்தால் நான் ட்யூஷன் வாத்தியாராக பிறந்து அவர் என் மாணவனாக பிறந்து நான் அவர் தலையில் நிறைய குட்ட வேண்டும். தினமும் அவரை வாட்டி எடுக்க வேண்டும்.”
இதோ குடை வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உள்ளே ஓடினேன். என் அம்மாவின் அறையில் என் பாட்டியும் அம்மாவும் எதிரெதிரே அமர்ந்து வழக்கம்போல் சீட்டு ஆடுகிறார்கள். எண்ணெய் தீபம் வெளிச்சம். அம்மாவின் அருகே சென்று அவளைக் கட்டிக் கொண் டேன்.
”அம்மா அம்மா ட்யூஷன் வாத்யார் வந்துவிட்டார். எனக்கு தலை ரொம்ப வலிக்கிறது. இன்னிக்கு ட்யூஷன் வேண்டாம் எனக்கு. என்னால் படிக்க முடியாது ‘.(இதை எந்த மாணவ மாணவியும் படிக்க கூடாது. எந்த புத்தகத் திலும் இது ஒரு பாடமாக வரக்கூடாது. குழந்தைகளுக்கு இந்த கதை தெரியவேண்டாம். நான் செய்தது தப்பு. எனக்கு தண்டனை கிடைக்கவில்லை. என் கெட்ட எண்ணம் வென்றுவிட்டது.)
”சரிடா குழந்தே, ட்யூஷன் வாத்யார் வந்ததும் இன்று ட்யூஷன் வேண்டாம் என்று சொல்லி அவரை வீட்டுக்கு போக சொல்லி விடு” என்றாள் என் அம்மா. அவள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். நிஜமாகவே எனக்கு தலைவலியா என்று கவலைப்படவில்லை. சீட்டு ஆட்டம் தொடர்ந்தது. என் படுக்கையில் இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தேன். உள்ளூர சிரிப்பு. வாத்யார் வந்தார். தொப்பலாக மழையில் நனைந்து இருந்தவர் குடையை மடக்கி வெராந்தாவில் வைத்து விட்டு உள்ளே வந்தார். என்னை படுக்கையில் பார்த்தார்.
”குழந்தைக்கு தலைவலி. இன்னிக்கு ட்யூஷன் வேண்டா ம்” அம்மா சொல்லிவிட்டாள் . தலைவலி நாடகம் ஆடி அவரைப் போக வைத்தேன். சரி என்று மழையில் குடையை பிடித்துக் கொண்டு திரும்பி சென்று விட்டார்.
ஏழு வயது பையனால் எத்தனை நேரம் இல்லாத தலை வலி நாடகம் ஆட முடியும்? வாத்யார் சென்ற அடுத்த கணம் எழுந்தேன். ஓடிச் சென்று பாட்டி கழுத்தை கட்டிக் கொண்டு ”பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு” என்று கெஞ்சினேன். பல முறை கெஞ்சினதும் தான் அவள் சீட்டு ஆட்டத்தில் இருந்து மனதை திருப்பினாள் .
”கொஞ்சம் இருடா செல்லம். இதோ ஆட்டம் முடியப் போகிறது. அப்புறம் பார்க்கலாம்”
”இல்லே பாட்டி எனக்கு இப்பவே நீ கதை சொல்லணும்’. அம்மா, உன் சீட்டை நீ நாளைக்கு ஆடிக்கோ. இப்போ பாட்டியை விடு. பாட்டி எனக்கு கதை சொல்லணும் ‘. நான் விடாமல் துளைத்தேன்.
என் அம்மா பெருமூச்சு விட்டாள்.
”சரி அம்மா, இந்த ராக்ஷஸன் விளையாட விடமாட் டான். என்னால் அவனை சமாளிக்க முடியாது. நீ அவனை அழைத்துக்கொண்டு போய் கதை சொல்லு. போதும் சீட்டாட்டம் இப்போதைக்கு. நாளைக்கு விளையாடலாம்” என்று சீட்டுகளை கீழே எறிந்தாள். ஒருவேளை நாளைக்கு ட்யூஷன் வாத்யார் வந்தால் என்னை ஒன்றரை மணி நேரம் பிடித்துக் கொள்வார் என்று நம்பிக்கை. அம்மா எழுந்து போய் சமையலறை சென்றுவிட்டாள். நான் பாட்டியைக் கட்டி இழுத்துக் கொண்டு என் கொசுவலைக்குள் அவளோடு படுத்துக் கொண்டேன்.
”பாட்டி இப்போ கதை சொல்லு..”
”ஒருகாலத்திலே ஒரு ராஜா. .”.. ஆஹா காதில் தேவாம்ருதம்.
”அந்த ராஜாவுக்கு ஒரு ராணி…” ஆஹா எவ்வளவு நல்ல ராஜா. அந்த காலத்தில் ஒரு ராஜாவுக்கு எத்தனையோ ராணிகள். இவன் நல்ல ராஜா. ஒரே ஒரு ராணி மட்டும். நல்ல ராஜாவின் நல்ல கதை……
”அந்த ராஜாவுக்கு பிள்ளையே இல்லை…. ”
ஏழு வயதில் எனக்கு ராஜாவுக்கு பிள்ளை எதற்கு?அவசியமா? எதற்கு அதனால் வருத்தம்? –இதெல்லாம் புரியவில்லை…
”ராஜா பிள்ளை வேண்டும் என்று காட்டில் தவம் இருக்க சென்றுவிட்டான்.”ஆஹா, நான் ராஜாவைப் போலவே காட்டிற்கு சென்றுவிட்டால் ட்யூஷன் வாத்யாரிடமிருந்து தப்பித்திருக்கலாமே….
”ராஜாவிற்கு ஒரு பெண். அழகு பிம்பம். அழகு ராணி யாக வளர்ந்து வந்தாள் .ராஜா பன்னிரண்டு வருஷம் காட்டில் தவம் இருந்தான். ராஜாவுக்கு தன் பெண் ணைப் பற்றிய எண்ணமே இல்லை. பெண் இப்போது ரதியாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணவில்லை இன்னும். ராணிக்கு வருத்தம்.
”என் தங்க குழந்தை கல்யாணம் ஆகாமலேயே இறந்து விடுவாளோ?. பகவானே இது .என்ன சோதனை?” ஆட்களை அனுப்பி ராஜாவை வீட்டுக்கு ஒரே ஒருநாள் வரும்படி அழைத்தாள். ராஜா வந்தான். ராஜாவுக்கு தன் கையாலேயே சமைத்து 64 வகை உணவு பரிமாறினாள். தங்க தட்டில் சாப்பிட்டான். அவனுக்கு பின்னால் நின்று அவன் பெண் அவனுக்கு மயில் தோகை விசிறியால் விசிறினாள். அவள் முகம் பார்த்து அழகில் மயங்கிய ராஜா ராணியிடம் கேட்டான்.
”யார் இந்த அழகிய தேவதை போன்ற பெண்?” .
” என் தலை எழுத்து” என்று நெற்றியில் அடித்துக்கொண்டே ராணி. ” இது என் விதி. உங்களுக்கு பெற்ற பெண்ணையே அடையாளம் தெரியவில் லை யா? ‘ என்றாள் .
”ஆ… என் பெண்ணா இவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள் ?”
”பின்னே என்ன பன்னிரண்டு வருஷம் ஆகவில்லையா நீங்கள் அவளை பார்த்து?”
“ஏன் அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணவில்லை?” என்றான் ராஜா.
”நீங்க போய் காட்டிலே உட்கார்ந்து கொண்டால் அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்?’ நான் எங்கே போய் வரன் தேடுவது ‘ என்றாள் ராணி.
”நாளைக்கு காலையில் எவன் என் கண்ணில் முதலில் படுகிறானோ அவனே என் பெண்ணுக்கு கணவன்..”
அடுத்த நாள் காட்டிற்கு கிளம்ப ராஜா நடந்த போது அரண்மனை வாசலுக்கு எதிரே சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பதினேழு வயது பிராமண பையன் முதலில் ராஜா கண்ணில் பட்டான்.
”இவனுக்கே என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன்” — ராஜாவின் உத்தரவை யார் மீற முடியும்?
+++
”அப்புறம் என்ன ஆச்சு பாட்டி ?” பாட்டியின் மேல் காலைப் போட்டுக்கொண்டு அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டேன்.
”கல்யாணம் ஆச்சு.” – என் ஏழு வயது மனதில் நான் அந்த 17வயது சுள்ளி பொறுக்கும் பிராமண பையனாக இருக்க கூடாதா என்று தோன்றியது. மழை விடாமல் பெய்தது. படபட வென்று வாசல் கூரையின் மீது தண்ணீர் விழும் சப்தம். நானும் பாட்டியும் படுத்துக் கொண்டி ருந்த அறையில் மினுக் மினுக் என்று எண்ணெய் விளக்கு எரிந்தது. ஒருகணம் நானே பெயர் தெரியாத அந்த ராஜ்யத்தில் அந்த ராஜா ராணி என் எதிரில் நிற்க, நானே அந்த பையனாகவும், அந்த இளவரசியோடு கழுத்தில் மாலையோடு அவள் கணவனாக நிற்பது போலவும் தோற்றம். தலையிலி ருந்து கால் வரை அவளுக்கு தங்க நகைகள்..
இப்போ இருக்கும் குழந்தைகள் பாட்டியை கேள்விக் கணையால் துளைத்து விடும். ஏன் ராஜா 12 வருஷம் வீட்டுக்கு வரவில்லை? எதற்கு அவனுக்கு பெண் ஞாபகம் இல்லை. ஏன் பார்க்கவில்லை? ஏன் கல்யாணம் பண்ணாமல் இருந்தான்? எப்படி பதினேழு ஏழை ப்ராமண பையனுக்கு ஒரு இளவரசியை ல்யாணம் பண்ணி கொடுத்தான் ? ஏன் யாரும் எதிர்த்து கேட்க வில்லை? அந்த பெண்ணுக்கு இந்த கல்யாணம் பிடித்ததா?” பாட்டி திணறி போயிருப்பாள். இந்த கதையை எதிர்த்து நிறைய பேர் பேப்பரில் கண்டனம் செய்திருக்க மாட்டார்களா? — அப்போது எனக்கு இதெல்லாம் தெரியாது.
”அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?
”++
”இளவரசி ஒரு பெரிய மாளிகை கட்டி, அதில் 7 அறைகள். கணவனை ஜாக்கிரதையாக உபசரித்து சேவை செய்தாள்.அவனை பண்டிதர்களிடம் அனுப்பி அவன் பாடங்கள் கற்றான். அவன் கூட கற்றவர்கள் ”யார் இந்த அழகி உன்னுடன் இந்த அரண்மனையில் இருப்பவள்?” என்று கேட்டார்கள். அவனுக்கு யார் அவள் என்று தெரியவில்லை. ஏதோ ஒருநாள் வாசலில் சுள்ளி பொறுக்கும்போது நடந்த அதிசயம் என்று தான் தெரியும்.
”ஒரு வருஷம் ஓடியது. அவன் நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்: ”இந்த மாளிகையில் உன் னோடு இருக்கும் அந்த தேவதை யார்?”
ப்ராமண பையன் அன்று இளவரசியை கேட்டான். ”என் நண்பர்கள் எல்லோரும் என்னை தொளைத்து எடுக்கிறார்கள். நீ யார்? என்று கேட்கிறார்களே. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நீ யார் என்று சொல்லு?” என்றான்.
”இன்னொரு நாள் சொல்றேன்” இப்படியே அவன் கேட்டுக்கொண்டே இருக்க அவளும் பதில் சொல்லாமல் இன்னொரு மாதம் சென்றது.
நாளைக்குள் நீ எனக்கு பதில் சொல்லாவிட்டால் நான் இந்த அரண்மனையை விட்டு போய்விடுவேன்.” என்று ஒரு நாள் பையன் சொன்னான்.
”நாளைக்கு கண்டிப்பாக சொல்கிறேன்” என்றாள் இளவரசி.
மறுநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவன் அவளிடம் ”இப்போது சொல். யார் நீ ?” என்றான்.
இன்று இரவு நீ சாப்பிட்டவுடன் படுக்கையில் நீ படுக்கும் போது உனக்கு பதில் கிடைக்கும். “
சரி ”.
அன்று இரவு சாப்பிட்டுவிட்டு தங்க கட்டிலில் போய் படுத்தான் அவன். எப்படியும் இன்று எனக்கு தெரிந்து விடும் அவள் யார் என்று.” அவனுக்கு வெகுநாட்களாக தெரியாமல் இருந்த ஒரு விஷயம் இன்று தெரிய போகிறது.
அவன் சாப்பிட்ட மீதியை அவள் சாப்பிட்டாள் . படுக்கை அறைக்கு வந்தாள் .
”ஐயோ இது என்ன கோரம்.? ஓ வென்று கதறினாள் அந்த இளவரசி
.+++
”ஐயோ பாட்டி என்ன ஆச்சு என்று என் பாட்டியை கெட்டியாக இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டேன்.
”கட்டிலில் இருந்த பூக்கள் நடுவில் இருந்து ஒரு கொடிய விஷ நாகபாம்பு அந்த பிராமண பையனை கடித்து அவன் மரணம் அடைந்து விட்டான்.”
எனக்கு அழுகை வந்தது. ஐயோ பாட்டி அப்புறம் அவனுக்கு என்ன ஆச்சு ?”
பாட்டி என்ன சொல்வாள்… இதுவரை இட்டுக்கட்டி கதை சொன்ன பாட்டிக்கு என்ன தோன்றி இருக்கும்? நடக்க முடியாததை எல்லாம் நடக்க செய்தவள் இனி என்ன சொல்வாள்? எந்த பாட்டியால் இதை தொடர்ந்து சொல்ல முடியும்? என்ன சொல்வது? குழந்தைகள் மனது அந்த பையனை உடனே உயிர் பெற செய்ய ஆசைப்படும்.
ஒரு நாள் டியூஷன் வாத்தியார் கொடுமையிலிருந்து மீண்டு விட்டோம் என்று ஆசைப்பட்ட பையனுக்கு எப்படிப்பட்ட ஒரு சோக கதை? கதை திடீரென்று முடிந்துவிட்டதே . பாட்டியை மார்பில் குத்தினேன்.
”சொல்லு பாட்டி சொல்லு. அவனுக்கு என்ன ஆச்சு.என்ன பண்ணினான் ?”
பாட்டி தொடர்ந்தாள் .
+++’
பெரிய வாழை மட்டைகள் எடுத்து அடுக்கி செத்துப் போன அந்த பையனை படுக்க வைத்து ஆற்றில் விட்டார்கள்.ஆற்றில் வாழை மட்டை தெப்பம் மிதந்து கொண்டே போயிற்று……………..”
+++
இருட்டில், சிறிய எண்ணை விளக்கு வெளிச்சத்தில், விடாது பெய்யும் மழை நேரத்தில், குளிரில், என் மனதில் வாழை மட்டை தெப்பம் மிதந்து போகிறதே… யாராவது மந்திரம் சொல்லி அவன் எழுந்து வரவேண்டும் என்ற ஆசை தோன்றியது..அப்படியே நினைத்துக் கொண்டே கண்கள் மூடி தூங்கி விட்டேன் போல் இருக்கிறது…என் கனவில் அந்த வாழை மட்டையில் பையன் அசையாமல் படுத்துக்கொண்டு மிதக்கிறான். ஆறு வேகமாக அவனை தூக்கி செல்கிறது. பொழுது விடிந்து எழுந்து வருவானோ…………………..?.
++
ஸார் இந்த கதை எப்படி.?மொட்டையாக நின்று விட்டதே…. கதை முடியவேண்டும் என்று என்ன கட்டாயம்.?… அப்புறம் என்ன என்று நீங்களே யோசியுங்களேன்..
சரி, இந்த கதை பிடித்திருந்தால் எனக்கு நன்றி தேங்க்ஸ், வாழ்த்து என்று எதுவும் சொல்லாமல் அதெல்லாம் அப்படியே ரவீந்திரநாத் தாகூர் பக்கம் அனுப்புங்கோ.
இது அவர் எழுதிய ‘ONCE THERE WAS A KING ” கதை.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;