
இது தான் வாழ்க்கை – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு ஊரில் ஒரு நல்ல ராஜாவுக்கு ஒரு நல்ல பிள்ளை. உலக வாதனைகள் கஷ்டங்கள் தெரியாமல் அரண்மனையில் வளர்ந்த பிள்ளைக்கு உலகத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்கள் அன்றாட கஷ்ட நஷ்டங்கள் என்ன, என்று தெரிந்து கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கஷ்ட நஷ்டங்கள் உணர்ந்து வசதிகள் செய்து நிவாரணம் தந்து ராஜாவை ஆளவேண்டும் என்று விருப்பம். ஆகவே அப்பாவின் ஆசியோடு மாறுவேடத்தில் ஒரு வியாபாரியாக மக்களோடு மக்களாக ஊரில் வாழ ஆரம்பித்தான்.
மக்கள் உயிர் வாழ எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள், பொய் சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் பாபங்கள் செயகிறார்கள், என்று புரிந்து அவர்கள் மேல் கருணை கொண்டான். அவர்களை திருத்தி நல் வாழ்க்கை தர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஒரு திருடன் மக்களின் உழைப்பின் பயனை திருடுவதை அறிந்து அவனைப் பிடித்து சிறையில் அடைத்தான். திருடன் சிறை தண்டனை முடிந்து தன்னை சிறையிலடைக்க காரணமாயிருந்த வியாபாரியை பழி வாங்க, அவனைக் கொன்று அவன் வீட்டிலேயே திருட முயன்றபோது பலசாலியான ராஜகுமாரனால் பிடிக்கப்பட்டான். கையும் களவுமாக பிடிபட்டாழலும் ராஜகுமாரன் அவனை தண்டிக்காமல் அறிவுரைகள் வழங்கி, அவனுக்கு பொருளுதவி செய்து நேர்மையாக உழைத்து பிழை என்று அனுப்பினான். சில நாட்கள் தான் திருடனால் ஒழுங்காக இருக்க முடிந்தது. பழையபடி அவன் குணம் அவனை திருடனாக்கியது.
அடுத்த ஊரில் கணவனை இழந்த ஒரு பெண் தனது சிறு குழந்தையோடு கஷ்ட ஜீவனத்தில் வாழ்ந்து வந்தாள் . மகனை கஷ்டப்பட்டு வளர்த்தாள் . அவன் படித்து ஒரு பெரிய நகரத்தில் வேலை செய்து தாய்க்காக பணம் சேர்த்துக்கொண்டு ஊருக்கு திரும்பினான். தாயும் வேலை செய்து பிழைத்து மகன் வந்தால் அவனுக்கு கொடுக்க கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தாள் .
மகன் திரும்பி வந்த சந்தோஷத்தில் தாயும் அவனோடு இரவெல்லாம் பேசிக்கொண்டு அவன் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு அவரவர்கள் சேர்த்து வைத்த பணத்தை ஒருவருக்கொருவர் கொடுத்து அதை எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு பரணில் வைத்துவிட்டு தூங்கினார்கள். அன்று இரவு தான் மேலே சொன்ன திருடன் அவர்கள் வீட்டுக்கு திருட வந்தான். ஏதோ சத்தம் கேட்க மகன் எழுந்து திருடனைப் பிடித்தான். திருடன் தப்புவதற்கு கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பயனை கொன்றுவிட்டு திருடிய பணத்தோடு ஓடிவிட்டான். தடுக்க வந்த தாய்க்கும் உடலில் சில இடங்களில் கத்திக் குத்து.
இறந்த மகன் மேல் விழுந்து புரண்ட தாய் மயக்கமானாள் . அவள் செல்வமும் செல்லமகனும் சேர்ந்து போய் விட்ட துக்கத்தில் அவளும் பிணமானாள் .
சில காலம் சென்ற பின் மேலே சொன்ன இளவரசன் ராஜாவானான். புதிய ராஜா வுக்கு மக்கள் கஷ்டம் தெரியும் ஆதலால் அவர்கள் குறையை தீர்க்க வழிகள் உண்டாக்கி நன்றாக ஆண்டான். ராஜா தான் தங்களோடு வியாபாரியாக இருந்த நல்லவன் என்று அறிந்த மக்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த நேரத்தில் தான் ஒருநாள் மேலே சொன்ன திருடன் கடைத்தெருவில் எங்கோ வயிறு முட்ட குடித்துவிட்டு மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக்கொண்டு இருந்தான். தான் ஒரு ஏழை விதவை சேர்ந்த பணத்தை திருடியதையும், அவள் மகன் பிடிக்க வந்தபோது அவனைக் கத்தியால் குத்தி கொன்றதையும் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு அவனை மக்கள் பிடித்து ராஜா முன் நிறுத்தினார்கள். ராஜாவைப் பார்த்து திருடன் அதிர்ச்சி அடைந்தான்.
தன்னை சிறையிலடைத்த வியாபாரியை பழி தீர்க்க அவனைக் கொல்ல வீட்டில் நுழைந்து திருடவும் முயன்றபோது பிடிபட்டு, தனக்கு உதவ முன் வந்து நல்ல போதனைகள் சொன்ன வியாபாரி தான் ராஜா என்று புரிந்தது. ராஜாவுக்கும் அவனை அடையாளம் தெரிந்தது.
”உன்னை திருத்த எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கொடுத்தேன், பொருளுதவி செய்தேன் . என்ன சொல்லியும் நீ திருந்தாமல் திரும்ப குற்றவாளியாகவே நிற்கிறாய். நீ செய்யும் குற்றங்களுக்கு உண்டான தண்டனை நீ அனுபவித்தே தீரவேண்டும் ராஜா அவனைத் தூக்கிலிடப்பட்டான்.
இந்த கதையின் தாத்பர்யம் என்ன? பகவான் நம்மோடு நம்முள் இருந்து நல்ல வழிகள் சொல்லும் போதெல் லாம் மனசாட்சி என்ற அதை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்ந்து பாபங்களின் கர்மபயனால் அவதிப்படுகிறோம். அப்போதும் இறைவன் நமக்கு மீண்டும் திருந்த வழிகளை எல்லாம் கீதை உபநிஷத் போன்ற நீதி நூல்கள் மூலம் தந்தும் திருந்தாமல் கடவுளை கருணையில்லாதவன் என்று நிந்தித்து நம்முடைய தவறுகளுக்கு மற்றவர்களை காரணம் காட்டி துன்பப்பட்டு மாள்கிறோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



