VAIRAGYA SATHAKAM SLOKAS 13-16 J K SIVAN

வைராக்கிய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி

ஸ்லோகங்கள் 13 -16

13, ब्रह्मज्ञानविवेकनिर्मलधियः कुर्वन्त्यहो दुष्करं यन्मुञ्चन्त्युपभोगभाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः । सम्प्राप्तान्न पुरा न सम्प्रति न च प्राप्तौ दृढप्रत्ययान्
वाञ्छामात्रपरिग्रहानपि परं त्यक्तुं न शक्ता वयम् ॥ १३॥

13. brahma-gnaana-viveeka-nirmala-dhiyaha kurvanti aho dushkaram yan muncanti upabhoga-bhaangi api dhanaani eekaantato nisprihaa| sampraataan na puraa na samprati na ca praaptau drid`ha-pratyayoo vaamchaa-maatra-parigrahaan api param tyaktum na s`aktaa vayam

ப்³ரஹ்மஜ்ஞாநவிவேகநிர்மலதி⁴ய: குர்வந்த்யஹோ து³ஷ்கரம் யந்முஞ்சந்த்யுபபோ⁴க³பா⁴ஞ்ஜ்யபி த⁴நாந்யேகாந்ததோ நி:ஸ்ப்ருʼஹா: । ஸம்ப்ராப்தாந்ந புரா ந ஸம்ப்ரதி ந ச ப்ராப்தௌ த்³ருʼட⁴ப்ரத்யயாந்
வாஞ்சா²மாத்ரபரிக்³ரஹாநபி பரம் த்யக்தும் ந ஶக்தா வயம் ॥ 13 ॥

குளித்து,பட்டையாக விபூதி தரித்து, பஞ்சகச்சம் கட்டி கழுத்தில் ருத்ராக்ஷமணிந்து, ஒரு இடத்தில் கண்மூடி உட்கார்ந்தால் ஞானம் வந்துவிடாது. உடலின் விருப்பங்களை, வென்று, உள்ளத்தை ஒருமுகமாக்கி இறைவனைத் தேடினால் கிடைப்பதை எளிதில் பெற இயலாது. ஞானம் என்பதே எது தேவை, எது வேண்டாம் என்று பகுத்து உணர்வது. அதற்கு தான் புத்தியை பகவான் கொடுத்திருக்கிறான். அது விடா முயற்சி, கடினமான பயிற்சி வேண்டும். ஆசைகளை தியாகம் செய்வது சுலபமல்ல. பழைய நினைவுகள் வாசனைகள் மனதை அதன் பக்கம் இழுக்கும். அதை ஓரம்கட்டி, ஒரேயடியாக வீட்டில் கரப்பாம்பூச்சியை ஒழிப்பதுபோல் இரக்கமின்றி அழிக்கவேண்டும். திருமூலர் அனுபவித்து தானே ஆசை அறுமின்கள், அசைபட்டால் துன்பம் தான் மிஞ்சும் ஆனந்தம் வேண்டுமானால் ஆசையை விட்டால் தான் கிடைக்கும் என்று பாடினார்.

14. धन्यानां गिरिकन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां आनन्दाश्रुकणान्पिबन्ति शकुना निःशङ्कमङ्केशयाः । अस्माकं तु मनोरथोपरचितप्रासादवापीतट- क्रीडाकाननकेलिकौतुकजुषामायुः परं क्षीयते ॥ १४॥

14. dhanyaanam giri-kandareeshu vasatam jyotihi param dhyaayataam aanandaas`ru-jalam pibanti s`akunaa niss`amkam amkees`ayaha| asmaakam tu manoorathoparacita-praasaada-vaapii-tat`a- kriid`aa-kaanana-keeli-kautuka-jushaam aayuhu param kshiiyatee

த⁴ந்யாநாம் கி³ரிகந்த³ரேஷு வஸதாம் ஜ்யோதி: பரம் த்⁴யாயதாம் ஆநந்தா³ஶ்ருகணாந்பிப³ந்தி ஶகுநா நி:ஶங்கமங்கேஶயா: । அஸ்மாகம் து மநோரதோ²பரசிதப்ராஸாத³வாபீதட- க்ரீடா³காநந கேலிகௌது கஜுஷாமாயு: பரம் க்ஷீயதே ॥ 14 ॥

இந்த உலக சங்காத்தமே, சகவாசமே, வேண்டாம் என்று தானே உலக வாழ்க்கையிலிருந்து தனித்து எங்கோ மலைக் குகை, காடுகளில் போய் தனியாக உட்கார்ந்து கொண்டார்கள் பழையகாலத்தில் நிறைய ரிஷிகள். தியானத்துக்கு இடம் ஒரு முக்கிய அம்சம். புத்தர் லும்பினி வனத்தில் இரவுபகல் அன்னாகாரமின்றி ஞான ஒளியைத் தேடி பிடித்தார்.

புலி பாம்பு, பறவைகள் எல்லாம் மேலே வந்து தைரியமாக உட்காரும். இவன் நம்மை துன்புறுத்தும் சாதாரண மனிதன் இல்லை என்று அவை நன்றாக தெரிந்தவை. எத்தனை போட்டோக்களில் ரமணரைச் சுற்றி மிருகங்கள், பறவைகள் பார்த்தோம். எவ்வளவு சந்தோஷம் அவற்றின் முகத்தில். அரண்மனையில் அந்தப்புரத்தில், நந்தவனங்களில், தடாக கரைகளில் கிடைத்தவையை விட எத்தனையோ மடங்கு ஆனந்தம் தரும் அனுபவம் ஞானம் பெற்றால் கிடைக்கிறதே.

15. भिक्षाशनं तदपि नीरसमेकवारं शय्या च भूः परिजनो निजदेहमात्रम् । वस्त्रं विशीर्णशतखण्डमयी च कन्था हा हा तथापि विषया न परित्यजन्ति ॥

Bhikshaashanam tadapi neerasamekavaaram Shayyaa cha bhooh parijano nijadehamaatram Vastram visheernashata khandamayee cha kanthaa Ha ha tathaapi vishayaa na parityajanti

பி⁴க்ஷாஶநம் தத³பி நீரஸமேகவாரம் ஶய்யா ச பூ:⁴ பரிஜநோ நிஜதே³ஹமாத்ரம் । வஸ்த்ரம் விஶீர்ணஶதக²ண்ட³மயீ ச கந்தா² ஹா ஹா ததா²பி விஷயா ந பரித்யஜந்தி ॥ 15 ॥

உணவு எதற்கய்யா? உடலை வாடாமல்,உயிரை பாதுகாக்க பெட்டகமாக உழைக்க மட்டும் தான்? உடலை விட உள்ளே இருக்கும் ஆத்மா தான் முக்கியம். அதற்கு உதவும் உபகரணம் இந்த உடல். இதற்கு தீனி போடு வதில் எதற்கு ருசி? கிடைப்பதே பிக்ஷை, பிச்சை எடுத்தது அடுத்த வேளை வரை அதை பாதுகாக்க, அதில் எங்கே வந்தது ருசி? கட்டாந்தரை தான் பெரிய சுகமான படுக்கை, பதினாயிரம் ஒட்டு போட்ட கந்தல் தான் போர்வை. ஒரு வேடிக்கை என்ன தெரியுமா, இவ்வளவு கட்டுப்பாட்டிலும் ஐம்புலன்கள் ஒடுங்கவில்லை, அவ்வப்போது தலை தூக்கி என்னை திருப்தி படுத்து என்று பிடுங்குகிறதே!

ஆசையும் பாசமும் யாரை விட்டது. அதோ பாருங்கள் தெரிகிறதா அவனை? அவனுக்கு அடுத்த வேளை உணவு உண்டா, அது எது, எங்கே , எப்போது யாரிடம்.. கிடைக்கும்? .ஹுஹும் ஒன்றுமே அது பற்றி தெரியாதவன். கிடைத்தாலும் அது அவனுக்கு பிடித்த ருசியாகவா இருக்கும்? தினமும் பகல் ஒரு வேளை மட்டுமே பிக்ஷை தேடுபவன். பூமியே பாய், வானமே போர்வை என்று தரையில் படுப்பவன், இருக்கும் இடுப்பு வஸ்த்ரத்தில் இனி புதிதாக கிழிய இடமே இல்லை. இப்படிப்பட்ட நிலையிலும் அவன் மனத்தில் எத்தனை எதிர்பார்ப்புகள் ஆசைகள், கனவுகள், ஐம்புலன்கள் எப்படியெல்லாம் எல்லோரையுமே வாட்டி வதைக்கிறது. பரிதாபம் இதைவிட வேறு உண்டா?

16. स्तनौ मांसग्रन्थी कनककलशावित्युपमितौ मुखं श्लेष्मागारं तदपि च शशाङ्केन तुलितम् । वन्मूत्रक्लीन्नं करिवरशिरस्पर्धि जघनं
मुहुर्निन्द्यं रूपं कविजनविशेषैर्गुरु कृतम् ॥ १६॥

16. stanau maamsa-granthii kanaka-kalas`aav iti upamitii mukham s`leeshmaagaaram tad api ca s`as`aamkeena tulitam |
sravan-muutra-klinnaa kari-vara-s`ira-spardhi jaghanaa muhur nindyaa ruupaa kavi-jana-vis`eeshair guru-kritam

ஸ்தநௌ மாம்ஸக்³ரந்தீ² கநககலஶாவித்யுபமிதௌ முக²ம் ஶ்லேஷ்மாகா³ரம் தத³பி ச ஶஶாங்கேந துலிதம் । ஸ்ரவந்மூத்ரக்லீந்நம் கரிவரஶிரஸ்பர்தி⁴ ஜக⁴நம் முஹுர்நிந்த்³யம் ரூபம் கவிஜநவிஶேஷைர்கு³ரு க்ரு’தம் ॥

6The poets give such metaphors as golden vessels to the breasts which are but two lumps of flesh; the mouth, seat of phlegm and mucus, are compared to the moon; the loins, outlet for wet urine, are likened to the forehead of an elephant; thus glorifying the human form that is always contemptible

ப்ரம்மா எவ்வளவு சிறந்த கருணை உள்ளம் கொண்டவன்! ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அல்லவா படைத்திருக்கிறான். பாம்புக்கு வெறும் காற்று போதும் அது தான் ஆகாரம். அதற்கு எந்த பிரயாசையும் படவேண்டாம். சுத்தமாக நிறைய தந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் பச்சைப் புல், செடிகள். ஆடு மாடுகள் சுகமாக உண்டு ஜீவிக்க, அதன் மேல் படுக்கையாக உறங்குவதற்கு தந்தான். காசு கொடுக்கவேண்டாம். நமக்கு புத்தியை கொடுத்தான். சம்சார சாகரம் தாண்ட வழி எல்லாம் வைத்தான். அதற்கான குணமும் உள்ளே திணித்தான். யார் அதைப் பற்றி கவலைப்படுகிறோம்? அதென்னய்யா பெண்ணின் உடல் வசீகரம்? பெண் யார்? ஆணைப்போல் தான் ஒரு மாம்சம் நிறைந்த உடல். அதில் என்ன காமம்? இயற்கை சிலரை வேறு மாதிரி யாக படைத்திருக்கிறது என்பது அதற்கு தேவையான காரணத்தினால் தான். நீ குழந்தையாக இருக்கும்போது உனக்கு சாம்பார்சாதமா கொடுக்க முடியும்? பால் எங்கிருந்து உனக்கு வரும்? பசுவுக்கு எங்கே போவாய்? அதனால் தான் பகவான் பெண் என்று ஒரு ஜீவனைப் படைத்து அதற்கு மார்பகம் என்ற பகுதியை வைத்து அதில் குழந்தையாக நீ இருக்கும்போது தேவைப்பட்ட காலத்துக்கு பால் என்ற ஜீவாதார உணவை உள்ளே நிரப்பியிருக்கிறான்? அதை காம இச்சையாக பார்க்க வெட்கப்படவேண்டாமா? பெண்ணை, தாயென்று வணங்க வேண்டாமா, தாய் தெய்வமல்லவா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;