
திருச்சாழல் பாடல்கள் 8-11 நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர்
மாணிக்க வாசகரைப் பார்த்தது, இலங்கையிலிருந்து தான் அழைத்து வந்த பௌத்தர்களோடு அவர் வாதம் செய்து ஜெயித்தது. தன்னுடைய ஊமை மகளை அவர் பேச வைத்தது, அதுமட்டுமல்லாமல் அவளையே மணிவாசகர் அவர் சார்பில் பௌத்தர்களுக்கு பாடம் புகட்டியது எல்லாம் அந்த இலங்கை பௌத்த ராஜாவுக்கு ஒரே அதிசயமாகப் போய்விட்டது.
”மாணிக்க வாசகரே, ‘ நீங்கள் அத்வைத தத்துவத்தைச் சொல்கிறீர்களே , எல்லாம் அழிந்து போகும் போது எப்படிக் கடைசியில் ஒன்று மாத்திரம் நிலைத்து நிற்கும்? அதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள்?’ என் சந்தேகத்தை தீர்க்க வேண்டும்” என்கிறான்.
கோயில்களில் விபூதிப்பிரசாதம் கொடுப்பதற்குப் பழைய நாளில் விபூதியை உருண்டை உருண்டையாகக் கட்டி கட்டியாகப் பழம்மாதிரி பண்ணி உள்ளே வைத்திருப்பார்கள். வேண்டும்போது அதைப்பொடிபண்ணிக் கொடுப்பது வழக்கம். அந்த மாதிரி உருண்டையாகப் பண்ணிவைத்திருந்த விபூதிப்பழம் ஒன்றை உள்ளே இருந்து மாணிக்க வாசகர் எடுத்துவரச் சொன்னார்.
‘எல்லாம் அழிந்தாலும் கடைசியில் பரம்பொருள் அழியாமல் நிற்கிறது என்பதற்கு என்ன திருஷ்டாந்தம் .என்று கேட்கிறீர்களே, ராஜா, இதோ பாருங்கள்’ ‘இதையா பரம்பொருள் பரம்பொருள் என்கிறீர்கள்?” ராஜாவுக்கு சந்தேகம்.
”பலவண்ணத்தில் இருந்த எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும் அது கறுப்பாக ஆகிவிடுகிறது . அனால் எதற்காக’ சாயம் வெளுத்துப் போயிற்று’என்று சொல்கிறோம் ? ஏன் பல வண்ணங்களையுடைய பொருட் களைத்தீயில் இட்டால் கருகிக் கறுப்பாய் போய்விடுகின்றன. மறுபடியும் அதையே அக்னியில் புடம் போட்டால் நீற்றுப் போகிறது.அந்த நீறு நீறாகத் தான் இருக்கும் அந்த ஒன்றுமட்டும் மாற்றமில்லாமல் எப்போதும் இருக்கிறது. இந்த உலகம் எல்லாம் போனவுடன் ஒன்று மிஞ்சி நீறாக இருக்கிறதே அதுதான் திரு நீறு. இதில் ஒரு தத்துவம் மிஞ்சுகிறது. உண்மை என்ற பொருளான நீறைப் பூசிக்கொண்டால் உண்மைப் பொருளின் நினைவு வரும்.எண்ணத்தை விட்டு அது நீங்காது.” ‘மந்திரமாவது நீறு ‘ என்று கூறவில்லையா? என்று நீறின் தத்துவத்தை எடுத்துரைத்தார். மணிவாசகர் . ராஜாவுக்கு உண்மை புலப்பட்டது. ராஜா உடனே சைவ மதத்தை சார்ந்தான் என்பது சரித்திரம்.
இனி பெண்களின் வினா விடை வாதத்தின் தொடர்ச்சிக்குள் போவோம். இதுவரை திருச் சாழல் 7 பாடல்களை அறிந்தோம். இன்று இன்னும் மூன்று பாடல்கள்:
8.”கோலால மாகிக்குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.”
”ஏண்டி உங்கள் சிவனுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லையா? இப்படி ஒரு கடவுளா? பாவம் அந்த பித்தனுக்கு பாற்கடலில் யார் யாருக்கோ என்னென்னவோ கிடைத்த போது பாவம் ஆலகால விஷம் தான் நிறைய இலவசமாக கிடைத்து என்பதால் அதைப் போய் விழுங்கினாரே ? ஏன் இப்படி?”
‘அட, பைத்தியமே, சிவனைப் பித்தன் என்கிறாயே. இது கூட உனக்கு தெரியவில்லையே? பாற்கடலில் விளைந்தது மிகக் கொடிய விஷம். அதை அப்படியே விட்டு வைக்கலாமா? ஜீவராசிகளுக்கு தீது அல்லவா? தெரியாமல் அறியாமல் எவர் உண்டாலும் மரணம் என்றபோது ப்ரம்மா விஷ்ணுக்களும் அதில் அடக்கம் தானே. ஆகவே அனைவரையும், என்னைப்போன்ற நாயினும் கடையேனையும் காக்கும் கருணையோடு அந்த கொடிய விஷத்தை எவர் கண்ணிலும் கையிலும் படாமல் தான் விழுங்கி நீலகண்டன் என்ற பெயர் எடுத்தவன் எம் இறைவன். பரோபகார வள்ளல் அவர். முதலில் இதைப் புரிந்து கொள் ” என்கிறாள் பதில் சொல்லும் பெண்.
9. தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீபெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ.”
‘ பரவாயில்லை, ஏதோ பதில் சொல்லிவிட்டாய். ஆனால் எனக்கு இந்த விஷயம் புரியவில்லை. நீ விளக்கு முடிந்தால்? ஏன் உங்கள் சிவபெருமான் உலகத்தையே ஆள்கிறவன், தெற்கு நோக்கி அமர்ந்து பேசாமல் யோசிக்கிறவன், தெற்கு நோக்கி ஆடி அண்டத்தை தன்வசமாக ஆட்டிவைப்பவன், ஒரு பெண்ணைக் கண்டதும் ஜாக்கிரதையாக தூர ஓடாமல் தனது உடலில் ஒரு பாதியாக அவளை ஏற்று இடம் கொடுத்தான். இது பைத்தியக்காரத்தனம் இல்லையா? அதனால் தான் அவனைப் பித்தன் என்று அழைக்கி றீர்களோ?”
பதில் சொல்லும் பெண் கலகலவென்று கை கொட்டி சிரித்தாள். ”அடியே அசடே, புரிந்துகொள்ளாமல் பேசுவதில் உலகிலேயே உன்னை மிஞ்சுபவர் யார் பெண்ணே? நீ சொல்லும் சிவனின் உடலில் பாதி இடம் பிடித்த அந்த பெண் உன்னைப் போன்ற சாதாரணமானவள் இல்லை. சர்வ சக்தி. அவளைத் தன்னில் பாதியாக சேர்த்து, உயர்ந்த இடம் கொடுத்து, அவளது சக்தியை முழுதும் தான் பெற்று, தன்னை வணங்கும் அனைவரும் அவளையும் சேர்த்து வணங்கச்செய்து, உமையொருபாகனாக அனைவருக்கும் முக்தி மோக்ஷ லாபத்தை வேறு யாரால் கொடுக்கமுடியும் சொல்?”
10. தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ10
” சரியம்மா. நீ சொல்வதும் ஞாயம் தான். அப்படியென்றால் இந்த கேள்விக்கு ஒரு சரியான பதில் சொல்லு? உங்கள் இறைவன் சிவன் இருக்கிறானே அவனுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. என்றாலும் தனக்கு கிடைத்ததில் திருப்தி அடைந்து பேசாமல் இருக்கக்கூடாதோ? ஏன் மற்றவர்களை அழிக்கிறான்?தான் முடிவு இல்லாத வனாயிருந்தும் தன்னை அடைக்கலம் என அடைந்த நாயினும் இழிந்த கடையோரையும் ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தானா? இது என்ன புதுமை?
”உனக்கு மிக உயர்ந்த தத்வம் எப்படி புரியவைப்பேன்? துன்பம் நிறைந்த மாய வாழ்விலிருந்து விடுபட்டு ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் சிவனுடையவை. அவனுடைய ஆடிய பாதங்கள் அல்லவோ இம்மைக்கும் மறுமைக்கும் விண்ணிலும் மண்ணிலும் மேன்மை தரும் இன்றியமையாத பொருள் என்பதை இப்போதாவது உணர்வாய்”. இதை ராஜாவின் ஊமைப்பெண்ணை பேசவைத்து அவள் மூலமே மணிவாசகர் விடை கூற வைக்கிறார்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


