AGING J K SIVAN

எல்லோருக்கும் தெரிந்தது தான் இது.நங்கநல்லூர்  J K  SIVAN 

வயதான என்  நண்பர்களே,  நாம் ஒரே நாளில் கிழவர்கள், கிழவிகளாக மாறி விடுவதில்லை.  அறுபது, புறம், எழுபது என்பதுக்கு அப்புறம்  கிழம்,படு கிழம், தொண்டு கிழம் என்று முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம்.
பிறந்தது முதலே நாம் ஒவ்வொரு  நாளும் வயதானவர்களாகவே  வளர்கிறோம்.  காலம் செல்லச் செல்ல  ஆட்டம்,  பாட்டம், ஞாபகம், உணவு ஜீரண சக்தி,   எல்லாம் குறைந்து கொண்டே வருகிறது. களைப்பு,உடல் சுருக்கம், நரை,  வழுக்கை, கண்பார்வை மங்கல்,  காது கேளாமை,  ,முதுகு கூனல்,  புரிந்து கொள்ளும் சக்தி  குறைவு  எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம்மை வந்தடையும்.  இதைப்  புரிந்து கொண்டால் முதுமை என்பது தனியாக என்றோ ஒரு  நாள் வருவது இல்லை என்று  தெரியவரும்.
biologic aging  என்பது சில குடும்ப சொத்து. நாற்பதுக்கே  நரை, வழுக்கை,  முதுகு கூன் என்று சில குடும்பங்களில் நம்மை  முதுமைப் படுத்தும்.
psychologic age என்பது  வேறு.  எண்பதிலும் சுறுசுறுப்பாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வேகமாக போவது,  மொட்டை மாடிக்கு தாவி   துணி காயப்போடுவது,  ஏணியில் ஏறி பரண்  மேல்  குனிந்து  பொம்மைகள்  வைத்த அட்டை  டப்பாக்களை அடுக்குவதற்கும் சிலரால் தான்  முடியும். சிலர் நீஞ்சுவார்கள்,ஓடுவார்கள், மைல்  கணக்கில் நடப்பார்கள்.  சமையல் செய்வார்கள். பாடுவார்கள், எங்கே காய்கறி ஒரு ரூபாய் குறைவு என்று தெரிந்து பல கிலோ மீட்டர்கள் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பவர்கள். அடிக்கடி  தண்ணீர் கூட குடிக்காமல் விரதம்  உபவாசம் இருப்பவர்கள்.  சர்க்கரைக்காக ரேஷனில் ஆயிர ரூபாய்க்காக  நாள்கணக்கில் வரிசையில் அசையாமல் நிற்பவர்கள்.
நான் விடிகாலை ரெண்டு மூன்று   மணிக்கே  எழுந்து ஒரு பத்து பக்கமாவது எழுத விருப்பமுடியவன்.
இப்படி  முதுமை அடைவதில் எது  முறையானது, நார்மல்? ஏன் முதுமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக வருகிறது ?

உள்ளத்தையும், உடலையும் சீராக பாதுகாக்கிறவர்கள்  சிலர்  இருக்கிறார்கள். அவர்களால் முதுமையை கொஞ்சம் தூரத்தில்  விலகி இருக்க செய்ய முடிகிறது. சீர் குலையாமல்  உடலை ஒரு வித கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் முதுமை சீக்கிரம் அடைவதில்லை. சுதந்திரமாக செயல்படுபவர்கள், சோம்பேறித்தனம் இல்லாதவர்கள் கிழவர்களாக உடனே ஆவதில்லை. நாக்கை கட்டுப்படுத்தாமல்  ஓசியில் கிடைக்கிறதே என்று  மசால்வடை,தோசை, அடை , சக்கரை பொங்கல் என்று விழுங்குபவர்கள் கொஞ்சம்  கஷ்டப்படத்தானே வேண்டும். எப்போதும் சாப்பிட்டு விட்டு  தூங்காமல் உடல் பயிற்சி இருக்க வேண்டும் .வேளா வேளைக்கு  குறிப்பிட்ட நேரத்தில் உடல் பயிற்சி அவசியம். எதையோ நினைத்து  பெருமூச்சு விடாமல்,ஏங்காமல், எப்போதும் திருப்தியாக இருக்கும் மனநிலையைவளர்க்க வேண்டும். இளைஞர்கள்,   நம்மை விட  மேலானவர்கள்,  லக்ஷத்தில் சம்பாதிப்பவர்கள், தஸ்  புஸ்  என்று நுனி நாக்கு இங்கிலிஷ் பேசுபவர்கள் என்று ஒதூங்கி  இருக்கவேண்டும் என்ற  பாகுபாடு இல்லாமல் எல்லோருடனும்  கலந்து சரி சமமாக  பழக வேண்டும்.
”மாமா, நீங்க தான் எனக்கு இன்ஸ்பி ரேஷன் என்று பலர் என்னிடம் சொல்லும்போது காலரை  தூக்கி விட்டுக்  கொள்ளாமல் இன்னும்  கவனமாக   கூட்டத்தில் ஒருவனாக நான் இருக்கவே முயல்வேன். விளையாடும் 11ல் ஒருவனாக இருக்க முயற்சிப்பேன்.உள்ளே bench இல்  இருக்க விரும்பமாட்டேன். அப்படி தேர்வு செய்ய தகுதி இருப்பவனாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.
ஒரு சராசரி இந்தியனின் ஆயுசு நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது 32 ஆக  (1947ல்) இருந்தது. அப்புறம் பார்த்தால்  2015ல் சராசரி  ஆண்களின் ஆயுசு  69- 70 ஆக  உயர்ந்து விட்டதே.  எதனால்?  விஞ்ஞான, மருத்துவ  கல்வி அறிவு வளர்ச்சியால்.   அமெரிக்காவில்  ஆணுக்கு  81,  பெண்ணுக்கு  76 என்று இருந்தது.
ஏதோ கூட்டல் கழித்தல் கணக்கில் இப்படி பேப்பரில்  ஆயுசு காலம் நீண்டு விட்டதே தவிர  முடிவு என்பது இன்னும்  அறியப்  படாத  தேவ ரஹஸ்யமாகவே இருக்கிறது. சில வம்சாவழி உண்மைகளும் இதில் சேர்த்தி. உங்க குடும்பத்திலே யாருக்கு  அடிக்கடி மாரடைப்பு? யாருக்கு சர்க்கரை ஜாஸ்தி? மஞ்சக்காமாலை,  cancer  புற்று நோயில் எத்தனை பேர்  மறைந்தவர்கள்? என்ற  கேள்விகள் அதனால் தான் உருவாகிறது.
குடி, புகையிலை ஒருவிதத்தில் ஆயுசை குறைக்கிறது.   ஒன்று புரிந்து கொள்ளுங்கள் வயது நமது உருவத்துக்கு இல்லை. உள்ளே வேலை செய்யும் உடலின் பாகங்களுக்கும் உண்டு. அது தேய்மான மானால், தளர்ச்சி அடைந்து விட்டால்,  சரியாக  வேலை செய்யாவிட்டால் மரணம் சம்பவிக்க கூடும் அல்லவா?கண், காது, எலும்புகள்,மூட்டுகள்,   சருமம்,  ஆகியவை வயதானால் முன் போல் வேலை செய்வதில்லை. முதுமையை வெளிப்படுத்துகிறது.  ஒருநாள் கூட  லீவு கிடைக்காமல்,  இரவும் பகலும் சம்பளம் இல்லாமல் 70 வருஷம் 80 வருஷம் உழைத்தால் களைப்படையாதா?  சைக்கிள் கார் மட்டும் தான் பழசாகுமா?
குளியலறையில் விழுந்து காணாமல் போகிறவர்கள் அதிகம்.   ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம் அது.   வழுக்கல் கூடாது. அடிக்கடி தேய்த்து துடைத்து வைக்க வேண்டிய ஸ்தலம். காலம் செல்லச்  செல்ல உடலின் தசை நார்கள், நரம்புகள்  நொந்து,தொய்ந்து போய் விடுகிறது இது  ஒரு பத்து  பதினைந்து சதவிகிதம் காரணம்.
75 வயதானாலே  உடல் கொழுப்பு   CHOLESTROL   ரெட்டிப்பாகி விடுகிறது.  ”பெரிசுக்கு   ரொம்ப கொழுப்பு, ஆங்காரம்”  என்று பட்டம் பெறுவது   வேறே விஷயம்.    நான் சொல்வது எல்லோருக்கும் உடலில் உள்ள கொழுப்பு fat  சத்து.
வயதானால் இருட்டில், படிக்க முடியாது.அதிக வெளிச்சம் வேண்டும்.செய்தித்  தாள்,புத்தகம்   சின்ன எழுத்தில் படிக்க தடுமாற்றம்.  காது உரக்க பேசினால் தான் கேட்கும். நாக்கு  அதிக  உப்பு, காரம், புளிப்பு தேடும்.  மூக்கு சட்டென்று வாசனை பிடிக்க தவறும். மூக்கு நீண்டு விடும்.முனை  கிளி மூக்கு மாதிரி வளையும். ராஜாஜி மூக்கு ஞாபகம் இருக்கிறதா?  கை  முகம்  கழுத்து எல்லாம் சுருக்கம்  காட்டும்.  ஞாபக சக்தி கொஞ்சம் தள்ளாடும்.
”உன் பேரு  சாமா இல்லியோ?”” இல்லை தாத்தா, நான் சீனு”” அப்போ சாமா யாரு?
”அது எங்கப்பா”
ஒரு  சில சமயங்களில் திடீரென்று பெயர்கள் மறக்கும். பேங்க்கிலிருந்து வீடு திரும்பும் போது ரெண்டு தெரு தள்ளி சென்று என் வீட்டை தேடினேன் அதிசயித்தேன். நான் என் வீடு என்று நினைத்த வீட்டின் வாசலில் ரெண்டு தென்னை மரங்கள் எப்படி நான் பேங்க் போய் வருவதற்குள் இத்தனை பெரிதாக வளர்ந்து நிற்கிறது?. எப்படி ஒரு கருப்பு பெரிய நாய்  பால்கனியிலிருந்து என்னை கெட்ட  வார்த்தையில் திட்டுகிறது? என்  வீட்டுக்கு பால்கனியே  கிடையாதே?  என்ற கேள்விகள் என்னுள் எழுந்த பிறகு தான் நான் அடுத்த வோல்டாஸ் காலனியில்  என் வீட்டை தேடியது தெரிந்ததா? புரிந்ததா? இது தான் முதுமையின் அடையாளம். ரத்தக் குழாய்களின் சுருக்கம் மூளைக்கு ரத்தம் மெதுவாக  கூட்ஸ் வண்டி போல் போவதால் இந்த தடுமாற் றம்.
நுரையீரல் பகுதியில்  ஜன்னல் பைகளில் அடைப்பு அடிக்கடி தோன்றி  ப்ரணவாயுவின் போக்குவரத்து தடைபடும்போது மூச்சு விடுவது கஷ்டம். அடிக்கடி தும்மல்,  இருமல், சளி,ஜலதோஷம். காற்று மெதுவாக உள்ளே சென்று வெளியேறுவதால் இந்த கஷ்டம். காற்றோட்டமாக உட்காரவேண்டும். பார்க் போகவேண்டும்.பித்தம் வாதம் கபம் மூன்று தான் வயதானவனை  மோக்ஷத்துக்கு அனுப்பும் ஏஜெண்டுகள்.
எல்லாவற்றிலும் அவசரம் கூடாது. மெதுவாக முடிந்த வரை,  இருக்கும் பற்களால்  கடித்து சாப்பிடவேண்டும். கடிக்க முடியாதவற்றை கிட்டே சேர்க்க கூடாது. கொய்யாக்காய்,   மாங்காய், அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம். அடிக்கடி பாத்ரூம் வருவது ஒரு கஷ்டம். வயதானவன் எங்கே சென்றாலும் சுற்று முற்றிலும் பார்ப்பது எங்கே பாத் ரூம் இருக்கிறது?முடிக்கும்  முன்பு  ஒருவார்த்தை.  நீங்கள் கவனித்தீர்களா ?  நான் பெண்கள் முதுமை அடைவதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  காரணம். அவர்களுக்கு முதுமை அடையவே பிடிக்காது. பாவம் எதையாவது சொல்லி பயமுறுத்துவானேன் . தானே அனுபவத்தில் தெரிந்து கொண்டால் எனக்கு திட்டு மிச்சம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;