“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN

ஹிந்து என்று சொல்லிக்கொண்டால், அவன் வீட்டில் விளக்கெரியும். சாமி படம் இருக்கும். வீட்டில் பூத்த ஒரு பூவையாவது , ஒரு முழம் தொடுத்த பூவாவது வாங்கி, அதுவும் இல்லையென்றால் ஊதுவத்தியாவது கொளுத்தி சுற்றி சாமி கும்பிடுவான்.தனக்கு தெரிந்தால் ஏதாவது ஸ்லோகம்,தமிழில் தேவாரம்,திருப்புகழ், ஒன்று சொல்லுவான்,பாடுவான். தெரியாவிட்டால் ஒரு டேப்பிலாவது MSS அம்மாள் குரல் பூஜை அறையிலோ,அலமாரியிலோ ஒலிக்க செய்வான். அவனுக்கு அர்த்தம் முக்கியமில்லை. சத்தம் தான் ப்ரதானம். அந்த செவிக்குணவு மன சந்தோஷத்தை தருகிறது.நெற்றியில் ஏதோ ஒரு திருநீற்றுக்கீற்றோ ,சந்தனமோ,குங்குமமோ, நாம
மோ அவனை அலங்கரிக்கும். முகத்தில் ஒரு தேஜஸ் ஒளிவீசும்.
முக்கால் வாசி வீடுகளில், இந்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள ஹிந்துக்கள் இல்லங்களில் ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் MSS குரலில் ஒலிக்கும் என்றால் அதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

ஆதி சங்கரரின் எத்தனையோ சிருஷ்டிகளில் அபூர்வமான ஒன்று பஜகோவிந்தம் ஸ்லோகங்கள்.. பிரபல மானது. ஒவ்வொரு வீட்டிலும் ஒலிப்பது. இதை பிரகரண க்ரந்தம் என்பார்கள். பார்ப்பதற்கு பாடு வதற்கு பஜனை பாடல் மாதிரி மட்டும் இல்லாமல் அதன் வேதாந்த சாரம் சிந்திக்க வைக்கும் சக்தி கொண்டது.
இன்று வரை இந்த புனிதமான பாரத தேசம் மற்றொரு ஆதி சங்கரரைப் பெறவில்லை. 7ம் நூற்றாண்டில் கேரள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்தில் அவதரித்த இந்த மா மேதை, பரமசிவனின் அம்சம். சமஸ்க்ரி தத்தில் அவர் சாதித்ததை இன்னும் எவரும் மிஞ்சவில்லை என தைரியமாக சொல்லலாம்.

பண்டிதனும் பாமரனும் போற்றி மகிழும் அவரது பஜகோவிந்தம் என்னும் 31 ஸ்லோகங்கள் கொண்ட பொக்கிஷத்தை பற்றி தான் இனி தெரிந்து கொள்ளப்போகிறோம். எளிய நடை, ஆழமாக பொதிந்த அற்புத கருத்துகள். வேதாந்த அறிவுரைகள், பக்தியின் சிறப்பு, இவை கலந்த ஒரு படைப்பு பஜகோவிந்தம்.

மூதறிஞர் ராஜாஜி இந்த காவியத்தை பற்றி சொன்னதை ஆங்கிலத்திலேயே படித்தால் தான் அதன் சுவையை ரசிக்க முடியும்.

“When intelligence matures and lodges securely in the heart, it becomes wisdom.
When that wisdom is integrated with life and issues out in action, it becomes devotion.
Knowledge, which has become mature, is spoken of as devotion.
If it does not get trans- formed into devotion, such knowledge is useless tinsel”

எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார் ராஜாஜி:

” புத்தி முதிர்ந்து இதயத்தில் ஆழமாக அசையாது பதிந்தால் அது ஞானம் ஆகும். அந்த ஞானம் வாழ்வில் கலந்து செயலில் பரிமளித்தால் அதன் பெயர் பக்தி. அறிவு பெருகி முதிர்சசி அடைந்தபோது அதுவே பக்தியாகிறது. அப்படி கற்ற கல்வி கேள்வி ஞான அறிவானது பக்தியாகாவிட்டால் அது வெறும் பள பளக்கும் ஜரிகை பகட்டு”

பாரத ரத்னங்கள் இருவர் சேர்ந்து அளித்தது இந்த பஜகோவிந்தம். எவர் வீட்டிலாவது இல்லாத ஒரு CD யா ”பஜகோவிந்தம்?” பல வீடுகளில் இப்போது CD டேப் எல்லாம் காணோம். யூட்யூப் இருக்கிறதே எல்லாம் பாட . அதில் ராஜாஜியின் மேற்கண்ட வாக்கியம் ஒலித்ததும் இசைக்குயில் M .S .சுப்புலக்ஷ்மி அம்மாவின் கம்பீர ராகமாலிகை பஜகோவிந்தம் அற்புதமாக வீடெங்கும் எதிரொலிக்கும். தீய சக்திகள் வீட்டை விட்டு ஓடும். அர்த்தம் தெரியாமலேயே சிறிய வயதில் நான் இதை மனப்பாடம் செய்தது அந்த குரலின் காந்த சக்தியாலும் இசையின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு நான் என்னை இழந்தபோது.

”மானுடர்களே, கொஞ்சம் நில்லுங்கள்:
செல்வோம் என்று செல்லும், ஓடிக்கொண்டே இருக்கும், பணத்தை தடுத்து நிறுத்தி சேர்த்து வைத்து அதன் பயனாய் நீங்கள் பெறுவது எண்ணற்ற சிக்கல்களும் துன்பங்களும் தான். ஏதோ வாழ்க்கை வண்டி ஓடுவ தற்கு தேவையான பணம் கிடைக்க பாடுபடுவதில் நியாயம் உண்டு. பேராசை, செல்வத்தை சேர்க்க, மேலும் மேலும் தேவை என்ற ஒரு தாகம், பசி, என்று அலைந்தால் அது தான் கடைசியில் சொல்லொணா துயரில் ஆழ்த்தும். சேர்த்த அந்த பணம் களவு போகும். உறவினரே பகைவராகி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். பணம் அன்பை விலக்கி பயத்தை நெருங்க வைக்கும். அகம்பாவத்தை வளர்க்கும். கொடுப்பதில் உள்ள சுகம், பெருமை எல்லாம் அறியாமல் செய்யும்.

எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமானாலும் நஞ்சு தானே. தனமோ, தான்யமோ, உடையோ, ஆபரண மோ, தேவைக்கு மிஞ்சினால் அது சந்தோஷத்தை தின்றுவிடும். அளவை மீறும்போது கவலையை கொண்டு சேர்க்கும்.

பாவம், இன்னும் நிறைய பேர் கட்டு கட்டாக பணம் இருந்தால் தான் நிம்மதியும் சுகமும், இன்பமும் என்று மனப்பால் குடிக்கிறார்கள். இதனால் பணத்துக்கு அடிமையாகி மனச்சாட்சியை அடகு வைக்கி றார்கள், இழக்கிறார்கள்.

ரெண்டு பச்சை மூங்கில் கொம்புக்கு நடுவே சில குட்டி குட்டி கொம்புகள் கட்டிய படுக்கையில் கட்டப்பட்டு பிரயாணம் செல்லும்போது கட்டு கட்டு நோட்டு கூட வருமா? அந்த கட்டு குடும்பக்கட்டையே நொறுக்கி விடுமே. வாரிசுகள் ஒன்றோடொன்று எனக்கு, உனக்கு என்று மோதும்போது அல்லவோ வேடிக்கை இருக்கிறது. ஒருசிலர் கொலை செய்யப்பட்டும் மடிவதை பார்க்கிறோமே. அனைவருமே சேர்த்து வைத்து விட்டு போனவனை வாய் கூசாமல் இகழ்வார்கள். இது தான் அவன் புகழ்.

பணம் மூன்று எழுத்து கொண்ட விஷம். அப்பப்பா எத்தனை பொய், கோபம், தாபம், ஏக்கம், பெருமூச்சு, கர்வம், விரோதம், பொறாமை, விஷமம்!! எல்லாவற்றையும் எப்படி இந்த சாதாரண காகிதம், பாவம், அந்த சிரிக்கும் காந்தியோடு இணைக்கிறது? காந்தி நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறாரா? அல்லது ஏண்டா என்னை இந்த ”கட்டில்” போட்டு ”இக்கட்டில்” மாறுகிறீர்கள் என்று ஏளனமாக நகைக் கிறாரா? அல்லது விரக்தி புன்னகையா?

எல்லாம் மாயை. ரொம்ப ரொம்ப சக்திவாய்ந்தது மாயை. நம்மை வெட்டி சாய்த்து வீழ்த்துகிறது. கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் பணத்தை படைத்தான். தன்னையே அதால் சிறுக சிறுக அழித்துக் கொண்டு சாகிறான்.

பணத்தால் வராத அத்தனை இன்பமும், பெருமையும், நன்மையும் பிறருக்கு உண்மையாக உழைப்பதில், பலனெதுவும் எதிர்பார்க்காமல் உதவுவதில் கிடைக்கிறது. ஆமாம் அப்படித்தான் அவ்வாறே தான் என்று சொல்பவர்க ள் நிறையவே இருக்கிறார்கள்.

பணம் உள்ளவன் இவ்வாறு உழைத்தால், சேவை செய்தால், அவனே கடவுள். திருவள்ளுவர் கூற்றுப்படி ஊரில் பொதுக்கிணறு தரும் நீர் எப்படி எல்லோர் வீட்டிற்கும் தேவையான தண்ணீரை மனமுவந்து பாரபட்சமின்றி தருகிறதோ அதுபோல் அறிவுள்ள பணக்காரனின் அறிவுச்செல்வமும், பணமும் கூட வாரி வழங்கினால் அநேகரின் நல்லாசியை இறைவன் அருளாக தருமே. மேலும் பெருகுமே. இறைக்கும் கிணற்றில் தான் ஊற்று இருக்கும். பஜகோவிந்தம் ஒரு அற்புத காவியம். இறைக்க இறைக்க ஊரும் ஊற்றுக் கிணறு.
புத்தியை தேய்த்து பாசி நீக்கி பளபளக்க செய்யும் சக்திவாய்ந்த நாலு அடி மந்திரக்கோல்.

மொத்தம் 31 ஸ்லோகங்கள் இருக்கிறது. படிக்கவே அதன் சந்தம் இனிக்கிறது. அதை உங்களுக்கு ஐந்து சிறுக சிறுக வழங்க எனக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

ஆதி சங்கரர் ஒரு அபூர்வர். சிறிது நேரமே பூத்து மணந்த அமர மலர். ஏழு வயசிலேயே சன்யாசம்.
”அம்மா , உனக்கு சந்தேகமே வேண்டாம். நான் உன் அந்திம நேரத்தில் உன் கிட்ட தான் இருப்பேன்.நிச்சயம்” என்ற வாக்கு கொடுத்து விட்டு, நடையாய் நடந்து நர்மதைக் கரை அடைந்து அங்கு ஒங்கார் நாத் என்ற இடத்தில் தன் குரு கோவிந்த பகவத் பாதரை தரிசிக்கிறார் சங்கரர்.

”சங்கரா, நீ பிறவி எடுத்த காரணம், செய்யவேண்டிய பணி அனைத்தும் அறிவுறுத்துகிறேன் கேள்.” என்று குரு சங்கரருக்கு உபதேசிக்கிறார். அவரை சங்கரர் குருவாக ஏற்று, அவரிடம் உபதேசங்கள் பெற்று, கல்வி கேள்வி களில் மேலும் சிறப்படைந்து அத்வைத வேதாந்தத்தை உலகில் பரப்ப காசி செல்கிறார்.
ஆதி சங்கரர் வாரணாசி எனும் காசி க்ஷேத்ரத்துக்கு நடந்து செல்கிறார். அங்கு அதிசயங்கள் பல நிகழ் கின்றன. பௌத்தர்களை வாதத்தில் வென்று அவர்களே அவரது சீடர்களா கின்றனர். சனந்தனர் என்கிற பத்மபாதர் முதல் சிஷ்யராகிறார். பத்ரிநாத் செல்கிறார். அங்கிருந்து பிரயாகை, ஹரித்வார், ரிஷிகேஷ், ஸ்ரீநகர், ருத்ர பிரயாகை, நந்தபிரயாகை, காமரூபம், கோமுகி, என்று பல க்ஷேத்ரங்களை தரிசிக்கிறார். போகுமிடமெல்லாம் அத்வைதம் காட்டுத்தீயாக மக்களை சென்றடைகிறது. சகுண பிரம்ம வழிபாடு நிர்குண பிரம்மத்தை அடைய வைக்கும் என உபதேசிக்கிறார். பிரஸ்தான த்ரயம் எனப்படும் உபநிஷத், கீதை, பிரம்ம சூத்ரம் எல்லாவற்றுக்கும் உரை எழுதுகிறார்.
காசி தானே சகல ஞானஸ்தர்களும் சேரும் இடம். அப்போது ஹிந்து சனாதன தர்மம் க்ஷீண தசையில் தக்க குருமார்கள் இன்றி தவித்துக்கொண்டிருந்தது. ஜைனமும் பௌத்தமும் தலை தூக்கி நமது சமயத்தை மேலும் பலவீனமாக்கும் நேரம். வடக்கே அரசாண்ட மன்னர்கள் பௌத்தத்தை பின்பற்றி அதை பரவ உதவினார்கள். இந்த நிலையை அந்த பரமேஸ்வரனே உணர்ந்து காலடியில் சங்கரனாக அவதரித்து மீண்டும் ஹிந்து தர்மம் செழித்தோங்க செய்தார் என்று கொஞ்சம் சரித்திரம் படித்து விட்டோம் இப்போது.

இதை எழுதும்போது நிறைய படித்த எனது நண்பர் ஒய்வு பெற்ற , டெலிபோன் இலாக்கா டிவிஷனல் எஞ்ஜினீயர் ஸ்ரீ R ஸ்ரீனிவாசன் வந்து பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்த விவரம்:
”சிவன் சார், நான் எங்கோ படித்ததில் ஒரு விஷயம். ஆதி சங்கரர் தனது குரு கோவிந்த பாதரின் மீது இருந்த பக்தியால் குருவந்தனமாக அவர் பெயரில் தான் ”பஜ ”கோவிந்தம்” என்று இதற்கு பெயர் வைத்தார் என்று அறிந்தேன். ஆச்சர்யமாக இருந்தது” என்கிறார். நான் பஜகோவிந்தம் எழுதுவது அவருக்கு தெரியாது. ஏதோ பேச்சு வாக்கில் இந்த விஷயம் என் காதில் விழ இன்று என் வீட்டிற்கு விஜயம் செய்ததும் அந்த கண்ணன் லீலையே. நீ இதையும் எழுது என்று இப்படி ஒரு தூண்டுதலா?
அடிக்கடி நமக்கு நாமே கேட்போமே, ”ஏன் பிறந்தோம்? உண்மை எது?, வாழ்க்கையின் தத்துவம் என்ன? சங்கருக்கு தெரியும் நம் யாருக்குமே இதற்கு விடை தெரியாது என்று, ஆகவே அவரே பஜகோவிந்தத்தில் ” ‘கேளுங்கடா’ என்று சொல்லி விடுகிறார். என் இனிய நண்பர் ஸ்ரீ P.R. ராமச்சந்திரன் ஒரு மேதாவி, ஆங்கிலம், தமிழ், சமஸ்க்ரிதம், மலையாளம்,கன்னடம் என பல மொழி அறிந்தவர். ஆங்கிலத்தில் பஜகோவிந்தத்துக்கும் அநேக சமஸ்க்ரித ஸ்தோத்ரங்களுக்கும் அர்த்தம் எழுதி இருக்கிறார். படியுங்கள். பலன் பெறுங்கள். இனி பாஜா கோவிந்தத்துக்குள் செல்வோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;