
வைராக்ய சதகம் 1 – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி
உஜ்ஜயினி ராஜா பர்த்ருஹரி ஒரு வேதாந்தி. விக்ரமாதித்யனின் அண்ணா என்பார்கள். அவன் தான் பிற்காலத்தில் தெற்கே வந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்திரகிரியார் என்று பேர் பெற்று பத்திரகிரி யார் புலம்பல் இயற்றினான். அற்புதமான வாழ்க்கை தத்வ பாடல்களைக் கொண்டது. நிறைய எழுதி இருக்கிறேனே. மறந்து போய்விட்டதா? மீண்டும் எழுதட்டுமா?
பர்த்ருஹரி வடக்கே உஜ்ஜயினியில் ராஜாவாக இருந்தபோது ஒருநாள் ஒரு முனிவர் அவன் அரண்மனைக்கு வந்தார். வாயில் காப்போன் உள்ளே ஓடிச்சென்று ராஜாவின் முன் கைகட்டி நின்றான்.
”என்ன விஷயம், சொல் ?”
”யாரோ ஒரு முனிவர் வந்திருக்கிறார் உங்களை நேரில் பார்க்கவேண்டுமாம்?”
”அழைத்துக் கொண்டு வா”
முனிவரின் காலில் விழுந்து வணங்கி அவரை ஆசனத்தில் அமர வைத்து உபசாரங்கள் செய்துவிட்டு கை கட்டிக்கொண்டு அருகே நின்றான் ராஜா பர்த்ருஹரி.
அவனது உபசரிப்பில் மகிழ்ந்த முனிவர் தனது தோள் பையில் இருந்து ஒரு பழத்தை எடுத்து அவனிடம்
கொடுத்து ”அரசே, இந்தா இது ஒரு தேவலோக கனி. இதை உண்டால் அமரத்வம், மன அமைதி கிட்டும்”
ராஜாவிற்கு ஒரு இளம் மனைவி. அவள் மீது அளவு கடந்த ஆசை. அவனுடைய உலகமே அவள் தான்.
”இந்த அமரத்துவம் தரும் பழம் இவளுக்கு தான் பொருத்தமானது” என்றும் என்னை மகிழ்விப்பவள்” என்று அவளிடம் கொடுத்தான். அந்த இளம் ராணி விதி வசத்தால் ராஜாவின் மனைவியானவள். அவளுக்கு உண்மையிலேயே ராஜாவின் தேரோட்டி மீது கண்மூடித்தனமான காதல். ஆகவே மெதுவாக அந்த பழத்தை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காத நேரம் அவனிடம் கொடுத்து சாப்பிட சொன்னாள். தேரோட்டிக்கு அவன் வீட்டுக்கு அருகே ஒரு வேசியின் மேல் ஆசை. ஆகவே அந்த வேசியிடம் ரிஷி கொடுத்த பழம் போயிற்று. அவளுக்கு அமரத்வம்!! விதி எப்படியெல்லாம் வேலை செய்கிறது!
அந்த வேசி தொழிலால் பிழைப்புக்கு வேசியே தவிர ராஜா பர்த்ருஹரி மேல் அளவற்ற பக்தி. மதிப்பு, விஸ்வாசம்.
”இந்த நல்ல ராஜா நீண்ட நாள் வாழவேண்டும் அவன் வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை நிச்சயமாக கிடைக்கும். ஆகவே அவனே இதை உண்டு அரணாக வாழ தகுதி வாய்ந்தவன் என்று ராஜாவை நேரில் கண்டு அந்த கனியை பற்றி விவரம் சொல்லி பர்த்ருஹரி கையில் அதை கொடுத்தாள் .
பர்த்ருஹரிக்கு தலை சுற்றியது. அதிர்ச்சியும் ஆச்சர்யமும், ஆத்திரமும் ஒன்று சேர்ந்து அவளிடம்
விசாரணை நடத்தியதில் தேரோட்டி, தனது ஆசை மனைவி எல்லோரும் செய்த காரியம் தெரிந்தது.
பர்த்ருஹரி தனிமையில் சிந்தித்தான். அவன் சகோதரன் அவனுக்கு ஏற்கனவே ராணியைப் பற்றி ”கிசு கிசு’ கள் நிறைய சொல்லி இவள் இந்த சாம்ராஜ்யத்தில் உன் ராணியாக இருப்பது உனக்கு அவமானம். என்ன செய்யவேண்டுமோ செய்” என்று சொன்னபோது பர்த்ருஹரிக்கு சகோதரன் மேல் கோபம் தான் வந்தது. சகோதரன் சொன்னது எவ்வளவு உண்மை இன்று இப்போது லேட்டாக புரிந்தது.
பாவம் சகோதரன் இதை சொன்னபோது பர்த்ருஹரி என்ன செய்தான்? நேரே ஆசை மனைவியிடம் சென்றான்.
”உனக்கும் தேரோட்டிக்கும் தொடர்பு உண்டா?”‘ என கேட்டபோது அவள் அழுதது அவன் மனத்தை வாட்டியது. சில சாட்சியங்களை அழைத்து வந்து ராஜாவின் தம்பி தன் மேல் அபாண்டமாக அவதூறு சொல்கிறான் என்று கதறினாள்.அதை நம்பி பர்த்ருஹரி தனது சகோதரனை நாட்டை விட்டு வெளியேற்றியது எல்லாம் கண் முன் காட்சியானது.
இப்போது அவனே கண்டுபிடித்த அவன் மனைவியின் துரோகம் அதை நிரூபித்தது. பாவம் என் மேல் அக்கறையாக எனக்கு அறிவுரை தந்த சகோதரனை நாடு கடத்தியது எவ்வளவு பெரிய துரோகம் தான் செய்தது என்று அவனை வருத்தியது.
நண்பனோ, மனைவியோ, உடன்பிறப்போ, (இது ஏதோ கட்சி சம்பந்தப்பட்ட வார்த்தை இல்லை) யாரும் யாருக்கும் உண்மையாக இருப்பதில்லை, நேர்மை நியாயம் நன்றி இல்லாத உலகம் என்று பர்த்ருஹரியின் மனது வெறுத்து வைராக்கியம் நெஞ்சில் வளர்ந்தது. உலகை வெறுத்தான்.
ஒரு சிலநாளில் திடீரென்று மனைவி குழந்தைகள், நாடு எல்லாவற்றையும் விட்டு தனியனாக காட்டுக்கு சென்றுவிட்டான். பல வருஷங்கள் சந்நியாசியாக வாழ்ந்தான். தியானம் அவன் மனக்கண்ணை திறந்தது.
நமக்கு பர்த்ருஹரி ”வைராக்கிய சதகம்” எனும் அற்புத நூல் கிடைத்தது. 100 ஸ்லோகங்கள். மற்ற இருநூறில் நூறு ”நீதி சதகம்” . மீதி இருக்கும் நூறு ”சிருங்கார சதகம்”. இந்த முந்நூறும் ”சுபாஷித த்ரிசதி” காலத்தால் அழியாத காவியங்கள். இனி வைராக்கிய சதகம் 100 மட்டும் அறிவோம்.
चूडोत्तंसितचन्द्रचारुकलिकाचञ्चच्छिखाभास्वरो लीलादग्धविलोलकामशलभः श्रेयोदशाग्रे स्फुरन् ।
अन्तःस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्ः चेतःसद्मनि योगिनां विजयते ज्ञानप्रदीपो हरः ॥ १॥
Choodothamsita-chandrachaarukalikaa-chanchachchhikhaabhaaswaro Leelaadagdha-vilola-kaamashalabhah shreyo dishaagre sphuran
Antahsphoorjad-apaara-mohatimira-praagbhaaram-uchchaatayan Chetah sadmani yoginaam vijayate jnaanapradeepo harah
சூடோ³த்தம்ஸிதசந்த்³ரசாருகலிகாசஞ்சச்சி²கா²பா⁴ஸ்வரோ லீலாத³க்³த⁴விலோலகாமஶலப:⁴ ஶ்ரேயோத³ஶாக்³ரே ஸ்பு²ரந் । அந்த:ஸ்பூ²ர்ஜத³பாரமோஹதிமிரப்ராக்³பா⁴ரமுச்சாடயந்: சேத:ஸத்³மநி யோகி³நாம் விஜயதே ஜ்ஞாநப்ரதீ³போ ஹர: ॥ 1
பரமேஸ்வரனின் சிரத்தில் அழகிய கங்கையை தடுத்து நிறுத்திய ஜடாமுடி. அந்த கருநிற விரித்த செஞ்சடை மேல் பால் நிலவு போன்ற பிறைச் சந்திரன். தீயை உமிழும் நெற்றிக்கண். மன்மதனையே, திரு புரங்களையே, எரித்து சாம்பலாக்கிய சக்திவாய்ந்த நெற்றிக்கண். பரமனின் சர்வ சக்தி மூவுலகும் அறிந்தது. அப்படிப்பட்ட சர்வ சக்தி வாய்ந்த காலகாலன் ,யோகிகள், பக்தர்கள் மனத்தில் கோயில் கொண்டவன். அவனை வணங்கி உய்வோம் என்ற காப்புச் செய்யுளுடன் பர்த்ருஹரி வைராக்கிய சதகம் துவங்குகிறார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




